9TH CHEMISTRY STUDY NOTES |தனிமங்களின் வகைப்பாடு அட்டவணை| TNPSC GROUP EXAMS

 


875.  1800 எத்தனை தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன?

 31

876.  தற்பொழுது எத்தனை தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

118

877.   யார் தனிமங்களை அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் வகைப்படுத்தும் ஒரு கருத்தை எடுத்து வைத்தார்?

ஜோகன் வுல்ஃப்காங் டாபர்னீர்

878. எந்த ஆண்டு டாபர்னீரின் மும்மை விதி வெளியிடப்பட்டது?

 

1817

879.  மூன்று தனிமங்களை அவற்றின் நிறையின் அடிப்படையில் ஏறுவரிசையில் அடுக்கும்போது நடுவில் உள்ள தனிமத்தின் அணு நிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணு நிறையின் சராசரிக்கு ஏறத்தாழ சரியாக இருக்கும் என கூறியவர் யார்?

 டாபர்னீரின் மும்மை விதி

880. மும்மை விதியின் குறைபாடுகள் என்னென்ன?

எல்லா தனிமங்களும் இந்த மும்மை விதிக்கு உட்படவில்லை , மிகக் குறைந்த அணு நிறை மற்றும் மிக அதிக அணுநிறை கொண்ட தனிமங்களுக்கு இதை பயன்படுத்த முடியவில்லை

881.   ஜோகன் வுல்ஃப்காங் டாபர்னீர் எந்த நாட்டைச் சேர்ந்தவர?

ஜெர்மானிய வேதியியலாளர்

882. முதன்முதலில் தீப்பொறியை கண்டுபிடித்தவர் யார்?

ஜோகன் வுல்ஃப்காங் டாபர்னீர்

883. ஜோகன் வுல்ஃப்காங் டாபர்னீர் என்ன இனிய மணமுடைய திரவத்தை கண்டுபிடித்தார்?

பர்ஃப்யூரல்

884. ஜோகன் வுல்ஃப்காங் டாபர்னீர் எதை வினையூக்கியாக உபயோகப்படுத்தினார்?

 பிளாட்டினம்

885.  1866 இல் யாரு 56 அறியப்பட்ட தனிமங்களை அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் ஏறுவரிசையில் ஒழுங்கமைத்தார்?

ஜான் நியூலாந்து

886. எண்ம விதியை வெளியிட்டவர் யார்?

 நியூலாந்து

887.  ஒவ்வொரு எட்டாவது தனிமமும் சங்கீதத்தில் எட்டாவது சுருதியும் முதல் சுருதியும் ஒத்திருப்பது போல முதலாவது தனிமத்தின் பண்பை ஒத்திருக்கும் .இது என்ன விதி?

எண்ம விதி

888.  எண்ம விதியின் குறைபாடுகள் என்னென்ன?

இரண்டு வேறுபட்ட தனிமங்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டது, முற்றிலும் மாறுபட்ட பண்புகளை உடைய சில தனிமங்கள் அதே தொகுதியில் வைக்கப்பட்டது, கால்சியத்தை காட்டிலும் அதிக அணுநிறை கொண்ட தனிமங்களுக்கு ஏற்புடையதாக இல்லை, 56 தனிமங்களுக்காக மட்டுமே போடப்பட்டது.

889.  ஜான் நியூலாந்து எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

ஸ்காட்லாந்து

890.  ஜான் நியூலாந்து எந்த ஆண்டு எண்ம விதியை வெளியிட்டார்?

1865

891.    ஜான் நியூலாந்து எந்த ஆண்டு டேவி பதக்கத்தை  பெற்றார்?

1887

892.  தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளானது அவற்றின் ஆவர்த்தன செயல்பாடுகளைப் பொறுத்தது எனக் கூறும் விதி என்ன ?

 தனிம ஆவர்த்தன விதி

893.  தனிம ஆவர்த்தன விதியை உருவாக்கியவர் யார்?

 டிமிட்ரி மெண்டலீவ் (1869)

894.  தனிமங்களின் பண்புகள் அவைகள் அணு நிறையின் அடிப்படையில் அடுக்கப்படும் போது ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு மறுபடியும் வருவதை கண்டறிந்தவர் யார் ?

டிமிட்ரி மெண்டலீவ்

895.   டிமிட்ரி மெண்டலீவின்  தனிம வரிசை அட்டவணையில் உள்ள 8 நீண்ட செங்குத்துக் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

தொகுதிகள்

896.  டிமிட்ரி மெண்டலீவின்  தனிம வரிசை அட்டவணையில் உள்ள 7 கிடைமட்ட கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வரிசை

897. டிமிட்ரி மெண்டெலீவ் அலுமினியம் மற்றும் சிலிக்கானுக்கு கீழே வரக்கூடிய தனிமங்களுக்கு என்ன பெயரிட்டார் ?

எ.கா.அலுமினியம் எகா.சிலிக்கான்

SEE ALSO  TNPSC APTITUDE PYQ TEST 10

898.  பெட்ரோலியத்தின் தனிம கூறுகள் குறித்து கூறியவர் யார்?

டிமிட்ரி மெண்டலீவ்

899.  பெட்ரோலியம் ஒரு முக்கிய மூலமாக இருக்கும் என்பதை அடையாளம் கண்டதால் ரசியாவில் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உருவாக உதவியாக இருந்தவர் யார்?

டிமிட்ரி மெண்டலீவ்

900.           நவீன தனிம வரிசை அட்டவணையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

டிமிட்ரி மெண்டலீவ்

901. யார் தன்னுடைய எக்ஸ்ரே கதிர் சிதைவு சோதனை மூலம் தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு எண்ணைப் பொருத்தே இருக்குமே தவிர அவற்றின் நிறையை பொருத்து இருக்காது என நிரூபித்தவர்?

ஹென்றி மோஸ்லே,(1913)

902. மெண்டலீவ் அட்டவணை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

குறும் அட்டவணை

903. நவீன அட்டவணை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

நீண்ட அட்டவணை

904.  தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் தனிமவரிசை செயல்பாடுகளாகும் என்பது என்ன விதி?

நவீன ஆவர்த்தன விதி

905.   அணு எண் எனப்படும் வேதி கருத்தினை உருவாக்கியவர் யார்?

ஹென்றி மோஸ்லே

906.நவீன தனிம வரிசை அட்டவணையில் 1 குழு என்ன தொகுதிகளை உடையது?

கார உலோகங்கள்

907.  நவீன தனிம வரிசை அட்டவணையில் 2 குழு என்ன தொகுதிகளை உடையது?

 காரமண் உலோகங்கள்

908. நவீன தனிம வரிசை அட்டவணையில்  3-12 குழு என்ன தொகுதிகளை உடையது ?

இடைநிலை உலோகங்கள்

909.நவீன தனிம வரிசை அட்டவணையில் 13 குழு என்ன தொகுதிகளை உடையது ?

போரான் குடும்பம்

910. நவீன தனிம வரிசை அட்டவணையில் 14 குழு என்ன தொகுதிகளை உடையது?

கார்பன் குடும்பம்

911.  நவீன தனிம வரிசை அட்டவணையில் 15 குழு என்ன தொகுதிகளை உடையது?

நைட்ரஜன் குடும்பம்

912.  நவீன தனிம வரிசை அட்டவணையில்  16 குழு என்ன தொகுதிகளை உடையது?

ஆக்சிஜன் அல்லது சால்கோன் குடும்பம்

913.  நவீன தனிம வரிசை அட்டவணையில் 17 குழு என்ன தொகுதிகளை உடையது?

ஹாலஜன்கள் அல்லது உப்பீனிகள்

914.  நவீன தனிம வரிசை அட்டவணையில் 18 குழு என்ன தொகுதிகளை உடையது?

அரிய வாயு அல்லது மந்தவாயு

915.  நவீன தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் கிடைமட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

வரிசைகள்

916.  நவீன தனிம வரிசை அட்டவணையில் எத்தனை வரிசைகள் உள்ளது?

ஏழு

917.  நவீன தனிம வரிசை அட்டவணையில் மேலிருந்து கீழாக செங்குத்தாக உள்ள பகுதிகளை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

தொகுதிகள்

918.  நவீன தனிம வரிசை அட்டவணையில் எத்தனை தொகுதிகள் உள்ளன?

 18

919.    IUPAC என்பதன் விரிவாக்கம் என்ன?

International union of pure and applied chemistry

920. IUPAC எங்கு பதியப்பட்டுள்ளது?

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச்

921.   IUPACன் நிறுவனத்தின் செயலகம் எங்கு உள்ளது?

அமெரிக்கா

922.     IUPACனால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 113 வது தனிமத்தின் பெயர் என்ன?

நிஹோனியம்

923.      IUPACனால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 115 வது தனிமத்தின் பெயர் என்ன?

மாஸ்கோவியம்

SEE ALSO  11TH TAMIL IYAL 08 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

924. IUPACனால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 117 வது தனிமத்தின் பெயர் என்ன?

டென்னஸ்ஸைன்

925.  IUPACனால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 118 வது தனிமத்தின் பெயர் என்ன?

ஓகனெஸ்ஸன்

926. எந்தத் தொகுதி தனிமங்கள் s-தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகிறது?

தொகுதி 1 மற்றும் 2

927.   எதைத் தவிர தொகுதி ஒன்றில் தனிமங்கள் உலோகங்கள் ஆகும் ?

ஹைட்ரஜன்

928.  எந்தத் தொகுதி தனிமங்கள் P தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகிறது?

 13 முதல் 18 தொகுதிகள்

929.  எந்தத் தொகுதி வரை உள்ள தனிமங்கள் D தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகிறது?

 3 முதல் 12 தொகுதி வரை

930.   உள் இடைநிலைத் தனிமங்கள் என அழைக்கப்படும் தொகுதி தனிமங்கள் எவை?

 f தொகுதி தனிமங்கள்

931.   f தொகுதியில் எத்தனை தொடர்கள் உண்டு?

இரண்டு தொடர்கள்: லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடு

932.  வண்ண உப்புக்களின் பெரும்பகுதி  எந்தத் தொகுதி தனிமங்கள் சார்ந்ததாகும்?

 D தொகுதி தனிமங்கள்

933.  உலகில் அதிக அளவு காணப்படும் ஒரு தனிமம் எது?

ஹைட்ரஜன்

934. வானிலை பலூன்களில் நிரப்ப பயன்படுவது எது?

ஹீலியம்

935.   மின் விளக்குகளில் ஆரஞ்சு பகுதியாக பயன்படுவது எது?

நியான் வாயு

936. மின்விளக்குகளில் அதில் உள்ள மின்னிழை ஆவியாவதை தடுக்க உபயோகப்படுத்துவது எது?

ஆர்கான் வாயு

937.  ரேடான் என்ன வகையான வாயு?

 ஒரு கதிரியக்க வாயு

938.  கடினமான பிரகாசமான கம்பியாக நீட்டக் கூடிய, தகடாக அடிக்கக் கூடிய, உருகக் கூடிய மற்றும் வெப்பத்தையும் மின்சாரத்தையும் மிக நன்றாக கடத்தக் கூடிய தன்மை உடையவை எவ்வாறு அழைக்கப்படும்?

 உலோகங்கள்

939.  எதைத் தவிர மற்ற எல்லா உலோகங்களும் அறை வெப்பநிலையில் திண்மமாகவே இருக்கும் ?

பாதரசம்

940.  பளபளப்பற்ற மென்மையான, கம்பியாக நீட்ட முடியாத, தகடாக அடிக்க முடியாத ,மின்சாரம் கடத்தாத தன்மையுடையவை எவ்வாறு அழைக்கப்படும்?

அலோகங்கள்

941.   உலோகம் மற்றும் அலோகப் பண்புகளைக் கொண்டவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

உலோகப்போலிகள்

942.   பித்தளையின்  இயைபு (கலவை) என்ன?

செம்பு மற்றும் துத்தநாகம்

943.  வெண்கலத்தின் இயைபு என்ன?

செம்பு மற்றும் வெள்ளீயம்

944.  பற்றாசு இயைபு என்ன?

காரீயம் மற்றும் வெள்ளீயம்

945. துரு ஏறா எஃகு இயைபு என்ன?

 இரும்பு கார்பன் குரோமியம் &நிக்கல்

946. ஜெர்மானிய வெள்ளி இயைபு என்ன?

 செம்பு நிக்கல் துத்தநாகம்

947. பீரங்கி வெண்கலம் இயைபு என்ன?

செம்பு ,வெள்ளீயம் ,துத்தநாகம்

948. டியூராலுமின் இயைபு என்ன?

அலுமினியம், மக்னீசியம், செம்பு மற்றும் மாங்கனீசு

949. மாக்னலீயம் இயைபு என்ன?

அலுமினியம் & மக்னீசியம்

950. எஃகிரும்பு இயைபு என்ன?

 இரும்பு மற்றும் கார்பன்

951.   அலங்காரப் பொருள்கள், நீர் குழாய்கள் முதலியன செய்ய பயன்படும் உலோகம் எது?

பித்தளை

952.   சிலைகள் மற்றும் பதக்கங்கள் செய்யப் பயன்படும் உலோகம் எது?

 வெண்கலம்

953.  மின்னணுக் கருவிகளை பற்ற வைக்க பயன்படும் உலோகம் எது ?

பற்றாசு

954. சமையல் பாத்திரங்கள் மருத்துவ உபகரணங்களுக்கு பயன்படும் உலோகம் எது?

SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -18|பெரும்பாணாற்றுப்படை 

துரு ஏறா எஃகு

955.    முலாம் பூசப்பட்ட நகைகளுக்கு பயன்படும் உலோகம் எது?

ஜெர்மானிய வெள்ளி

956. துப்பாக்கி மற்றும் கண் கண்ணாடி ஃபிரேம் தயாரிக்க பயன்படும் உலோகம் எது?

 பீரங்கி வெண்கலம்

957.  விமான உடம்பு பாகங்கள் தயாரிக்க பயன்படும் உலோகம் எது?

டியூராலுமின்

958. சமையல் பாத்திரங்கள் தயாரிக்க பயன்படும் உலோகம் எது?

மாக்னலீயம்

959. கப்பல் கட்டுமானத்திற்கு பயன்படும் உலோகம் எது?

எஃகிரும்பு

960.67% நிக்கலும் செம்பு மற்றும் மிகச்சிறிதளவு இரும்பு,மாங்கனீசு,கார்பன் மற்றும் சிலிக்கான் கலந்த ஒரு உலோகக் கலவை எவ்வாறு் அழைக்கப்படும்?

மோனல்

961.  மோனல் எங்கு பயன்படுத்தப்படுகிறது?

விமான கட்டுமானத்திலும் சோதனை ராக்கெட்டுகளில் தோல் போன்ற வெளிப்புற பகுதியிலும்

962. ஒரு உலோகம் எதனோடு சேர்க்கப்படும்போது அது அமால்கம் என அழைக்கப்படுகிறது?

பாதரசம்


9TH CHEMISTRY STUDY NOTES |தனிமங்களின் வகைப்பாடு அட்டவணை| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: