- மழைக்காலங்களில் விதைக்கப்படும் பயிர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காரிப் பயிர்கள்
- காரிப் பயிர்களின் மாத வரையறை என்ன?
(ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை)
- காரிப் பயிர்கள் எவை?
நெல் ,சோளம், சோயா,மொச்சை ,நிலக்கடலை, பருத்தி போன்றவை
- குளிர்காலங்களில் வளர்க்கப்படும் பயிர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ரபி பயிர்கள்
- ரபி பயிர்கள் என்னென்ன?
கோதுமை ,பருப்பு ,பட்டாணி ,கடுகு மற்றும் ஆளி விதை
- கோடை காலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சயாடு பயிர்கள்
- சயாடு பயிர்கள் என்னென்ன?
தர்பூசணி, வெள்ளரி போன்றவை
- பயன்பாட்டின் அடிப்படையில் பயிர்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
உணவு பயிர்கள், தீவனப்பயிர்கள் ,நார் பயிர்கள், எண்ணெய் பயிர்கள் ,அலங்கார தாவரங்கள்
- கோதுமை நெல் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?
இரண்டாவது இடம்
- பயிர்களுக்கு ஊட்டப் பொருட்கள் கிடைப்பதற்கு மண்ணை மேல் கீழாக மாற்றி மற்றும் தளர்வடையச் செய்யும் முறைக்கு என்ன பெயர் ?
உழுதல்
- தாவர மற்றும் விலங்கு கழிவுகள் மட்குவதனால் கிடைக்கும் கரிமப் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அங்கக மட்கு
- நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க தக்க பாசன அமைப்பு முறை எது ?
தெளிப்பு நீர் பாசனம்
- உலக மக்கள் தொகை 2050ஆம் ஆண்டில் எவ்வளவு ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது?
9 பில்லியன்
- நன்னீர் வழத்தில் எத்தனை சதவீத விழுக்காடு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது?
70
- உலகம் முழுவதும் எத்தனை க்கும் மேற்பட்ட களைச் சிற்றினங்கள் உள்ளது?
30000
- உலகெங்கிலுமுள்ள களைச் சிற்றினங்களில் எவ்வளவு சிற்றினங்கள் பயிர்களுக்கு தீவிர இழப்பினை ஏற்படுத்தும்?
18,000
- விளைந்த பயிர்களை வெட்டி சேகரிக்கும் முறைக்கு பெயர் என்ன?
அறுவடை
- இந்திய உணவு கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?
1965 ,ஜனவரி 14
- இந்திய உணவு கழகம் முதன் முதலில் எங்கு நிறுவப்பட்டது?
சென்னை
- இந்திய உணவுக் கழகத்தின் தலைமை இடம் எங்கு உள்ளது?
புதுடெல்லி
- சேமிப்பு கிடங்குகளில் சிறு பூச்சிகள் மற்றும் பூச்சிகளை குறைப்பதற்கு வேதிய தோல்விதூவிகள் தெளிக்கப்படுகிறது இதற்கு என்ன பெயர்?
புகையூட்டம்
- ஒரே இடத்தில் ஒரு குறிப்பிட்ட கால வரிசையில் பல வகை பயிர்களை வரிசையாக நடவு செய்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பயிர் சுழற்சி
- எந்த வகை பயிர்கள் மண் உற்பத்தியை தக்க வைத்துக்கொள்ள பயன்படுகிறது?
லெகூம் பயிர்
- மரபு பல்வகைமையினை பாதுகாத்திட விதைகள் சேமிக்கப்படும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விதை வங்கி
- எங்கு முதல் முறையாக விதை வங்கிக்காண விதைகள் சேமிக்க தொடங்கப்பட்டது ?
கொல்கத்தாவில் உள்ள அரசு தாவரவியல் தோட்டம்
- புதுடெல்லியில் அமைந்துள்ள அரசு சாரா நவதானிய விதை வங்கி தானிய இனங்களில் எத்தனை பயிர் ரகங்களை பாதுகாக்கிறது?
ஏறத்தாழ 50,000
- ஆச்சார்ய ஜெகதீஸ் சந்திரபோஸ் இந்திய தாவரவியல் தோட்டம் எங்கு உள்ளது ?
கொல்கத்தா
- ஆச்சார்ய ஜெகதீஸ் சந்திரபோஸ் இந்திய தாவரவியல் தோட்டம் முதலில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
ராயல் தாவரவியல் தோட்டம்
- மண், மக்கிய குப்பை மற்றும் தாவர வகைகளின் கலவை எவ்வாறு் அழைக்கப்படுகிறது ?
விதைப்பந்துகள்
- சுற்றுச்சூழலின் தரம் சார்ந்த நிலைகளை வெளிப்படுத்தக் கூடிய ஒரு உயிரினம் அல்லது இனங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
உயிரி சுட்டிகள் அல்லது உயிரியல் சுட்டிக்காட்டிகள்
- லைக்கன்கள் எதனை விளக்கும் ஒரு உயிரி-சுட்டிக்காட்டியாகும்?
காலநிலை மாற்றத்தையும் காற்று மாசுபடுதலின் விளைவினையும்
- லைக்கன்கள் என்பது எந்த உயிரிகளின் ஒருங்கிணைந்த அமைப்பு ?
பாசி மற்றும் பூஞ்சை
- இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்(IARI) பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பூஜா நிறுவனம்
- இந்தியாவில் 1970 ஆம் ஆண்டில் பசுமை புரட்சிக்கு வித்திட்ட ஆராய்ச்சிக்கு காரணமாக இருந்த நிறுவனம் எது?
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்(IARI)
- இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் யார்?
(ICAR) வேளாண் துறை அமைச்சர்
- எந்த மையம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் விவசாயிகளுக்கு (ICAR) இடையேயான இறுதியான இணைப்பாக செயல்படுகிறது?
க்ரிஷி விஞ்ஞான கேந்திரா
- முதல் க்ரிஷி விஞ்ஞான கேந்திரா எங்கு நிறுவப்பட்டது?
பாண்டிச்சேரி ,1974
- திரவநிலை உரங்களை இலைகளில் நேரடியாக செலுத்தி தாவரங்களுக்கு ஊட்டமளிக்கும் நுட்பத்தின் பெயரென்ன ?
இலையில் தெளிப்பு
- மண்புழுக்களின் செயல்பாடுகளைக் கொண்ட ஒரு அமைப்பின் வழியாக நீர் கடந்த பிறகு சேகரிக்கப்படும் திரவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மண்புழு கரைசல்
- மண்புழு கரைசல் எவ்வாறு பயன்படுகிறது?
இலையில் தெளிப்பானாக
- பஞ்சகாவியா எதனை உள்ளடக்கியது?
மாட்டு சாணம் ,கோமியம், பால் ,தயிர், நெய்
- ஊட்டத்திற்கு அல்லது பெருக்கம் அடைவதற்கு பயன்படும் தீங்குயிரி பூச்சிகளை தாக்கும் இயற்கையில் காணப்படும் பூச்சிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
உயிரிக்கொன்றுண்ணிகள்
- அசுவினி பூச்சிகள் ,வெள்ளை ஈக்கள், பருத்தி உருளைப் புழுக்கள், இலைப் பூச்சிகள் போன்றவற்றை எந்த சிற்றினம் கட்டுப்படுத்துகிறது?
கிரைசோபா சிற்றினம்,மெனோசிலஸ் சிற்றினம்
- பிளாக் நீல் கேப்பசிடு என்ற பழ மரங்களில் காணப்படும் பூச்சி எதனை உண்ணுகிறது?
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவப்பு சிலந்தி பூச்சிகள்
- உயிரியல் பூச்சிக் கொல்லியாக பயன்படும் டிரைக்கோடெர்மா விருடி எந்த வகை உயிரிப் பூச்சிக்கொல்லி?
பூஞ்சை
- டிரைக்கோடெர்மா விருடி உயிரிப் பூச்சிக்கொல்லி எதற்கு பயன்படுகிறது?
பூஞ்சைகளால் ஏற்படும் வாடல் நோய் மற்றும் இலைகளின் துருநோய் போன்றவற்றை கட்டுப்படுத்த
- பருத்தி, சோள தாவரங்களைப் பாதிக்கும் லெபிடாப்டீரா பூச்சிகளை கட்டுப்படுத்த எந்த பேக்டீரியா உதவுகிறது?
பேசில்லஸ் துரின்ஜியென்சிஸ்
- வேம்பு விதையிலிருந்து பெறப்படும் எந்த சேர்மம் நல்ல பூச்சிவிரட்டி ஆகும்?
அசாடிராக்டின்
- மனிதனால் பயன்படுத்தப்பட்ட ஆரம்பகால பூச்சிக்கொல்லிகளில் ஒன்றாக பயன்பட்ட இலை எது?
மார்கோசா இலைகள்
8TH ZOOLOGY STUDY NOTES |பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services