TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
- மக்களை ஆள்வதற்கு ஓர் அரசாங்கத்தாலோ அல்லது நிறுவனத்தாலோ விதிக்கப்படும் விதிகளின் அமைப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
சட்டம்
- சட்டப்படி ஒரு நாட்டின் பெயரால் நீதியை வழங்குகின்ற நீதிமன்றங்களின் அமைப்பு எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
நீதித்துறை
- பண்டைய இந்தியாவில் தனிமனிதனின் சமூகக் கடமைகளை வரையறுத்தவை எவ்வாறு அழைக்கப்பட்டது?
ஸ்மிருதி
- கன குடியரசுகளில் சட்ட அமைப்பை கொண்டிருந்த நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
குலிகா
- துக்ளக் ஆட்சி காலத்தில் என்ன சட்டங்கள் தொகுக்கப்பட்டது?
உரிமையியல் நடைமுறை சட்டங்கள்
- துக்ளக் ஆட்சி காலத்தில் தொகுக்கப்பட்ட உரிமையியல் நடைமுறை சட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
ஃபைகா-இ-பெரோஸ்-ஷாகி
- ஃபைகா-இ-பெரோஸ்-ஷாகி எந்த மொழியில் எழுதப்பட்டது?
அரபு மொழியில் எழுதப்பட்டு பின்னர் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது
- ஃபைகா-இ-பெரோஸ்-ஷாகி அவுரங்கசீப் காலத்தில் 1670 ஆம் ஆண்டு என்ன சட்டத்தின்படி மாற்றி அமைக்கப்பட்டது?
ஃபட்வா-இ-ஆலம்கிர்
- எந்த சட்டம் உச்ச நீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுத்தது ?
ஒழுங்குமுறை சட்டம் 1773
- உச்சநீதிமன்றம் முதன் முதலாக எங்கு நிறுவப்பட்டது?
வில்லியம் கோட்டை ,கல்கத்தா
- உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
சர் எலிஜா இம்ஃபே
- மதராஸ் மற்றும் பம்பாய் ஆகிய இடங்களில் உச்சநீதி மன்றங்கள் எப்போது நிறுவப்பட்டது?
முறையே 1801 மற்றும் 1824
- மதராஸ், பம்பாய் ,கல்கத்தா ஆகிய மூன்று இடங்களிலும் எந்த ஆண்டு உயர்நீதிமன்றங்கள் நிறுவப்படும் வரை உச்சநீதிமன்றமாக செயல்பட்டன?
1862
- சிவில் வழக்குகளை தீர்ப்பதற்காக என்ன நீதிமன்றத்தை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்படுத்தினார்?
ஊரக குடிமையியல் நீதிமன்றம் (மோஃபுஸில் திவானி அதாலத்/mofussil diwani adalat)
- குற்றவியல் வழக்குகளை தீர்ப்பதற்காக என்ன நீதிமன்றத்தை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்படுத்தினார்?
ஊரக குற்றவியல் நீதிமன்றம் (மோஃபுஸில் பௌஜ்தாரி அதாலத்/mofussil fauzadari adalat)
- வாரன் ஹாஸ்டிங்ஸ் ஏற்படுத்திய நீதிமன்றங்களின் மேல்முறையீட்டை விசாரிக்க என்ன நீதி மன்றங்கள் இருந்தன ?
சதர் திவானி அதாலத் (குடிமையியல் மேல்முறையீட்டு நீதிமன்றம்) சதர் நிசாமத் அதாலத் (குற்றவியல் மேல்முறையீட்டு நீதிமன்றம்)
- யார் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி முறையை மறுசீரமைததார்?
காரன்வாலிஸ்
- யாருடைய ஆட்சியில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டு கொல்கத்தா, டாக்கா ,மூர்ஷிதாபாத் ,மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன?
காரன்வாலிஸ்
- காரன்வாலிஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் யாருடைய ஆட்சியில் நீக்கப்பட்டது?
வில்லியம் பெண்டிங்
- நாட்டின் மிகப் பழமையான உயர்நீதிமன்றம் எது?
கல்கத்தா உயர் நீதிமன்றம்
- கல்கத்தா உயர் நீதிமன்றம் எப்போது நிறுவப்பட்டது?
1862
- நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றம் எது ?
அலகாபாத் உயர் நீதிமன்றம்
- சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிசாமத் அதாலத் ஆகியன எங்கு நிறுவப்பட்டன?
அலகாபாத்
- யாரால் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம் இந்திய சட்டங்களை நடைமுறைப் படுத்தியது ?
மெக்காலே
- மெக்காலே ஆணையத்தின் அடிப்படையில் எந்த ஆண்டு உரிமையியல் நடைமுறை சட்டம் உருவாக்கப்பட்டது?
1859
- மெக்காலே ஆணையத்தின் அடிப்படையில் எந்த ஆண்டு இந்திய தண்டனை சட்டம் உருவாக்கப்பட்டது?
1860
- மெக்காலே ஆணையத்தின் அடிப்படையில் எந்த ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டம் உருவாக்கப்பட்டது?
1861
- எந்த ஆண்டு இந்திய அரசு சட்டம் கூட்டாட்சி நீதிமன்றங்களை உருவாக்கியது?
1935
- எந்த சட்டத்தின் மூலம் பிரிவு கவுன்சில் நீதி வரையறை நீக்கப்பட்டது?
1949 ஆம் ஆண்டு பிரிவு கவுன்சில் நீதி வரையறை ஒழிப்பு சட்டம்
- இந்திய உச்ச நீதிமன்றம் எப்போது தொடங்கப்பட்டது?
ஜனவரி 28, 1950
- எந்த சட்டப் பிரிவின்படி 1966 ஆம் ஆண்டு நடைமுறை மற்றும் விதிமுறைகள் உச்சநீதிமன்ற விதிகள் ஒழுங்குபடுத்த ஏற்படுத்தப்பட்டன ?
சட்டப்பிரிவு 145
- எந்த அரசியலமைப்பு சட்ட பிரிவுகள் இந்திய உச்சநீதிமன்றத்தின் அமைப்பு மற்றும் அதிகார வரம்பினை வகுத்து கூறுகிறது?
சட்டப்பிரிவுகள் 124 முதல் 147 வரை
- ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்த முதல் அரசியல் தத்துவஞானி யார்?
மாண்டெஸ்கியூ
- மாண்டெஸ்கியூ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பிரெஞ்சு தத்துவஞானி
- மாவட்ட அளவில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மாவட்ட நீதிமன்றங்கள்
- குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அமர்வு நீதிமன்றங்கள்
- கிராம அளவில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை எந்த நீதிமன்றம் கையாளுவது ?
பஞ்சாயத்து நீதிமன்றங்கள்
- நில ஆவணங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது எது?
வருவாய் நீதிமன்றங்கள்
- விரைவான நீதியை வழங்க அமைக்கப்பட்ட அமைப்பு எது?
லோக் அதாலத் மக்கள் நீதிமன்றங்கள்
- லோக் அதாலத்தில் எத்தனை நபர்கள் கொண்ட அமர்வு தலைமை வகிக்கும்?
ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு சமூகப் பணியாளர், ஒரு வழக்கறிஞர் மொத்தம் மூன்று நபர்கள்
- முதல் லோக் அதாலத் எப்போது எங்கு நடைபெற்றது?
1982 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத்
- விரைவு நீதிமன்றங்கள் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
2000
- கிராமப்புற மக்களுக்காக சட்ட உதவி மற்றும் சேவைகளை வழங்குவதற்காக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூட்டு முயற்சியுடன் எதை தொடங்கியது ?
தொலைதூர சட்ட முன்னெடுப்பு(tele law initiative)
- குடும்பம் தொடர்பான சட்ட விவகாரங்களை எந்த நீதிமன்றம் கையாளும்?
குடும்ப நீதிமன்றங்கள்
- கிராமப்புற மக்களுக்கு நீதி அமைப்பு பற்றி அதிக விழிப்புணர்வை உருவாக்கி அவர்கள் இடங்களிலேயே நீதியை வழங்க வகை செய்யும் நீதிமன்றம் எது?
நடமாடும் நீதிமன்றங்கள்
- இ-நீதிமன்றங்கள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
2005
- நீதித் துறையின் செயல்பாடு எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
தகராறுகளை தீர்வு செய்தல் ,நீதிமன்ற மறு ஆய்வு அதிகாரம் ,சட்டத்தை நிலைநிறுத்தல் மற்றும் அடிப்படை உரிமைகளை செயல்படுத்துதல்
- தேசிய சட்ட சேவைகள் அதிகாரம் (NALSA) எப்போது அமைக்கப்பட்டது?
1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகார சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது
- இந்தியாவின் மிக உயர்ந்த நீதிமன்றம் எது?
உச்ச நீதிமன்றம்
- உச்ச நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது?
புதுடெல்லி
- இந்திய அரசியலமைப்பின் படி எது சட்டத்தின் பாதுகாவலராகவும் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகவும் உள்ளது?
இந்திய உச்ச நீதிமன்றம்
- உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புகள் என்னென்ன?
முதன்மை அதிகார வரம்பு ,மேல்முறையீட்டு அதிகார வரம்பு ,ஆலோசனை அதிகார வரம்பு ,நீதிப்பேராணை அதிகார வரம்பு ,ஆவண நீதிமன்றம், சிறப்பு அதிகாரங்கள்
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த சட்டப் பிரிவின்படி உச்சநீதிமன்றம் நீதிப்பேராணை வழங்குகின்றது ?
சட்டப்பிரிவு 32
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த சட்டப் பிரிவின்படி உயர்நீதிமன்றம் நீதிப்பேராணையை வழங்குகின்றது ?
சட்டப்பிரிவு 226
- மாநிலங்களின் மிக உயர்ந்த நீதிமன்றம் எது?
உயர் நீதிமன்றம்
- “நமது நீதித்துறை நிர்வாகத்திடம் இருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும் அதேவேளையில் திறமை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. மேலும் வினா என்னவென்றால் எப்படி இந்த இரண்டு நோக்கங்களையும் பாதுகாக்க முடியும் என்பதே ஆகும்” எனக் கூறியவர் யார் ?
டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
- இந்தியாவில் எத்தனை வகையான சட்ட பிரிவுகள் உள்ளன?
இரண்டு: உரிமையியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்கள்
8TH POLITY STUDY NOTES |நீதித்துறை| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services