- அணுக்களால் இணைக்கப்பட்ட தொகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
மூலக்கூறு
- ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களை ஒன்றாக சேர்த்து பிணைத்து வைக்கும் கவர்ச்சி விசைக்கு பெயரென்ன?
வேதிப்பிணைப்பு
- கோசல்லூயிஸ் கொள்கை எதை விளக்குகிறது?
மூலக்கூறுகள் எவ்வாறு உருவாகின்றன என்பதை
- மந்த வாயுக்களின் இணைதிறன் என்ன ?
பூஜ்ஜியம்
- ஒரு உலோகம் இழக்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒரு உலோகத்தின் இணைதிறன்
- ஏற்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்பது எதனுடைய இணைதிறன் என அழைக்கப்படுகிறது?
அலோகம்
- மந்தவாயு எலக்ட்ரான் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு யார் அணுக்களின் வேதி சேர்க்கைக்கான கொள்கையை முன் மொழிந்தனர் ?
கோஷல் மற்றும் லூயிஸ்
- கோஷல் மற்றும் லூயிஸ் எந்த ஆண்டு அனுக்களின் வேதிக் சேர்க்கைக்கான கொள்கையை வெளியிட்டனர்?
1916
- கோஷல் மற்றும் லூயிஸ் வெளியீட்டுக் கொள்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இணைதிறன் எலக்ட்ரானிய கொள்கை அல்லது எட்டு எலக்ட்ரான் விதி
- ஒரு அணுவானது மற்றொரு அணுவிடம் அதன் இணைதிறன் கூடு எலக்ட்ரான்களை இழந்தோ அல்லது பங்கீடு செய்தோ இணைதிறன் கூட்டில் 8 எலக்ட்ரான்களை பெற்றிருக்கும் விளைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எட்டு எலக்ட்ரான் விதி அல்லது எண்ம விதி
- எலக்ட்ரான்களை இழக்க வல்ல அணுக்கள் இணைதிறன் கூட்டில் எத்தனை எலக்ட்ரான்களை பெற்றிருக்கும்?
தலா 1 2 3
- எலக்ட்ரான்களை ஏற்க வல்ல அணுக்கள் இணைதிறன் கூட்டில் எத்தனை எலக்ட்ரான்களை பெற்றிருக்கும் ?
தலா 567
- ஒரு நேர்மின் அயனிக்கும் எதிர்மின் அயனிக்கும் இடையே நிலைமின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் பிணைப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
அயனிப் பிணைப்பு
- அயனிப் பிணைப்பு வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
நிலை மின் பிணைப்பு மற்றும் எலக்ட்ரான் இணைதிறன் இணைப்பு
- அயனிப் பிணைப்பு சேர்மத்தின் இயல்புநிலை பண்பு என்ன?
அறை வெப்பநிலையில் படிகத் திண்மங்கலாக இருக்கும்
- அயனிப் பிணைப்பு சேர்மத்தின் மின்கடத்துதிறன் பண்பு என்ன?
திண்ம நிலையில் அயனி சேர்மங்கள் மின்சாரத்தைக் கடத்தாது உருகிய நிலையில் அல்லது நீர்க் கரைசலில் மின்சாரத்தை கடத்தும்
- அயனிப் பிணைப்பு சேர்மத்தின் உருகுநிலை பண்பு என்ன?
உயர் உருகுநிலை மற்றும் கொதிநிலை
- அயனிப் பிணைப்பு சேர்மத்தின் கரைதிறன் பண்பு என்ன?
நீர் போன்ற முனைவுள்ள கரைப்பான்களில் கரையக்கூடியவை முனைவற்ற கரைப்பான்களில் கரைவதில்லை
- அயனிப் பிணைப்பு சேர்மத்தின் வினைத்திறன் பண்பு என்ன?
வினை வேகம் அதிகம்
- இரு அணுக்கள் சமமாக எலக்ட்ரான்களை பங்கீடு செய்து அவற்றுக்கிடையே உருவாகும் பிணைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சகப்பிணைப்பு
- இரு அணுக்கள் எலக்ட்ரான்களை பங்கீடு செய்து சகப்பிணைப்பை உருவாக்கும்போது அவ்விரு அணுக்களும் நிலையான மந்தவாயு எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகின்றன இது என்ன விதி?
லூயிஸ் விதி
- சகப்பிணைப்பு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அணு பிணைப்பு
- சகப் பிணைப்பு சேர்மத்தின் மின்கடத்துதிறன் பண்பு என்ன?
சகப்பிணைப்பு சேர்மங்களின் அயனிகள் இல்லை எனவே மின்சாரத்தைக் கடத்தாது
- சகப் பிணைப்பு சேர்மத்தின் உருகுநிலை பண்பு என்ன?
வைரம் சிலிக்கன் கார்பைடு போன்ற சில சகபிணைப்பு சேர்மங்களை தவிர மற்றவை அயனி சேர்மங்களை விட குறைந்த உருகுநிலை பெற்றுள்ளது
- சகப் பிணைப்பு சேர்மத்தின் கரைதிறன் பண்பு என்ன?
முனைவற்ற கரைப்பான் களில் எளிதில் கரையும் நீர் போன்ற முனைவுள்ள கரைப்பான்களில் எளிதில் கரைவதில்லை
- சகப் பிணைப்பு சேர்மத்தின் வினைபடுதிறன் பண்பு என்ன?
வேகம் குறைவு
- வேறுபட்ட எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற அனுக்கள் இணைவதால் உருவாகும் கரைப்பான்கள் என்ன?
முனைவுள்ள கரைப்பான்கள்
- முனைவுள்ள கரைப்பானளுக்கு எடுத்துக்காட்டு ?
நீர் எப்ப நாள் அசிட்டிக் அமிலம் அமோனியா
- எலக்ட்ரான் கவர் தன்மையில் குறைந்த அளவே வேறுபாடு கொண்ட கார்பன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற அணுக்கள் இணைவதால் உருவாகும் கரைப்பான்கள் என்ன ?
முனைவற்ற கரைப்பான்கள்
- முனைவற்ற கரைப்பான்களுக்கு எடுத்துக்காட்டு?
அசிட்டோன் ,பென்சீன் ,டொலுவின் ,டர்பன்டைன்
- ஒரு சேர்மத்தின் உள்ள அணுக்கள் நேர் மற்றும் எதிர் மின்சுமை கொண்ட அயனிகளாக முற்றிலுமாக பிரிவுறுதல் எவ்வாறு அழைக்கப்படும்?
முனைவுறுதல்
- ஒரு சேர்மம் அயனிப் இணைப்பை பெற்றுள்ளதா அல்லது சகப்பிணைப்பு பெற்றுள்ளதா என்பதை ஒரு சில காரணிகளை கொண்டு கண்டறிய ஒரு விதி முறையை உருவாக்கியவர் யார்?
ஃபஜான் 1923
- ஃபஜான் விதிப்படி நேர்மின் அயனியின் உருவ அளவில் சிறியதாகவும் எதிர்மின் அயனி உருவ அளவு பெரியதாகவும் இருந்தால் அந்தப் பிணைப்பு என்ன தன்மை பெறும்?
சகப்பிணைப்பு
- ஃபஜான் விதிப்படி நேர்மின் அயனியின் மின்சுமை அதிகரிக்க அதிகரிக்க என்ன தன்மை அதிகரிக்கும் ?
சகப்பிணைப்பு
- ஒரு சில சேர்மங்களில் சகப்பிணைப்பு உருவாகத் தேவையான இரு எலக்ட்ரான்கள் பிணைப்பில் ஈடுபடும் ஏதேனும் ஒரு அணு வழங்கி பிணைப்பை உருவாக்கும் இத்தொகை பிணைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஈதல் சகப்பிணைப்பு அல்லது ஈதல் பிணைப்பு
- ஈதல் பிணைப்பில் ஈடுபடும் எலக்ட்ரான்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தனிஇரட்டை
- தனி இரட்டை எலக்ட்ரான்களை வழங்கும் அணு எவ்வாறு அழைக்கப்படும்?
ஈனி அணு
- தனி இரட்டை எலக்ட்ரான்களை வழங்கும் அணு எவ்வாறு அழைக்கப்படும்?
ஏற்பி அணு
- ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களின் இயற்பியல் நிலைமை என்ன?
வாயு நிலை ,நீர்ம நிலை மற்றும் திண்ம நிலையில் காணப்படுகிறது
- ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களின் மின்கடத்துதிறன் பண்பு என்ன?
இவை அரிதில் மின் கடத்திகள்
- ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களின் உருகுநிலை மற்றும் கொதிநிலை பண்பு என்ன?
சகப்பிணைப்பு சேர்மங்களை விட அதிகமாகவும் அயனி சேர்மங்களை விட குறைவாகவும் காணப்படுகிறது
- ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களின் கரைதிறன் பண்பு என்ன?
முனைவுள்ள கரைப்பான்களில் மிகச் சிறிதளவே கரையும் அல்லது கரைவதில்லை , முனைவற்ற கரைப்பான்களில் எளிதில் கரைகிறது
- ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களின் வினைபடுதிறன் பண்பு என்ன?
மெதுவான மூலக்கூறு வினைகளில் ஈடுபடுகின்றன
- ஒரு வேதிவினையில் ஆக்சிஜன் சேர்க்கப்படும் ஹைட்ரஜன் நீக்கப்படுதலோ அல்லது எலக்ட்ரான்கள் நீக்கப்படுதலோ நிகழும்போது அந்த வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆக்சிஜனேற்றம்
- ஒரு வேதிவினையில் ஹைட்ரஜன் சேர்க்கப்படுதலோ ஆக்ஸிஜன் நீக்கப்படுதலோ அல்லது எலக்ட்ரான்கள் ஏற்கப்படுதலோ நிகழும்போது அந்த வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒடுக்கம்
- மற்ற பொருள்களை ஆக்சிஜனேற்றம் அடைய செய்யும் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆக்சிஜனேற்றிகள்
- மற்ற பொருள்களை ஒடுக்கம் அடைய செய்யும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒடுக்கிகள்
- எந்த வைட்டமின்களை சேர்ப்பதன் மூலம் உணவுப் பொருட்கள் எளிதில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்?
வைட்டமின் C மற்றும் வைட்டமின் E
- ஒரு தனிமத்தின் அணுவின் அனைத்து எலக்ட்ரான்களும் கணக்கில் கொள்ளப்படும் போது எஞ்சிய மின்சுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தனிமத்தின் ஆக்சிஜனேற்ற எண்
- ஒரு அணு பிணைப்பில் ஈடுபடும் போது எத்தனை எலக்ட்ரான்களை ஏற்கிறதோ அல்லது இழக்கிறதோ அந்த எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஆக்சிஜனேற்ற எண்
- பிணைப்பில் உள்ள இணை எலக்ட்ரான்களை தன்னை நோக்கி கவர்ந்திழுக்கும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எலக்ட்ரான் கவர் தன்மை
9TH CHEMISTRY STUDY NOTES |வேதிபிணைப்பு| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services