- இனம் ,பாலினம் ,தேசிய இனம், இனக்குழுக்களின் தன்மை, மொழி மற்றும் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மனித உரிமைகள்
- இங்கிலாந்து மக்களுக்கு புதிய உரிமைகளை வழங்கியதுடன் அரசரை சட்டத்திற்கு உட்படுத்தியது எது?
மகாசாசனம்(the Magna Carta)
- மகாசாசனம்(the Magna Carta) எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1215
- இங்கிலாந்து மக்கள் உரிமை களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும் ?
உரிமை மனு (the petition of right)
- உரிமை மனு (the petition of right) எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
1628
- இங்கிலாந்து மக்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான சட்டம் எது?
ஹேபியஸ் கார்பஸ் சட்டம்
- ஹேபியஸ் கார்பஸ் சட்டம் இங்கிலாந்தில் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1679
- சில அடிப்படை சமூக/ குடிமக்கள் உரிமைகளை அமைக்கும் ஆங்கில உரிமைகள் மசோதா எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1689
- சட்டத்தின் கீழ் அனைத்து குடிமக்களும் சமம் என்று கூறும் மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரான்சின் அறிவிப்பு எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1789
- குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1791
- எந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசன சட்டம் சான்பிரான்ஸிஸ்கோ மாநாட்டில் உருவாக்கப்பட்டது?
1945
- ஐக்கிய நாடுகள் சபை எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
அக்டோபர் 24, 1945
- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான ஒரு ஆணையம் யாருடைய தலைமையில் நிறுவப்பட்டது?
எலினார் ரூஸ்வெல்ட்
- உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐநா பொதுச் சபையால் எந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது?
டிசம்பர் 10,1948(பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகர்)
- ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 10
- பண்டைய பாரசீகத்தின் முதல் மன்னரான மகா சைரஸ் அடிமைகளை விடுவித்து மக்கள் அனைவரும் தங்கள் சொந்த மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என அறிவித்ததை கூறும் சிலிண்டர் கல்வெட்டு எந்த ஆண்டை சாரந்தது?
கிமு 539
- உலக மனித உரிமைகள் அறிவிப்பு எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
500
- உலகில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் எது?
ஐநா சபையின் மனித உரிமைகள் அறிவிப்பு
- மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள் என்னென்ன?
கண்ணியம் நீதி சமத்துவம்
- மனித உரிமையின் அடிப்படை பண்புகள் என்னென்ன?
இயல்பானவை ,அடிப்படையானவை ,மாற்ற முடியாதவை, பிரிக்க முடியாதவை, உலகளாவியவை, சார்புடையவை
- மனித உரிமைகள் பிரகடனத்தில் எத்தனை சட்ட பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன?
30
- மனித உரிமைகள் எத்தனை முதன்மை பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
ஐந்து :வாழ்வியல் உரிமைகள் ,அரசியல் உரிமைகள் ,சமூக உரிமைகள், பொருளாதார உரிமைகள், கலாச்சார உரிமைகள்
- இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் எப்போது நிறுவப்பட்டது ?
அக்டோபர் 12 1993
- NHRC ன் விரிவாக்கம் என்ன?
National Human Rights Commission
- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை இடம் எங்கு உள்ளது?
புதுதில்லி
- தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரையும் உறுப்பினர்களையும் யார் நியமிக்கிறார் ?
குடியரசுத் தலைவர்
- தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?
5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை பதவியில் இருக்கலாம்
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் எத்தனை பிரிவுகளைக் கொண்டுள்ளது?
5 :சட்டப்பிரிவு, புலனாய்வுப் பிரிவு ,ஆராய்ச்சி மற்றும் திட்ட பிரிவு, பயிற்சி அளித்தல் பிரிவு மற்றும் நிர்வாக பிரிவு
- தமிழ்நாட்டில் எந்த ஆண்டு மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது?
ஏப்ரல் 17,1997
- மாநில மனித உரிமைகள் ஆணையம் எத்தனை உறுப்பினர்களை உள்ளடக்கியது?
குழு தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள்
- மாநில மனித உரிமைகள் ஆணையம் எதனை விசாரிக்கும்?
இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநில பட்டியல் ,பொதுப் பட்டியல் ஆகியவற்றின் கீழ் உள்ள துறைகள் தொடர்பான மனித உரிமை மீறல்கள்
- மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளை மேற்கொள்ளும் அரசு சாரா நிறுவனங்கள் என்னென்ன?
ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) ,குழந்தைகள் பாதுகாப்பு நிதியம்(Children’s Defence fund), மனித உரிமைகள் கண்காணிப்பகம்(Human Rights watch)
- இந்திய அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவு குழந்தை தொழிலாளர் முறையை தடை செய்கிறது ?
சட்டப்பிரிவு 24
- இந்திய அரசமைப்பின் எந்த சட்டப்பிரிவு ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழிவகை செய்கிறது ?
சட்டப்பிரிவு 39 (f)
- இந்திய அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவு 6 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க அரசு முயல வேண்டும் எனக் கூறுகிறது?
சட்டப்பிரிவு 45
- எந்த ஆண்டு நடைபெற்ற குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் பிரிவு ஒன்றின்படி 18 வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தை எனப்படுவர்?
1989
- குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் அறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
நவம்பர் 20 ,1989
- சர்வதேச பெண்கள் ஆண்டு எது ?
1978
- சர்வதேச குழந்தைகள் ஆண்டு எது?
1979
- இந்திய அரசமைப்பின் எந்த சட்டப்பிரிவு 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்குவதற்கு வழிவகை செய்கிறது?
சட்டப்பிரிவு 21(A)
- எந்த சட்டம் 15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த தடை செய்கிறது?
குழந்தை தொழிலாளர் சட்டம் (தடை மற்றும் சீரமைப்பு சட்டம் 1986)
- எந்த சட்டம் போதுமான கவனிப்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகளை நட்பு ரீதியில் அணுகி அவர்களை திருத்த முயற்சி மேற்கொள்கிறது?
சிறார் நீதிச் சட்டம் 2000 ,(குழந்தைகளை பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்)
- பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் , குழந்தைகளின் நலனே மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என கருதுவது எது?
போக்சோ சட்டம் 2012
- இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணி நேர கட்டணமில்லா அவசர தொலைத்தொடர்பு சேவை மற்றும் குழந்தைகளுக்கான உதவி மைய எண் எது?
1098
- எந்த ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மசோதாவை ஐ.நா. பாதுகாப்பு சபை ஏற்றுக் கொண்டது ?
1979
- 1979 இல் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கான மசோதா எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பெண்களுக்காண சர்வதேச உரிமைகள் மசோதா
- நான்காவது உலக மகளிர் மாநாடு எப்போது எங்கு நடைபெற்றது?
பெய்ஜிங் ,1995
- பெய்ஜிங் மாநாட்டின் இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்காக யுனிபெம் (UNIFEM) என்று அழைக்கப்படும் பெண்களுக்கான ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு நிதி அமைப்பு எந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது?
1995
- எந்த சட்டத்தின்படி மூத்த குடிமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் பராமரிப்பை வழங்குவதற்கும் அவர்களின் குழந்தைகள் மற்றும் வாரிசுதாரர்களின் சட்டப்பூர்வமான கடமையாகிறது ?
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம்
- எந்த ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் விதவைகள் மறுமணத்தை சட்டபூர்வமாக்கியது?
இந்து விதவை மறுமண சட்டம் 1856
- எந்த ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் பெண்களின் திருமண வயதை 21 என சட்டபூர்வமாக்கியது?
இந்து திருமணச் சட்டம் 1955 (correct answer:for women-18,men-21)
- எந்த ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் பெண்கள் தங்கள் பெற்றோர்களின் சொத்தினை மரபுவழியாக பெறுவதை உறுதி செய்கிறது ?
இந்து வாரிசு சட்டம் 1956
- எந்த ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் வரதட்சனை என்ற பெயரில் மருமகளை மோசமாக நடத்துவதற்கு கடுமையான தண்டனை வழங்குகிறது?
வரதட்சணை தடை சட்டம் 1961
- பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
1997
- எந்த ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் பத்திரிகைகள் ,செய்தித்தாள்கள் போன்றவற்றில் பெண்களை அநாகரீகமாக சித்தரிப்பதை தடை செய்கிறது?
பெண்களை அநாகரிகமாக சித்தரித்தலுக்கெதிரான சட்டம் ,1999
- எந்த இயற்றப்பட்ட சட்டங்கள் பெண் தொழிலாளர்களை பாதுகாக்கிறது?
தொழிற்சாலைகள் சட்டம் 1948 ,தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் 1951 ,சுரங்க சட்டம் 1952, மகப்பேறு நலச்சட்டம் 1961
- கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் பெண்கள் துன்புறுத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பது எந்த சட்டம் ?
வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2005
8TH POLITY STUDY NOTES |மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services