TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
193. ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் எதிர்ப்பு தமிழ்நாட்டில் யாரால் ஏற்பட்டது?
பூலித்தேவர்
194. எப்போது விஸ்வநாதர் மதுரை நாயக்கர் ஆனார் ?
1529
195. எப்போது தனது அமைச்சர் அரியநாதருடன் கலந்தாலோசித்து பாளையக்காரர் முறையை விஸ்வநாதர் அறிமுகப்படுத்தினார்?
1529
196. பாளையக்காரர் முறை மூலம் நாடு எத்தனை பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது?
72 பாளையங்கள்
197. பாளையக்காரர்கள் தங்கள் வசூலித்த வரிப்பணத்தில் எத்தனை பங்கை மதுரை நாயக்கர்களுக்கு செலுத்தினர்?
மூன்றில் ஒரு பங்கு
198. பாளையக்காரர்கள் நாயக்கர்களுக்கு செலுத்திய மூன்றில் ஒரு பங்கு வரி பணத்திற்குபின் அடுத்த மூன்றில் ஒரு பங்கினை எந்த செலவிற்கு கொடுத்தனர் ?
இராணுவச் செலவு
199. பாளையக்காரர்கள் எத்தனை பிரிவுகளாக இருந்தனர்?
2 :கிழக்கு பாளையம், மேற்கு பாளையம்
200. கிழக்கு பாளையம் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது?
கட்டபொம்மன்
201. மேற்கு பாளையம் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது ?
பூலித்தேவர்
202. எந்த ஆண்டு கர்நாடக உடன்படிக்கையின்படி ஆங்கிலேயர்கள் வரி வசூல் செய்யும் உரிமையை பெற்றனர் ?
1792
203. பூலித்தேவர் எந்தப் பகுதியின் பாளையக்காரர் ?
திருநெல்வேலியின் அருகிலிருந்த நெற்கட்டும்செவல்
204. கப்பம் கட்ட மறுத்ததால் பூலித்தேவரை எந்த கூட்டுப் படைகள் தாக்கின?
ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயர்
205. இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை தோற்கடித்த முதல் இந்திய மன்னர் யார் ?
பூலித்தேவர்
206. எந்த ஆண்டு யூசுப்கான் தலைமையிலான ஆற்காடு நவாபின் படைகள் நெற்கட்டும்செவலை தாக்கின ?
1759
207. யூசுப்கான் தலைமையிலான படையின் போரின்போது எந்த இடத்தில் பூலிதேவர் தோற்கடிக்கப்பட்டார்?
அந்தநல்லூர்
208. எந்த ஆண்டு ஆற்காடு நவாபின் படைகள் நெற்கட்டும்செவலை கைப்பற்றியது?
1761
209. புலித்தேவர் மீண்டும் எப்போது நெற்கட்டும்செவலை கைப்பற்றினார்?
1764
210. புலித்தேவர் நெற்கட்டும்செவலை கைப்பற்றிய பிறகு எந்த ஆங்கிலேய கேப்டனால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டார் ?
1767 ,கேப்டன் கேம்பல்
211. கட்டபொம்மனின் முன்னோர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்?
ஆந்திரா
212. கட்டபொம்மனின் முன்னோர்கள் எந்த நூற்றாண்டில் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர் ?
பதினோராம் நூற்றாண்டு
213. பாண்டியர்களின் கீழ் நில மானிய அடிப்படையில் பாஞ்சாலங்குறிச்சியை தலைநகராகக்கொண்டு யார் வீரபாண்டிய புரத்தை ஆட்சி செய்தார் ?
ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன்
214. ஜெக வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பிறகு பாளையக்காரரானவர் யார்?
வீரபாண்டிய கட்டபொம்மன்
215. வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவியின் பெயர் என்ன?
ஜக்கம்மாள்
216. வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர்கள் யார்?
ஊமைத்துரை மற்றும் சிவத்தையா
217. விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் கர்நாடகாவில் முகலாயர்களின் பிரதிநிதியாக செயல்பட்டவர் யார்?
நவாப்
218. இராமநாதபுரம் கலெக்டர் ஜாக்சன் எந்த ஆண்டு நிலுவைத் தொகையை செலுத்த சொல்லி கட்டபொம்மனுக்கு கடிதங்கள் எழுதினார்?
1798
219. எந்த ஆண்டு கட்டபொம்மன் தனது அமைச்சர் சிவசுப்பிரமணியத்துடன் இராமநாதபுரத்தில் கலெக்டரை சந்தித்தார் ?
1798
220. கட்டபொம்மன் எவ்வளவு வரி பாக்கி வைத்திருந்தார்?
1080 பகோடா
221. கட்டபொம்மன் கலெக்டர் காலின் ஜாக்சன் அவரிடம் நடந்து கொண்டதை விவரித்து கடிதம் எழுதியதையடுத்து கட்டபொம்மனை சரணடைய ஆணையிட்டவர் யார்?
சென்னை கவுன்சிலின் கவர்னர் எட்வர்ட் கிளைவ்
222. கலெக்டர் ஜாக்சன் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு அவருக்குப்பின் கலெக்டராக நியமிக்கப்பட்டவர் யார்?
S.R.லூஷிங்டன்
223. மருதுபாண்டியர் எந்த பகுதியை ஆட்சி செய்தனர்?
சிவகங்கை
224. மருதுபாண்டியர் அருகிலிருந்த பாளையக்காரர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக என்ன அமைப்பை உருவாக்கினார்?
தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பு
225. தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பு ஒரு பிரகடனத்தை வெளியிட்டது அது எவ்வாறு அழைக்கப்படும் ?
திருச்சிராப்பள்ளி அறிக்கை
226. தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பில் இணைய மறுத்த எந்த பாளையத்தின் மீது கட்டபொம்மன் போர் தொடுத்தார் ?
சிவகிரி பாளையம்
227. சிவகிரி பாளையம் கம்பெனிக்கு கப்பம் கட்டுபவராக இருந்ததால் யார் தலைமையில் தன்னுடைய படையை பாஞ்சாலங்குறிச்சி நோக்கி கிழக்கிந்தியக் கம்பெனி செலுத்தியது?
மேஜர் பானர்மேன்
228. மேஜர் பானர்மென் எப்போது தன்னுடைய படையை பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி நகர்த்தினார்?
செப்டம்பர் 5 ,1799
229. எங்கு நடந்த சண்டையில் சிவசுப்பிரமணியம் கைதுசெய்யப்பட்டார்?
கள்ளர்பட்டி
230. கட்டபொம்மன் எங்கு தப்பிச் சென்றார்?
புதுக்கோட்டை
231. புதுக்கோட்டைக்கு தப்பிச்சென்ற கட்டபொம்மன் எங்கு மறைந்திருந்தார்?
களப்பூர் காடுகள்
232. களப்பூர் காடுகளில் மறைந்திருந்து கட்டபொம்மனை கைது செய்து கம்பெனியிடம் ஒப்படைத்தவர் யார்?
புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாத தொண்டைமான்
233. எந்த இடத்தில் சிவசுப்பிரமணியம் சிரச்சேதம் செய்யப்பட்டார்?
நாகலாபுரம்
234. எப்போது பாளையக்காரர் அவையின் முன் கட்டபொம்மன் விசாரிக்கப்பட்டார்?
அக்டோபர் 16
235. கட்டபொம்மன் எங்கு தூக்கிலிடப்பட்டார் ?
கயத்தாறு கோட்டை
236. கட்டபொம்மன் எப்போது தூக்கிலிடப்பட்டார்?
அக்டோபர் 17,1799 (correct answer .அக்டோபர் 16,1799)
237. வேலுநாச்சியார் எந்த பகுதியினுடைய ராணி?
சிவகங்கை
238. வேலுநாச்சியார் எந்த வயதில் சிவகங்கையின் ராஜா முத்துவடுகநாதருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்?
16 வயது
239. எந்த ஆண்டு ஆற்காடு நவாப் மற்றும் பிரிட்டிஷ் படைகள் சிவகங்கையின் மீது போர் தொடுத்தன?
1772
240. முத்துவடுகநாதர் எந்த போரில் கொல்லப்பட்டார் ?
காளையார்கோயில் போர்
241. வேலு நாச்சியாரின் மகள் பெயர் என்ன?
வெள்ளச்சி நாச்சியார்
242. வேலுநாச்சியார் தனது மகளுடன் எங்கு தப்பித்து சென்றார்?
திண்டுக்கல் அருகில் உள்ள விருப்பாச்சி
243. திண்டுக்கல்லில் வேலு நாச்சியார் தனது மகளுடன் யாரின் பாதுகாப்பில் வாழ்ந்தார் ?
கோபால நாயக்கர்
244. வேலு நாச்சியாரின் எந்த படைத்தளபதி ஆங்கிலேயரின் ஆயுதங்கள் கிடங்கை தற்கொலை தாக்குதல் மூலம் தாக்கி அழித்தார்?
குயிலி
245. யாருடைய உதவியுடன் சிவகங்கையை கைப்பற்றி மீண்டும் ராணியாக வேலுநாச்சியார் முடிசூட்டிக் கொண்டார் ?
மருதுசகோதரர்கள்
246. இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட முதல் இந்திய பெண்ணரசி யார் ?
வேலு நாச்சியார்
247. வேலுநாச்சியார் தமிழர்களால் எவ்வாறு அழைக்கப்படுகிறார் ?
வீரமங்கை ,தென்னிந்தியாவின் ஜான்சிராணி
248. மருது சகோதரர்களின் பெற்றோர் யார்?
பொன்னாத்தாள் மற்றும் மூக்கையா பழனியப்பன்
249. மூத்த சகோதரரான பெரிய மருது எவ்வாறு அழைக்கப்படுவார்?
வெள்ளை மருது
250. மருது சகோதரர்களில் யார் சிவகங்கையின் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையத் தேவரிடம் பணிபுரிந்தார்?
சின்னமருது (1750-1772)
251. எந்த ஆண்டு ஆற்காடு நவாபின் படைகள் சிவகங்கையை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றியது?
1772
252. ஆங்கிலேயர்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளின் காரணமாக சிவகங்கை சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார் ?
சின்ன மருது
253. கட்டபொம்மனின் இறப்பிற்குப் பின் அவருடைய சகோதரர் ஊமைத்துரையும் மற்றவர்களும் எங்கு தப்பிச் சென்றனர் ?
சிவகங்கை
254. எப்போது கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரையும் ,செவத்தையாவும் பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பித்துக் கமுதியை வந்தடைந்தனர்?
பிப்ரவரி, 1801
255. கமுதியில் இருந்து கட்டபொம்மனின் சகோதரர்களை சின்னமருது எங்கு அழைத்துச் சென்றார்?
சிறுவயல் (தலைநகரம்)
256. கட்டபொம்மனின் சகோதரர்கள் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை புணரமைத்தபின் யார் தலைமையிலான ஆங்கிலப் படைகள் மீண்டும் கோட்டையை தன் வசப்படுத்தியது?
காலின் மெக்காலே (ஏப்ரலில்)
257. மருது சகோதரர்களுக்கு எதிராக படை நடத்திச் சென்றவர்கள் யார் ?
கர்னல் அக்னியூ மற்றும் கர்னல் இன்ஸ்
258. தென்னிந்திய கிளர்ச்சி எப்போது நடைபெற்றது?
1800- 1801
259. தென்னிந்திய கிளர்ச்சியின் போது எந்த கூட்டமைப்பிற்கு எதிராக ஆங்கிலேயர்கள் போரை அறிவித்தனர்?
சிவகங்கையின் மருது சகோதரர்கள், திண்டுக்கல்லின் கோபால நாயக்கர் ,மலபாரின் கேரள வர்மன் ,மைசூரின் கிருஷ்ணப்ப நாயக்கர் மற்றும் துண்டாஜி
260. மருது சகோதரர்கள் வெளியிட்ட சுதந்திரப் பிரகடனம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
திருச்சிராப்பள்ளி பிரகடனம்
261. மருது சகோதரர்கள் திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை எப்போது வெளியிட்டனர்?
1801
262. ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவில் ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பாக இருந்தது எது ?
திருச்சிராப்பள்ளி பிரகடனம்
263. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் நகல்கள் எங்கு ஒட்டப்பட்டன?
ஆற்காடு நவாபின் அரண்மனையான திருச்சி கோட்டை சுவரிலும், மற்றொன்று ஸ்ரீரங்கம் வைஷ்ணவ கோவில் சுவரிலும்
264. எப்போது தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதிகளில் கிளர்ச்சியாளர்களை ஆங்கிலேயர் தாக்கினர்?
மே,1801
265. தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதிகளின் கிளர்ச்சியாளர்கள் தாக்கிய பின் எந்த பகுதிகளுக்குச் சென்றனர் ?
பிரான்மலை மற்றும் காளையார்கோவில்
266. எந்த ஆண்டு ஆங்கிலேயர்கள் சிவகங்கை இணைத்துக்கொண்டனர்?
1801
267. எப்போது மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்?
அக்டோபர் 24,1801
268. எங்கு மருது சகோதரர்களும் தூக்கிலிடப்பட்டனர்?
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் கோட்டை
269. எப்போது ஊமத்துரை மற்றும் செவத்தையா கைதுசெய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டனர்?
நவம்பர் 16, 1801
270. எத்தனை கிளர்ச்சியாளர்கள் மலாயாவின் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்டனர்?
73 கிளர்ச்சியாளர்கள்
271. மலாயாவின் பினாங்கு தீவு பின்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது?
வேல்ஸ் இளவரசர் தீவு
272. 1800-1801 ஆண்டு கிளர்ச்சி ஆங்கில ஆவணங்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளது ?
இரண்டாவது பாளையக்காரர் போர்
273. எப்போது செய்துகொள்ளப்பட்ட கர்நாடக உடன்படிக்கையின்படி தமிழ் நாட்டின் மீது ஆங்கிலேயர் நேரடி கட்டுப்பாட்டை பெற்று பாளையக்காரர் முறை நீக்கப்பட்டது?
ஜூலை 3, 1805
274. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்த கொங்குநாட்டு பாளையக்காரர் யார்?
தீரன் சின்னமலை
275. தீரன் சின்னமலை எங்கு பிறந்தார்?
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள மேலப்பாளையம்
276. தீரன் சின்னமலையின் இயற்பெயர் என்ன?
தீர்த்தகிரி
277. கொங்குநாடு என்பது எந்த பகுதிகளை உள்ளடக்கியிருந்தது?
சேலம், கோயம்புத்தூர், கரூர் மற்றும் திண்டுக்கல்
278. எந்தப் போர்களுக்கு பின்பு கொங்கு நாடு முழுவதும் ஆங்கிலேயரின் வசமானது ?
மூன்று மற்றும் நான்காம் மைசூர் போர்
279. தீரன் சின்னமலை எந்த ராணுவத்தில் நவீன போர் முறை பயிற்சி பெற்றிருந்தவர்?
பிரெஞ்சு ராணுவம்
280. தீரன் சின்னமலை மைசூரின் எந்த அரசரின் பக்கமிருந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வெற்றி பெற்றார்?
திப்பு சுல்தான்
281. திப்பு சுல்தான் இறந்த பிறகு தீரன் சின்னமலை எங்கு தங்கி ஆங்கிலேயரை தொடர்ந்து எதிர்த்து போராட ஒரு கோட்டையைக் கட்டினார் ?
ஓடாநிலை
282. எந்த ஆண்டு கோயம்புத்தூரில் ஆங்கிலேயரை தாக்க தீரன் சின்னமலை மராத்தியர் மற்றும் மருது சகோதரர்களின் உதவியைப் பெற முயன்றார்?
1800
283. தீரன் சின்னமலை எந்த இடங்களில் நடைபெற்ற போர்களில் கொரில்லா போர் முறையில் ஆங்கிலப் படைகளை தோற்கடித்தார்?
காவேரி ,ஓடாநிலை மற்றும் அரச்சலூர்
284. சின்னமலை யாரால் காட்டிக் கொடுக்கப்பட்டார்?
தனது சமையல்காரர் நல்லப்பன்
285. தீரன் சின்னமலை எப்போது தூக்கிலிடப்பட்டார் ?
1805
286. தீரன் சின்னமலை எங்கு தூக்கிலிடப்பட்டார்?
சங்ககிரி கோட்டை
287. வேலூர் கலகம் எந்த ஆண்டு நடைபெற்றது ?
1806
288. நான்காம் மைசூர் போர் பிறகு திப்புவின் குடும்பத்தினர் எங்கு சிறை வைக்கப்பட்டனர் ?
வேலூர் கோட்டை
289. 1803 இல் சென்னை மாகாண கவர்னர் ஆனவர் யார் ?
வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங்
290. எப்போது இராணுவத்தில் சில கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டது?
1805 -1806
291. இராணுவ கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என இராணுவ வீரர்களை கட்டாய ப்படுத்தியவர் யார்?
சென்னை மாகாண படைத்தளபதி ,சர் ஜான் கிரடாக்
292. எந்த ஆண்டு ராணுவ தளபதி அக்னியூ ஐரோப்பிய தொப்பியை ஒத்திருந்த சிலுவை சின்னத்துடன் கூடிய ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார் ?
ஜூன், 1806
293. ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த முயன்ற திப்புவின் மூத்த மகன் யார் ?
பதே ஹைதர்
294. எந்த நாள் விடியற்காலையில் முதலாவது மற்றும் 23-வது படைப்பிரிவுகளை சார்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தைத் தொடங்கினார்?
ஜூலை 10
295. கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு முதல் பலியானவர் யார்?
படையை வழிநடத்திய கர்னல் பான்கோர்ட்
296. திப்புவின் கொடியில் என்ன உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் ?
புலி உருவம்
297. கோட்டையின் வெளியே இருந்த யார்?
ராணிப்பேட்டைக்கு விரைந்து சென்று கர்னல் கில்லஸ்பிக்கு தகவல் கொடுத்தார்? மேஜர் கூட்ஸ்
298. 1806 இல் நடந்த வேலூர் கலகத்தை 1857இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி என குறிப்பிடுபவர் யார்?
வி.டி.சவார்க்கர்
299. 1857 சிப்பாய் கலகத்திற்கு உடனடிக் காரணமாக இருப்பவை எது?
ராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு ரக துப்பாக்கி
300. என்பீல்ட் ரக துப்பாக்கியின் குண்டுகளில் எது தடவப்பட்டிருந்தது?
பசு மற்றும் பன்றியின் கொழுப்பு
301. எப்போது வங்காள படைப்பிரிவைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற இளம் சிப்பாய் கொழுப்பு தடவப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்த மறுத்து தனது உயர் அதிகாரியை சுட்டுக்கொன்றார்?
மார்ச் 29 ,1857
302. எப்போது மீரட்டில் மூன்றாம் குதிரை படையைச் சேர்ந்த சிப்பாய்கள் சிறைச்சாலையை உடைத்து தங்களது சக படைவீரர்களை விடுவதன் மூலம் வெளிப்படையாக புரட்சியில் ஈடுபட்டனர்?
மே 10, 1857
303. டெல்லிக்கு வந்த மீரட் சிப்பாய்கள் எப்போது இரண்டாம் பகதூர் ஷாவை இந்தியாவின் பேரரசராக அறிவித்தனர்?
மே 11
304. எந்தெந்த பகுதிகளில் புரட்சி மிக வேகமாக பரவியது?
லக்னோ ,கான்பூர், ஜான்சி,பரெய்லி,பீகார், பைசாபாத் மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகள்
305. மத்திய இந்தியாவில் புரட்சி யாரால் நடத்தப்பட்டது?
ஜான்சி ராணி லட்சுமி பாய்
306. ஜான்சி ராணி லட்சுமி பாயை எதிர்த்துப் போரிட்டவர் யார்?
சர் ஹக்ரோஸ்
307. ஜான்சியில் இருந்து தப்பிய ராணி லட்சுமிபாய் எங்கிருந்த படையை தலைமை ஏற்று வழி நடத்திய தாந்தியா தோபேவுடன் இணைந்தார்?
குவாலியர்
308. எந்த ஆண்டு ஆங்கிலப் படை குவாலியரை கைப்பற்றியது?
ஜூன் 1858
309. புரட்சியை அடக்க உடனடியாக நடவடிக்கை எடுத்த கவர்னர் ஜெனரல் யார் ?
கானிங் பிரபு
310. டெல்லியை மீண்டும் கைப்பற்றிய ஆங்கில படைத்தளபதி யார் ?
நிக்கல்சன்
311. எப்போது டெல்லி படைத்தளபதி நிக்கல்சன்னால் மீண்டும் கைப்பற்றப்பட்டது ?
செப்டம்பர் 20 ,1857
312. இரண்டாம் பகதூர்ஷா எங்கு நாடு கடத்தப்பட்டார்?
ரங்கூன்
313. இரண்டாம் பகதூர்ஷா எப்போது இறந்தார்?
1862
314. கான்பூரை கைப்பற்றியவர் யார்?
சர் காலின் கேம்பல்
315. நானாசாகிப் தோற்கடிக்கப்பட்ட பின் எங்கு தப்பியோடினார்?
நேபாளம்
316. தாந்தியா தோபே தோற்கடிக்கப்பட்ட பின் எங்கு தப்பிச் சென்றார் ?
மத்திய இந்தியா
317. கான்பூரில் புரட்சியை வழி நடத்திச் சென்றவர் யார்?
நானாசாகிப்
318. டெல்லியில் புரட்சியைத் தலைமை ஏற்ற இந்திய தலைவர் யார்?
இரண்டாம் பகதூர்ஷா
319. டெல்லியில் கலகத்தை அடக்கிய ஆங்கிலேய அதிகாரி யார்?
ஜான் நிக்கல்சன்
320. லக்னோவில் புரட்சியை தலைமை ஏற்று நடத்திய இந்திய தலைவர் யார்?
பேகம் ஹஸ்ரத் மஹால்
321. லக்னோவில் கலகத்தை அடக்கிய ஆங்கிலேய அதிகாரி யார் ?
ஹென்றி லாரன்ஸ்
322. ஜான்சி மற்றும் குவாலியரில் கலகத்தை தலைமையேற்று நடத்திய இந்திய தலைவர்கள் யார்?
ராணி லட்சுமிபாய் தாந்தியா தோபே
323. ஜான்சி மற்றும் குவாலியரில் கலகத்தை அடக்கிய ஆங்கிலேய அதிகாரி யார் ?
ஜெனரல் ஹக்ரோஸ்
324. பிரெய்லியில் நடைபெற்ற கலகத்தை தலைமையேற்று நடத்திய இந்திய தலைவர் யார் ?
கான் பகதூர் கான்
325. பிரெய்லியில் நடைபெற்ற கலகத்தை அடக்கியவர் யார்?
சர் காலின் கேம்பல்
326. பீகாரில் நடைபெற்ற கலகத்தை தலைமையேற்று நடத்திய இந்திய தலைவர் யார்?
கன்வர் சிங்
327. பிஹாரில் நடைபெற்ற கலகத்தை அடக்கியவர் யார்?
வில்லியம் டைலர்
328. எந்தப் அறிக்கையின் மூலம் இந்தியாவின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து ஆங்கில பாராளுமன்றத்திற்கு மாற்றப்பட்டது?
விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை
329. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது ?
1858
330. ஆங்கில அரசுக்கு இந்தியாவின் நிர்வாகம் மாற்றப்பட்ட பின் கவர்னர் ஜெனரல் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
வைஸ்ராய்
331. 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சியை ” ஒரு திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப் போர்” எனக் கூறுபவர் யார் ?
வி.டி.சவார்க்கர்
332. முதல் இந்திய சுதந்திரப் போர் எனும் நூலை எழுதியவர் யார்?
வி.டி.சவார்க்கர்
8TH STD HISTORY STUDY NOTES | மக்களின் புரட்சி
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services