- நீரில் கரையும் பொழுது ஹைட்ரஜன் அயனிகளை தர வல்லது எவ்வாறு அழைக்கப்படும் ?
அமிலம்
- நீரில் கரையும் பொழுது ஹைட்ராக்சைடு அயனிகளை தரவல்லது எவ்வாறு அழைக்கப்படும்?
காரம்
- அமிலமும் காரமும் ஒன்றோடொன்று வினைபுரிந்து நடுநிலை வினைவிளை பொருளைத் தருகிறது அது என்ன?
உப்பு
- அமிலம் என்ன சுவையை உடையது?
புளிப்பு சுவை
- ஆசிட் என்ற ஆங்கிலச் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
அசிடஸ் என்ற இலத்தின் மொழி
- அசிடஸ் என்ற இலத்தின் மொழி பொருள் என்ன?
புளிப்பு சுவை
- ஆப்பிளில் காணப்படும் அமிலம் என்ன?
மாலிக் அமிலம்
- எலுமிச்சையில் காணப்படும் அமிலம் ?
சிட்ரிக் அமிலம்
- திராட்சையில் காணப்படும் அமிலம்?
டார்டாரிக் அமிலம்
- தக்காளியில் காணப்படும் அமிலம்?
ஆக்சாலிக் அமிலம்
- வினிகரில் காணப்படும் அமிலம் ?
அசிட்டிக் அமிலம்
- தயிரில் காணப்படும் அமிலம் ?
லாக்டிக் அமிலம்
- ஆரஞ்சு பழத்தில் காணப்படும் அமிலம்?
அஸ்கார்பிக் அமிலம்
- தேநீரில் காணப்படும் அமிலம் ?
டானிக் அமிலம்
- வயிற்றில் சுரக்கும் அமிலம் ?
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
- எறும்பு தேனியின் கொடுக்கில் உள்ள அமிலம்?
பார்மிக் அமிலம்
- அமிலம் மற்றும் காரங்கள் பற்றிய கொள்கையை முன்மொழிந்தவர் யார?
ஸ்வான்டே அர்ஹீனியஸ்,1884
- யாருடைய கூற்றுப்படி அமிலங்கள் நீரில் கரையும் பொழுதுH+ அயனிகளையோ அல்லது H3O+அயனிகளையோ தருகிறது?
ஸ்வான்டே அர்ஹீனியஸ்
- ஹைட்ரஜன் அயனிகள் தனித்து காணப்படாமல் நீருடன் சேர்ந்து என்ன அயனிகளாக உள்ளன?
ஹைட்ரோனியம்
- அசிட்டிக் அமிலத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு ?
CH3COOH
- பார்மிக் அமிலத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு ?
HCOOH
- நைட்ரிக் அமிலத்தில் மூலக்கூறு வாய்ப்பாடு ?
HNO3
- சல்பியூரிக் அமிலத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு ?
H2SO4
- பாஸ்பரிக் அமிலத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு?
H3PO4
- மூலங்களின் அடிப்படையில் அமிலங்களின் வகைகள் என்னென்ன?
கரிம அமிலங்கள் ,கனிம அமிலங்கள்
- காரத்துவத்தான் அடிப்படையில் அமிலங்களின் வகைகள் என்னென்ன?
ஒற்றை காரத்துவம் , இரட்டை காரத்துவம் ,மும்மை காரத்துவம்
- தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கரிம அமிலங்கள்
- HCOOH,CH3COOH ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு?
கரிம அமிலங்கள்
- பாறைகள் மற்றும் கனிமப் பொருள்களில் இருந்து பெறப்படும் அமிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கனிம அமிலங்கள்
- Hcl,HNO3,H2SO4 ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு?
கனிம அமிலங்கள்
- நீர்க் கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியை தந்தால் அது என்ன அமிலம் ?
ஒற்றை காரத்துவ அமிலம்
- நீர்க் கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு இரண்டு ஹைட்ரஜன் அயனியை தந்தால் அது என்ன அமிலம் ?
இரட்டை காரத்துவ அமிலம்
- நீர்க் கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு மூன்று ஹைட்ரஜன் அயனியை தந்தால் அது என்ன அமிலம் ?
மும்மை காரத்துவ அமிலம்
- HCL,HNO3 இவை எதற்கு எடுத்துக்காட்டு?
ஒற்றை காரத்துவம்
- H2SO4,H2CO3 இவை எதற்கு எடுத்துக்காட்டு ?
இரட்டை காரத்துவ அமிலம்
- H3PO4 இவை எதற்கு எடுத்துக்காட்டு?
மும்மை காரத்துவ அமிலம்
- ஒரு மூலக்கூறு அமிலத்தின் உள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்க பயன்படும் பதம் எது ?
காரத்துவம்
- அயனியுறும் அடிப்படையில் அமிலங்களை எத்தனை வகைப்படுத்தலாம்?
இரண்டு, வலிமைமிகு அமிலங்கள் ,வலிமை குறைந்த அமிலங்கள்
- எந்த அமிலங்கள் நீரில் முழுவதுமாக அயனியுறும்?
வலிமைமிகு அமிலங்கள்
- எந்த அமிலங்கள் நீரில் பகுதியளவே அயனியுறும் தன்மை கொண்டவை?
வலிமை குறைந்து அமிலங்கள்
- வெப்பம் அல்லது கதிர்வீச்சு அல்லது வேதிவினை அல்லது மின்னிறக்கத்தால் அயனிகளைப் பிரித்தெடுக்கும் நிலைக்கு பெயர் என்ன?
அயனியாதல்
- செறிவின் அடிப்படையில் அமிலங்கள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
இரண்டு :செறிவு மிகு அமிலங்கள் ,நீர்த்த அமிலங்கள்
- நீரில் அமிலங்களின் சதவீதத்தை அதிகளவு கொண்டுள்ள அமிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செறிவு மிகு அமிலங்கள்
- நீரில் அமிலங்களின் சதவீதத்தை குறைந்தளவு கொண்டுள்ள அமிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீர்த்த அமிலங்கள்
- அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை என்ன நிறமாக மாற்றும்?
சிவப்பு
- அமிலங்கள் செயல்திறன்மிக்க உலோகங்களுடன் வினைபுரிந்து என்ன வாயுவைத் தரும்?
ஹைட்ரஜன்
- இந்த உலோகங்கள் அமிலத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளியேற்றுவதில்லை?
Ag,Cu
- அமிலங்கள் உலோக கார்ப்பனேட்டுகள் மற்றும் உலோக பைகார்பனேட்களுடன் வினைபுரிந்து எதைத் தருகிறது?
கார்பன்-டை-ஆக்சைடு
- அமிலங்கள் உலோக ஆக்சைடுகள் உடன் வினைபுரிந்து எவற்றை தருகின்றது?
உப்பையும் நீரையும்
- என்ன கரைப்பானில் அமிலங்களை அயனியுறுவதில்லை?
கரைப்பான்கள்
- வேதிப்பொருள்களின் அரசன் என அழைக்கப்படுவது எது ?
கந்தக அமிலம் ( சல்பியூரிக் அமிலம்)
- ஹைட்ரோகுளோரிக் அமிலம் எதற்கு பயன்படுகிறது?
கழிவறைகளை தூய்மைப்படுத்த
- சிட்ரிக் அமிலம் எதற்கு பயன்படுகிறது?
உணவுப் பொருட்களைப் பதப்படுத்த
- நைட்ரிக் அமிலம் எதற்கு பயன்படுகிறது ?
உரமாக ,சாயங்கள், வண்ணப்பூச்சுகள் மற்றும் மருந்துகளை தயாரிக்க
- குவாட்ஸ் படத்தில் ஏற்படும் இரும்பு மற்றும் மாங்கனீசு கழிவுகளை சுத்தம் செய்ய பயன்படும் அமிலம் எது?
ஆக்சாலிக் அமிலம்
- மரப்பொருள்களை ன தூய்மையாகவும் மற்றும் கருப்பு கறைகளை நீக்கவும் பயன்படும் அமிலம் எது ?
ஆக்சாலிக் அமிலம்
- காற்று அடைக்கப்பட்ட பானங்கள் பயன்படுத்தப்படும் அமிலம் எது ?
கார்பானிக் அமிலம்
- ரொட்டி சோடாவின் ஒரு பகுதிப் பொருளாக உள்ளது என்ன அமிலம் ?
டார்டாரிக் அமிலம்
- எந்த இரு அமிலங்கள் இணைந்து ராஜதிராவகம் எனும் அமிலத்தை உருவாக்குகிறது?
HCL & HNO3
- ராஜதிராவகம் என்பது எத்தனை பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் கலந்த கலவை?
3:1
- ராஜதிரவாகம் என்ன நிறமுடைய திரவம்?
மஞ்சள்- ஆரஞ்சு நிறமுடைய புகையை கூடிய திரவம்
- ராஜதிரவாகத்தின் வேதியியல் வாய்ப்பாடு என்ன?
3HCL+HNO3
- ராஜதிரவாகத்தின் உருகுநிலை என்ன?
-42°C
- ராஜதிரவாகத்தின் கொதிநிலை என்ன?
108°C
- ராஜதிராவகம் என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
இலத்தீன்(பொருள் திரவத்தின் அரசன்)
- நீரில் கரையும் காரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எரிகாரங்கள்
- அமிலத்துவத்தின் அடிப்படையில் காரங்கள் எத்தனை வகைப்படுகிறது?
மூன்று :ஒற்றை அமிலத்துவ காரம், இரட்டை அமிலத்துவ காரம், மும்மை அமிலத்துவ காரம்
- நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு ஒரு ஹைட்ராக்சைடு அணியை தருபவை எவ்வாறு அழைக்கப்படும்?
ஒற்றை அமிலத்துவ காரம்
- நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு இரண்டு ஹைட்ராக்சைடு அணியை தருபவை எவ்வாறு அழைக்கப்படும்?
இரட்டை அமிலத்துவ காரம்
- நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு மூன்று ஹைட்ராக்சைடு அணியை தருபவை எவ்வாறு அழைக்கப்படும்?
மும்மை அமிலத்துவ காரம்
- NaOH,KOH இவை இதற்கு எடுத்துக்காட்டு?
ஒற்றை அமிலத்துவ காரம்
- Ca(OH)2,Mg(OH)2 இவை இதற்கு எடுத்துக்காட்டு?
இரட்டை அமிலத்துவ காரம்
- Al(OH)3,Fe(OH)3 இவை இதற்கு எடுத்துக்காட்டு?
மும்மை அமிலத்துவ காரம்
- செறிவின் அடிப்படையில் காரங்கள் எத்தனை வகைப்படும் ?
இரண்டு: செறிவு காரங்கள் ,நீர்த்த காரங்கள்
- நீரில் காரங்களின் சதவீதத்தை அதிகளவு கொண்டுள்ளது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
செறிவு மிகு காரங்கள்
- நீரில் காரங்களின் சதவீதத்தை குறைந்தளவு கொண்டுள்ளது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நீர்த்த காரங்கள்
- அயனியாதல் அடிப்படையில் காரங்கள் எத்தனை வகைப்படும் ?
இரண்டு:வலிமை மிகு காரங்கள், வலிமை குறைந்த காரங்கள்
- நீர்த்த கரைசலில் முழுவதுமாக அயனியுறும் காரங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
வலிமைமிகு காரங்கள்
- நீர்த்த கரைசலில் பகுதியளவே அயனியுறும் காரங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
வலிமை குறைந்த காரங்கள்
- NaOH,KOH – எதற்கு எடுத்துக்காட்டு?
வலிமைமிகு காரங்கள்
- NH4OH,Ca(OH)2-எதற்கு எடுத்துக்காட்டு?
வலிமை குறைந்த காரங்கள்
- ஒரு காரத்தின் ஒரு மூலக்கூறில் உள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ராக்ஸில் தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அமிலத்துவம்
- காரங்கள் என்ன சுவை உடையவை?
கசப்பு சுவை
- காரங்கள் நீர்த்த கரைசலில் என்ன தன்மையைக் கொண்டவை?
சோப்பு போன்ற வழவழப்புத் தன்மை
- காரங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து உப்பையும் என்ன வாயுவையும் தருகின்றன?
ஹைட்ரஜன் வாயு
- காரங்கள் உலோக ஆக்சைடுகள் உடன் வினைபுரிந்து உப்பையும் எவற்றையும் தருகிறது?
நீர்
- காரங்கள் அமிலங்களுடன் வினைபுரிந்து உப்பையும் எவற்றையும் தருகிறது?
நீர்
- அமோனியம் உப்புகளுடன் காரங்களை வெப்பப்படுத்தும் போது என்ன வாயு உருவாகிறது?
அமோனியா வாயு
- சில உலோகங்கள் சோடியம் ஹைட்ராக்சைடு உடன் வினை புரிவதில்லை அவை எவை?
Cu,Ag,Cr
- சோப்பு தயாரிக்க என்ன காரம் பயன்படுகிறது?
சோடியம் ஹைட்ராக்சைடு
- கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு பூச என்ன காரணம் பயன்படுகிறது ?
கால்சியம் ஹைட்ராக்சைடு
- எந்த காரம் வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது ?
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
- துணிகளில் எண்ணெய் கறையை நீக்குவதற்கு என்ன காரம் பயன்படுத்தப்படுகிறது?
அம்மோனியம் ஹைட்ராக்சைடு
- காரம் லிட்மஸ் தாளை என்ன நிறமாக மாற்றும்?
நீலநிறம்
- அமிலம் பினாப்தலினுடன் வினைபுரியும் போது என்ன நிறத்தை தரும்?
நிறமற்றது
- காரம் பினாப்தலினுடன் வினை புரியும் பொழுது என்ன நிறத்தை தரும்?
இளஞ்சிவப்பு
- அமிலம் மெத்தில் ஆரஞ்சு உடன் வினைபுரியும் போது என்ன நிறத்தை தரும்?
இளஞ்சிவப்பு
- காரம் மெத்தில் ஆரஞ்சு உடன் வினைபுரியும் பொழுது என்ன நிறத்தை காட்டும்?
மஞ்சள்
- கரைசலை ஹைட்ரஜன் அயனிகளின் செறிவின் அடிப்படையில் அளவிடுதலுக்கு என்ன பெயர்?
pH அளவீடு
- pH வார்த்தையில் உள்ள p என்பதன் பொருள் என்ன?
ஜெர்மனி மொழியில் உள்ள பொட்டன்ஷ்( பொருள்: அதிக ஆற்றல்)
- pH அளவீட்டில் எத்தனை வகையான அளவீடு காணப்படுகிறது?
0 முதல் 14 வரை
- அமிலத்தன்மை கொண்ட கரைசலின் pH மதிப்பு?
7ஐ விட குறைவாக இருக்கும்
- காரத்தன்மை கொண்ட கரைசலின் pH மதிப்பு?
7ஐ விட அதிகமாக இருக்கும்
- நடுநிலைத்தன்மை கொண்ட கரைசலின் pH மதிப்பு?
7ஐ விட சமமாக இருக்கும்
- இரத்தத்தின் pH மதிப்பு என்ன?
7.3-7.5
- உமிழ்நீர் pH மதிப்பு என்ன?
6.5-7.5
- வயிற்றில் சுரக்கும் திரவம் pH மதிப்பு என்ன?
1.0-3.0
- குளிர்பானங்கள் pH மதிப்பு என்ன?
3.0
- கடல்நீர் pH மதிப்பு என்ன?
8.5
- வீட்டில் பயன்படுத்தும் அம்மோனியா pH மதிப்பு என்ன?
12 0
- தக்காளி சாறு pH மதிப்பு என்ன?
4.0-44
- நமது உடம்பின் pHமதிப்பு தோராயமாக என்ன?
7.0-7.8
- வயிற்றில் சுரக்கப்படும் pH மதிப்பு தோராயமாக?
2.0
- மழைநீரின் pH மதிப்பு ஏறக்குறைய எவ்வளவு?
7
- நமது பற்களில் உள்ள எனாமல் எவற்றால் உருவானது?
கால்சியம் பாஸ்பேட்
- சிட்ரஸ் பழங்களுக்கு என்ன தன்மையுடைய மண் தேவைப்படும்?
காரத்தன்மை
- அரிசிக்கா என்ன தன்மையுடைய மண் தேவைப்படும்?
அமிலத்தன்மை
- கரும்பிற்கு என்ன தன்மையுடைய மண் தேவைப்படும்?
நடுநிலத்தன்மை
- வளிமண்டலத்தின் வாயுவானது எந்த ஆக்சைடுகளால் மாசடையும் பொழுது அமில மழையாக பொழிகிறது?
கந்தகம் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள்
- ஓர் அமிலம் மற்றும் காரம் இவற்றின் முழுமையான நடுநிலையாக்கலின் போது எது கிடைக்கிறது ?
சாதாரண உப்பு
- ஓர் உலோகமானது அமிலத்தில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களின் பகுதி அளவை வெளியேற்றுவதால் எந்த உப்பு உருவாகிறது?
அமில உப்புகள்
- இரு அமிலத்துவ அல்லது மூன்று அமிலத்துவ காரங்களில் உள்ள ஹைட்ராக்சைடு அயனிகளை ஓர் அமிலத்தால் பகுதியளவு வெளியேற செய்து பெறப்படும் உப்பு எது ?
கார உப்புகள்
- சமமான மூலக்கூறு எடை விகித அளவுகளில் இரண்டு எளிய உப்புகளின் நிறைவுற்ற கரைசல்களை சேர்த்து படிகமாக்கும்போது எந்த உப்புகள் உருவாகின்றன?
இரட்டை உப்புகள்
- இரட்டை உப்புகள் எடுத்துக்காட்டு எவை?
பொட்டாஷ் படிகாரம்
- பொட்டாஷ் படிகாரம் என்பது என்ன கலவை ?
பொட்டாசியம் சல்பேட் மற்றும் அலுமினியம் சல்பேட்
- நீரில் கரையாத உப்பு எது ?
சில்வர் குளோரைடு
- படிக நீரைக்கொண்டுள்ள உப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?
நீரேற்ற உப்புகள்
- காப்பர் சல்ஃபேட் பெண்டாஹைடிரேட் என்ற உப்பினை வெப்பப்படுத்தும் போது நீர் மூலக்கூறுகளை இழந்து என்ன நிறமாக மாறும் ?
வெண்மை
- அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் வினைபுரிந்த கலவையை பிளாட்டினம் கம்பியின் உதவியோடு சுடரில் காட்டப்படும் பொழுது சுடரின் நிறம் செங்கல் சிவப்பில் இருந்தால் அது என்ன உப்பை சுட்டிக்காட்டுகிறது?
Ca2+
- அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் வினைபுரிந்த கலவையை பிளாட்டினம் கம்பியின் உதவியோடு சுடரில் காட்டப்படும் பொழுது சுடரின் நிறம் பொன்னிற மஞ்சள் இருந்தால் அது என்ன உப்பை சுட்டிக்காட்டுகிறது?
Na2+
- அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் வினைபுரிந்த கலவையை பிளாட்டினம் கம்பியின் உதவியோடு சுடரில் காட்டப்படும் பொழுது சுடரின் நிறம் இளஞ்சிவப்பு ஊதாவாக இருந்தால் அது என்ன உப்பை சுட்டிக்காட்டுகிறது?
K+
- அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் வினைபுரிந்த கலவையை பிளாட்டினம் கம்பியின் உதவியோடு சுடரில் காட்டப்படும் பொழுது சுடரின் நிறம் பச்சையாக இருந்தால் அது என்ன உப்பை சுட்டிக்காட்டுகிறது?
Zn+
- ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பனேட் உப்புகளுடன் சேர்க்கும் பொழுது எதனை தருகிறது?
நுரை பொங்கும் கார்பன்-டை-ஆக்சைடு வாயு
- நம் அன்றாட உணவிலும் உணவை பாதுகாப்பதிலும் பயன்படுவது எது?
சாதாரண உப்பு (NaCl)
- கடின நீரை மென்னீராக்கப் பயன்படும் உப்பு எது?
சோடியம் கார்பனேட்
- கண்ணாடித் தொழிற்சாலை சோப்பு மற்றும் பேப்பர் தொழிற்சாலைகளில் பயன்படும் உப்பு எது?
சோடியம் கார்பனேட்
- சோடியம் கார்பனேட் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
சலவை சோடா(Na2Co3)
- சமையல் சோடாவும் டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ரொட்டி சோடா
- ரொட்டி சோடா தயாரிக்கப் பயன்படும் உப்பு எது?
சோடியம் பை கார்பனேட்(NaHCo3)
- எந்த உப்பு சோடா -அமில தீயணைப்பான்கள் பயன்படுகிறது?
சோடியம் பை கார்பனேட்
- எந்த உப்பு கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுகிறது?
சோடியம் பை கார்பனேட்
- வயிற்றில் உள்ள அதிகப்படியான அமிலத்தை நநடுநிலையாக்க பயன்படும் அமிலநீக்கியிலுள்ள ஒரு பகுதி பொருள் எந்த உப்பைக் கொண்டு உள்ளது?
சோடியம் பை கார்பனேட்
- பருத்தி மற்றும் லெனின் துணிகளை வெளுக்க மற்றும் கிருமி நாசினியாகவும் எது பயன்படுகிறது?
கால்சியம் ஆக்சிகுளோரைடு (CaOCl2)
- கால்சியம் ஆக்சிகுளோரைடு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சலவைத்தூள்
- முறிந்த எலும்புகளை ஒட்ட வைக்கவும், சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்வதற்கும் பயன்படும் உப்பு எது?
கால்சியம் சல்பேட் ஹெமிஹௌட்ரேட் (CaSo4.½H2O)
- கால்சியம் சல்பேட் ஹெமிஹௌட்ரேட் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாரிஸ் சாந்து
9TH CHEMISTRY STUDY NOTES |அமிலங்கள் காரங்கள் மற்றும் உப்புகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services