- விண்மீன்களைக் கொண்ட தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
விண்மீன் திரள்
- சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராக்கெட்டுகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
சீனா
- மனிதர்களை அல்லது கருவிகளை பூமிக்கு அப்பால் விண்வெளிக்கு கொண்டு செல்வதற்காக சக்திவாய்ந்த இயந்திரத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு விண்வெளி வாகனம் எது?
ராக்கெட்
- ராக்கெட்டில் எத்தனை முக்கியமான பாகங்கள் உள்ளன?
நான்கு: கட்டமைப்பு அமைப்பு ,பணிச்சுமை அமைப்பு ,வழிகாட்டும் அமைப்பு ,உந்துவிசை அல்லது முன் செலுத்தும் அமைஅமைப்பு ராக்கெட்டை உள்ளடக்கிய சட்டம் எதனால் உருவாக்கப்படுகிறது?
டைட்டானியம் அல்லது அலுமினியம்
- சுற்றுவட்ட பாதையில் விடுபடுவதற்காக ராக்கெட்டினால்
சுமந்து செல்லப்படும் செயற்கைகோள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பணிச்சுமை
- ராக்கெட் செல்லவேண்டிய பாதை குறித்து வழிகாட்டுவது எந்த அமைப்பு?
வழிகாட்டு அமைப்பு
- ராக்கெட்டில் உள்ள பெரும்பகுதி இடத்தை எந்த அமைப்பு எடுத்துக்கொள்கிறது?
உந்துவிசை அமைப்பு
- எத்தனை வகையான முக்கியமான உந்துவிசை அமைப்புகள் உள்ளன?
இரண்டு : திரவ உந்துவிசை அமைப்பு, திட உந்துவிசை அமைப்பு
- இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற ராக்கெட்டுகள் எவை ?
துருவத்துணைக்கோள் செலுத்து வாகனம் (PSLV)மற்றும் புவி நிலை துணைக்கோள் செலுத்து வாகனம்(GSLV)
- இயக்கு பொருள் என்பது எதனுடைய கலவை?
எரிபொருள் மற்றும் எரிதலுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கும் ஆக்ஸிகரணி ஆகியவற்றின் கலவை
- இயக்கு பொருளானது என்ன நிலையில் இருக்கலாம் ?
திண்மமாக அல்லது திரவமாக
- ராக்கெட்டில் திரவ எரிபொருளாக பயன்படுத்தப்படுபவை?
திரவ ஹைட்ரஜன் ஹைட்ரசீன் மற்றும் எத்தில் ஆல்கஹால்
- ஆக்சிகாரணிகளுக்கு எடுத்துக்காட்டுகள்?
ஆக்சிஜன் ஓசோன் ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் நைட்ரிக் அமிலம்
- எந்த இயக்கு பொருட்கள் எரிய தொடங்கியபின் அதனை நிறுத்த இயலாது?
திண்ம இயக்கு பொருட்கள்
- திண்ம எரிபொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் எவை?
பாலியூரித்தீன் மற்றும் பாலிபியூடாடையீன்
- திண்ம எரிபொருட்களுக்கு ஆக்சி காரணிகளாக பயன்படுத்தப்படுபவை?
நைட்ரேட் மற்றும் குளோரைடு உப்புகள்
- எந்த வகை இயக்கு பொருள்களில் எரிபொருள் அல்லது ஆக்ஸிகரணி அல்லது இரண்டும் திரவ நிலை வாயுக்களாக இருக்கும்?
கிரையோஜெனிக் இயக்கு பொருட்கள்
- எந்த ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தொடங்கப்பட்டது?
1969
- இந்தியா தனது முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை எந்த ஆண்டு விண்ணில் செலுத்தியது?
1975
- விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் யார்?
ராகேஷ் ஷர்மா
- ராகேஷ் ஷர்மா எந்த ஆண்டு விண்வெளிக்கு சென்றார்?
ஏப்ரல் 2 ,1984
- ராகேஷ் ஷர்மா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
பஞ்சாப்
- எப்போது சந்திராயன்-1 என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது ?
அக்டோபர் 22 2008
- சந்திராயன்-1 விண்கலம் சந்திரனில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ள பாதையில் சுற்றி சந்திரனை பற்றிய தகவல்களை சேகரித்தது?
100 கிலோமீட்டர்
- சந்திராயன்-1 விண்கலம் எத்தனை நாட்கள் செயல்பட்டது?
312 நாட்கள்
- சந்திராயன்-1 விண்கலம் எப்போது பூமியில் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது?
ஆகஸ்ட் 28 2009
- சந்திராயன்-1 திட்டத்தின் நோக்கங்கள் என்னென்ன?
சந்திரனில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிதல் ,சந்திரனில் உள்ள தனிமங்களை கண்டறிதல், சந்திரனில் ஹீலியம் 3 இருப்பதை ஆராய்தல் ,சந்திரனின் முப்பரிமான வரைபடத்தை உருவாக்குதல் ,சூரிய குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி ஆராய்தல்
- உலகின் மிகச் சிறிய செயற்கை கோளின் பெயர் என்ன ?
கலாம்சாட், (64 கிராம்)
- கலாம்சாட்டை உருவாக்கியவர் யார்?
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிபாத் ஷாருக்
- கலாம்சாட் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது?
ஜூன் 22, 2017
- மயில்சாமி அண்ணாதுரை எப்போது பிறந்தார்?
2.7. 1958
- மயில்சாமி அண்ணாதுரை எங்கு பிறந்தார் ?
பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள கோதவாடி, கோயம்புத்தூர் மாவட்டம்
- மயில்சாமி அண்ணாதுரை எந்த ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ஆய்வாளராக பணியேற்றார்?
1982
- மயில்சாமி அண்ணாதுரை எதனுடைய திட்ட இயக்குனராக பணியாற்றியுள்ளார்?
சந்திராயன்-1 ,சந்திராயன்-2 மற்றும் மங்கள்யான்
- மயில்சாமி அண்ணாதுரை எந்த ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார் ?
1982
- சந்திராயன்-1 திட்டத்தின் சாதனைகள் என்னென்ன ?
சந்திரனில் நீர் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தது,சந்திரன் ஒரு காலத்தில் உருகிய நிலையில் இருந்ததை உறுதி செய்தது ,அமெரிக்காவின் விண்கலம் அப்பல்லோ 15 மற்றும் அப்பல்லோ 11 ஆகியவை தரையிறங்கிய இடங்களின் படங்களை பதிவு செய்தது
- எந்தக் கருவியின் மூலம் சந்திரனில் அலுமினியம் மக்னீசியம் மற்றும் சிலிக்கான் இருப்பது கண்டறியப்பட்டது?
X கதிர் படக்கருவி
- சந்திராயன்-1 புகைப்படக்கருவி மூலம் எவ்வளவுக்கு மேற்பட்ட படங்கள் அனுப்பப்பட்டுள்ளது?
40 ஆயிரத்திற்கும் மேல்
- இந்தியாவின் முதல் கோள்களுக்கு இடையேயான விண்வெளி திட்டம் எது?
மங்கள்யான்
- மங்கள்யான் எந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது ?
நாவம்பர் 5 2013
- மங்கள்யான் விண்கலம் செலுத்தியதன் மூலம் இந்தியா செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் எத்தனையாவது விண்வெளி ஆய்வு நிறுவனம் என்ற பெருமையை பெற்றது ?
நான்காவது
- மங்கள்யான் எப்போது செவ்வாய் கோளில் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது?
செப்டம்பர் 24 2014
- சூரிய குடும்பத்தில் காணப்படும் இரண்டாவது சிறிய கோள் எது?
செவ்வாய்
- செவ்வாய் கோள் தன்னச்சில் தன்னைத்தானே எவ்வளவு காலத்தில் சுற்றி வருகிறது?
24 மணி நேரம் 37 நிமிடங்கள்
- செவ்வாய்க் கோள் சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம்?
687 நாட்கள்
- செவ்வாய் திட்டத்தின் நோக்கங்கள் என்னென்ன?
கோள்களுக்கு இடையேயான விண்வெளித் திட்டத்தில் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்குதல், செவ்வாயின் மேற்பரப்பை ஆராய்தல் ,வளிமண்டலத்தில் உள்ள பகுதி பொருட்களை அறிதல் ,எதிர்காலத்தில் செவ்வாய்க் கோளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்தல்
- செவ்வாய் கோளை அடைந்த முதல் ஆசிய நாடு எது?
இந்தியா
- செவ்வாய் கோளை அடைய தன் முதல் முயற்சியில் சாதனையை நிகழ்த்திய நாடு எது?
இந்தியா
- சந்திராயன்-2 என்ற திட்டம் எந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது ?
ஜூலை 22 ,2019
- சந்திராயன்-2 சுற்றுக்கலம் எந்த மாநிலத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டது ?
கர்நாடக மாநிலத்தில் உள்ள பைலாலு
- சந்திராயன்-2 திட்டத்தின் தரையிறங்கியின் பெயர் என்ன?
விக்ரம்
- சந்திராயன்-2 ன் திட்டத்தில் உள்ள உலவியின் பெயர் என்ன ?
பிரக்யான்
- பிரக்யான் என்பது எந்த மொழிச் சொல்?
சமஸ்கிருதம் அதன் பொருள் அறிவு
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தற்போதைய தலைவராக இருப்பவர் யார்?
கைலாசவடிவு சிவன்
- கைலாசவடிவு சிவன் எங்கு பிறந்தார்?
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சரக்கல்விளை
- கைலாசவடிவு சிவன் வானூர்திப் பொறியியல் இளங்கலை பட்டத்தை எந்த ஆண்டு பெற்றார் ?
1980
- கைலாச வடிவு சிவன் முனைவர் பட்டத்தை மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் எந்த ஆண்டு பெற்றார்?
2006
- கைலாச வடிவு சிவன் எந்த ஆண்டு இந்திய விண்வெளி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார் ?
ஜனவரி 10 ,2018
- கைலாச வடிவு சிவன் கிரையோஜெனிக் இயந்திர தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு இவர் அளித்த சிறந்த பங்களிப்பின் காரணமாக எவ்வாறு அழைக்கப்படுகிறார் ?
ராக்கெட் மனிதர்
- சந்திரன் பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது?
3,84,400 கிலோமீட்டர்
- சந்திரனின் விட்டம் எவ்வளவு?
3474 கிலோமீட்டர்
- நாசா எங்கு அமைந்துள்ளது ?
அமெரிக்காவின் வாஷிங்டன் நகர்
- நாசா எப்போது தொடங்கப்பட்டது ?
அக்டோபர் 1 ,1958
- நாசாவின் அப்பல்லோ திட்டங்கள் மொத்தம் எத்தனை திட்டங்களைக் கொண்டது?
17
- எந்த அப்பல்லோ திட்டத்தில் முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பப்பட்டது ?
அப்பல்லோ 8
- எந்தத் அப்பல்லோ திட்டம் முதன் முதலில் மனிதனை நிலவில் தரையிறங்க செய்தது ?
அப்பல்லோ 11
- அப்பலோ 11 விண்கலமானது எப்போது நிலவில் தரையிறங்கியது?
ஜூலை 20 ,1969
- சந்திரனில் தரையிறங்கிய அப்பல்லோ 11 விண்கலத்தில் பயணித்த பயணிகள் குழு யார் ?
நீல் ஆம்ஸ்ட்ராங், புஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ்
- நாசா இஸ்ரோவுடன் இணைந்து எந்த செயற்கைகோளை விண்ணில் செலுத்தவும் செவ்வாய்க் கோளை ஆராயும் திட்டங்களில் இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது?
NISAR (NASA -ISRO SYNTHETIC APERTURE RADAR)
- விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வீராங்கனை?
கல்பனா சாவ்லா
- கல்பனா சாவ்லா எங்கு எப்போது பிறந்தார்?
பஞ்சாப் மாநிலத்திலுள்ள கர்னால் ,மார்ச் 17 1962
- கல்பனா சாவ்லா எந்த ஆண்டு நாசாவில் இணைந்தார்?
1988
- எந்த ஆண்டு கல்பனா சாவ்லா கொலம்பியா விண்வெளி திட்டத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டார்?
1997
- சுனிதா வில்லியம்ஸ் எப்போது எங்கு பிறந்தார்?
செப்டம்பர் மாதம் 19ஆம் நாள் 1965 அமெரிக்கா
- சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நீண்டதூரம் நடந்த பெண் என்ற சாதனையை எந்த ஆண்டு படைத்தார்?
2012
8TH PHYSICS STUDY NOTES |அண்டமும் விண்வெளி அறிவியலும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services