8TH STD HISTORY STUDY NOTES | ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. இந்தியாவில் உள்ள நகரங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

பண்டையகால நகரங்கள் ,இடைக்கால நகரங்கள் மற்றும் நவீன கால நகரங்கள் 

  1. புகழ்பெற்ற பண்டைய கால நகரங்கள் என்னென்ன?

ஹரப்பா ,மொகஞ்சதாரோ, வாரணாசி ,அலகாபாத் மற்றும் மதுரை

  1. இடைக்கால நகரங்களுக்கு எடுத்துக்காட்டுகள்?

டெல்லி ,ஹைதராபாத் , ஜெய்ப்பூர் ,லக்னோ, ஆக்ரா மற்றும் நாக்பூர்

  1. இந்தியாவில் பிரிட்டிஷார் தங்களை நன்கு நிலைநிறுத்திக் கொண்ட பின்னர் எந்த மூன்று நகரங்களை நிர்வாகத் தலைநகராகவும் வணிக மையங்களாக வளர்த்தனர் ?

 மும்பை ,சென்னை ,கொல்கத்தா

  1. எந்த ஆண்டு மதராஸ் நகரம் உருவாக்கப்பட்டது?

 1639

  1. எந்த ஆண்டு பம்பாய் நகரம் உருவாக்கப்பட்டது?

 1661

  1. எந்த ஆண்டு கல்கத்தா நகரம் உருவாக்கப்பட்டது ?

1690

  1. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கல்கத்தா, பம்பாய் மற்றும் மதராஸ் ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் என்னவாக முக்கியத்துவம் பெற்றன?

 மாகாண நகரங்கள்

  1. அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு உணவு உற்பத்தி அல்லாத தொழில்களில் ஈடுபடுவதும்,நன்கு கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழ்வதும எவ்வாறு அழைக்கப்படும் ?

நகர்ப்புறப் பகுதி

  1. புனித ஜார்ஜ் கோட்டை எங்கு கட்டப்பட்டது?

சென்னை

  1. புனித வில்லியம் கோட்டை எங்கு கட்டப்பட்டது?

 கல்கத்தா

  1. ராணுவ நகரங்களுக்கு எடுத்துக்காட்டுகள் எவை?

கான்பூர், லாகூர் போன்றவை

  1. ஆங்கிலேயர்கள் குளிர்கால தலைநகரங்களை கல்கத்தாவுக்கு மாற்றாக எங்கு ஏற்படுத்தினர்?

 டார்ஜிலிங்

  1. ஆங்கிலேயர்கள் குளிர்கால தலைநகரங்களை டெல்லிக்கு மாற்றாக எங்கு ஏற்படுத்தினர்?

 டேராடூன்

  1. கூர்க்கர்களுடன் நடைபெற்ற போரின்(1814-16) போது எந்த  மலைவாழிடங்கள் நிறுவப்பட்டது ?

 சிம்லா

  1. டார்ஜிலிங் பகுதியானது சிக்கிம் ஆட்சியாளர்களிடம் இருந்து எந்த ஆண்டு கைப்பற்றப்பட்டது?

 1835

  1. ஆங்கிலேயர்களால் ரயில்வே எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது ?

 1853

  1. இந்தியாவில்  நகராட்சி அரசாங்கம் எந்த ஆண்டு மதராஸ் மாநகராட்சி ஒரு மேயருடன் ஏற்பட்டதில் இருந்து உருவானது ?

1688

  1. கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குனர்களில் ஒருவரான யார் மாநகராட்சி உருவானதற்கு காரணமாக இருந்தார்?

 சர் ஜோசியா சைல்டு

  1. மூன்று மாகாண நகரங்களில் எந்த ஆண்டின் பட்டய சட்டம் நகராட்சி நிர்வாகத்தை நிறுவியது?

 1793

  1. வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் அயோத்தி மற்றும் பம்பாயில் நகராட்சிகள் எந்த ஆண்டு சட்டப்படி அமைக்கப்பட்டன?

 1850

  1. மேயோ பிரபுவின் எந்த ஆண்டின் புகழ்பெற்ற தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது?

1870

  1. இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை என அழைக்கப்படுவது யார்?

 ரிப்பன் பிரபு

  1. ரிப்பன் பிரபுவின் உள்ளாட்சி அரசாங்கம் தொடர்பான தீர்மானம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
SEE ALSO  10TH TAMIL IYAL 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

 உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்

  1. மாகாணங்களில் இரட்டை ஆட்சியை எந்த ஆண்டு இந்திய அரசுச் சட்டம் அறிமுகப்படுத்தியது?

 1919

  1. மாகாண சுயாட்சியை எந்த ஆண்டு இந்திய அரசுச் சட்டம் அறிமுகப்படுத்தியது?

 1935

  1. ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

 1600

  1. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கப்பட்டு இந்தியாவின் மேற்கு  கடற்கரையில் சூரத்தில் எத்தனை ஆண்டுகள் கழித்து ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டது?

 12 ஆண்டுகள்

  1. மசூலிப்பட்டினம் கழக உறுப்பினர் மற்றும் ஆர்மகான் தொழிற்சாலைகளின் தலைவரான பிரான்சிஸ் டே  எந்த ஆண்டு ஒரு புதிய குடியேற்றத்திற்கான தளத்தை தேர்ந்தெடுக்கும் நோக்கில் ஒரு ஆய்வு பயணத்தை மேற்கொண்டார்?

 1637

  1. எந்த சந்திரகிரி அரசரின்  பிரதிநிதி அவர்களால் அதிகாரபூர்வமான மானியமாக நிலம் வழங்கப்பட்டது?

தமர்லா வெங்கடபதி

  1. எதற்கு இடைப்பட்ட பகுதியில் நிலத்தை தமர்லா பிரிட்டிஷாருக்கு வழங்கினார் ?

கூவம் நதிக்கும் எழும்பூருக்கும் இடையில் ஒரு சிறு பகுதி நிலம்

  1. ஒப்பந்தத்தில் எந்த ஆண்டு ஃபிரான்சிஸ் டே கையெழுத்திட்டார் ?

 1639

  1. பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோருக்கு வணிக தளத்துடன் கூடிய தொழிற்சாலைக்கும், மதராசப் பட்டினத்தில் ஒரு கோட்டையை அமைப்பதற்கும் எந்த ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டது?

1639

  1. 1639ல் அனுமதி வழங்கப்பட்ட குடியிருப்பு பின்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது?

புனித ஜார்ஜ் குடியிருப்பு

  1. புனித ஜார்ஜ் குடியிருப்பு வேறு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ?

வெள்ளை நகரம்

  1. வெள்ளை நகரத்திற்கு அருகில் உள்ள கிராமங்களில் மக்கள் வசித்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

 கருப்பு நகரம்

  1. தமர்லா வெங்கடபதி எந்த சந்திரகிரி அரசரின் கட்டுப்பாட்டிலிருந்தார்?

வெங்கடபதி ராயலு

  1. எந்த ஆண்டு ஸ்ரீரங்கராயலு பதவிக்கு வந்தார்?

 1642

  1. எந்த ஆண்டு ஆங்கிலேயருக்கு ஸ்ரீரங்கராயலு, ஸ்ரீரங்கப்பட்டினம் எனும் புதிய மானியத்தை வழங்கினார்?

1645

  1. வெங்கடபதி அவரது தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் ஆங்கிலேயர்களின் புதிய கோட்டை மற்றும் குடியேற்றங்கள் எவ்வாறு அழைக்கப்பட வேண்டுமென விரும்பினார் ?

சென்னப்பட்டினம்

  1. எந்த ஆண்டு சந்திரகிரி அரசர் சர் பிரான்சிஸ் டேவிற்க்கு தொழிற்சாலை கட்டுவதற்காக நிலம் மானியமாக வழங்கப்பட்டு பின்னர் மதராஸ் என பெயரிடப்பட்டது?

 1639

  1. புனித ஜார்ஜ் தினமான என்று மதராஸின் முதல் தொழிற்சாலை கட்டிமுடிக்கப்பட்டு, புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது ?

ஏப்ரல் 23, 1640

  1. புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டதற்கு யார் இருவரும் கூட்டாக பொறுப்பாவார்கள் ?

 பிரான்சிஸ் டே மற்றும் கோகன்

  1. புனித ஜார்ஜ் கோட்டை எந்த ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது?

 1774

  1. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணம் என அழைக்கப்படுவது எந்தப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது?
SEE ALSO  8TH TAMIL IYAL 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

தற்போதைய தமிழ்நாடு ,லட்சத்தீவு ,வடக்கு கேரளா ,ராயலசீமா, கடலோர ஆந்திரா ,கர்நாடக மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஒரிசாவின் பல்வேறு மாவட்டங்கள்

  1. எப்போது மதராஸ் மாகாணம் மதராஸ் மாநிலம் ஆக மாறியது?

1947

  1. மாநில சீரமைப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?

1956

  1. எந்த ஆண்டு மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறு பெயரிடப்பட்டது?

 1969

  1. எப்போது மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று பெயரிடப்பட்டது?

 ஜூலை 17,1996

  1. பம்பாய் எத்தனை தீவுகளைக் கொண்டது?

 ஏழு

  1. பம்பாய் எந்த ஆண்டிலிருந்து போர்த்துக்கீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது?

1534

  1. இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் போர்த்துக்கீசிய மன்னரின் சகோதரியை திருமணம் செய்து கொண்டதற்கு பம்பாய் பகுதியை எந்த ஆண்டு சீதனமாக பெற்றார் ?

 1661

  1. எந்த ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையகத்தை சூரத்தில் இருந்து பம்பாய்க்கு மாற்றியது?

 1687

  1. ஆங்கில வணிகர்கள் சுதாநுதியில் எந்த ஆண்டு ஒரு குடியேற்றத்தை நிறுவினர்?

 1690

  1. ஆங்கிலேயர்கள் சுதாநுதி ,கல்கத்தா மற்றும் கோவிந்தபூர் ஜமீன்தாரி உரிமைகளை எந்த ஆண்டு பெற்றனர்?

 1698

  1. ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் கல்கத்தாவில் என்ன கோட்டையை நிறுவியது ?

 வில்லியம் கோட்டை


8TH STD HISTORY STUDY NOTES | ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

SEE ALSO  8TH STD HISTORY STUDY NOTES | கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

 

Leave a Comment

Please disable your adblocker or whitelist this site To Read !

error: