- இதுவரை எத்தனை தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
118
- இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனிமங்களில் எத்தனை தனிமங்கள் இயற்கையில் கிடைக்கக்கூடியவை?
92
- அணு என்பது எந்த சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டது?
கிரேக்கம் (அட்டாமஸ்-உடைக்க இயலாத மிகச்சிறிய துகள்)
- அணுவைப் பற்றிய கருத்தை கூறிய கிரேக்க தத்துவமேதை?
டெமாக்கிரடீஸ்
- “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என திருக்குறளின் பெருமையை பாராட்டியவர் யார் ?
ஔவையார்
- முதன்முதலில் அனுவைப் பற்றிய அறிவியல் பூர்வமான கொள்கையை வெளியிட்டவர் யார்?
ஜான் டால்டன்
- ஜான் டால்டன் எப்போது தனது அணு கொள்கையை வெளியிட்டார்?
1808
- ஜான் டால்டன் எத்தனையாவது வயதில் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்?
12-வது வயதில்
- குரூக் கதிர்கள் அல்லது கேத்தோடு கதிர்களைக் கண்டறிந்தவர் யார்?
சர் வில்லியம் குரூக்
- குரூக் கதிர்கள் அல்லது கேத்தோடு கதிர்கள் எந்த ஆண்டு கண்டறியப்பட்டது?
1878
- மின்சாரம் காற்றின் வழியே பாயும் போது வாயு மூலக்கூறுகளிலிருந்து எலக்ட்ரான்கள் வெளியேறுவதால் அயனிகள் உருவாகின்றன.இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மின்னிறக்கம்
- அணுவில் எதிர் மின்னூட்டம் கொண்ட துகள் இருப்பதால் அவற்றை சமன்செய்ய அதே அளவிலான நேர் மின்னூட்டம் கொண்ட துகள்கள் இருக்க வேண்டும் எனக் கருதியவர் யார் ?
கோல்ட்ஸ்டீன்
- நேர்மின்வாயில் இருந்து உருவாகும் கதிர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நேர்மின்வாய் கதிர்கள், ஆனோடு கதிர்கள் அல்லது கால்வாய்க் கதிர்கள்
- கண்ணிற்குப் புலப்படாத கதிர்கள் எது பூசப்பட்ட திரையில் விழும்போது கண்ணிற்குப் புலப்படும் ஒளியை உமிழ்கின்றன?
துத்தநாக சல்பேட்
- ஆனோடு கதிர்கள் எதனால் விலக்கம் அடைகின்றன?
மின்புலம் மற்றும் காந்தப் புலம்
- ஹைட்ரஜன் வாயுவை மின்னிறக்க குழாயினுள் எடுத்துக்கொள்ளும் போது பெறப்படும் நேர்மின் துகள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புரோட்டான்கள்
- ஒரு ஹைட்ரஜன் அணுவிலிருந்து ஒரு எலக்ட்ரானை நீக்கும்போது எது கிடைக்கும்?
ஒரு புரோட்டான்
- புரோட்டான் வேறு எவ்வாறும் அழைக்கப்படுகிறது ?
ஹைட்ரஜன் அயனி
- நியூட்ரான் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
1932
- நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்?
ஜேம்ஸ் சாட்விக்
- நியூட்ரான் என்ன சுமையுடையது ?
மின்சுமையற்ற துகள் அல்லது 0
- எலக்ட்ரானின் மின்சுமை என்ன?
-1
- புரோட்டானின் மின்சுமை என்ன?
+1
- எலக்ட்ரானின் நிறை என்ன?
9.1×10-24
- புரோட்டானின் நிறை என்ன?
1.6×10-24
- நியூட்ரானின் நிறை என்ன?
1.6×10-24
- ஜே ஜே தாம்சன் எந்த ஆண்டு தனது கொள்கையை வெளியிட்டார்?
1904
- ஜே ஜே தாம்சன் அணுவின் வடிவமானது எவ்வளவு ஆரமுடைய கோளத்தை ஒத்துள்ளது என்று கருதினார்?
10^-10 மீ
- தாம்சனின் அணு மாதிரி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பிளம் புட்டிங் மாதிரி அல்லது தர்பூசணி பழம் மாதிரி
- எலக்ட்ரான்கள் உட்கருவை வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன?
இந்த வட்ட பாதைக்கு பெயரென்ன ?ஆர்பிட் அல்லது எலக்ட்ரான் கூடு
- கடைசி எலக்ட்ரான் கூட்டில் உள்ள எலக்ட்ரான்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இணைதிறன் எலக்ட்ரான்கள்
- எலக்ட்ரான் கூடுகளில் உள்ள எலக்ட்ரான்களின் ஒழுங்கமைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எலக்ட்ரான் அமைப்பு
- ஒரு அணுவின் வேதிப் பண்புகளை தீர்மானிப்பது எது ?
இணைதிறன் எலக்ட்ரான்கள்
- ஒரு வேதி வினையின் போது நிலைப்புத் தன்மையை அடைவதற்காக அந்த அணுவை ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது இழக்கப்பட்ட அல்லது பகிர்ந்து கொள்ளப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அணுவின் இணைதிறன்
- பெரும்பாலும் உலோக அணுக்கள் அவற்றின் இணைதிறன் கூட்டில் எவ்வளவு எலக்ட்ரான்களை பெற்றுள்ளது?
1 முதல் 3 எலக்ட்ரான்கள்
- அணுக்கள் நிலைத்தன்மையை பெறுவதற்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை இழந்து நேர்மின் சுமையை பெறுகின்றன இந்த அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நேர்மறை இணைதிறன்
- சோடியம் என்ன வகை இணைதிறனைக் கொண்டது ?
நேர்மறை இணைதிறன்
- அலோக அணுக்கள் அவற்றின் இணைதிறன் கூட்டில் எவ்வளவு எலக்ட்ரான்களை பெற்றுள்ளது?
4 முதல் 7
- அணுக்கள் நிலைத்தன்மையை பெறுவதற்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை ஏற்றுக் எதிர்மின் சுமையை பெறுகின்றன இது எவ்வாறு் அழைக்கப்படுகிறது?
எதிர்மறை இணைதிறன்
- குளோரின் என்ன வகையான இணைதிறனைக் கொண்டது?
எதிர்மறை இணைதிறன்
- பொதுவாக அணுக்களின் இணைதிறனானது எதனுடைய அணுக்களின் இணைத் திறனை பொறுத்து கணக்கிடப்படுகிறது?
ஹைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் குளோரின்
- ஹைட்ரஜனின் இணைதிறன் என்ன?
1
- ஆக்சிஜனின் இணைதிறன் என்ன ?
2
- நைட்ரஜன் இணைதிறன்?
3
- கார்பன் இணைதிறன்?
4
- மெக்னீசியத்தின் இணைதிறன்?
2
- தாமிரம் ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து எவற்றை உருவாக்குகிறது?
குப்ரஸ் ஆக்சைடு மற்றும் குப்ரிக் ஆக்ஸைடு
- குப்ரஸ் ஆக்சைடில் தாமிரத்தின் இணைதிறன் என்ன ?
ஒன்று
- குப்ரிக் ஆக்சைடில் தாமிரத்தின் இணைதிறன் என்ன ?
இரண்டு
- குறைந்த இணைதிறன் கொண்ட உலோகச் சேர்மத்திற்கு பெயரிடும் பொழுது உலோகத்தின் பெயருடன் என்ன பின்னொட்டு சேர்க்கப்பட வேண்டும்?
அஸ் (ous)
- அதிக இணைதிறன் கொண்ட உலோகச் சேர்மத்திற்கு பெயரிடும் பொழுது உலோகத்தின் பெயருடன் என்ன பின்னொட்டு சேர்க்கப்பட வேண்டும்?
இக் (ic)
- ஒரு அணுவில் ஒரு எலக்ட்ரானை இழப்பதாலோ அல்லது பெறுவதாலோ நேர் மின் சுமை அல்லது எதிர்மின் சுமை பெற்ற அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அயனிகள்
- அயனிகள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
இரண்டு : நேரயனி மற்றும் எதிர் அயனி
- வேதி வினையின் போது ஒரு அணுவானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை இழந்தால் நேர்மின்சுயைப் பெறுகிறது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நேரயனி அல்லது நேரயனித் தொகுப்பு
- வேதி வினையின் போது ஒரு அணுவானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை ஏற்பதால் எதிர்மின்சுயைப் பெறுகிறது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எதிரயனி அல்லது எதிரயனித் தொகுப்பு
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ எலக்ட்ரான்களை இழந்தாலோ அல்லது ஏற்பதனாலோ உருவாகக்கூடிய மின்சுமை 1 ,2 ,3 மற்றும் 4 என இருந்தால் அவை முறையே எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒற்றை மின்சுமை, இரட்டை மின்சுமை ,மும்மை மின்சுமை மற்றும் நான்கு மின்சுமை அயனிகள்
- குளோரைடு எதிரயனியின் இணைதிறன் என்ன?
1
- சல்பேட் எதிரயனியின் இணைதிறன் என்ன?
2
- நைட்ரேட் எதிரயனியின் இணைதிறன் என்ன?
1
- கார்நனேட் எதிரயனியின் இணைதிறன் என்ன?
2
- பாஸ்பேட் எதிரயனியின் இணைதிறன் என்ன?
3
- ஆக்சைடு எதிரயனியின் இணைதிறன் என்ன?
2
- சல்பைடு எதிரயனியின் இணைதிறன் என்ன?
2
- ஹைட்ராக்ஸைடு எதிரயனியின் இணைதிறன் என்ன?
1
- சோடியம் நேரயனியின் இணைதிறன் என்ன?
1
- பொட்டாசியம் நேரயனியின் இணைதிறன் என்ன?
1
- அம்மோனியம் நேரயனியின் இணைதிறன் என்ன?
1
- மெக்னீசியம் நேரயனியின் இணைதிறன் என்ன?
2
- கால்சியம் நேரயனியின் இணைதிறன் என்ன?
2
- அலுமினியம் நேரயனியின் இணைதிறன் என்ன?
3
- ஒரு குறிப்பிட்ட வேதி சேர்மம் அல்லது மூலக்கூறை குறிக்கும் எளிய வழிமுறை எது?
வேதியியல் சமன்பாடு
- ஒன்றிற்கும் மேற்பட்ட தனிமங்கள் வேதிப்பிணைப்பில் ஈடுபட்டு உருவாகக்கூடிய பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வேதிச்சேர்மங்கள்
- உலோகம் மற்றும் அலோகம் ஆகிய இரண்டும் கலந்த சேர்மத்தின் பெயரினை எழுதும் பொழுது எதன் பெயரை முதலில் எழுத வேண்டும்?
உலோகம்
- உலோகம் மற்றும் அலோகம் ஆகிய இரண்டும் கலந்த சேர்மத்தின் பெயரினை எழுதும் பொழுது அலோகத்தின் பெயரோடு என்ன பின்னொட்டைச் சேர்த்து எழுத வேண்டும்?
ஐடு
- உலோகம் அலோகம் மற்றும் ஆக்சிஜன் கலந்த சேர்மத்தின் பெயரை எழுதும் பொழுது அதிக அளவில் ஆக்ஸிஜன் அணுக்கள் இருந்தால் அவற்றின் பெயருடன் என்ன பின்னொட்டைச் சேர்த்து எழுத வேண்டும்?
ஏட்
- உலோகம் அலோகம் மற்றும் ஆக்சிஜன் கலந்த சேர்மத்தின் பெயரை எழுதும் பொழுது குறைந்த அளவில் ஆக்ஸிஜன் அணுக்கள் இருந்தால் அவற்றின் பெயருடன் என்ன பின்னொட்டைச் சேர்த்து எழுத வேண்டும்?
ஐட்
- இரு அலோகங்கள் மட்டும் கொண்ட சேர்மங்களுக்கு பெயரிடும் பொழுது அலோகங்களின் பெயருக்கு முன்னொட்டாக எவற்றை சேர்த்து எழுத வேண்டும்?
மோனோ,டை,டிரை,டெட்ரா,பெண்டா…
- ஒரு வேதிவினையை குறியீடுகள் மற்றும் வாய்ப்பாடுகள் வடிவத்தில் எடுத்துக்கூறும் குறியீட்டு முறைக்கு என்ன பெயர் ?
வேதி சமன்பாடு
- வேதிவினையில் ஈடுபடக்கூடிய பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வினைபடு பொருள்கள்
- வேதிவினையில் உருவாகக்கூடிய பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வினை விளை பொருள்கள்
- எந்த விதியின் படி வினைபடு பொருள்களின் மொத்த நிறை வினை விளை பொருள்களின் மொத்த நிறைக்கும் சமமாக இருக்கவேண்டும் ?
பொருண்மை அழியா விதி
- வேதி சமன்பாட்டினை சமன் செய்வதற்கு என்ன முறைகள் வழக்கத்தில் உள்ளன?
முயன்று தவறுதல் முறை (நேரடி முறை), பின்ன முறை ,ஒற்றை இரட்டை எண்கள் முறை, மேலும் சில
- சமன் செய்யப்பட்ட சமன்பாட்டில் இருந்து எந்த விபரங்களை பெற முடியும்?
எண்ணிக்கை அடிப்படையிலான மற்றும் தனி கூறு சார்ந்த விபரங்கள்
- வேதி வினைகள் அனைத்தும் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்கின்றன இந்த விதிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வேதி சேர்க்கை விதிகள்
- வேதி சேர்க்கை விதிகள் என்னென்ன?
பொருண்மை அழியா விதி, மாறா விகித விதி ,பெருக்கல் விகித விதி, கே -லூஸாகின் பருமன் இணைப்பு விதி
- ஒரு வேதி வினை நிகழும் போது உருவாகும் வினை விளை பொருள்களின் மொத்த நிறையானது வினைபடு பொருட்களின் மொத்த நிறைக்கு சமம் எனக் கூறும் விதி எது ?
பொருண்மை அழியா விதி
- ஒரு வேதி வினையின் மூலம் நிறையை ஆக்கவோ அழிக்கவோ முடியாது எனக் கூறும் விதி?
பொருண்மை அழியா விதி
- பொருண்மை அழியா விதியை கூறியவர்?
லவாய்சியர் 1774
- பொருண்மை அழியா விதிக்கு வழங்கப்படும் வேறு பெயர்?
நிறை அழிவின்மை விதி
- ‘ ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட நிறை விகிதத்தில் ஒன்றிணைந்து தூய சேர்மத்தை உருவாக்குகின்றன ‘ இது என்ன விதி?
மாறா விகித விதி
- மாறா விகித விதியை கூறியவர் ?
ஜோசப் பிரௌஸ்ட் ,1779
- நீரில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் நிறை எப்பொழுதும் என்ன விகிதத்தில் இருக்கும்?
1:8
8TH PHYSICS STUDY NOTES |அணு அமைப்பு| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services