TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது எவ்வாறு அறியப்படுகிறது?
அதன் பொருளாதார மேம்பாடு
- பொருளாதார மேம்பாடு என்பது எதனைக் குறிக்கிறது?
மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் ,நிலையான நாட்டின் வளர்ச்சியையும்
- பொருளாதார முன்னேற்றத்தின் முதன்மையான குறியீடுகள் என்னென்ன?
நிகர நாட்டு உற்பத்தி(NNP) ,தனிநபர் வருமானம்(PCI) ,வாங்கும் திறன் சமநிலை(PPP), மனிதவள மேம்பாட்டு குறியீடு(HDI)
- ஓர் ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
மொத்த உள்நாட்டு உற்பத்தி
- தேசிய உற்பத்தியின் உண்மையான அளவாக கருதப்படுவது எது ?
நிகர நாட்டு உற்பத்தி
- நிகர நாட்டு உற்பத்தி வேறு எவ்வாறு அறியப்படுகிறது?
நாட்டு வருமானம்
- எது நாட்டின் மேம்பாட்டை அளவிடும் சிறந்த குறியீடு ஆகும்?
தனிநபர் வருமானம்
- எதனை கணக்கிட நாட்டின் மொத்த வருமானத்தை நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்க வேண்டும் ?
நாட்டின் தலா வருமானம்
- தனிநபர் வருமானத்தின் கணக்கீடுகள் சர்வதேச அளவில் ஒப்பிடுவதற்காக எதில் மட்டும் கணக்கிடப்படுகிறது ?
அமெரிக்க டாலர்
- உலக வங்கியின் அறிக்கையின்படி (2017-2018) குறைந்த வருவாய் உடைய நாடுகளின் தலா வருமானம் எவ்வளவு?
1005 டாலருக்கும் குறைவாக
- உலக வங்கியின் அறிக்கையின்படி (2017-2018) குறைந்த நடுத்தர வருவாய் உடைய நாடுகளின் தலா வருமானம் எவ்வளவு?
1006-3955 டாலர்
- உலக வங்கியின் அறிக்கையின்படி (2017-2018) உயர் நடுத்தர வருவாய் உடைய நாடுகளின் தலா வருமானம் எவ்வளவு?
3956-12,235 டாலர்
- உலக வங்கியின் அறிக்கையின்படி (2017-2018) உயர்ந்த வருவாய் உடைய நாடுகளின் தலா வருமானம் எவ்வளவு?
12,235 டாலருக்கும் அதிகமாக
- ஒரு நாட்டினுடைய நாணயங்களின் எண்ணிக்கைக்கு இணையாக ,ஒரு சந்தையில் அமெரிக்க டாலரில் வாங்குவதற்கு ஏற்றவாறு உள்நாட்டு சந்தையில் அதே அளவிலான பொருட்களையும் வாங்குவதற்கு தேவைப்படுவது என்பது எவ்வாறு அழைக்கப்படும்?
வாங்கும் திறன் சமநிலை
- வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா எத்தனையாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது ?
மூன்றாவது (தேர்வு காலத்தில் நடப்பு நிகழ்வுகளில் சரிபார்த்தல் அவசியம்)
- வாங்கும் திறன் சமநிலையின் அடிப்படையில் முதல் இடத்தில் உள்ள நாடு எது ?
சீனா (அமெரிக்கா இரண்டாவது இடம்)
- மனித வளம் என்ற சொல் எதைக் குறிக்கிறது?
உற்பத்தித்துறையில் பயன்படுத்தக்கூடிய மனித வளங்களை கொண்டிருக்கும் மக்கள்
- மனிதவள மேம்பாடு என்பது என்ன?
மனிதனின் உடல் திறன் , மனத்திறன் மற்றும் சுகாதார திறன்களை கல்வி மருத்துவம் மற்றும் பயிற்சியின் மூலம் மேம்படுத்துவது
- இந்தியாவில் மனித வளங்களின் வளர்ச்சிக்கு எந்த அமைச்சகம் பொறுப்பாகும் ?
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
- மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் எங்குள்ளது?
புதுடெல்லியில் உள்ள சாஸ்திரி பவன்
- இயற்கை வளங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
இரண்டு: புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்கத்தகாத வளங்கள்
- தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் தென்மாநிலங்களில் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?
இரண்டாவது இடம்
- 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கல்வியறிவு விகிதம் எவ்வளவு?
74.04%
- 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் பாலின விகிதம் எவ்வளவு?
..FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH ECONOMICS STUDY NOTES |மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத்தன்மை| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services