TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
333. எந்த ஆண்டு போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மாலுமி வாஸ்கோடகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியா வருவதற்கான புதிய கடல் வழியை கண்டுபிடித்தார்?
1498
334. வங்காள நவாப் அலிவர்திகான் எந்த ஆண்டு இறந்தார்?
1756
335. அலிவர்திகான் இறப்பிற்குப்பின் அரியணை ஏறியவர் யார்?
அலிவர்திகானின் பேரன் சிராஜ்-உத்-தௌலா
336. இருட்டறை துயர சம்பவம் எந்த ஆண்டு நடைபெற்றது?
1756
337. சிராஜ்-உத்-தௌலாவின் படை வீரர்கள் எத்தனை ஆங்கிலேயர்களை சிறைபிடித்து கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் காற்று புகாத ஒரு சிறிய இருட்டறையில் ஓர் இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தனர்?
146 ஆங்கிலேயர்கள்
338. 146 ஆங்கிலேயர்களில் எத்தனை பேர் மூச்சுத்திணறி இறந்தனர் ?
123 பேர்
339. எந்த ஆண்டில் ஆங்கிலேயரின் வில்லியம் கோட்டை நவாப்பிடம் சரணடைந்தது ?
ஜூன் 20, 1756
340. சிராஜ் உத் தௌலாவிடமிருந்து கல்கத்தாவை மீட்ட ஆங்கில படைத்தளபதி யார்?
ராபர்ட் கிளைவ்
341. எந்த ஆண்டு அலிநகர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது?
பிப்ரவரி 9 ,1757
342. அலிநகர் உடன்படிக்கை யார் யாருக்கிடையே நடைபெற்றது?
சிராஜ்-உத்-தௌலா மற்றும் இராபர்ட் கிளைவ்
343. எந்த ஆண்டு பிரெஞ்சுக் குடியேற்றமான சந்திரநாகூரை ஆங்கிலேயர் கைப்பற்றினர்?
1757
344. பிளாசிப் போர் எப்போது நடைபெற்றது?
ஜூன் 23, 1757
345. பிளாசிப் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?
சிராஜ்-உத்-தௌலா, பிரெஞ்சு கூட்டணி மற்றும் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி
346. பிளாசிப் போரில் யார் தலைமையிலான ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி படைகள் வெற்றி பெற்றது?
ராபர்ட் கிளைவ்
347. பிளாசிப் போருக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் எந்த இடங்களில் தடையில்லா வணிக உரிமை பெற்றனர்?
பீகார் ,வங்காளம், ஒரிசா
348. எந்தப் பகுதியில் இருந்த ’24 பர்கானா’ பகுதியை ஆங்கிலேயர் பெற்றனர்?
வங்காளம்
349. பிளாசிப் போருக்குப்பின் வங்காளத்தின் அரியணை ஏறியவர் யார் ?
மீர்ஜாபர்
350. ஆங்கிலேயர்கள் மீர்ஜாபரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு யாரை வங்காள நவாப் ஆக்கினர்?
மீர் ஜஃபரின் மருமகன் மீர் காசிம்
351. மீர் காசிம் ஆங்கிலேயருக்கு எந்த பகுதிகளை வழங்கினார் ?
புர்த்வான்,மிட்னாபூர்,சிட்டகாங்
352. மீர் காசிம் வங்காளத்தின் தலைநகரை முர்ஷிதாபாத்தில் இருந்து எங்கு மாற்றினார்?
மாங்கீர்
353. தஸ்தக் என்றால் என்ன?
சுங்க வரி விலக்கு ஆணை
354. என்ன காரணத்தினால் ஆங்கிலேயர் மீது மீர் காசிம் கோபமடைந்து கலகத்தில் ஈடுபட்டார்?
தஸ்தக் என்று அழைக்கப்படும் சுங்க வரி விலக்கு ஆணையை ஆங்கிலேயர்கள் தவறாக பயன்படுத்தியதனால்
355. ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்ட மீர் காசிம் எங்கு தப்பி ஓடினார்?
அயோத்தி
356. மீர் காசிம் அயோத்திக்கு ஓடிச்சென்று யாருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார் ?
சுஜா-உத்-தௌலா மற்றும் இரண்டாம் ஷா ஆலம்
357. பக்சார் என்ற நகரம் எங்கு உள்ளது?
பீகார் பகுதியின் பாட்னாவிற்கு மேற்கே 130 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கங்கை நதிக்கரையில்
358. பக்சார் போர் எப்போது நடைபெற்றது?
அக்டோபர் 22, 1764
359. பக்சார் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?
மீர் காசிம்,சுஜா-உத்-தௌலா , இரண்டாம் ஷா ஆலம் மற்றும் ஆங்கிலேயர்கள்
360. பக்சார் போர் எந்த ஆங்கிலேய படைத் தளபதியின் தலைமையில் மீர்க்சிம் கூட்டுப் படை தோற்கடிக்கப்பட்டது ?
தளபதி ஹெக்டர் மன்றோ
361. போரின் முடிவில் யார் வங்காள அரியணையில் அமர்த்தப்பட்டார் ?
மீர் ஜாபர்
362. மீர் ஜாபர் இறப்புக்குப்பின் வங்காள நவாப் ஆனவர் யார் ?
மீர் ஜாபரின் மகன் நிஜாம்-உத்-தௌலா
363. எந்த உடன்படிக்கையின்படி பக்சார் போர் முடிவுக்கு வந்தது?
அலகாபாத் உடன்படிக்கை
364. அலகாபாத் உடன்படிக்கை எப்போது மேற்கொள்ளப்பட்டது?
பிப்ரவரி 20 1765
365. வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்தவர் யார்?
ராபர்ட் கிளைவ்
366. கர்நாடகப் போர்கள் எந்த ஆண்டு வரை நடைபெற்றது?
1746 முதல் 1763 வரை
367. முதல் கர்நாடகப் போரின் காலம் என்ன?
1746-1748
368. அடையாறு போர் எந்த ஆண்டு நடந்தது?
1746
369. சாந்தோம் என்ற இடத்தில் அடையாறுப் போர் யாருக்கிடையே நடைபெற்றது ?
கர்நாடக நவாப் அன்வருதீனுக்கும், பிரெஞ்சுப் படைக்கும்
370. அடையாறு போரில் யாருடைய தலைமையிலான பிரெஞ்சுப் படை நவாப் படையை தோற்கடித்தது?
கேப்டன் பாரடைஸ் (நவாபின் படைத் தளபதி மாபூஸ்கான்)
371. எந்த உடன்படிக்கையின்படி முதல் கர்நாடகப் போர் முடிவுக்கு வந்தது?
அய்-லா-சபேல் உடன்படிக்கை
372. அய்-லா-சபேல் உடன்படிக்கை எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
1748
373. அய்-லா-சபேல் உடன்படிக்கையின்படி எந்த இடம் ஆங்கிலேயரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது?
மதராஸ் (சென்னை)
374. இரண்டாம் கர்நாடக போரின் காலம் என்ன ?
1749 -1754
375. இரண்டாம் கர்நாடக போரின் காரணம் என்ன ?
கர்நாடக மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை பிரச்சனை
376. இரண்டாம் கர்நாடக போரின் போது கர்நாடக நவாப் பதவிக்கு உரிமை கோரியவர்கள் யார் ?
அன்வாருதீன்,சந்தாசாகிப்
377. இரண்டாம் கர்நாடக போரின் போது ஹைதராபாத் நிஜாம் பதவிக்கு உரிமை கோரியவர்கள் யார் ?
நாசிர் ஜங்,முசாபர் ஜங்
378. இரண்டாம் கர்நாடகப் போரில் தக்காணப் பகுதியில் பிரெஞ்சுக்காரர்கள் யாருக்கு உதவி செய்தனர்?
சந்தாசாகிப் , முசாஃபர் ஜங்
379. இரண்டாம் கர்நாடகப் போரில் தக்காணப் பகுதியில் ஆங்கிலேயர்கள் யாருக்கு உதவி செய்தனர்?
அன்வாருதீன் , நாசிர் ஜங்
380. ஆம்பூர் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
1749
381. எப்போது பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே, சந்தாசாகிப்,முசாபர் ஜங் ஆகியோரின் கூட்டுப் படைகளால் கர்நாடக நவாப் அன்வாருதீன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்?
ஆகஸ்ட் 3,1749
382. அன்வாருதீன் மகன் முகமது அலி எங்கு தப்பியோடினார்?
திருச்சிராப்பள்ளி
383. அன்வாருதீன் கொல்லப்பட்ட பிறகு பிரெஞ்சுக்காரர்கள் யாரை கர்நாடக நவாப் ஆக்கினர் ?
சந்தாசாகிப்
384. சந்தாசாகிப் கர்நாடக நவாப் ஆனதற்கு ஈடாக பிரெஞ்சுக்காரர்களுக்கு என்ன வெகுமதி வழங்கினார் ?
பாண்டிச்சேரி சுற்றியுள்ள 80 கிராமங்கள்
385. தக்காணத்தில் நாசிர் ஜங்க் யாரால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார் ?
பிரெஞ்சுக்காரர்கள்
386. நாசிர் ஜங்க் கொல்லப்பட்டதற்கு பின்பு யார் ஹைதராபாத் நிஜாம் ஆனார்?
முசாபர் ஜங்
387. முசாபர் ஜங்க் கிருஷ்ணா நதியின் தென்பகுதி அனைத்திற்கும் யாரை ஆளுநராக நியமித்தார்?
டியூப்ளே
388. முசாபர் ஜங் எப்போது படுகொலை செய்யப்பட்டார்?
1751
389. முசாபர் ஜங் இறந்தபின் யார் பிரெஞ்சு படைத்தளபதி புஸ்ஸியின் உதவியுடன் ஹைதராபாத் நிஜாம் ஆனார்?
நாசிர் ஜங்-ன் சகோதரர் சலபத் ஜங்
390. சலபத் ஜங் எந்தப் பகுதிகளை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கினார் ?
குண்டூர் மாவட்டத்தை தவிர வட சர்க்கார் முழுவதும்
391. ஆற்காட்டு போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
1751
392. முகமது அலி தஞ்சம் புகுந்த திருச்சி கோட்டையை முற்றுகையிட ஒரு படையை அனுப்பியவர் யார்?
டியூப்ளே
393. ஆற்காட்டை தாக்கும் இராபர்ட் கிளைவ் திட்டத்திற்கு அனுமதி வழங்கியவர் யார்?
ஆங்கிலேய கவர்னர் சாண்டர்ஸ்
394. எத்தனை வீரர்களுடன் இராபர்ட் கிளைவ் ஆற்காட்டை தாக்கிய கைப்பற்றினார்?
200 ஆங்கில மற்றும் 300 இந்திய படைவீரர்கள்
395. இராபர்ட் கிளைவ் யாரின் உதவியுடன் ஆரணி ,காவேரிபாக்கம் ஆகிய இடங்களில் பிரெஞ்சுப் படைகளை தோற்கடித்தார்?
லாரன்ஸ்
396. சந்தாசாகிப் எங்கு கொலை செய்யப்பட்டார்?
திருச்சி
397. அன்வாருதீன் மகன் முகம்மது அலி யாருடைய உதவியுடன் ஆற்காடு நவாப் ஆனார்?
ஆங்கிலேயர்கள்
398. எந்த போரின் தோல்வியால் ஃபிரான்ஸ் நாட்டு அரசாங்கம் டியூப்ளேவை பாரிசுக்கு திரும்ப அழைத்துக்கொண்டது?
ஆற்காட்டு வீரர்
399. பாண்டிச்சேரி உடன்படிக்கை எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
1755
400. டியூப்ளேவிற்கு பிறகு பதவியேற்றுக் கொண்ட பிரெஞ்சு ஆளுநர் யார்?
கோதேயூ
401. ஆங்கிலேயருடன் பாண்டிச்சேரி உடன்படிக்கை செய்து கொண்டவர் யார்?
கோதேயூ
402. எந்த உடன்படிக்கையின் படி இரு நாடுகளும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது எனவும் புதிய கோட்டைகளைக் கட்டக்கூடாது எனவும் கூறப்பட்டது?
பாண்டிச்சேரி உடன்படிக்கை
403. மூன்றாம் கர்நாடகப் போரின் காலம் என்ன ?
1756 -1763
404. இந்தியாவில் மூன்றாம் கர்நாடகப் போருகான காரணம் என்ன ?
ஐரோப்பாவில் வெடித்த ஏழாண்டு போர்
405. எந்த ஆங்கில படைத்தளபதி பிளாசிப் போரின் மூலம் வங்காளத்தில் ஆங்கில ஆதிக்கத்தை நிறுவியதுடன் மூன்றாம் கர்நாடகப் போருக்குத் தேவையான நிதியையும் வழங்கினார்?
ஆங்கில தளபதி ,இராபர்ட் கிளைவ்
406. மூன்றாம் கர்நாடகப் போரில் பிரெஞ்சுப் படைகளை வழிநடத்த பிரெஞ்சு அரசாங்கம் யாரை நியமித்தது?
கவுண்-டி-லாலி
407. மூன்றாம் கர்நாடகப் போரில் கடலூரில் உள்ள செயிண்ட் டேவிட் கோட்டையை கைப்பற்றியவர் யார்?
கவுண்-டி-லாலி
408. கவுண்-டி-லாலியுடன் இணைவதற்காக புஸ்ஸி ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட தருணத்தை பயன்படுத்தி வட சர்க்கார் பகுதிகளை கைப்பற்ற யாரை வங்காளத்தில் இருந்து ராபர்ட் கிளைவ் அனுப்பினார்?
கர்னல் போர்டு
409.வட சர்க்கார் என அழைக்கப்படுபவை என்ன பகுதிகள் ?
ஆந்திர பிரதேசம் ,ஒடிசா
410. வந்தவாசி போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
ஜனவரி 22, 1760
411. வந்தவாசி போரில் யார் தலைமையிலான ஆங்கிலேயப்படை லாலி தலைமையிலான பிரெஞ்சு படையை முற்றிலும் தோற்கடித்தது?
ஜெனரல் அயர் கூட்
412. வந்தவாசி போரில் தோற்ற பின்பு எந்தப் படை தளபதியை பிரான்ஸ் நாட்டுக்கு திரும்ப அழைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டார்?
கவுண்டிலாலி
413. ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது?
பாரிசு உடன்படிக்கை
414. பாரிசு உடன்படிக்கை எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ?
1763
415. எந்த உடன்படிக்கையின்படி இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் குடியேற்றங்கள் அனைத்திலும் தங்கள் பகுதிகளை, பலப்படுத்தவும் படைகளை பெருக்கவும் தடைவிதிக்கப்பட்டது ?
பாரிசு உடன்படிக்கை
416. ஹைதர் அலி எப்போது மைசூர் சமஸ்தானத்தின் உண்மையான ஆட்சியாளரானார்?
1761
417. முதல் ஆங்கிலேய மைசூர் போரின் காலம் என்ன?
1767- 1769
418. முதல் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணம் என்ன ?
ஹைதர் அலியின் வளர்ச்சி மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் இடம் கொண்டிருந்த நட்புறவு, ஹைதர் அலிக்கு எதிராக மராத்தியர்கள் ,ஹைதராபாத் நிஜாம் ஆங்கிலேயர்களின் முக்கூட்டணி
419. ஹைதராபாத் நிஜாம் எந்த ஆங்கிலப் படைதளபதி உதவியுடன் 1767ல் மைசூர் மீது படையெடுத்தார் ?
தளபதி ஜோசப் ஸ்மித்
420. எப்போது ஹைதர் அலி மதராஸ் மீது படையெடுத்தார்?
1769, மார்ச்
421. முதல் ஆங்கிலேய மைசூர் போர் என்ன உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது?
மதராஸ் உடன்படிக்கை
422. மதராஸ் உடன்படிக்கை எப்போது மேற்கொள்ளப்பட்டது?
ஏப்ரல் 4 ,1769
423. எந்த உடன்படிக்கையின்படி மற்ற நாடு தாக்கும் பட்சத்தில் ,ஆங்கிலேயர் ,ஹைதர் அலி ஒருவருக்கொருவர் உதவி செய்வது என உறுதி செய்துக்கொள்ளப்பட்டது ?
மதராஸ் உடன்படிக்கை
424. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் காலம் என்ன?
1780-1784
425. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணம் என்ன ?
மதராஸ் உடன்படிக்கையை நிறைவேற்ற தவறுதல், 1771 மராத்தியர்கள் ஹைதர் அலியின் மீது படையெடுத்தபோது மதராஸ் உடன்படிக்கையின்படி ஆங்கிலேயர்களுக்கு உதவவில்லை, ஹைதர் அலியின் ஆட்சிக்குட்பட்ட பிரெஞ்சு குடியேற்ற பகுதியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியது
426. எப்போது ஆங்கிலேயே படைத்தளபதி சர் அயர் கூட் ஹைதர் அலியை பரங்கிப்பேட்டை என்ற இடத்தில் தோற்கடித்தார்?
1781
427. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹைதர் அலி எப்போது இறந்தார் ?
1782
428. ஹைதர் அலியின் இறப்பிற்குப்பின் யார் ஆங்கிலேயருக்கு எதிராக போரினை தொடர்ந்தார்?
ஹைதர் அலியின் மகன் திப்புசுல்தான்
429. திப்பு சுல்தான் 1783 இல் எந்த ஆங்கிலேய படை தளபதியை கைது செய்தார்?
பிரிகேடியர் மேத்யூஸ்
430. ஆங்கிலேயருக்கும் திப்புசுல்தானுக்கும் எந்த ஆண்டு மங்களூர் உடன்படிக்கை கையெழுத்தானது?
மார்ச் 7,1784
431. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரின் காலம் என்ன?
1790 -1792
432. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரின் காரணம் என்ன ?
மங்களூர் உடன்படிக்கைக்குப் பின் ஆங்கிலேயருக்கு எதிராக வெளிநாடுகளில் கூட்டணி அமைக்கும் பொருட்டு பிரான்ஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு திப்பு சுல்தான் தன்னுடைய தூதுவர்களை அனுப்பினார், ஆங்கிலேய கூட்டணியில் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தை திப்புசுல்தான் 1789 இல் தாக்கினார்
433. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது ?
இரண்டு ஆண்டுகள்
434. தளபதி மேடோஸ் தலைமையிலான தாக்குதல் தோல்வி அடைந்ததால் 1790 இல் யார் படையை வழி நடத்தினர்?
தலைமை ஆளுநர் காரன்வாலிஸ்
435. மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போர் எந்த உடன்படிக்கை உடன் முடிவுக்கு வந்தது ?
ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கை
436. ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கை யாருக்கு இடையே கையெழுத்தானது?
காரன்வாலிஸ், திப்பு சுல்தான்
437. ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கை எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
1792
438. எந்த உடன்படிக்கையின் படி திப்பு சுல்தான் தன்னுடைய ஆட்சிப் பகுதியில் பாதியை ஆங்கிலேயருக்கு ஒப்படைத்தார் ?
ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கை
439. எந்த உடன்படிக்கையின்படி போர் இழப்பீட்டு தொகையாக 3.6 கோடி செலுத்த வேண்டும் என்றும், தன்னுடைய 2 மகன்களை ஆங்கிலேயரிடம் பிணைக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென திப்பு சுல்தான் கட்டாயப்படுத்தப்பட்டார் ?
ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கை
440. ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கையின்படி ஆங்கிலேயர்கள் பெற்ற பகுதிகள் என்னென்ன ?
மலபார் குடகுமலை ,திண்டுக்கல், மற்றும் பாரமஹால் ( கோயம்புத்தூர் ,சேலம்)
441. நான்காம் ஆங்கிலேய மைசூர் போரின் காலம் என்ன?
1799
442. நான்காம் ஆங்கிலேய மைசூர் போரின் காரணங்கள் என்ன ?
திப்பு சுல்தான் அரேபியா ,துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு தூதுவர்களை அனுப்பியது , நெப்போலியன் உடன் தொடர்பு கொண்டது ,பிரெஞ்சுக்காரர்கள் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் வருகை புரிந்து ஜாக்கோபியன் கழகத்தையும், மற்றும் சுதந்திர மரம் ஒன்றும் நிறுவப்பட்டது
443. நான்காம் ஆங்கிலேய மைசூர் போரில் திப்புவின் மீது போர் தொடுத்தவர் யார்?
வெல்லஸ்லி
444. நான்காம் ஆங்கிலேய மைசூர் போரின்போது எப்போது ஸ்ரீரங்கப்பட்டிணம் கைப்பற்றப்பட்டது?
மே 4, 1799
445. திப்பு இறப்பிற்குப்பின் ஆங்கிலேயர்கள் எந்த பகுதிகளை இணைத்துக்கொண்டனர்?
கனரா ,வயநாடு ,கோயம்புத்தூர் ,தாராபுரம்
446. திப்பு இறப்பிற்குப்பின் யார் மைசூர் அரியணை ஏறினார் ?
மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார்
447. திப்புவின் இறப்பிற்குப் பின் அவரது குடும்பத்தினர் எங்கு அனுப்பப்பட்டனர்?
வேலூர் கோட்டை
448. மூன்றாம் பானிபட் போர் தோல்விக்குப் பின்னர் பேஷ்வா கட்டுப்பாட்டில் இருந்த பழைய மராத்திய கூட்டமைப்பு ஐந்து சுதந்திரமான மாநிலங்களாக பிரிந்தது அது என்னென்ன?
பூனா, பரோடா ,நாக்பூர், இந்தூர் மற்றும் குவாலியர்
449. பூனாவில் யார் தலைமையில் ஆட்சி நடைபெற்றது?
பேஷ்வா
450. பரோடாவில் யார் தலைமையில் ஆட்சி நடைபெற்றது?
கெய்க்வாட்
451. நாக்பூரில் யார் தலைமையில் ஆட்சி நடைபெற்றது?
போன்ஸ்லே
452. இந்தூர் யார் தலைமையில் ஆட்சி நடைபெற்றது?
ஹோல்கர்
453. குவாலியரில் யார் தலைமையில் ஆட்சி நடைபெற்றது?
சிந்தியா
454. முதல் ஆங்கிலேய மராத்திய போரின் காலகட்டம் என்ன?
1775 -1782
455. மராத்தியர்களின் பேஷ்வா நாராயணராவ் இறந்தபிறகு பேஷ்வா ஆனவர் யார்?
ரகுநாத ராவ்(ராகோபா)
456. எந்த ஆண்டு ஆங்கிலேயருக்கும் ரகுநாத ராவுக்கும் இடையே சூரத் ஒப்பந்தம் கையெழுத்தானது?
1775
457. பூனாவின் பாதுகாப்பரசுடன் ஒரு சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கல்கத்தா பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு யாரை அனுப்பியது?
கர்னல் அப்டன்
458. கர்னல் அப்டன் பூனாவின் பாதுகாப்பரசுடன் புரந்தர் ஒப்பந்தத்தை எப்போது செய்துகொண்டார் ?
1776
459. 1781 ஆம் ஆண்டில் வாரன் ஹேஸ்டிங்ஸ் யார் தலைமையின்கீழ் பிரிட்டிஷ் துருப்புகளை அனுப்பி மராத்திய தலைவரான மகாதாஜி சிந்தியாவை தோற்கடித்து குவாலியரைக் கைப்பற்றினார் ?
கேப்டன் பாப்ஹாமின்
460.எப்போது வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாதாஜி சிந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது?
சால்பை ஒப்பந்தம் மே17 ,1782
461. முதல் ஆங்கில மராத்திய போரின் முடிவில் யார் பேஷ்வவாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்?
இரண்டாம் மாதவராவ்
462. முதல் ஆங்கில மராத்திய போரின் முடிவில் பிரிட்டிஷ் அரசுக்கு எந்த பகுதி வழங்கப்பட்டது?
சால்செட்
463. மகாதாஜி சிந்தியா எப்போது இறந்தார்?
1794
464. மகாதாஜி சிந்தியா இறந்தபின் பதவியேற்றவர் யார் ?
அவருடைய மருமகன் தௌலத் ராவ் சிந்தியா
465. பேஷ்வா இரண்டாம் மாதவராவ் எந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார் ?
1795
466. பேஷ்வா இரண்டாம் மாதவராவ் இறந்தபின் பேஷ்வவாக பதவி ஏற்றவர் யார் ?
ரகுநாத ராவின் வலிமையற்ற மகனான இரண்டாம் பாஜிராவ்
467. நானா பட்னாவிஸ் எப்போது இறந்தார்?
1800
468. 1802 இல் யார் பேஷ்வாவுக்கு எதிராக படையெடுத்து சிந்தியா மற்றும் பேஷ்வாவின் கூட்டுப் படைகளை தோற்கடித்தார் ?
ஹோல்கர்
469. பஸ்ஸின் உடன்படிக்கை யாருக்கிடையே மேற்கொள்ளப்பட்டது?
பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் மற்றும் வெல்லஸ்லி
470. பஸ்ஸின் உடன்படிக்கை எப்போது மேற்கொள்ளப்பட்டது?
1802
471. எந்த உடன்படிக்கையின்படி துணைப்படைத் திட்டத்தை இரண்டாம் பாஜிராவ் ஏற்றுக்கொண்டார் ?
பஸ்ஸின் உடன்படிக்கை
472. எந்த உடன்படிக்கையின்படி ஆங்கிலேயர்கள் ஆர்தர் வெல்லெஸ்லி உத்தரவின் கீழ் பூனாவை நோக்கி படையெடுத்து சென்று மராத்திய தலைவர் ஹோல்கரின் படைகளைத் தாக்கி அழித்தனர்?
பஸ்ஸின் உடன்படிக்கை
473. இரண்டாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் காலம் என்ன?
1801-1805
474. பேஷ்வா துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட பிறகு யார் மராத்திய சுதந்திரத்தை காப்பாற்ற முயற்சித்தனர்?
தௌலத் ராவ் சிந்தியா மற்றும் ரகோஜி
போன்ஸ்லே
475. ஆங்கிலேயரின் ராணுவம் ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையில் எந்தப்பகுதியில் சிந்தியா மற்றும் போன்ஸ்லே ஆகியோரின் கூட்டுப் படைகளை தோற்கடித்தது?
அஸ்ஸே மற்றும் போன்ஸ்லே
476. ஆங்கிலேயர்கள் சிந்தியாவுடன் எந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்?
சுர்ஜீ- அர்ஜுகான் ஒப்பந்தம்
477. ஆங்கிலேயர்கள் போன்ஸ்லே உடன் எந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்?
தியோகான் ஒப்பந்தம்
478. சுர்ஜீ- அர்ஜுகான் மற்றும் தியோகான் ஒப்பந்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது ?
1803
479. எந்த ஆண்டு ஜெய்ப்பூர் பிரதேசத்தை ஹோல்கர் சூறையாடும்போது ஆங்கிலேயர்கள் அவருக்கு எதிராக போர் தொடுத்தனர்?
1804
480. மூன்றாவது ஆங்கிலேய மராத்திய போர் காலம் என்ன?
1817-1818
481. மூன்றாவது ஆங்கிலேய மராத்திய போர் யாருக்கு இடையே நடைபெற்றது?
தலைமை ஆளுநர் ஹேஸ்டிங்ஸ் ,ஜெனரல் தாமஸ் ஹிஸ்லாப் மற்றும் பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் ,நாக்பூரில் இரண்டாம் மூதோஜி போன்ஸ்லே, இந்தூரின் மூன்றாம் ஹோல்கர்
482. மூன்றாவது ஆங்கிலேய-மராத்தியப் போரில் நடுநிலைமை வகித்தவர் யார்?
குவாலியரின் தௌலத் ராவ் சிந்தியா
483. எங்கு நடைபெற்ற போர்களில் பேஷ்வா தோற்கடிக்கப்பட்டார்?
காட்கி, கோர்கான்
484. எந்தப்போரில் போன்ஸ்லே தோற்கடிக்கப்பட்டார்?
சித்தாபால்டி போர்
485. எந்த போரில் ஹோல்கர் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டார்?
மகித்பூர் போர்
486. மராத்தியரின் கடைசி பேஷ்வா யார்?
இரண்டாம் பாஜிராவ்
487. மராத்தியரின் கடைசி பேஷ்வவான இரண்டாம் பாஜி ராவிற்கு வருடாந்திர ஓய்வூதியம் எவ்வளவு ரூபாய் வழங்கப்பட்டது?
8 லட்சம் ரூபாய்
488. ஆங்கிலேயரின் இந்திய நிர்வாக அமைப்பு எத்தனை முதன்மை நிறுவனங்களாக இயங்கியது ?
நான்கு: குடிமைப் பணிகள் , ராணுவம், காவல் மற்றும் நீதித் துறை
489. சிவில் சர்வீஸ்(குடிமைப் பணிகள்) என்ற வார்த்தை முதன்முதலில் யாரால் பயன்படுத்தப்பட்டது?
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி
490.எந்த தலைமை ஆளுநர் 1786ல் பதவியேற்றபோது தனியார் வணிகத்திற்கு எதிராக சட்டங்களை இயற்றினார்?
காரன்வாலிஸ்
491. இந்திய கவர்னர் ஜெனரலாக வெல்லஸ்லி எந்த ஆண்டு பதவி ஏற்றுக்கொண்டார் ?
1798
492. அரசு ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியை அறிமுகப்படுத்தியவர் யார்?
வெல்லெஸ்லி பிரபு
493. எந்த ஆண்டு வெல்லஸ்லி கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் மொழி ,இலக்கியம் ,அறிவியல் ஆகிய துறையில் பயிற்சி வழங்குவதற்காக ஒரு கல்லூரியை நிறுவினார் ?
1800
494. எந்த ஆண்டு கம்பெனியின் இயக்குனர்கள் இங்கிலாந்தில் உள்ள ஹெய்லிபரி என்ற இடத்தில் கிழக்கிந்திய கல்லூரியை நிறுவினர்?
1806
495. போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை முதன்முதலில் எந்த ஆண்டு பட்டய சட்டம் அறிமுகப்படுத்தியது?
1833
496. திறந்த முறையிலான போட்டித்தேர்வு முறையில் கம்பெனி ஊழியர்களை தேர்ந்தெடுப்பது எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1853
497. போட்டித் தேர்வு முறையில் கம்பெனி ஊழியர்களை தேர்ந்தெடுப்பது எந்த இந்திய அரசு சட்டத்தால் உறுதி செய்யப்பட்டது ?
1858
498. போட்டித் தேர்வுகளுக்கான அதிகபட்ச வயது எவ்வளவு ஆக நிர்ணயிக்கப்பட்டது?
23 வயது
499. எந்த ஆண்டு ஹெய்லிபெரியில் இருந்த கிழக்கிந்திய கல்லூரி அகற்றப்பட்டது?
1858
500. எந்த ஆண்டு ஒரு ஒழுங்குமுறை ஆணையின் மூலம் தேர்வு எழுத அதிகபட்ச வயது இருபத்தி இரண்டாக குறைக்கப்பட்டது ?
1860
501. எந்த ஆண்டு போட்டித் தேர்வு எழுதும் வயது 21 ஆக குறைக்கப்பட்டது ?
1866
502. போட்டித் தேர்வு எழுதும் வயது 1876 இல் எவ்வளவு ஆகக் குறைக்கப்பட்டது?
19 வயது
503. எந்த ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்திய ஆட்சிப் பணி சட்டம் இயற்றப்பட்டது?
1861
504. எந்த ஆண்டு சுரேந்திரநாத் பானர்ஜி, ரமேஷ் சந்திர தத் மற்றும் பிகாரி லால் குப்தா ஆகிய மூன்று இந்தியர்கள் ஐசிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றனர் ?
1869
505. 1863 இல் ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் யார்?
சத்யேந்திரநாத் தாகூர்
506. சத்யேந்திரநாத் தாகூர் யாருடைய மூத்த சகோதரர் ?
கவிஞர் ரபீந்திரநாத் தாகூர்
507. எந்த ஆண்டு ஐசிஎஸ் தேர்வு எழுதும் குறைந்தபட்ச வயது 21லிருந்து 23 ஆக உயர்த்தப்பட்டது?
1892
508. 1912ல் அரசு பணியை பற்றி ஆராய்வதற்காக யாருடைய தலைமையில் ஒரு அரசு ஆணையம் (ராயல் கமிஷன் ) நிறுவப்பட்டது?
இஸ்லிங்டன்
509. ராயல் கமிஷன் குழுவில் உறுப்பினர்களாக இருந்த இந்தியர்கள் யார் ?
கோபால கிருஷ்ண கோகலே ,சர் அப்துர் ரஹீம்
510. ராயல் கமிஷன் தனது பரிந்துரைகளை எந்த ஆண்டு வெளியிட்டது?
1917
511. எந்த ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் 33 சதவீதம் இந்தியர்கள் தேர்வு செய்யவேண்டும் என்று படிப்படியாக இவற்றை அதிகரிக்கவும் மாண்டேகு மற்றும் செம்ஸ்போர்டு ஆகியோர் பரிந்துரைத்தனர் ?
1918
512. எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மற்றொரு (ராயல் கமிஷன்) அரசு ஆணையத்திற்கு லீ பிரபு தலைவராக நியமிக்கப்பட்டார்?
1923
513. எந்த அரசு கமிஷன் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய காடுகள் பணி ஆகிய அனைத்து நியமனங்களும் இந்தியாவுக்கான அரசு செயலரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது?
லீ தலைமையிலான ராயல் கமிஷன்
514. எந்த இந்திய சட்டம் மத்தியில் கூட்டாட்சி அரசு பணியாளர் தேர்வாணையம் ஒன்றும் மாகாணங்களில் மாகாண அரசு பணியாளர் தேர்வாணையம் ஒன்றும் உருவாக வழிவகை செய்தது?
1935, இந்திய அரசு சட்டம்
515. இந்தியாவின் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் இரண்டாவது முக்கிய தூணாக விளங்கியது ?
இராணுவம்
516. 1857 ஆம் ஆண்டு கம்பெனி ராணுவம் எத்தனை சதவீதம் இந்தியர்களை கொண்டதாக இருந்தது?
86%
517. வங்காளத்தில் எந்த ஆண்டுக்கு திவானி உரிமையை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பெற்றது?
1765
518. வங்காளத்தில் திவானி உரிமையைப் பெற்ற பின்பு காவல்துறை யார் பொறுப்பிற்கு சென்றது ?
சர்க்கார் என்ற ஆட்சிப் பிரிவுக்கு பொறுப்பு வகித்த பௌஜ்தார்
519. நகரங்களை நிர்வகிக்கும் காவல் அலுவலர்களாக இருந்தவர்கள் யார்?
கொத்வால்
520. இந்தியாவில் முதன்முதலில் காவல்துறையை உருவாக்கியவர் யார்?
காரன் வாலிஸ்
521. ஜமீன்தார்களை காவல் பணிகளில் இருந்து விடுவித்து காரன்வாலிஸ் எந்த ஆண்டு முறையான காவல்துறையை உருவாக்கினார்?
1791
522. சரகங்கள் அல்லது தானாக்கள் என்ற காவல் பகுதிகள் யாரை தலைவராகக் கொண்டது?
தரோகா
523. கிராமத்தை பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
சௌகிதார்கள்
524. தரோகா முறை எந்த ஆண்டு மதராஸ் மாகாணத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டது?
1802
525. எந்த ஆண்டு ஒவ்வொரு தானாவிற்கும் ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டார்?
1808
526. எந்த ஆண்டு இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு வரி வசூல் செய்வதையும், நீதி வழங்கும் அதிகாரத்தையும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஏற்றுக்கொண்டது?
1772
527. திவானி அதாலத் என அழைக்கப்படுவது எது ?
சிவில் நீதிமன்றம்
528. பௌஜ்தாரி அதாலத் என்பது என்ன ?
குற்றவியல் நீதிமன்றம்
529. எந்த ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தின் படி கல்கத்தாவில் ஒரு உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது?
1773
530. கல்கத்தாவில் அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகளை பிரிட்டிஷ் மன்னர் நியமித்தார் ?
ஒரு முதன்மை நீதிபதி மற்றும் மூன்று துணை நீதிபதிகள்
531. கல்கத்தாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாதிரியில் எந்த ஆண்டு மதரசாவில் உச்சநீதி மன்றம் நிறுவப்பட்டது ?
1801
532. கல்கத்தாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாதிரியில்எந்த ஆண்டு பம்பாயில் உச்சநீதி மன்றம் நிறுவப்பட்டது ?
1823
533. எந்த ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு ஜூரி முறையை வங்காளத்தில் கொண்டுவந்தார்?
1832
534. எந்த ஆண்டு இந்திய உயர் நீதிமன்ற சட்டத்தின்படி கல்கத்தா பம்பாய் மதராஸ் ஆகிய இடங்களில் பழைய உச்ச நீதி மன்றங்களுக்கு பதிலாக மூன்று உயர் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன?
1861
535. வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி யார்?
சர் எலிஜா இம்பே
536. மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி யார்?
சர் திருவாரூர் முத்துசாமி
537. துணைப்படை திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
வெல்லஸ்லி
538. துணைப்படை திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1798
539. ‘இந்தியாவில் ஆங்கிலேயே பேரரசு’ என்பதை ‘இந்தியாவின் ஆங்கிலேயே பேரரசு’ என மாற்றியவர் யார்?
வெல்லஸ்லி
540. துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் நாடு ?
ஹைதராபாத் (1798)
541. தஞ்சாவூர் எந்த ஆண்டு துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டது?
1799
542. அயோத்தி எந்த ஆண்டு துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது?
1801
543. பேஷ்வா எந்த ஆண்டு துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்?
1802
544. போன்ஸ்லே எந்த ஆண்டு துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்?
1803
545. குவாலியர் எந்த ஆண்டு துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டது?
1804
546. இந்தூர் எந்த ஆண்டு துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டது?
1817
547. ஜெய்ப்பூர், உதய்பூர் மற்றும் ஜோத்பூர் ஆகியவை எந்த ஒன்று துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டது?
1818
548. வாரிசு இழப்பு கொள்கை அறிமுகப்படுத்தியவர் யார் ?
டல்ஹௌசி
549. வாரிசு இழப்பு கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1848
550. வாரிசு இழப்பு கொள்கையின் மூலம் எந்த ஆண்டு சதாரா இணைத்துக் கொள்ளப்பட்டது ?
1848
551. வாரிசு இழப்பு கொள்கையின் மூலம் எந்த ஆண்டு ஜெய்த்பூர்,சம்பல்பூர் இணைத்துக் கொள்ளப்பட்டது ?
1849
552. வாரிசு இழப்பு கொள்கையின் மூலம் எந்த ஆண்டு பகத் இணைத்துக் கொள்ளப்பட்டது ?
1850
553. வாரிசு இழப்பு கொள்கையின் மூலம் எந்த ஆண்டு உதய்பூர் இணைத்துக் கொள்ளப்பட்டது ?
1852
554. வாரிசு இழப்பு கொள்கையின் மூலம் எந்த ஆண்டு ஜான்சி இணைத்துக் கொள்ளப்பட்டது ?
1853
555. வாரிசு இழப்பு கொள்கையின் மூலம் எந்த ஆண்டு நாக்பூர் இணைத்துக் கொள்ளப்பட்டது ?
1854
8TH STD HISTORY STUDY NOTES | வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services