- ஒரு நாட்டின் அரசாங்கத்தை பற்றியும் ,மக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் படிக்கும் இயல் எது?
குடிமையியல்
- குடிமகன்(Citizen) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
இலத்தீன் (அதன் பொருள் பண்டைய ரோமாபுரியில் இருந்த நகர நாடுகளில் குடியிருப்பாளர் என்பதாகும்)
- ஒரு அரசால் வழங்கப்பட்ட சட்ட உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிப்பவரும் அதேவேளையில் நாட்டின் சட்டங்களை மதித்து நடப்பவரும், அவருக்கான கடமைகளை நிறைவேற்றுபவருமே எவ்வாறு அழைக்கப்படுவர்?
அந்த நாட்டின் குடிமகன்
- ஒரு குடிமகன் அவர் விரும்பும் காலம் வரையில் அந்நாட்டில் சட்டப்படியாக வசிக்கும் உரிமையை வழங்குதல் எவ்வாறு அழைக்கப்படும்?
குடியுரிமை
- குடியுரிமை எத்தனை வகைப்படும்?
இரண்டு: இயற்கை குடியுரிமை, இயல்பு குடியுரிமை
- இந்திய குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், நீக்குதலையும் பற்றிய விதிகளை எந்த சட்டம் கூறுகிறது?
இந்திய குடியுரிமை சட்டம், 1955
- 1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டம் குடியுரிமை பெறுவதற்கான எத்தனை வழிமுறைகளை பரிந்துரைக்கிறது?
ஐந்து: பிறப்பால் குடியுரிமை பெறுதல் ,வம்சாவளியால் குடியுரிமை பெறுதல் ,பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல், இயல்பு குடியுரிமை ,பிரதேசங்களை இணைத்தல் மூலம் பெறும் குடியுரிமை
- எந்த காலகட்டம் வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவராக இருப்பினும் அவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர் ?
ஜனவரி 26 ,1950 முதல் ஜூலை 1987 வரை
- எதற்குப் பின் இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் அந்த சமயத்தில் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்?
ஜூலை 1, 1987 மற்றும் அதற்குப் பின்
- எதற்குப் பின் இந்தியாவில் பிறந்தவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர்?
டிசம்பர் 3 ,2004 மற்றும் அதற்குப் பின் இந்தியாவில் பிறந்தவர்கள்
- எதற்கு முன்னர் வெளிநாட்டில் பிறந்து இருந்தாலும் அவருடைய தந்தை இந்திய குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அவர் வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமையை பெறுகிறார்?
ஜனவரி 26, 1950 முதல் டிசம்பர் 10 ,1992 வரை
- எதற்குப் பின்னர் வெளிநாட்டில் பிறந்தவர்களின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் அந்த சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால் அவர் இந்திய குடியுரிமை(வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்) பெறுகிறார் ?
டிசம்பர் 10 ,1992 மற்றும் அதற்குப் பின்னர்
- டிசம்பர் 3 2004 நாள் முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை எந்த காலகட்டத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லையெனில் இந்திய வம்சாவளி குடிமகனாக முடியாது ?
ஒரு வருடத்திற்குள்
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நபர் எந்த ஒரு நாட்டில் வசித்தாலும் அல்லது பிரிக்கப்படாத இந்தியாவிற்கு வெளிப்பகுதியில் வசிப்பவராக இருந்தாலும் எதன் மூலம் குடியுரிமை பெறலாம்?
பதிவு செய்தல் மூலம்
- இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவராக இருக்க வேண்டும்?
ஏழு ஆண்டுகள்
- எந்த ஒரு நாட்டிலும் குடிமகனாக இல்லாத ஓர் இந்தியர் அவர் வசிக்கும் நாட்டின் குடிமகன் ஆவதை தடுக்கும் பொருட்டு எந்த குடியுரிமை வழங்கப்படுகிறது?
இயல்பு குடியுரிமை
- வெளிநாட்டு குடியுரிமையை ஒருவர் துறக்கும் பட்சத்தில் அவருக்கு என்ன குடியுரிமை வழங்கப்படுகிறது?
இயல்பு குடியுரிமை
- ஒருவர் இந்தியாவில் வசிக்கும் பட்சத்தில் அல்லது இந்திய அரசுப் பணியில் இருக்கும் பட்சத்தில் அல்லது ஆண்டு முழுவதும் இந்தியாவில் தங்கி இருக்கும் பட்சத்தில் எந்த குடியுரிமை பெறுகிறார்?
இயல்பு குடியுரிமை
- இயல்பு குடியுரிமையைப் பெற தகுதியுடையவர் யார் ?
நல்ல பண்புகளையும் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் போதிய அறிவினையும் பெற்றவர்
- பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்த பொழுது இந்திய அரசு அம்மக்களுக்கு எந்த ஆண்டு இந்திய குடியுரிமைக்காண ஆணையை வழங்கியது?
1962
- குடியுரிமை இழப்பு பற்றி எத்தனை வழிமுறைகளை இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது?
மூன்று வழிமுறைகள்
- குடியுரிமை இழப்பு பற்றி இந்திய அரசமைப்பின் எந்த பகுதிகள் குறிப்பிடுகின்றன?
இந்திய அரசமைப்பு சட்டத்தின் இரண்டாவது பகுதியில் 5 முதல் 11 வரையிலான விதிகள்
- குடியுரிமையை இழக்கும் மூன்று வழிகள் என்னென்ன?
குடியுரிமையை துறத்தல் (தானாக முன்வந்து குடியுரிமையை துறத்தல்), குடியுரிமை முடிவுக்கு வருதல் (சட்டப்படி நடைபெறுதல்),குடியுரிமை மறுத்தல் (கட்டாயமாக முடிவுக்கு வருதல்)
- ஒருவர் வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்திய குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது இது எந்த வகை குடியுரிமை இழப்பு ?
குடியுரிமையை துறத்தல் (தானாக முன்வந்து குடியுரிமையை துறத்தல்)
- ஓர் இந்தியக் குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரது இந்திய குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது.இது எந்த வகை குடியுரிமை இழப்பு?
குடியுரிமை முடிவுக்கு வருதல் (சட்டப்படி நடைபெறுதல்)
- மோசடி ,தவறான பிரதிநிதித்துவம் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் ஆகியவற்றின் மூலம் இந்தியக் குடியுரிமையை பெறும் ஒருவரின் குடியுரிமையை இந்திய அரசு ஓர் ஆணை மூலம் இழக்கச் செய்கிறது.இது எந்த வகை குடியுரிமை இழப்பு?
குடியுரிமை மறுத்தல் (கட்டாயமாக முடிவுக்கு வருதல்)
- பூர்வீகம் பிறப்பு மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் நிலை என்ன
நாட்டுரிமை
- சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி ஒருவருக்கு வழங்கப்படுவது என்ன ?
குடியுரிமை
- குடியுரிமை மற்றும் நாட்டுரிமை இதில் எதை ஒருவரால் மாற்ற முடியாது ?
நாட்டுரிமை
- இந்திய அரசமைப்பு சட்டம் இந்தியர்களுக்கு என்ன குடியுரிமையை வழங்குகிறது ?
ஒற்றைக் குடியுரிமை
- எந்த நாடுகளில் இரட்டைக்குடியுரிமை வழங்கப்படுகிறது ?
அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய கூட்டாட்சி அமைப்பு கொண்டுள்ள நாடுகள்
- முன்னுரிமை வரிசைப்படி யார் நாட்டின் முதல் குடிமகனாவார்?
குடியரசுத் தலைவர்
- இந்திய கடவுச் சீட்டினை பெற்று வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் எவ்வாறு அழைக்கப்படுவர்?
வெளிநாடு வாழ் இந்தியர்(NRI)
- NRIன் விரிவாக்கம் என்ன?
Non resident Indian
- இந்தியக் குடியுரிமை உடைய மூதாதையர்களை கொண்ட வெளிநாட்டில் குடியுரிமை பெற்று இருக்கும் (பாகிஸ்தான் ,வங்காளதேசம், ஸ்ரீலங்கா, பூடான் ,ஆப்கானிஸ்தான், சீனா ,நேபாளம் நீங்கலாக) ஒருவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
இந்திய பூர்வீகக் குடியினர் (PIO)
- PIOன் விரிவாக்கம் என்ன?
Person on Indian origin
- PIO முறை எப்போது இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு OCIமுறையுடன் இணைக்கப்பட்டுள்ளது?
ஜனவரி 9 2015 முதல்
- இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டு குடிமகன் காலவரையறையின்றி இந்தியாவில் வசிப்பதற்கும் பணி செய்வதற்கும், என்ன அட்டையை பெறுகிறார்?
வெளிநாட்டு குடியுரிமையைக் கொண்ட இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவர் (overseas citizen of India card holder)
- இந்திய அரசமைப்பின் எந்த சட்டத் திருத்தத்தின் படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளது?
42-வது சட்டத்திருத்தம்
- ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களை எத்தனை வகையினராகப் பிரிக்கலாம்?
இரண்டு: அந்நியர்(Alien), குடியேறியவர்(immigrant)
- ஒரு நாட்டில் வசிக்கும் குடிமகனாக அல்லாத அனைவரும் எவ்வாறு அழைக்கப்படுவர்?
அந்நியர்
- ஒரு நாட்டில் எவ்வித தடையும் இன்றி நிரந்தரமாக வசிப்பதற்கும் பணி புரிவதற்கும் உரிமை பெறும் அந்நியர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
குடியேறியவர்
- மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகை புரிந்த தினம் இந்தியாவில் என்ன தினமாக கொண்டாடப்படுகிறது?
வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (பிரவாசி பாரதிய தினம்)
- வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (பிரவாசி பாரதிய தினம்) எப்போது இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் கொண்டாடப்படுகிறது?
(இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை) ஜனவரி 9ஆம் நாள்
8TH POLITY STUDY NOTES |குடிமக்களும் குடியுரிமையும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services