- ஒரு தனிமத்தின் அனைத்து பண்புகளையும் கொண்ட மிகச்சிறிய துகள் எவ்வாறு அழைக்கப்படும்?
அணு
- ஒரே தனிமத்தின் அணுக்கள் அல்லது வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் இணைந்து எவற்றை உருவாக்குகின்றன ?
மூலக்கூறுகள்
- மின்சுமை பெற்றுள்ள அணுக்கள் அல்லது அணுக்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அயனிகள்
- நிலம் ,நீர் ,காற்று, மற்றும் நெருப்பை குறிக்க வடிவியல் உருவங்களை பயன்படுத்தியவர்கள் யார் ?
பண்டைய கிரேக்கர்கள்
- ஜான் டால்டன் எந்த ஆண்டு தனிமங்களை பல்வேறு படங்களை கொண்டு குறித்தார்?
1808
- 1813 ஆம் ஆண்டு தனிமங்களை குறிப்பதற்கு படங்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தும் முறையை உருவாக்கியவர் யார்?
ஜான் ஜேகப் பெர்சில்லியஸ்
- இலத்தீன் அல்லது கிரேக்க பெயர்களின் அடிப்படையில் எத்தனை தனிமங்கள் பெயரிடப்பட்டுள்ளன?
11 தனிமங்கள்
- சோடியத்தின் இலத்தீன் பெயர் என்ன?
நேட்ரியம்
- பாதரசத்தின் இலத்தீன் பெயர் என்ன ?
ஹைட்ரார்ஜிரம்
- பொட்டாசியம் இலத்தீன் பெயர் என்ன ?
கேலியம்
- காரீயத்தின் இலத்தீன் பெயர் என்ன ?
பிளம்பம்
- இரும்புவின் இலத்தீன் பெயர் என்ன?
ஃபெர்ரம்
- வெள்ளீயம் இலத்தீன் பெயர் என்ன?
ஸ்டெனம்
- தாமிரம் இலத்தீன் பெயர் என்ன?
குப்ரம்
- ஆண்டிமணி இலத்தீன் பெயர் என்ன?
ஸ்டிபியம்
- வெள்ளி இலத்தீன் பெயர் என்ன?
அர்ஜெண்டம்
- டங்க்ஸ்டன் இலத்தீன் பெயர் என்ன?
உல்ஃப்ரம்
- தங்கம் இலத்தீன் பெயர் என்ன?
ஆரம்
- ஒரு நாட்டின் பொருளாதாரம் எதனைக் கொண்டு அளவிடப்படுகிறது ?
அந்நாட்டில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அளவு
- பொதுவாக பயன்படுத்தப்படும் உலோகங்கள் என்னென்ன?
இரும்பு ,தாமிரம் ,வெள்ளி, தங்கம் ,காரீயம் ,துத்தநாகம் ,அலுமினியம், மக்னீசியம், நிக்கல் ,குரோமியம் மற்றும் பாதரசம்
- பொதுவாக பயன்படுத்தப்படும் அலோகங்கள் என்னென்ன?
நைட்ரஜன் ,ஆக்சிஜன் ,ஹைட்ரஜன் ,கார்பன், கந்தகம் ,பாஸ்பரஸ் மற்றும் குளோரின்
- உலகப் பண்ன்புடனோ, அலோகப்பண்புடனோ ஒத்துப்போகாத தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அரை உலோகங்கள் அல்லது உலோகப்போலிகள்
- எந்த உலோகம் அறை வெப்ப நிலையில் திரவ நிலையில் இருக்கும்?
பாதரசம்
- எந்த உலோகங்கள் அறை வெப்பநிலையிலோ அல்லது அறை வெப்ப நிலையை விட சற்று அதிக வெப்பநிலையிலோ திரவமாக மாறிவிடுகின்றன ?
சீசியம், ருபீடியம், பிரான்சியம், காலியம்
- எந்த உலோகத் தனிமங்கள் கத்தியால் வெட்டுமளவுக்கு மென்மையானவை?
சோடியம் மற்றும் பொட்டாசியம்
- எந்த உலோகத் தனிமம் கண்ணாடியில் சிராய்ப்பு ஏற்படுத்தும் அளவிற்கு மிகவும் கடினமானது?
ஆஸ்மியம்
- எந்த உலோகத்தை தவிர மற்ற அனைத்து உலோகங்களும் பளபளப்பானவை?
கால்சியம்
- எந்த உலோக தனிமங்கள் குறைந்த அடர்த்தியை பெற்றுள்ளது ?
சோடியம் மற்றும் பொட்டாசியம்
- எந்த உலோகத் தனிமங்களைத்தவிர மற்ற உலோகங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலையை பெற்றுள்ளது?
சோடியம் ,பொட்டாசியம்,பாதரசம் மற்றும் காலியம்
- பொதுவாக உலோகங்கள் திரிபுக்கு உட்படும்போது உடைந்து விடாமல் மீளும் பண்பை பெற்றுள்ளன. இந்த பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
திரிபு தாங்கும் பண்பு அல்லது இழுவிசை வலிமை
- எந்த உலோக தனிமங்கள் திரிபு தாங்கும் பண்பிலிருந்து மாறுபட்டுக் காணப்படுகின்றன?
துத்தநாகம் ,ஆர்செனிக் மற்றும் ஆண்டிமணி
- எந்த உலோக தனிமங்கள் மிகச் சிறந்த மின்கடத்திகள் ஆகும்?
வெள்ளியும் ,தாமிரமும்
- எந்த உலோக தனிமங்கள் அரிதிற்கடத்திகள் ?
பிஸ்மத் மற்றும் டங்க்ஸ்டன்
- பளபளப்பற்ற ,அதிகக் கடினத் தன்மையோ, அதிக மென்மைத்தன்மையோ அற்ற தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அலோகங்கள்
- அனைத்து வாயுக்களும் என்ன பண்புடயவை?
அலோகங்கள்
- இயல்பான வெப்ப நிலையில் அலோகங்கள் என்ன நிலையில் காணப்படுகிறது?
திண்மம், திரவம் ,வாயு ஆகிய மூன்று நிலைகளிலும்
- எந்த அலோகத்தை தவிர மற்ற அனைத்தும் கடினத் தன்மை அற்றவை?
வைரம்
- எந்த இரு அலோகங்களைத் தவிர மற்ற அனைத்தும் பளபளப்பான தோற்றத்தை கொண்டுள்ளன?
கிராஃபைட் மற்றும் அயோடின்
- எந்த அலோத்தைத் தவிர மற்ற அனைத்து அலோகங்களும் மென்மையான, அடர்த்தி குறைந்தவை?
வைரம்
- எந்த அலோகங்கள் தவிர மற்ற அனைத்தும் குறைந்த உருகுநிலை கொதிநிலையை கொண்டவை?
கார்பன், சிலிக்கன் ,போரான்
- எந்த ஒன்றை தவிர மற்ற அலோகங்கள் அனைத்தும் திரிபுதாங்கும் பண்பு பெற்றிருப்பது இல்லை ?
கார்பனின் ஒரு வடிவமான கார்பன் இழை
- எந்த அலோத்தைத் தவிர மற்ற அலோகங்கள் அனைத்தும் கம்பியாக மாறும் தன்மை அற்றவை?
கார்பனின் ஒரு வடிவமான கார்பன் இழை
- எந்த ஒன்றை தவிர மற்ற அலோகங்கள் பொதுவாக அரிதிற்கடத்திகள்?
கார்பனின் ஒரு வடிவமாகிய கிராஃபைட்(கிராஃபைட் மின்சாரத்தை கடத்தும்)
- இரும்பு எதற்கு பயன்படுகிறது ?
பாலங்கள் கட்ட, எந்திரங்களின் பகுதி பொருள்கள், இரும்பு தகடுகள் துண்டுகள் போன்றவற்றை தயாரிக்க
- தாமிரம் எதற்கு பயன்படுகிறது ?
மின்கம்பிகள் ,சிலைகள் ,நாணயங்கள் தயாரிக்க
- தங்கம் மற்றும் வெள்ளி எவற்றிற்கு பயன்படுகிறது ?
அலங்கார நகைகள் தயாரிக்கவும் ,புகைப்படத் துறையிலும் பயன்படுகிறது
- பாதரசம் எங்கு பயன்படுத்தப்படுகிறது?
வெப்பநிலைமானிகள் மற்றும் பாராமானிகள்
- அலுமினியம் எவற்றில் பயன்படுகிறது?
மின்கம்பிகள் ,வானூர்தி மற்றும் ராக்கெட்டின் பாகங்கள் தயாரிக்க
- காரீயம் எதற்கு பயன்படுகிறது?
தானியங்கியின் மின்கலங்களை தயாரிக்கவும் ,எக்ஸ் கதிர் எந்திரங்கள் தயாரிக்கவும்
- கந்தகம் எவற்றில் பயன்படுகிறது?
துப்பாக்கி தூள் தயாரிக்க, ரப்பரை கெட்டிப்படுத்த
- பாஸ்பரஸ் எதற்கு பயன்படுகிறது?
தீப்பெட்டி தயாரிக்கவும், எலி மருந்து தயாரிக்கவும்
- நைட்ரஜன் எதற்கு பயன்படுகிறது?
அமோனியா தயாரிக்க
- நிறம் நீக்கும் பொருளாகவும் குடிநீரில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கும் பொருளாகவும் பயன்படும் அலோகம் எது ?
குளோரின்
- ராக்கெட் எரிபொருளாக பயன்படும் அலோகம் எது ?
ஹைட்ரஜன்
- உலோகப் பண்புகளையும் அலோகப் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
உலோகப்போலிகள்
- எந்த உலோகப்போலிகள் குறிப்பிட்ட சூழ்நிலையில் மின்சாரத்தை கடத்துகின்றன?
சிலிக்கான் ,ஜெர்மானியம்
- உலோகப்போலிகளின் இயற்பியல் பண்புகள் எதனை ஒத்திருக்கின்றன?
உலோகங்கள்
- உலோகப்போலிகளின் வேதியியல் பண்புகள் எதனை ஒத்திருக்கின்றன?
அலோகங்கள்
- சிலிக்கான் எங்கு பயன்படுத்தப்படுகிறது ?
மின்னணு கருவிகள்
- போரான் எங்கு பயன்படுத்தப்படுகிறது?
பட்டாசு தொழிற்சாலைகளிலும், ராக்கெட் எரிபொருளினைப் பற்ற வைக்கும் பொருளாகவும்
- சேர்மங்களின் பகுதி பொருள்கள் பெறப்படும் மூலத்தின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
இரண்டு:கனிமச் சேர்மங்கள் &கரிமச் சேர்மங்கள்
- பாறைகள் தாதுக்கள் போன்ற உயிரற்ற பொருள்களிலிருந்து கிடைக்கப்பெறும் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
கனிமச் சேர்மங்கள்
- தாவரங்கள் விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களில் இருந்து கிடைக்கும் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கரிமச் சேர்மங்கள்
- சிலிக்கா சேர்மத்தின் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
சிலிக்கான் ஆக்சிஜன்
- சோடியம் ஹைட்ராக்சைடு (எரி பொட்டாஷ்) சேர்மத்தின் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
பொட்டாசியம் ஹைட்ரஜன் ஆக்சிஜன்
- சோடியம் ஹைட்ராக்சைடு (எரிசோடா) சேர்மத்தின் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
சோடியம் ஹைட்ரஜன் ஆக்சிஜன்
- தாமிர சல்பேட் சேர்மத்தின் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
தாமிரம் கந்தகம் ஆக்சிஜன்
- துத்தநாக கார்பனேட் (காலமைன்) சேர்மத்தின் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
துத்தநாகம் கார்பன் ஆக்சிஜன்
- நீர் சேர்மத்தின் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
ஹைட்ரஜன் ஆக்சிஜன்
- ஹைட்ரோ குளோரிக் அமிலம் சேர்மத்தின் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
ஹைட்ரஜன் குளோரின்
- நைட்ரிக் அமிலம் சேர்மத்தின் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
ஹைட்ரஜன் நைட்ரஜன் ஆக்சிஜன்
- கந்தக அமிலம் சேர்மத்தின் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
ஹைட்ரஜன் கந்தகம் ஆக்சிஜன்
- அசிட்டிக் அமிலம் (வினிகர்) சேர்மத்தின் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
கார்பன் ஹைட்ரஜன் ஆக்சிஜன்
- கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு சேர்மத்தின் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
கார்பன் ஆக்சிஜன்
- கந்தக டை ஆக்சைடு சேர்மத்தின் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
கந்தகம் ஆக்சிஜன்
- மீத்தேன் சேர்மத்தின் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
கார்பன் ஹைட்ரஜன்
- நைட்ரஜன் ஆக்சைடு சேர்மத்தின் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
நைட்ரஜன் ஆக்சிஜன்
- அமோனியா சேர்மத்தின் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
நைட்ரஜன், ஹைட்ரஜன்
- நீரின வேதிப்பெயர் என்ன?
நீர்
- நீரில் உள்ள பகுதி பொருட்கள் என்னென்ன?
ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
- நீரின் பயன்கள் என்னென்ன?
குடிநீராக மற்றும் கரைப்பானாக
- சாதாரண உப்பின் வேதிப்பெயர் என்ன?
சோடியம் குளோரைடு
- சாதாரண உப்பில் உள்ள பகுதி பொருட்கள் என்னென்ன?
சோடியம் மற்றும் குளோரின்
- சாதாரண உப்பின் பயன்கள் என்னென்ன?
அன்றாட உணவில் மற்றும் மீன் இறைச்சி போன்றவற்றை கெடாமல் உணவு பாதுகாப்பானாகவும் பயன்படுகிறது
- சர்க்கரையின் வேதிப்பெயர் என்ன?
சுக்ரோஸ்
- சர்க்கரையில் உள்ள பகுதி பொருட்கள் என்னென்ன?
கார்பன் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
- சர்க்கரையின் பயன்கள் என்னென்ன?
இனிப்புகள் மிட்டாய்கள் பழச்சாறுகள் தயாரிக்க
- ரொட்டி சோடா வேதிப்பெயர் என்ன?
சோடியம் பை கார்பனேட்
- ரொட்டி சோடாவில் உள்ள பகுதி பொருட்கள் என்னென்ன?
சோடியம் ஹைட்ரஜன் கார்பன் மற்றும் ஆக்சிஜன்
- ரொட்டி சோடாவின் பயன்கள் என்னென்ன?
தீயணைக்கும் சாதனங்களில் ,பேக்கிங் பவுடர் தயாரிப்பில் ,கேக் ரொட்டி தயாரிப்பில் பயன்படுகிறது
- சலவைச் சோடா வேதிப்பெயர் என்ன?
சோடியம் கார்பனேட்
- சலவை சோடாவில் உள்ள பகுதி பொருட்கள் என்னென்ன?
சோடியம் கார்பன் மற்றும் ஆக்சிஜன்
- சலவை சோடாவின் பயன்கள் என்னென்ன?
சோப்பில் தூய்மையாக்கியாகவும், கடின நீரை மென்நீராகவும் பயன்படுகிறது
- சலவைத்தூள் வேதிப்பெயர் என்ன?
கால்சியம் ஆக்சி குளோரைடு
- சலவைத்தூளில் உள்ள பகுதி பொருட்கள் என்னென்ன?
கால்சியம் ஆக்ஸிஜன் மற்றும் குளோரின்
- சலவைத்தூளின் பயன்கள் என்னென்ன?
சலவைத் தொழிலில் வெளிப்பானகவும் கிருமிநாசினியாகவும், குடிநீர் சுத்திகரிப்பிலும் பயன்படுகிறது
- சுட்ட சுண்ணாம்பு வேதிப்பெயர் என்ன?
கால்சியம் ஆக்சைடு
- சுட்ட சுண்ணாம்புவில் உள்ள பகுதி பொருட்கள் என்னென்ன?
கால்சியம் மற்றும் ஆக்சிஜன்
- சுட்ட சுண்ணாம்பு பயன்கள் என்னென்ன?
சிமெண்ட் மற்றும் கண்ணாடி தயாரிப்பில் பயன்படுகிறது
- நீற்றிய சுண்ணாம்பு வேதிப்பெயர் என்ன?
கால்சியம் ஹைட்ராக்சைடு
- நீற்றிய சுண்ணாம்புவில் உள்ள பகுதி பொருட்கள் என்னென்ன?
கால்சியம், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
- நீற்றிய சுண்ணாம்பின்ஸபயன்கள் என்னென்ன?
சுவர்களில் வெள்ளை அடிப்பதற்கு பயன்படுகிறது
- சுண்ணாம்புக்கல் வேதிப்பெயர் என்ன?
கால்சியம் கார்பனேட்
- சுண்ணாம்புக்கல்லில் உள்ள பகுதி பொருட்கள் என்னென்ன?
கால்சியம் கார்பன் மற்றும் ஆக்சிஜன்
- சுண்ணாம்பு கல்லின் பயன்கள் என்னென்ன?
சுண்ணக்கட்டி தயாரிக்க பயன்படுகிறது
- தாமிர சல்பேட் பொதுப் பெயர் என்ன?
மயில்துத்தம்
- இரும்பு சல்பேட் அல்லது பெர்ரஸ் சல்பேட் பொதுப்பெயர் என்ன?
பச்சை துத்தம்
- பொட்டாசியம் நைட்ரேட் பொதுப் பெயர் என்ன?
சால்ட் பீட்டர்
- கந்தக அமிலத்தின் பொது பெயர் என்ன ?
விட்டிரியால் எண்ணெய்
- கால்சியம் சல்பேட் பொதுப்பெயர் என்ன?
ஜிப்சம்
- கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட் பொதுப்பெயர் என்ன ?
பாரிஸ் சாந்து
- பொட்டாசியம் குளோரைடு பொதுப்பெயர்?
மூரியேட் ஆஃப் பெட்டாஷ்
8TH PHYSICS STUDY NOTES |பருப்பொருள்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services