- குழந்தைப் பருவத்திலிருந்து வயதுவந்தோர் பருவத்திற்கு மாறக்கூடிய காலகட்டம் என்ன?
13 வயதில் தொடங்கி 19 வயதில் முடிவடைகிறது(டீன் ஏஜ்)
- வளரிளம் பருவம் (adolescere) என்ற சொல்லானது எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
இலத்தீன் (அடோலசர் – பொருள் வளர்வதற்கு அல்லது முதிர்ச்சிக்கான வளர்ச்சி)
- பெண்களில் பருவமடைதலின் சராசரி வயது என்ன?
10-11 வயது
- ஆண்களில் பருவமடைதலின் சராசரி வயது என்ன?
12-13 வயது
- விந்தகங்கள் என்ன ஹார்மோனை சுரக்கின்றன ?
டெஸ்டோஸ்டீரான்
- அண்டகங்கள் என்ன ஹார்மோனை சுரக்கின்றன?
ஈஸ்ட்ரோஜன்
- பருவமடையும் போது ஏற்படும் எத்தனை முக்கிய மாற்றங்கள் குழந்தைப்பருவ உடல் அமைப்பினை வயதுவந்தோர் உடல் அமைப்பாக மாற்றுகின்றன?
நான்கு: உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள் ,உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், முதல்நிலை பால்பண்புகளின் வளர்ச்சி ,இரண்டாம் நிலை பால் பண்புகளின் வளர்ச்சி
- பெண்களில் உடலளவில் ஏற்படும் மாற்றங்கள் எந்த வயதில் ஏற்படுகிறது?
10 முதல் 12 வயதில் துவங்கி 17 முதல் 19 வயது வரை முடிவடைகிறது
- ஆண்களில் உடலளவில் ஏற்படும் மாற்றங்கள் எந்த வயதில் ஏற்படுகிறது?
12 முதல் 13 வயதில் துவங்கி 19 முதல் 20 வயது வரை முடிவடைகிறது
- வளரிளம் பருவத்தில் ஆண்களின் உயரத்தில் சராசரியாக எவ்வளவு உயரம் அதிகரிக்கிறது?
23 சென்டிமீட்டர்
- வளரிளம் பருவத்தில் பெண்களின் உயரத்தில் சராசரியாக எவ்வளவு உயரம் அதிகரிக்கிறது?
26 சென்டிமீட்டர்
- வளரிளம் பருவத்தில் பெண்களின் எடை சராசரியாக எவ்வளவு அதிகரிக்கிறது?
17 கிலோ கிராம்
- வளரிளம் பருவத்தில் ஆண்களின் எடை சராசரியாக எவ்வளவு அதிகரிக்கிறது?
19 கிலோ கிராம்
- ஆண் மற்றும் பெண்ணின் முதல்நிலை பால் உறுப்புகள் முறையை என்னென்ன ?
விந்தகங்கள் மற்றும் அண்டகங்கள்
- ஆண்களில் எந்த ஹார்மோனால் இரண்டாம் நிலை பால் பண்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன?
விந்தகங்களால் சுரக்கப்படும் டெஸ்டோஸ்டிரோன் அல்லது ஆண்ட்ரோஜன்
- பெண்களில் எந்த ஹார்மோனால் இரண்டாம் நிலை பால் பண்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன?
அண்டகங்களால் சுரக்கப்படும் ஈஸ்ட்ரோஜன்
- ஆண்களில் வளர்ந்து பெரிதாகி வெளியே துருத்திக் கொண்டிருக்கும் குரலொலி பெட்டகம் ஆனது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆடம்ஸ் ஆப்பிள்
- இனப்பெருக்க ஹார்மோன்கள் எதனால் ஒழுங்குப்படுத்தப்படுகின்றன?
பிட்யூட்டரியின் முன் கதுப்பு (அடினோ ஹைப்போபைசிஸ்)
- இனப்பெருக்க நடத்தைகள் முக்கியமாக எந்த ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகின்றது?
லூட்டினைசிங் ஹார்மோன் (LH) மற்றும் பாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன்(FSH)
- எதன் தூண்டுதலால் ஆண் இனப்பெருக்க ஹார்மோனான ஆண்ட்ரோஜன் விந்தகங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது ?
LH
- ஆண்களில் பருவமடைதலில் தொடங்கும் விந்துசெல் உற்பத்தி எவ்வளவு காலம் வரை நீடிக்கும் ?
வாழ்நாள் முழுவதும்
- எதன் தூண்டுதலால் பெண் இனப்பெருக்க ஹார்மோனான கிராஃபியன் பாலிக்கிள்களின் வளர்ச்சியைத் தூண்டி ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்கிறது?
FSH
- லூட்டினைசிங் ஹார்மோன் (LH) பணிகள் என்னென்ன?
பெண்களில் அண்டம் விடுபடுதல் ,கார்ப்பஸ் லூட்டியம் உருவாக்கம் மற்றும் ஹார்மோனான புரோஜெஸ்ட்டிரான் உற்பத்தி ,கிராஃபியன் பாலிக்கிள்களின் இறுதிமுதிர்வு
- லூட்டினைசிங் ஹார்மோன் (LH) வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
இடையீட்டு செல்களை தூண்டும் ஹார்மோன்
- ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல ஸ்டீராய்டு ஹார்மோன்களின் தொகுப்பு எது ?
ஈஸ்ட்ரோஜன்
- பாலூட்டுதலின்போது பாலை உற்பத்தி செய்வது எதனுடைய பணி?
புரோலாக்டின் ஹார்மோன்
- எந்த ஹார்மோன் மார்பகங்களில் இருந்து பால் வெளியேறுதலுக்கு காரணமாகிறது?
ஆக்சிடோசின்
- குழந்தை பிறப்பின் போது தசைகளை சுருங்க செய்து குழந்தை பிறப்பை எளிதாக்கும் ஹார்மோன் எது?
ஆக்சிடோசின்
- பெண்களில் இனப் பெருக்க நிலை காலகட்டம் என்ன?
10 முதல் 12 வயதில் தொடங்கி 45 முதல் 50 வயதில் முடிவடைகிறது
- பருவமடைதலின்போது முதன்முதலில் தோன்றும் மாதவிடாய் சுழற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பூப்படைதல்
- மாதவிடாய் சுழற்சி எத்தனை நாட்களைக் கொண்டது?
28 நாட்கள்
- மாதவிடாய் சுழற்சியில் அண்டமானது எத்தனையாவது நாள் விடுபடுகிறது ?
14ஆம் நாள்
- எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அண்டத்தில் இருந்து முதிர்ச்சி அடைந்த அண்டமானது வெளியேறுகிறது?
28 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை
- கார்ப்பஸ் லூட்டியம் தொடர் வளர்ச்சியினால் அதிகளவில் எது உற்பத்தி செய்யப்படுகிறது?
புரோஜெஸ்டிரான்
- எலும்பு உடையும் தன்மையான (ஆன்ட்டியோபோரோசிஸை) தடுக்க என்ன ஊட்டச்சத்து அவசியமானதாகும் ?
கால்சியம்
- தைராய்டு சுரப்பி தொடர்பான நோய்களை தடுக்க உதவும் ஊட்டச்சத்து எது?
அயோடின்
- இரத்தத்தை உருவாக்குவதில் எந்த தனிமம் முக்கிய பங்கு வகிக்கிறது?
இரும்பு
8TH ZOOLOGY STUDY NOTES |வளரிளம் பருவம் அடைதல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services