- நுண்ணுயிரிகளை பற்றி படிக்கும் அறிவியலின் பிரிவு என்ன?
நுண்ணுயிரியல்
- நுண்ணுயிரிகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது ?
ஐந்து: வைரஸ், பாக்டீரியா ,பூஞ்சை ,ஆல்கா, புரோட்டோசோவா
- உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளுக்கு இடைப்பட்ட நுண்ணுயிரி என அழைக்கப்படுவது எது?
வைரஸ்
- வைரஸ் என்பது எந்த மொழிச்சொல்?
இலத்தீன்
- இலத்தீன் மொழியில் வைரஸ் என்பதற்கு என்ன பொருள்?
விஷம்
- வைரஸ் பற்றிய படிப்புக்கு என்ன பெயர் ?
வைராலஜி
- வைரஸ்கள் பாக்டீரியாவை காட்டிலும் எத்தனை மடங்கு சிறியவை ?
10,000 மடங்கு
- வைரஸ் மையப்பகுதியில் எவற்றைக் கொண்டுள்ளது?
டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ
- ஒரு செல்லாலான புரோக்கேரியோட்கள் எவை? பாக்டீரியங்கள்
- பூமியில் முதன் முதலில் தோன்றிய வாழும் உயிரினமாக கருதப்படுவது எது?
பாக்டீரியாக்கள்
- வகைப்பாட்டியலின் எந்த உலகத்தின் கீழ் பாக்டீரியாக்கள் இடம்பெற்றுள்ளது?
மொனிரா
- பாக்டீரியாவை பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாக்டீரியாலஜி
- பாக்டீரியா எவ்வளவு அளவுடையது?
1 முதல் 5 மைக்ரோ மீட்டர் வரை
- பாக்டீரியா எத்தனை வகைப்படும் ?
இரண்டு: காற்று சுவாச பாக்டீரியா மற்றும் காற்றில்லா சுவாச பாக்டீரியா
- பாக்டீரியாவின் உட்கரு பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நியூக்ளியாய்டு
- பாக்டீரியாவின் சைட்டோபிளாசத்தில் கூடுதலாக காணப்படும் குரோமோசோமல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பிளாஸ்மிட்
- பாக்டீரியாக்களின் புரத சேர்க்கையானது எந்த வகை ரைபோசோம்களில் நடைபெறுகிறது?
70S ரைபோசோம்
- பாக்டீரியாக்கள் எதனால் இடப்பெயர்ச்சி செய்கின்றது ?
கசையிழை
- கோல் வடிவ பாக்டீரியா எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பேசில்லை
- பேசில்லஸ் ஆந்திராசிஸ் என்பது எந்த வகை பாக்டீரியாவுக்கு எடுத்துக்காட்டு?
கோல் வடிவ பாக்டீரியா
- சுருள் வடிவ பாக்டீரியா எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஸ்பைரில்லா
- ஹெலிகோபேக்டர் பைலோரி என்பது எந்த வகை வகையான பாக்டீரியாவுக்கு எடுத்துக்காட்டு ?
சுருள் வடிவ பாக்டீரியா
- கோல அல்லது பந்து வடிவ பாக்டீரியா எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காக்கை
- காக்கை வகை பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொண்டு இணையாக இருந்தால் அதற்கு என்ன பெயர்?
டிப்ளோடோகாக்கஸ்
- காக்கை வகை பாக்டீரியாக்கள் சங்கிலி வடிவில் இருந்தால் அதற்கு என்ன பெயர்?
ஸ்ட்ரெப்டோகாக்கஸ்
- காக்கை வகை பாக்டீரியாக்கள் கொத்தாக இருந்தால் அதற்கு என்ன பெயர்?
ஸ்டைபைலோகாக்கஸ்
- பாக்டீரியாக்கள் அவற்றின் கசை இழைகளின் எண்ணிக்கை மற்றும் அமைவிடத்தின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
ஒற்றைக் கசையிழை, ஒருமுனை கற்றை கசையிழை, இருமுனை கற்றை கசையிழை, சுற்றுக் கசையிழை,கசையிழையற்றவை
- விப்ரியோ காலரா எதற்கு எடுத்துக்காட்டு?
ஒற்றை கசையிழை பாக்டீரியா
- சூடோமோனாஸ் பாக்டீரியா எதற்கு எடுத்துக்காட்டு?
ஒரு முனை கற்றைக் கசையிழை
- ரோடோஸ்பைரில்லம் ரூபரம் என்பது எந்த வகை பாக்டீரியாவுக்கு எடுத்துக்காட்டு?
இருமுனை கற்றைக் கசையிழை
- எ.கோலை பாக்டீரியா எதற்கு எடுத்துக்காட்டு ?
சுற்றுக் கசையிழை
- கோரினிபாக்டீரியம் டிப்தீரிய என்பது எந்த வகை பாக்டீரியாவுக்கு எடுத்துக்காட்டு?
கசையிழையற்றவை
- அசாதாரண சூழலில் வாழும் பாக்டீரியாக்கள் சூரியனிடமிருந்து கிடக்கும் ஆற்றலுக்கு பதிலாக வேதிப் பொருள்களை(அமோனியா ,ஹைட்ரஜன் சல்பைடு) பயன்படுத்தி உணவை தயாரிக்கும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
வேதி சார்பு உணவூட்டம்
- பாக்டீரியாக்கள் என்ன முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன?
பிளத்தல் முறை
- சைனோபாக்டீரியா எதற்கு எடுத்துக்காட்டு?
ஒளிச்சேர்க்கை பாக்டீரியா
- கூட்டுயிர் வாழ்க்கை முறையை வாழும் பாக்டீரியாவுக்கு எடுத்துக்காட்டு?
எ.கோலை
- யூகரியோடிக் வகையை சேர்ந்த பூஞ்சைகளில் எது காணப்படுவதில்லை?
பச்சையம்
- ஒரு செல் பூஞ்சைகளுக்கு எடுத்துக்காட்டு?
ஈஸ்ட்
- பல செல் பூஞ்சைகளுக்கு எடுத்துக்காட்டு?
பெனிசிலியம்
- பூஞ்சைகள் பற்றிய படிப்புக்கு பெயர் என்ன?
மைக்காலஜி
- பூஞ்சைகளில் சுமாராக எத்தனை வகையான இனங்கள் உள்ளன?
70,000
- ஒரு செல்லாலான பூஞ்சைகள் என்ன வடிவம் உடையவை?
முட்டை வடிவம்
- ஈஸ்ட்டினால் உற்பத்தி செய்யப்படும் என்ன நொதியின் உதவியினால் நொதித்தல் நடைபெறுகிறது?
சைமேஸ்
- ஒரு செல் பூஞ்சையான ஈஸ்ட்டுகளில் எதன் மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகிறது ?
மொட்டு விடுதல்
- காளான் எதற்கு எடுத்துக்காட்டு ?
பல செல்களால் ஆன பூஞ்சைகள்
- காளானின் மண்ணிற்கு மேல் வளரும் குடை போன்ற அமைப்பு அதன் என்ன உறுப்பு?
கனி
- ஹைபாக்களின் சுவர்கள் என்ன பொருளால் ஆனது?
கைட்டின் மற்றும் செல்லுலோஸ்
- காளான்களின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை கடத்துவதில் உதவுவது எது?
ஹைபாக்கள்
- பல செல் பூஞ்சைகளில் என்ன முறையில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது?
துண்டாதல் மற்றும் ஸ்போர் உருவாதல்
- பூஞ்சைகள் என்ன வகையாக காணப்படுகின்றன? மட்குண்ணிகள், ஒட்டுண்ணிகள் ,கூட்டுயிரி
- பூஞ்சைகள் மட்குண்ணிகளாக இருப்பதற்கு எடுத்துக்காட்டு எது ?
ரைசோபஸ், பெனிசிலியம் ,அகாரிகஸ்
- பூஞ்சைகளின் ஒட்டுண்ணிகளாக வாழ்வதற்கு எடுத்துக்காட்டு எது?
பக்சீனியா, அல்புகோ ,உஸ்டிலோகா
- பூஞ்சைகளின் கூட்டுயிரிகளாக வாழ்வதற்கு எடுத்துக்காட்டு?
மைக்கோரைசா
- எளிய தாவர உடலமைப்பை பெற்ற யூக்கேரியோட்டிக் உயிரினங்கள் எது?
ஆல்கா
- பாசிகள் ஏரிகள் மற்றும் குளங்களின் மேற்பரப்பில் மெல்லிய படலமாக காணப்படுவதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீர்ப் புற்கள்
- ஆல்காவைப்பற்றி படிப்பதற்கு பெயர் என்ன?
ஆல்காலஜி அல்லது பைக்காலஜி
- ஆல்காக்கள் அளவு என்ன?
ஒரு மைக்ரான் முதல் 50 மீட்டர் வரை
- ஒரு செல் பாசிக்கு எடுத்துக்காட்டு?
கிளாமிடோமோனஸ்
- பல செல்களாலான பெரிய அளவிலான பாசிக்கு எடுத்துக்காட்டு?
சர்காசம்
- எளிய ஒரு செல்லாலான நகரும் திறனுடைய நன்னீர் பாசி எது?
கிளாமிடோமோனஸ்
- கிளாமிடோமோனஸின் வடிவம் என்ன?
முட்டை ,கோள அல்லது பேரிக்காய் வடிவம்
- குளங்கள், சாக்கடைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் காணப்படும் ஆல்காக்கள் பொதுவாக என்ன வடிவம் உடையது ?
பேரிக்காய் வடிவம்
- கிளாமிடோமோனஸ் என்ன முறையில் இனப்பெருக்கம் காணப்படுகிறது?
பால் மற்றும் பாலில்லா முறையிலான இனப்பெருக்கம்
- ஆல்காக்களில் காணப்படும் பிற ஒளிச்சேர்க்கை நிறமிகள் என்னென்ன?
பியூகோசாந்தின் (பழுப்பு), சாந்தோஃபில்(மஞ்சள்), பைகோஎரித்ரின் ( சிவப்பு ), பைக்கோ சயனின் (நீலம்)
- புரோட்டோசோவா என்பது எந்த மொழிச்சொல்?
கிரேக்கம்
- புரோட்டோசோவா என்பதன் பொருள் என்ன?
புரோட்டோஸ் -முதல் ,சோவன்-விலங்கு
- வகைப்பாட்டியலில் புரோட்டோசோவாக்கள் என்ன உலகத்தில் இடம்பெற்றுள்ளது?
புரோட்டிஸ்டா
- புரோட்டோசோவாவைப் பற்றி படிப்பதற்கு என்ன பெயர்?
புரோட்டோவிலங்கியல்
- புரோட்டோசோவாக்களின் அளவு என்ன?
2 முதல் 200 மைக்ரான் வரை
- புரோட்டோசோவாக்களின் வகைகள் என்னென்ன?
சிலியேட்டா,பிளாஜெல்லேட்டா,சூடோபோடியா,ஸ்போரோசோவா
- சிலியாக்களால் இடம்பெயறும் புரோட்டோசோவாக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிலியேட்டா
- கசையிழைகளால் இடம்பெயறும் புரோட்டோசோவாக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பிளாஜெல்லேட்டா
- போலிக்கால்களால் சிலியாக்களால் இடம்பெயறும் புரோட்டோசோவாக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சூடோபோடியா
- சிலியேட்டாவிற்கு எடுத்துக்காட்டு ?
பாரமீசியம்
- பிளாஜெல்லேட்டாவிற்கு எடுத்துக்காட்டு ?
யூக்ளினா
- சூடோபோடியாவிற்கு எடுத்துக்காட்டு எது?
அமீபா
- அமீபா ஒரு புரோட்டோசோவா என்பதால் எதன் மூலம் இடம் பெயர்கிறது?
போலிக் கால்கள்
- போலி கால்கள் எதனுடைய நீட்சி அடைந்த பகுதி ?
செல் செலவு
- அமீபாவின் இனப்பெருக்கம் எந்த முறையில் நடைபெறுகிறது ?
இணைவு மற்றும் ஸ்போர் உருவாகுதல்
- முதன்முதலில் எதிர் உயிர் கொல்லி மருந்து எப்போது உருவாக்கப்பட்டது?
1928
- முதன்முதலில் எதிர் உயிர் கொல்லி மருந்தான பென்சிலினை உருவாக்கியவர் யார்?
சர் அலெக்சாண்டர் பிளெமிங்
- பெனிசிலின் என்ற உயிர்க்கொல்லியானது எந்த பூஞ்சைகளிலிருந்து பெறப்படுகிறது?
பெனிசிலியம் கிரைசோஜீனம்
- ஸ்ட்ரெப்டோமைசின் எனும் உயிர்கொல்லி எந்த பாக்டீரியாவில் இருந்து பெறப்படுகிறது?
ஸ்ரெப்டோமைசிஸ் எனும் பாக்டீரியாவிலிருந்து
- இத்தாலி நாட்டின் மண் மாதிரிகளில் காணப்பட்ட ஒரு வகையான நுண்ணுயிரிகளினால் உற்பத்தி செய்யப்படும் எதிர் கொல்லி மருந்து எது?
சூடோயுரிமைசின்
- முதன்முதலில் பெரியம்மைக்காண தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்?
எட்வர்டு ஜென்னர்
- வாக்சினேஷன் என்ற சொல் யாரால் சூட்டப்பட்டது ?
எட்வர்டு ஜென்னர்
- நுண்ணுயிரிகள் கழிவுகளை மட்க செய்வதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிதைப்பவைகள்
- பருப்பு வகை தாவரங்களின் வேர் முடிச்சுகளில் வாழும் எந்த பாக்டீரியங்கள் வளிமண்டல நைட்ரஜனை நைட்ரேட்டுகளாக மண்ணில் நிலைநிறுத்தி மண்ணை வளப்படுத்துகின்றன?
ரைசோபியம்
- மண்ணில் தனித்து வாழும் எந்த பாக்டீரியாக்கள் உயிரியல் முறையில் நைட்ரஜனை நிலைப்படுத்திகின்றன?
சயனோ பாக்டீரியா,நாஸ்டாக்
- பூச்சிகளை கட்டுப்படுத்தும் நுண்ணுயிரி எது?
பேசில்லஸ் துரின்ஞியன்சிஸ்
- வேர்களுக்கு பாதுகாப்பளித்து தாவரங்களின் நோய்க்கிருமிகளை கட்டுப்படுத்துவது எது?
டிரைக்கோடெர்மா
- பூச்சிகள் மற்றும் கணுக்காலிகளைத் தாக்கும் வைரஸ் எது?
பாக்குலோ வைரஸ்கள்
- காற்றில்லா நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு என்ன வகை பாக்டீரியங்கள் பயன்படுத்தப்படுகின்றன?
மெத்தனோ பாக்டீரியங்கள்
- மனிதன் மற்றும் விலங்குகளின் கழிவுகள் காற்றில்லா சுவாச பாக்டீரியாக்களால் உயிரி வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வகை பாக்டீரியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மெத்தனோஜென்கள்
- ஆளித்தாவரங்கள் நீரினுள் வைக்கப்படும் பொழுது தண்டுப்பகுதி திசுக்களின் மீது பாக்டீரியங்கள் செயல்பட்டு அவற்றின் வலிமையான ஆதரவு நார்களைத் தளர்த்துகின்றன. இதற்கு என்ன பெயர்?
மிருதுவாக்குதல்
- ஆளித்தாவரங்களை மென்மையாக்குவதற்கு என்ன வகை பாக்டீரியாக்கள் பயன்படுத்தப்படுகிறது?
சூடோமோனாஸ் ஏருஜினோஸா
- ஈஸ்ட்டை மாவில் சேர்க்கும் பொழுது உருவாகும் எதனால் ரொட்டி மற்றும் கேக்குகள் மிருதுத் தன்மை அடைகின்றன?
கார்பன்-டை-ஆக்சைடு
- எது மாவுடன் சேர்க்கப்படும் பொழுது ரொட்டியின் சத்துக்கள் மேலும் அதிகரிக்கின்றன?
புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்த குளோரெல்லா
- எந்த பாக்டீரியாவினால் பாலில் உள்ள லாக்டோஸ் லாக்டிக் அமிலமாக மாற்றப்படுகிறது ?
லாக்டோபேசில்லஸ்
- மனிதனின் குடலில் வாழும் எந்த வகை பாக்டீரியா உணவு செரிமானத்தில் உதவுகிறது?
லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபிலஸ்
- மனிதனின் குடலில் வாழும் எந்த பாக்டீரியம் வைட்டமின் K மற்றும் வைட்டமின் B கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் உதவுகிறது?
எ.கோலை
- அமிலத்தை விரும்பக்கூடிய பாக்டீரியா எது?
லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபிலஸ்
- மோர் தயிர் புளிப்பு கூழ்மங்கள் மற்றும் உறைந்த பனிக்கூழ் ஆகியவற்றில் காணப்படும் பக்டீரியா எது?
லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபிலஸ்
- சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை லாக்டிக் அமிலமாக மாற்றுவதால் லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் என்று அழைக்கப்படுபவை எவை?
லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபிலஸ்
- காசநோய் (டியூபர்சுளோசிஸ்) நோயுண்டாக்கும் நுண்ணுயிரி எது?
மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் பாக்டீரியா
- காசநோய் (டியூபர்சுளோசிஸ்) நோய் பரவும் முறைகள் என்னென்ன?
காற்றின் மூலமும் ,நோய்த்தொற்றுடைய மனிதனின் சளி மூலமும்
- காசநோய் (டியூபர்சுளோசிஸ்) நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
தொடர்ச்சியான இருமல் ,இரத்தத்துடன் கூடிய சளி, எடை இழப்பு, மூச்சுத்திணறல்
- காசநோய் (டியூபர்சுளோசிஸ்) நோய்க்கான தடுப்பு முறைகள் அல்லது சிகிச்சைகள் என்னென்ன?
BCG தடுப்பூசி
- காலரா நோய் உண்டாக்கும் காரணி எது?
விப்ரியோ காலரா (பாக்டீரியா)
- காலரா நோய் பரவும் முறை எது?
ஈக்களின் மூலமும் ,அசுத்தமான உணவு மற்றும் நீரின் மூலமும்
- காலரா நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
நீர்த்த வயிற்றுப்போக்கு, வாந்தி ,விரைவான நீரிழப்பு
- காலரா நோயை தடுக்கும் முறைகள்/ சிகிச்சை என்னென்ன?
காலராவுக்கு எதிரான தடுப்பூசி, தன் சுகாதாரம்
- சாதாரண சளி நோய் உண்டாக்கும் காரணி எது?
இன்ஃப்ளூயன்சா வைரஸ்
- சாதாரண சளி நோய் பரவும் முறை எது?
காற்றின் மூலம்
- சாதாரண சளி நோயை தடுக்கும் முறைகள்/ சிகிச்சை என்னென்ன?
நோயாளிகளை தனிமைப்படுத்துதல்
- ரேபிஸ் நோய் உண்டாக்கும் காரணி எது?
ரேப்டோ விரிடி வைரஸ்
- ரேபிஸ் நோய் பரவும் முறை எது?
விலங்குகள் கடிப்பதனால்
- ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
காய்ச்சல், மாயத்தோற்றம் ,பக்கவாதம் ,உணவை விழுங்க இயலாமை
- ரேபிஸ் நோயை தடுக்கும் முறைகள்/ சிகிச்சை என்னென்ன?
ரேபிஸ்கெதிரான தடுப்பூசி
- அமீபிக் சீதபேதி நோய் உண்டாக்கும் காரணி எது?
எண்டமீபா ஹிஸ்டாலைடிகா (புரோட்டோசோவா)
- அமீபிக் சீதபேதி நோய் பரவும் முறை எது?
உணவு நீர் மற்றும் ஈக்கள்
- அமீபிக் சீதபேதி நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
கடுமையான வயிற்றுப்போக்கு ,ரத்தத்துடன் கூடிய மலம்
- அமீபிக் சீதபேதி நோயை தடுக்கும் முறைகள்/ சிகிச்சை என்னென்ன?
முறையான துப்புரவினைப் பராமரித்தல் மற்றும் மற்றும் மெட்ரோனிடையசோல் எதிர் உயிர்க் கொல்லிகளை பயன்படுத்த அறிவுறுத்தல்
- மலேரியா நோய் உண்டாக்கும் காரணி எது?
பிளாஸ்மோடியம் (புரோட்டோசோவா)
- மலேரியா நோய் பரவும் முறை எது?
பெண் அனோபிலஸ் கொசு
- மலேரியா நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
குமட்டல் ,வாந்தி, கடும் காய்ச்சல்
- மலேரியா நோயை தடுக்கும் முறைகள்/ சிகிச்சை என்னென்ன?
குயினைன் ,குளோரோக்குயினைன்
- நுண்ணுயிரிகளால் விலங்குகளில் உண்டாகும் நோய்கள்?
ஆந்த்ராக்ஸ் வாய் மற்றும் கால் குளம்பு நோய்
- ஆந்த்ராக்ஸ் நோய் உண்டாக்கும் காரணி எது?
பேசில்லஸ் அந்த்ராசிஸ் பாக்டீரியா
- ஆந்த்ராக்ஸ் நோய் பரவும் முறை எது?
அசுத்தமான மண் மற்றும் உணவின் மூலம்
- ஆந்த்ராக்ஸ் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
மூச்சுவிடுவதில் சிரமம் ,சுயநினைவு இல்லாதிருத்தல் ,பசியின்மை
- ஆந்த்ராக்ஸ் நோயை தடுக்கும் முறைகள்/ சிகிச்சை என்னென்ன?
ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி
- வாய் மற்றும் கால்க்குளம்பு நோய் உண்டாக்கும் காரணி எது?
ஆப்ரோவைரஸ்
- வாய் மற்றும் கால்க்குளம்பு நோய் பரவும் முறை எது?
காற்று மற்றும் விலங்கு உயிரிகள்
- வாய் மற்றும் கால்க்குளம்பு நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
காய்ச்சல் வாய் கொப்பளங்கள் எடை இழப்பு பால் உற்பத்தி குறைதல்
- வாய் மற்றும் கால்க்குளம்பு நோயை தடுக்கும் முறைகள்/ சிகிச்சை என்னென்ன?
FMD தடுப்பூசி
- நுண்ணுயிரிகளால் தாவரங்களில் உண்டாகும் நோய்கள் ?
சிட்ரஸ் கான்கர் ,உருளைக்கிழங்கு பிளைட் நோய்
- சிட்ரஸ் கான்கர் நோய் உண்டாக்கும் காரணி எது?
சாந்தோமோனாஸ் ஆக்ஸனோபோடிஸ்(பாக்டீரியா)
- சிட்ரஸ் கான்கர் நோய் பரவும் முறை எது?
காற்று ,நீர்
- சிட்ரஸ் கான்கர் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
இலைகள் தண்டுகள் மற்றும் கனிகளில் புண்கள் உண்டாதல்
- சிட்ரஸ் கான்கர் நோயை தடுக்கும் முறைகள்/ சிகிச்சை என்னென்ன?
தாமிரத்தை அடிப்படைப் பொருளாக கொண்ட பாக்டீரியா எதிர்ப்பு பொருள்களை பயன்படுத்துதல்
- உருளைக்கிழங்கு பிளைட் நோய் உண்டாக்கும் காரணி எது?
பைட்டோபைத்தோரா இன்பெஸ்டன்ஸ் (பூஞ்சை)
- உருளைக்கிழங்கு பிளைட் நோய் பரவும் முறை எது?
காற்று
- உருளைக்கிழங்கு பிளைட் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
கிழங்குகளில் பழுப்புநிற புண்கள் காணப்படுதல்
- உருளைக்கிழங்கு பிளைட் நோயை தடுக்கும் முறைகள்/ சிகிச்சை என்னென்ன?
பூஞ்சை கொல்லிகளைப் பயன்படுத்துதல்
- ஆப்பிரிக்க தூக்க வியாதி எதனால் உண்டாகிறது?
டிரிப்னோசோமா (புரோட்டோசோவா )
- ஆப்பிரிக்க தூக்க வியாதி எதன் மூலம் பரவுகிறது ?
செட்சீ எனும் ஈக்கள் கடிப்பதனால்
- உணவுப் பொருட்களை பதப்படுத்துதலில் எத்தனை வகையான நுட்பங்கள் பின்பற்றப்படுகின்றன?
இரண்டு :பாரம்பரிய நுட்பங்கள் ,நவீன நுட்பங்கள்
- ஸ்டார்ச் மற்றும் சர்க்கரையானது நுண்ணுயிரிகளின் உதவியால் ஆல்கஹாலாக மாற்றம் அடைவதற்கு என்ன பெயர்?
நொதித்தல்
- உண்ணக் கூடிய நுண்ணுயிர் கொல்லி திரவத்தில் உணவை கெடாமல் பராமரிக்கும் முறைக்கு என்ன பெயர்?
ஊறவைத்தல்
- எத்தனை வகையான ஊறவைத்தல் முறை பின்பற்றப்படுகிறது?
இரண்டு :வேதியியல் முறை ஊறவைத்தல் & நொதித்தல் முறை ஊறவைத்தல்
- வினிகர், ஆல்கஹால், தாவர எண்ணெய் முதலியவை எந்த ஊறவைத்தல் முறைக்கு எடுத்துக்காட்டு?
வேதியியல் முறை
- லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா எந்த ஊறவைத்தல் முறைக்கு எடுத்துக்காட்டு?
நொதித்தல் முறையில் ஊறவைத்தல்
- திரவ உணவுகளை பாதுகாக்கும் முறையான பாஸ்டுரைஷேஷன் லூயிஸ் பாஸ்டர் என்பவரால் எந்த ஆண்டு கண்டறியப்பட்டது ?
1862
- பாஸ்டுரைஷேஷன் முறையில் முதலில் பால் எந்த வெப்பநிலையில் சூடேற்றப்படுகிறது?
70 டிகிரி செல்சியஸ் .(பின்னர் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது)
- தயிர் மற்றும் பிற நொதித்தலுக்கு உட்படுத்தப்படும் பால் பொருட்களில் கூடுதலாக பயன்படுத்தப்படும் உயிருள்ள உணவு பொருள்கள் எது?
புரோபயாட்டிக்குகள்
- புரோபயாட்டிக்குகளுக்கு எடுத்துக்காட்டு?
லாக்டோபசில்லுஸ் அசிடோஃபிலஸ், பைபிடோபாக்டீரியம் பைபிடம்
- எந்தவகை புரோபயாடிக்கு ஹெலிகோபேக்டர் பைலோரியாவினால் உண்டான வயிற்றுப்புண்களை குணப்படுத்த உதவுகிறது?
பைபிடோபாக்டீரியம் பைபிடம்
- குழந்தைப்பருவத்தில் உண்டாகும் மலச்சிக்கலை குணப்படுத்த பயன்படும் புரோபயாடிக்கு எது?
பைபிடோபாக்டீரியம் ஃபிரிவே
- பிரியான் என்ற சொல் எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது ?
புரதத்தாலான தொற்றுத்துகள்
- திடீர் மாற்றம் அடைந்த தீங்கு தராத புரதங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பிரியான்
- பாலூட்டிகளில் காணப்படுகின்ற அனைத்து விதமான பிரியான் நோய்களும் எதனை பாதிப்பனவாகும்?
மூளையின் அமைப்பு அல்லது நரம்பு திசுக்கள்
- பிரியான் வகை நோய்க்கு எடுத்துக்காட்டு?
குயிட்ஸ்பெல்ட் ஜேக்கப் நோய்
- விரியான் என்பது என்ன?
ஒரு முழுமையான வைரஸ் துகள்
- வைரஸ்கள் செல்லுக்கு வெளியே காணப்படுமானால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விரியான்
8TH ZOOLOGY STUDY NOTES |நுண்ணுயிரியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services