- இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ தூண்டப்பட்ட முறையில் உள்ள காந்தத்தின் கவரும் பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காந்தவியல்
- கிமு 200 க்கு முன்பே காந்தத்தின் பண்புகளை அறிந்து வைத்திருந்தவர்கள் யார்?
சீனர்கள்
- காந்தங்கள் எத்தனை வகைகளாக வகைப்படுத்தப் படுகின்றன?
இரண்டு:இயற்கை காந்தங்கள், செயற்கை காந்தங்கள்
- வலிமையான இயற்கை காந்தம் எது ?
மேக்னடைட் என்றழைக்கப்படும் காந்தக்கல்
- மேக்னடைட் என்பது எதனுடைய தாது?
இரும்பு
- பிர்ஹோடைட்,பெர்ரைட்,கூலூம்பைட் போன்ற கனிமங்கள் எதற்கு எடுத்துக்காட்டு ?
இயற்கை காந்தங்கள்
- இரும்பின் தாதுக்கள் எத்தனை வகைப்படும் ?
மூன்று: ஹேமடைட்,மேக்னடைட்,சிடரைட்
- ஹேமடைட் தாதுவில் இருந்து எவ்வளவு சதவீதம் உள்ளது?
69%
- மேக்னடைட் தாதுவில் இரும்பு எவ்வளவு சதவீதம் உள்ளது?
72.4 %
- சிடரைட் தாதுவில் இரும்பின் சதவீதம் எவ்வளவு?
48.2%
- மேக்னடைட் என்ன வகையான தாது?
ஆக்சைடு
- பிர்ஹோடைட் என்ன வகையான தாது?
சல்பைடு
- செயற்கை காந்தங்களுக்கு எடுத்துக்காட்டுகள் எவை?
சட்ட காந்தங்கள்,U- வடிவ காந்தங்கள் ,குதிரைலாட வடிவங்கள், உருளை வடிவ காந்தங்கள் , வட்டு வடிவ காந்தங்கள், வளைய வடிவ காந்தங்கள் மற்றும் மின் காந்தங்கள்
- செயற்கை காந்தங்கள் பொதுவாக என்ன பொருட்களால் உருவாக்கப்படுகின்றன?
இரும்பு ,நிக்கல் ,கோபால்ட், எஃகு மற்றும் சில
- எவற்றின் உலோகக் கலவையை பயன்படுத்தி செயற்கை காந்தங்களை உருவாக்க முடியும்?
நியோடினியம் மற்றும் சமாரியம்
- காந்தவியல் உருவாக அடித்தளமிட்டவர் யார் ?
வில்லியம் கில்பர்ட்
- பூமி மிகப்பெரிய காந்தம் என்பதை வலியுறுத்தியவர் யார்?
வில்லியம் கில்பர்ட்
- வில்லியம் கில்பர்ட் எப்போது பிறந்தார்?
மே 24 ,1544
- முதன்முதலில் காந்தக்கல் குறித்த முறையான ஆய்வினை மேற்கொண்டவர் யார்?
வில்லியம் கில்பர்ட்
- ஒரு காந்தத்தின் எந்த பகுதியில் கவரும் பண்பு அதிகளவில் இருக்கும்?
முனை பகுதிகள்
- காந்த விசையை அளப்பதற்கான அலகு என்ன?
டெஸ்லா அல்லது காஸ்
- ஒரு டெஸ்லா என்பது எவ்வளவு காஸ்?
10000 காஸ்
- காந்தத்தால் கவரப்படும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காந்தப் பொருட்கள்
- காந்தத்தால் கவரப்படாத பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காந்தம் அல்லாத பொருட்கள்
- காந்தப் பொருள்களை எவ்வாறு வகைப்படுத்தலாம் ?
வன்காந்தப் பொருள்கள் மற்றும் மென்மையான காந்தப் பொருள்கள்
- எந்த பொருள்களை காந்தமாக்க வலிமையான காந்த புலம் தேவைப்படுகிறது?
வன் காந்த பொருள்கள்
- காந்த புலத்தில் காந்தப் பொருள்கள் வைக்கப்படும் பொழுது அவை வெளிப்படுத்தும் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு எத்தனை முறையாக வகைப்படுத்தப்படுகின்றன?
மூன்று : டயா,பாரா,ஃபெர்ரோ
- எந்த வகையான காந்த பொருளை சீரான காந்த புலத்தில் தொங்கவிடப்படும் போது அவை காந்தப் புலத்திற்கு செங்குத்தாக தங்களை சீரமைத்துக் கொள்ளும்?
டயா காந்தங்கள்
- எந்த வகையான காந்தப் பொருள்கள் சீரற்ற காந்தப் புலத்தில் தொங்க விடப்படும் போது புலத்தை விட்டு விலகிச் செல்லும்?
டயா
- காந்த புலத்திற்கு எதிரான திசையில் எந்த பொருள் காந்தமாகும்?
டயா காந்த பொருள்கள்
- டயா காந்தப் பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள்?
பிஸ்மத் ,தாமிரம், பாதரசம், தங்கம், நீர் ,ஆல்கஹால் ,காற்று மற்றும் ஹைட்ரஜன்
- எந்த வகையான காந்தப் பொருள்கள் சீரான புற காந்த புலத்தில் தொங்க விடப்படும் போது அவைகள் காந்தப்புலத்திற்கு இணையாக தங்களை சீரமைத்துக் கொள்ளும் ?
பாரா காந்தப் பொருள்கள்
- எந்த வகையான காந்தப் பொருள் சீரற்ற காந்தப் புலத்தில் தொங்கவிடப்படும் போது வலிமை குறைந்த பகுதியிலிருந்து வலிமை மிகுந்த பகுதியை நோக்கி நகரும்?
பாரா காந்தப் பொருள்கள்
- எந்து காந்தப் பொருள் காந்தப்புலத்தின் திசையில் காந்தம் ஆகும்?
பாரா காந்தப் பொருள்கள்
- பாரா காந்தப் பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள்?
அலுமினியம் ,பிளாட்டினம், குரோமியம் ,நிக்கல் மற்றும் இரும்பு ஆகியவற்றின் உப்புகளின் கரைசல்கள்
- எந்த காந்தப் பொருள்கள் வெப்பத்தினால் அவற்றின் காந்தப் பண்புகளில் மாற்றமடைகின்றன?
பாரா காந்தப் பொருள்கள்
- எந்த காந்த பொருள்களை சீரான புற காந்த புலத்தில் தொங்க விடப்படும் போது அவைகள் அதற்கு இணையாக தங்களை சீரமைத்து வந்து நிற்கும்?
ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்
- எந்த வகையான காந்தப் பொருள்கள் சீரற்ற காந்த புலத்தில் தொங்கவிடப்படும் போது வலிமை குறைந்த பகுதியிலிருந்து வலிமை மிகுந்த பகுதியை நோக்கி விரைவாக நகரும்?
ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்
- ஃபெர்ரோ காந்தப் பொருள்கள் எந்த திசையில் வலிமையான காந்தம் ஆகும்?
காந்தப் புலத்தின் திசை
- ஃபெர்ரோ காந்தப் பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் எவை?
இரும்பு, கோபால்ட் ,நிக்கல் மற்றும் இவற்றின் உலோக கலவைகள்
- ஃபெர்ரோ காந்தப் பொருள்களை வெப்பப்படுத்தும் போது எந்த வகை காந்தப் பொருள்களாக மாற்றமடையும்?
பாரா
- எந்த ஒரு வெப்பநிலையில் ஃபெர்ரோ காந்தப் பொருள்கள் பாரா காந்த பொருளாக மாற்றமடைகிறதோ அந்த வெப்பநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கியூரி வெப்பநிலை
- செயற்கைக் காந்தங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது ?
இரும்பு அல்லது எஃகு உலோகக்கலவைகளை மின் முறையில் காந்தம் ஆக்குவது மற்றும் மேக்னடைட் அல்லது செயற்கை காந்தங்கள் கொண்டு காந்தப் பொருட்களை அடிக்கும்போது
- காந்த பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளும் விதத்தின் அடிப்படையில் செயற்கை காந்தங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன ?
இரண்டு: நிலையான காந்தங்கள் மற்றும் தற்காலிக காந்தங்கள்
- தேனிரும்பில் இருந்து என்ன வகையான காந்தங்கள் உருவாக்கப்படுகின்றன?
தற்காலிக காந்தங்கள்
- புறகாந்தப் புலத்தால் ஒரு பொருளினை நிலையான அல்லது தற்காலிக காந்தமாக உருவாக்கும் முறை என்ன?
காந்தமாக்கம்
- புற காந்தப்புலம் இல்லாத போதும் தொடர்ந்து காந்த பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளும் தற்காலிக காந்தங்கள் எவ்வாறு் அளிக்கப்படுகிறது?
நிலையான காந்தங்கள்
- நிலையான செயற்கை காந்தங்கள் எதனை கொண்டு உருவாக்கப்படுகிறது?
கனமான எஃகு மற்றும் சில உலோகக்கலவை பொருள்கள்
- பொதுவாக பயன்படும் பெரும்பாலான நிலையான காந்தங்கள் எந்த உலோக கலவையால் தயாரிக்கப்படுகின்றன ?
அல்நிகோ (ALNICO)
- அல்நிகோ (ALNICO) என்பது எவற்றால் ஆன உலோகக்கலவை?
அலுமினியம் ,நிக்கல் மற்றும் கோபால்ட்
- குளிர் பதனி, சட்டகாந்தம் ,ஒலிபெருக்கி மற்றும் காந்த ஊசி ஆகிவற்றில் பயன்படும் காந்தங்கள் எதற்கு எடுத்துக்காட்டு?
நிலையான காந்தங்கள்
- பூமியில் காணப்படும் வலிமையான திறன் மிகுந்த காந்தங்கள் எவை?
நியோடிமியம்
- எவற்றின் மூலம் காந்தத்தின் காந்த பண்புகளை நீக்கலாம் ?
பயன்படுத்தாமல் நீண்டகாலம் வைத்திருத்தல், காந்தப் பொருளை தொடர்ந்து அடித்தல் ,உயரமான பகுதியில் இருந்து கீழே போடுதல், அதிக வெப்ப நிலைக்கு உட்படுத்துதல் ,காந்தத்தை சுற்றி வேறுபட்ட மின்னோட்டத்தினை பாயச் செய்தல்
- எந்த விண்மீன் நடைமுறையில் காணப்படும் அதிகத் திறன் மிகுந்த காந்தம் ஆகும்?
மேக்னிட்டார்
- காந்தங்களின் துருவங்களை இணைக்கும் நேர்கோட்டானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காந்த அச்சு
- காந்தத்தின் அச்சானது புவியில் வடமுனை சந்திக்கும் புள்ளியானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புவிக்காந்த முனை அல்லது காந்த வடமுனை
- காந்தத்தின் அச்சானது புவியில் தென் முனையினை சந்திக்கும் புள்ளியானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புவிக்காந்த முனை அல்லது காந்த தென்முனை
- புவியின் காந்த தன்மைக்கு காரணங்கள் என்ன?
புவியிலுள்ள காந்த பொருட்களின் நிலை, சூரியனிலிருந்து வரும் கதிர் வீச்சுகள், நிலவின் செயல்திறன்
- காந்தப்புல வலிமையின் எண் மதிப்பானது புவிப்பரப்பில் நெடுக்கத்தில் எவ்வளவாக இருக்கும் ?
25 லிருந்து 65 மைக்ரோ டெஸ்லா
- குளிர் பதனி காந்தமானது புவியின் காந்தத்தை விட எத்தனை மடங்கு திறன் கொண்டது ?
20 மடங்கு
- உலகிலேயே மிகவும் வேகமான தொடர்வண்டி எது?
மெக்லிவ்
- கடன் அட்டை/ பற்று அட்டைகளின் பின்புறத்தில் உள்ள காந்த வரி அட்டைக்குப் பெயர் என்ன?
மாக்ஸ்ட்ரைப்
8TH PHYSICS STUDY NOTES |காந்தவியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services