- அக ஆற்றல் ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் பொழுது அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்ப ஆற்றல்
- ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அந்த பொருளில் உள்ள மூலக்கூறுகள் அதிக ஆற்றலைப் பெற்று என்ன விளைவை ஏற்படுத்தும்?
விரிவடைதல்
- திடப் பொருட்களில் மூலக்கூறுகள் எவ்வாறு அமைந்திருக்கும்?
மிகவும் நெருக்கமாகவும் இயக்கம் இல்லாமலும்
- அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளிலிருந்து குறைவான வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கம் இன்றி வெப்பம் பரவும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்பக்கடத்தல்
- ஒரு திரவத்தின் அதிக வெப்பம் உள்ள பகுதியில் இருந்து குறைவான வெப்பம் உள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வெப்பச்சலனம்
- நிலப்பரப்பில் உள்ள சூடான காற்று மேலே எழும்பி கடல் பரப்பிலிருந்து குளிர்ந்த காற்று நிலத்தை நோக்கி வீசுகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கடல்காற்று
- கடல் பரப்பில் உள்ள சூடான காற்று மேலே எழும்ப, நிலப்பரப்பில் இருந்து குளிர்ந்த காற்று கடல் பகுதியை நோக்கி வீசுகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிலக்காற்று
- எந்த ஒரு பருப்பொருளின் உதவியுமின்றி வெப்ப ஆற்றல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்பக் கதிர்வீச்சு
- சூரியனிடமிருந்து கிடைக்கும் வெப்ப ஆற்றல் எந்த முறையில் பூமியை வந்தடைகிறது ?
வெப்பக் கதிர்வீச்சு
- எந்த வெப்பநிலைக்கு அதிகமாக இருக்கும் எல்லாப் பொருள்களிலும் இருந்து வெப்ப கதிர் வீச்சு ஏற்படும்?
0 K
- ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்பநிலை
- வெப்ப நிலையின் SI அலகு என்ன?
கெல்வின் K
- வெப்ப நிலையிலையின் தினசரி பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் அலகு என்ன ?
செல்சியஸ் C
- வெப்பநிலையை அளவிடுவதற்கு எத்தனை அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன ?
மூன்று: ஃபாரன்ஹீட் அளவீடு, செல்சியஸ் அல்லது சென்டிகிரேடு அளவீடு, கெல்வின் அளவீடு அல்லது தனித்த அளவீடு
- ஃபாரன்ஹீட் அளவீட்டில் உறைநிலை புள்ளி எது?
32°F
- ஃபாரன்ஹீட் அளவீட்டில் ஆவியாதல் புள்ளி எது?
212°F
- செல்சியஸ் அளவீட்டில் உறைநிலை புள்ளி எது?
0°C
- செல்சியஸ் அளவீட்டில் ஆவியாதல் புள்ளி எது?
100°C
- செல்சியஸ் அளவீட்டை ஃபாரன்ஹீட் அளவீடாக மாற்றுவதற்கு தேவையான சமன்பாடு என்ன?
F=9/5C+32
- ஃபாரன்ஹீட் அளவீட்டை செல்சியஸ் அளவீடாக மாற்றுவதற்கு தேவையான சமன்பாடு என்ன?
C=5/9(F-32)
- கெல்வின் அளவீடு வேறு எவ்வாறு வழங்கப்படுகிறது?
தனித்த அளவீடு
- கெல்வின் அளவீட்டில் எது தனிச்சுழி வெப்பநிலை?
0 K
- எந்தக் கெல்வின் வெப்ப நிலையில் நீரின் திட திரவ மற்றும் வாயு நிலைகள் ஒன்றிணைந்து காணப்படும்?
273.16K
- நீரின் மும்மை புள்ளியின் எத்தனை பங்கு ஒரு கெல்வின் ஆகும்?
1/273.15K
- ஒரு வாயுவின் அழுத்தமும் கன அளவும் கருத்தியலில் சுழியாக மாறும் வெப்ப நிலைக்கு என்ன பெயர் ?
தனிச்சுழி வெப்பநிலை
- நீரின் கொதிநிலை மூன்றுவகை வெப்பநிலை அளவுகோல்களில் என்ன ?
கெல்வின் 373.15 ,செல்சியஸ் 100, பாரன்ஹீட் 212
- நீரின் கொதிநிலை மூன்றுவகை வெப்பநிலை அளவுகோல்களில் என்ன ?
கெல்வின் 373.15 ,செல்சியஸ் 100, பாரன்ஹீட் 212
- பனிக்கட்டியின் உருகு நிலை மூன்றுவகை வெப்பநிலை அளவுகோல்களில் என்ன ?
கெல்வின் 273.15 ,செல்சியஸ் 0, பாரன்ஹீட் 32
- தனிச்சுழி வெப்பநிலை மூன்றுவகை வெப்பநிலை அளவுகோல்களில் என்ன ?
கெல்வின் 0 ,செல்சியஸ் -273, பாரன்ஹீட் -460
- வெப்பத்தை வெளிவிடும் அல்லது உட்கவரும் பண்பு எத்தனை காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது?
மூன்று: பொருளின் நிறை, பொருளில் ஏற்படும் வெப்பநிலை வேறுபாடு, பொருளின் தன்மை
- ஓரலகு நிறையுள்ள பொருளின் வெப்பநிலையை ஒரு அலகு உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தன் வெப்ப ஏற்புத்திறன்
- தன் வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு என்ன?
Jkg-1K-1
- தன் வெப்ப ஏற்புத்திறனக்கு வேறு என்னென்ன அலகுகள் பயன்படுத்தப்படுகிறது?
J/kg°C மற்றும் J/g°C
- எல்லாவிதமான பொருட்களிலும் அதிக தன்வெப்ப ஏற்புத்திறன் கொண்ட பொருள் எது?
நீர்
- நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் எவ்வளவு?
4200 J/kg°C
- பனிக்கட்டியின் தன் வெப்ப ஏற்புத்திறன் எவ்வளவு?
2100 JKg-1K-1
- நீராவியின் தன் வெப்ப ஏற்புத்திறன் எவ்வளவு?
460JKg-1K-1
- ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C உயர்த்துவதற்கு தேவையான வெப்ப ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்ப ஏற்புத்திறன்
- வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு என்ன?
J/K or cal/°C or kcal/°C or J/°C
- பொருளானது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிலைமாற்றம்
- ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வுக்கு என்ன பெயர் ? உருகுதல்
- ஒரு திடப்பொருள் தன் நிலையை திரவ நிலைக்கு மாற்றும் வெப்ப நிலைக்கு என்ன பெயர்?
உருகுநிலை
- ஒரு பொருள் வெப்பத்தை வெளிவிட்டு திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
உறைதல்
- எந்த வெப்பநிலையில் திரவப் பொருள் திடப் பொருளாக மாறுகிறதோ அந்த வெப்ப நிலைக்கு என்ன பெயர்?
உறைநிலை
- ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
ஆவியாதல்
- எந்த வெப்பநிலையில் திரவப்பொருள் வாயு நிலைக்கு மாறுகிறதோ அந்த வெப்பநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
கொதிநிலை
- வாயு நிலையில் இருக்கும் ஒரு பொருள் வெப்பத்தை வெளிவிட்டு திரவமாக மாறும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
குளிர்தல்
- எந்த வெப்பநிலையில் வாயுத் தன் நிலையை திரவ நிலைக்கு மாற்றுகிறதோ அந்த வெப்ப நிலைக்கு என்ன பெயர்?
ஒடுக்க நிலை
- நீருக்கு கொதிநிலையும் ஒடுக்கநிலையும் எவ்வளவு?
100°C
- வெப்பப்படுத்தும் போது திட பொருட்கள் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வுக்கு என்ன பெயர் ?
பதங்கமாதல்
- மறை வெப்பம் அல்லது மறைந்திருக்கும் வெப்ப ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும்?
உள்ளுறை வெப்பம்
- ஒரு பொருள் தன் நிலையை மாற்றிக் கொள்ளும் போது ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பத்தை உட்கவருகிறது அல்லது வெளிவிடுகிறது. இந்த வெப்ப ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உள்ளுறை வெப்பம்
- வெப்பநிலை மாறாத நிலையில் ஒரு பொருள் தன் நிலையை மாற்றிக் கொள்ளும் போது உட்கவரும் அல்லது வெளியிடும் வெப்ப ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உள்ளுறை வெப்பம்
- ஆவியாதலின் போது வெப்பமானது திரவத்தினால் உட்கவரப்படுகிறது அதே அளவு வெப்பம் குளிர்தல் நிகழ்வின் போது நீராவியினால் வெளியிடப்படும் .இந்த வெப்பம் எவ்வாறு அழைக்கப்படும்?
ஆவியாதலின் உள்ளுறை வெப்பம்
- உள்ளுறை வெப்பத்தை ஓரலவு நிறைக்கு வரையறுத்தால்அது எவ்வாறு அழைக்கப்படும்?
தன் உள்ளுறை வெப்பம்
- தன் உள்ளுறை வெப்பம் என்ன குறியீட்டினால் குறிக்கப்படுகிறது?
L
- தன் உள்ளுறை வெப்பத்தை என்ன சமன்பாட்டில் குறிப்பிடலாம்?
L=Q/m
- ஒரு பொருள் திட திரவ வாயு ஆகிய நிலைகளில் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு மாறும்போது வெப்ப நிலை மாறாமல் உட்கவரும் அல்லது வெளியிடப்படும் வெப்ப ஆற்றல் என்று அழைக்கப்படும் ?
தன் உள்ளுறை வெப்பநிலை
- தன் உள்ளுறை வெப்பநிலையின் SI அலகு?
J/kg
9TH CHEMISTRY STUDY NOTES |வெப்பம் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services