8TH POLITY STUDY NOTES |பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை| TNPSC GROUP EXAMS

 


  1. இந்திய நாட்டின் தலைவராக இருப்பவர் யார் ?

குடியரசுத் தலைவர்

  1. இந்திய நாட்டில் பாதுகாப்பு அமைப்பில் மிக உயர்ந்த பதவி நிலையை வைப்பவர் யார் ?

 குடியரசுத் தலைவர்

  1. இந்திய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி யார்?

இந்திய குடியரசுத் தலைவர்

  1. இந்திய ஆயுதப் படையானது எவற்றை உள்ளடக்கியுள்ளது?

 ராணுவப் படை, கடற்படை ,விமானப்படை மற்றும் கடலோர காவல்படை

  1. இந்தியாவின் துணை இராணுவப் படைகள் என்னென்ன?

அசாம் ரைபிள்ஸ் ,சிறப்பு எல்லைப்புறப்படை

  1. மத்திய ஆயுத காவல் படைகள் என்னென்ன?

BSF,CRPF,ITBP,CISFமற்றும் SSB

  1. இந்திய ஆயுதப்படைகளை கௌரவிப்பதற்காக இந்திய அரசால் தேசிய போர் நினைவு சின்னம் எங்கு கட்டப்பட்டுள்ளது?

 

 புதுடெல்லி

  1. இந்திய ராணுவப்படை என்பது எந்தப் பிரிவைச் சேர்ந்தவை?

நில அடிப்படையிலான ஒரு பிரிவு

  1. இந்திய ராணுவப்படை யாரால் வழி நடத்தப்படுகிறது?

ஜெனரல் என்று அழைக்கப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட ராணுவப் படைதளபதி

  1. இந்திய ராணுவம் என்ற அமைப்பு முறையைக் கொண்டது?

 ரெஜிமெண்ட்

  1. இந்திய ராணுவப்படை (ரெஜிமெண்ட்) செயல்பாட்டு ரீதியாக, புவியியல் அடிப்படையிலும் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

ஏழு

  1. நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாப்பது எது?

கடற்படை

  1. இந்தியக் கடற்படை யாரால் வழிநடத்தப்படுகிறது?

அட்மிரல் என்று அழைக்கப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட கடற்படைத்  தளபதி

  1. இந்திய ராணுவத்தின் உயர்ந்த பதவி எது?

பீல்ட் மார்ஷல்: ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட பொது அதிகாரி பதவி

  1. இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் யார் ?

சாம் மானெக்ஷா

  1. இந்தியாவின் இரண்டாவது பீல்ட் மார்ஷல் யார் ?

 கே.எம்.கரியப்பா

  1. இந்திய விமானப்படையில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி யார்?

 அர்ஜுன் சிங்

  1. இந்திய ராணுவத்தின் மிகப்பழமையான காலாட்படை பிரிவுகளில் ஒன்று எது?

 மெட்ராஸ் ரெஜிமென்ட்

  1. மெட்ராஸ் ரெஜிமென்ட் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

1758

  1. மெட்ராஸ் ரெஜிமென்ட் தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது?

உதகமண்டலத்தில் உள்ள வெல்லிங்டன்

  1. இந்திய ராணுவத்தின் அவசர ஆணையத்திற்கான அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க எந்த இடங்களில் “அதிகாரிகள் பயிற்சி பள்ளிகள்” நிறுவப்பட்டது ?

பூனா மற்றும் சென்னை

  1. OTSன் விரிவாக்கம் என்ன ?

Officers training academy

  1. இந்திய விமானப்படை யாருடைய தலைமையில் வழி நடத்தப்படுகிறது ?

ஏர் சீப் மார்ஷல்(Air chief marshal) அழைக்கப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட விமானப்படை தளபதி

  1. இந்திய விமானப்படை எத்தனை படைப் பிரிவுகளை கொண்டது ?

ஏழு

  1. இந்திய கடலோர காவல் படை எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

 இந்திய பாராளுமன்றத்தின் 1978 ஆம் ஆண்டு கடலோர காவல்படை சட்டத்தின்படி இந்தியாவின் சுதந்திர ஆயுதப்படையாக 1978 இல் நிறுவப்பட்டது

  1. எப்போது தமிழ்நாட்டில் இருந்து சோழமன்னன் முதலாம் ராஜேந்திரன் தென்கிழக்காசியாவின் கடல்சார் பகுதியான ஸ்ரீவிஜயம் மீது படையெடுப்பைத் தொடங்கினார்?

கி.பி.1025

  1. அசாம் ரைபிள்ஸ் எப்போது உருவாக்கப்பட்டது?

அசாம் பகுதியில் 1835 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரால்

  1. அசாம் ரைபிள்ஸ் என்ன குடி படை?

கச்சார் லெவி

  1. அசாம் ரைபிள்ஸ்-ல் எத்தனை படைப்பிரிவுகள் உள்ளன ?
SEE ALSO  8TH STD HISTORY STUDY NOTES | காலங்கள் தோறும் இந்திய பெண்களின் நிலை

46

  1. அசாம் ரைபிள்ஸ் எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?

உள்துறை அமைச்சகம்

  1. SFFன் விரிவாக்கம் என்ன?

Special Frontier Force

  1. (Special Frontier Force ) துணை ராணுவ சிறப்பு படை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

1962

  1. (Special Frontier Force ) துணை ராணுவ சிறப்பு படை எதன் மேற்பார்வையில் இருந்தது ?

புலனாய்வு பணியகம்(பின்னர் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது)

  1. துணை இராணுவப் படையில் இருந்த எந்த ஐந்து படைப்பிரிவுகள் மத்திய ஆயுத காவல்படையாக மறுவரையரை செய்யப்பட்டது?

மத்திய ரிசர்வ் காவல் படை(CRPF), இந்தோ திபெத் எல்லைக் காவல்படை(ITBP), எல்லைப் பாதுகாப்புப் படை(BSF), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (CISF),சிறப்பு சேவை பணியகம்(SSB)

  1. துணை ராணுவ படையில் இருந்த ஐந்து படைப்பிரிவுகள் எப்போது முதல் உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது?

 மார்ச், 2011

  1. NCCன் விரிவாக்கம் என்ன?

 National Cadet Corps

  1. தேசிய மாணவர் படை எவற்றை உள்ளடக்கிய சேவை அமைப்பாகும்?

ராணுவப்படை ,கடற்படை மற்றும் விமானப்படை

  1. கலவரம் ,கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், மீட்பு நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அமைதியற்ற சூழ்நிலை ஆகியவற்றை திறம்பட எதிர்கொள்ளும் மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு சிறப்புப் பிரிவு எது? 

விரைவு அதிரடிப்படை (RAF)

  1. RAFன் விரிவாக்கம் என்ன?

 Rapid Action Force

  1. ITBPன் விரிவாக்கம் என்ன?

Indo-Tibetan border police

  1. அதிக உயரமான பகுதிகளில் செயல்படுவதில் சிறப்பு பயிற்சி பெற்ற படை எது?

இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை

  1. இந்திய சீன எல்லைப் பகுதிகளில் லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான எல்லை பகுதிகளை காக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்படுவது எது?

இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை

  1. இந்தியாவின் எல்லை காவல் படை என அழைக்கப்படுவது எது?

எல்லை பாதுகாப்பு படை (BSF)

  1. BSFன்ஸ விரிவாக்கம் என்ன?

 BORDER SECURITY FORCE

  1. இந்திய நில எல்லை பகுதிகளை காப்பது மற்றும் நாடுகடந்த குற்றங்களை தடுப்பது ஆகிய பணிகளை செய்வது எது?

இந்திய எல்லை காவல் படை

  1. மத்திய தொழிலக பாதுகாப்பு படை எப்போது அமைக்கப்பட்டது ?

இந்திய நாடாளுமன்ற சட்டத்தின்கீழ் 1969 மார்ச் 10

  1. CRPFன் விரிவாக்கம் என்ன?

Central industrial security force

  1. முக்கிய அரசாங்க கட்டடங்களை பாதுகாப்பது, டெல்லி மெட்ரோ பாதுகாப்பு மற்றும் விமான நிலைய பாதுகாப்பு ஆகியவை எதனுடைய முக்கிய பணிகள் ?

 மத்திய தொழிலக பாதுகாப்பு படை

  1. ராணுவ தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 15

  1. கடலோர காவல் படை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 பிப்ரவரி 1

  1. மத்திய தொழிலக பாதுகாப்பு படை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

மார்ச் 10

  1. விரைவு அதிரடிப்படை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?

அக்டோபர் 7

  1. விமானப்படை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

அக்டோபர் 8

  1. கடற்படை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

டிசம்பர் 4

  1. ஆயுதப் படைகள் கொடி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?

 டிசம்பர் 7

  1. சிறப்பு சேவை பணியகம் / சாஷாஸ்திர சீமா பால் படைப்பிரிவு எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| திருக்குறள்-1

இந்தியா நேபாளம் மற்றும் இந்தியா-பூடான் எல்லைப் பகுதிகளை பாதுகாக்கும் எல்லை ஆயுதப்படைகள்

  1. SSBன் விரிவாக்கம் என்ன?

special service bureau/ Sashastra Seema Paul

  1. இந்திய காவல்துறைக்கு துணையாக பணியாற்றும் தன்னார்வ படை எது ?

 ஊர்காவல்படை

  1. எந்த வயது உடையோர் ஊர்க்காவல் படையில் சேர தகுதி உடையவர்கள்?

 18 முதல் 50 வயது

  1. ஊர்க்காவல் படையில் சேரும் உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?

 3 முதல் 5 ஆண்டுகள்

  1. இறையாண்மை கொண்ட ஒரு நாடு உலகின் மற்ற நாடுகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளும் என்பதை வரையறுக்கும் அரசியல் இலக்குகளின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

வெளியுறவுக்கொள்கை

  1. இந்திய வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் முதன்மை சிற்பியாக இருந்தவர் யார் ?

 சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு

  1. பஞ்சசீலம் என்று அழைக்கப்பட்ட அமைதிக்கான ஐந்து கொள்கைகளை அறிவித்தவர் யார் ?

 ஜவகர்லால் நேரு

  1. பஞ்சசீலக் கொள்கை என்னென்ன?

ஒவ்வொரு நாட்டின் எல்லையையும் இறையாண்மையும் பரஸ்பரம் மதித்தல், பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை, பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல், பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல், அமைதியாக இணைந்திருத்தல்

  1. அணிசேராமை என்ற சொல் யாரால் உருவாக்கப்பட்டது?

விகே கிருஷ்ணமேனன்

  1. அணிசேரா இயக்கத்தின் நிறுவன தலைவர்கள் யார் ?

இந்தியாவின் ஜவகர்லால் நேரு , யூகோஸ்லாவியாவின் டிட்டோ எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா

  1. தென்னாபிரிக்காவில் எந்த ஆண்டு இனவெறிக் கொள்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது?

 1990

  1. இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிகச் சிறந்த வெற்றி என குறிப்பிடப்படுவது எது ?

 தென்னாப்பிரிக்காவில் இன வெறிக் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்தது

  1. இந்தியா எந்த நாடுகளுடன் பொதுவான நில எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ,நேபாளம், சீனா, பூடான் ,வங்கதேசம் மற்றும் மியான்மர்

  1. இந்தியா வடமேற்கில் எந்த நாட்டுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது?

 பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்

  1. இந்தியா வடக்கில் எந்த நாட்டுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது?

சீனா, நேபாளம் ,பூட்டான்

  1. இந்தியா கிழக்கில் எந்த நாட்டுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது?

 வங்காளதேசம்

  1. இந்தியா தூர கிழக்கில் எந்த நாட்டுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது?

மியான்மர்

  1. இந்தியா தென்கிழக்கில் எந்த நாட்டுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது?

இலங்கை

  1. இந்தியா தென்மேற்கில் எந்த நாட்டுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது?

 மாலத்தீவு

  1. இந்திய வெளியுறவுக் கொள்கையின் எந்தப் பகுதி இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்துகிறது?

இந்தியாவின்  அண்டை நாடுகளுக்கான முன்னுரிமை கொள்கை

  1. இந்திய வெளியுறவுக் கொள்கையின் எந்த பகுதி ஆசியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதோடு இந்தோ -பசிபிக் பகுதியில் நிலையான மற்றும் பன்முக சமநிலையை உறுதி செய்வது ஆகும்?

கிழக்கு செயல்பாடு என்ற கொள்கை

  1. தெற்காசிய நாடுகளுக்கு இடையே சகோதரத்துவ பிணைப்புகளை வளர்ப்பதற்காகவும் ஒத்துழைப்பு மற்றும் அமைதியான முறையில் இணைந்து இருத்தல் ஆகியவற்றிற்காகவும் என்ன கூட்டமைப்பு நிறுவப்பட்டது?

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (Saarc)

  1. சார்க் அமைப்பு எத்தனை உறுப்பு நாடுகளைக் கொண்டது?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -39|பழமொழி நானூறு

8

  1. சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் என்னென்ன?

 இந்தியா ,வங்காளதேசம், பாகிஸ்தான் ,நேபாளம், பூட்டான், இலங்கை ,மாலத்தீவு மற்றும் ஆப்கானிஸ்தான்

  1. வங்காளதேசம், சீனா, இந்தியா ,மியான்மர் பொருளாதார போக்குவரத்து எரிசக்தி மற்றும் தொலைதொடர்பு ஆகியவற்றில் எல்லை கடந்த ஒரு செழிப்பான பொருளாதார மண்டலத்தை உருவாக்க எந்தக் கூட்டமைப்பு உதவுகிறது?

 BCIM

  1. வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான முயற்சி அமைப்பு எது?

பிம்ஸ்டெக் (BIMSTEC)

  1. பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் உறுப்பு நாடுகள் என்னென்ன ?

வங்காளதேசம் ,இந்தியா ,மியான்மர், இலங்கை ,தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம்

  1. பயணிகள் சரக்கு மற்றும் எரிசக்தி மேம்பாடு ஆகியவைகளின் பரிமாற்றத்திற்கான எந்த கூட்டமைப்பில் வங்காளதேசம் ,பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன?

 BBIN


8TH POLITY STUDY NOTES |பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: