8TH GEOGRAPHY STUDY NOTES |வானிலையும் காலநிலையும்| TNPSC GROUP EXAMS

 


  1. புவியின் வளி மண்டலத்தில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?

 78%

  1. புவியின் வளி மண்டலத்தில் எத்தனை சதவீதம் ஆக்ஸிஜன் உள்ளது?

 21 %

  1. புவியின் வளிமண்டலத்தை எத்தனை சதவீதம் ஆர்கான் உள்ளது?

 0.97%

  1. புவியின் வளி மண்டலத்தில் எத்தனை சதவீதம் கார்பன்டை ஆக்சைடு உள்ளது?

 0.04%

  1. கிளைமேட்(Climate) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?

பண்டைய கிரேக்க மொழி

  1. கிளைமோ “Klimo” என்றால் தமிழில்  என்ன பொருள்?

சாய்வுகோணம் (Inclination)

  1. ஒரு குறிப்பிட்ட இடத்தின் வளிமண்டலத்தில் நிலவும் சூரிய வெளிச்சம் ,வெப்பம் ,மேகமூட்டம் ,காற்றின் திசை, காற்றழுத்தம் ,ஈரப்பதம், மழைப்பொழிவு மற்றும் பிறக்கூறுகளின் தன்மைகளை குறிப்பது எது?

 வானிலை

  1. குறுகிய காலமான ஒரு நாளோ, ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ நடக்கக்கூடிய நிகழ்வை குறிப்பது?

வானிலை

  1. ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியை குறிப்பது எது?

காலநிலை

  1. காலநிலை என்பது வளிமண்டலத்தின் வானிலை கூறுகளின் சராசரி தன்மையினை எத்தனை காலத்திற்கு கூறுவதாகும் ?

35 வருடங்கள்

  1. ஓரிடத்தின் /பகுதியின்/ பிரதேசத்தின் காலநிலையையும் வானிலையும் தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் எது?

சூரிய கதிர்களின் படுகோணம், சூரிய ஒளி படும் நேரம் ,உயரம், நிலம் மற்றும் நீர்பரவல், அமைவிடம் ,மலைத்தொடர்களின் திசை அமைவு, காற்றழுத்தம், காற்று மற்றும் கடல் நீரோட்டம்

  1. வளியியல் என்பது எந்த அறிவியலின் பிரிவாகும் ?

வானிலையின் அறிவியல் பிரிவு

  1. காலநிலையியல் என்பது எந்த அறிவியலின் பிரிவாகும் ?

 காலநிலையின் அறிவியல் பிரிவு

  1. காலநிலை மற்றும் வானிலை யின் முக்கிய கூறுகள் எவை ?

வெப்பநிலை, மழைவீழ்ச்சி ,காற்றழுத்தம் ,ஈரப்பதம் மற்றும் காற்று

  1. காற்றில் உள்ள வெப்பத்தின் அளவைக் குறிப்பது எது?

வெப்பநிலை

  1. காற்றில் உள்ள வெப்பமானது எதனை சார்ந்துள்ளது?

சூரிய கதிர்வீசல் மற்றும் வளிமண்டல நிறை

  1. புவி கதிர்வீசல் இன் அளவைப் பொறுத்து வெப்பம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இதற்கு காரணம் என்ன?

 புவியின் இயக்கங்கள், தன் சுழற்சி, சூரியனை வலம் வருதல் மற்றும் புவி அச்சின் சாய்வு தன்மை

  1. வெப்பநிலை எந்த அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது ?

ஈரப்பதத்தின் அளவு, ஆவியாதல், திரவமாதல், பொலிவு ஆகியவற்றின் அளவுகள்

  1. சூரிய கதிர் வீச்சுகளில் இருந்து பெறப்படும் வெப்ப ஆற்றல் எத்தனை வழிமுறைகளில் புவியை வந்தடைகிறது ?

 மூன்று: வெப்பக் கதிர்வீச்சு, வெப்பக்கடத்தல் மற்றும் வெப்பச் சலனம்

  1. புவியின் வளிமண்டலம் எதனால் அதிக வெப்பமடைகிறது?

 புவி கதிர்வீசல்

  1. வெப்பநிலையானது 1000 மீட்டர் உயரத்திற்கு எந்த அளவில் வெப்பநிலை குறைந்து கொண்டே செல்கிறது?

6.5 டிகிரி செல்சியஸ்

  1. மேலே செல்லச் செல்ல வெப்பம் குறைந்து கொண்டு செல்வதை (1000 மீட்டருக்கு 6.5°C) எவ்வாறு அழைக்கப்படும் ?

வெப்ப குறைவு வீதம்

  1. வெப்ப பரவலை பாதிக்கும் / தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் என்னென்ன ?

அட்சரேகை, உயரம், நிலத்தின் தன்மை ,கடல் நீரோட்டம், வீசும் காற்று,சரிவு,  இருப்பிடம், கடலிலிருந்து தூரம், இயற்கை தாவரங்கள், மண் வகைகள்

  1. நிலவரைபடங்களில் வானிலை கூறுகளின் பரவலை எதன் மூலம் காண்பிக்கப்படுகிறது?

சம அளவு கோட்டு வரைபடம்

  1. வானிலை கூறுகளின் அடிப்படையில் சம வெப்ப கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 ஐசோதெர்ம் (isotherm)

  1. சராசரி வெப்பநிலை கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 ஐசோக்ரைம்(isocryme)

  1. சம சூரிய வெளிச்சக்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஐசோகெல்(isohel)

  1. சம காற்றழுத்த மாறுபாட்டுக் கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஐசெல்லோபார்(isollobar)

  1. சம காற்றழுத்த கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஐசோபார்(isobar)

  1. சம மழை அளவு கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஐசோஹைட்ஸ்(isohytes)

  1. வெப்பநிலை என்ன அளவுகளால் அளவிடப்படுகிறது?

செல்சியஸ் பாரன்ஹீட் மற்றும் கெல்வின்

  1. வெப்பநிலையை அளக்க எது பயன்படுத்தப்படுகிறது?

வெப்பமானி ,ஸ்டீவன்சன் வெப்பமானி மற்றும் குறைந்தபட்ச அதிகபட்ச வெப்பமானி

  1. வளிமண்டலம் புவிக் கதிர்வீசலால் வெளியேற்றும் வெப்பத்தால் எந்த காலத்தில் அதிக வெப்பமடைகிறது ?

பிற்பகல் 2 மணியிலிருந்து 4 மணிக்குள்

  1. ஓரிடத்தில் 24 மணி நேரத்திற்குள் நிலவும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைக்கும் இடையே உள்ள சராசரி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
SEE ALSO  8TH GEOGRAPHY STUDY NOTES |இடர்கள்| TNPSC GROUP EXAMS

 வெப்பநிலை வீச்சு(mean temperature)

  1. ஒரு நாளில் அமையும் உச்ச வெப்ப நிலைக்கும் மற்றும் நீச வெப்பநிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படும்?

 தின வெப்பவியாப்தி அல்லது தினசரி வெப்பநிலை வீச்சு

  1. ஒரு ஆண்டின் அதிக வெப்பமான சராசரி மாதத்திற்கும் குறைந்த பட்சமான சராசரி மதத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு என்ன பெயர்?

ஆண்டு வெப்பவியாதி

  1. வெப்ப பரவலை எந்த கோடுகள் மூலம் காணலாம் ?

சமவெப்ப கோடுகள்

  1. சம அளவு வெப்பநிலை கொண்ட இடங்களை இணைத்து வரையப்படும் கற்பனைக் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

சம வெப்ப கோடுகள்

  1. புவியின் கோள வடிவத்தைப் பொறுத்து புவியின் வெப்ப மண்டலம் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?

மூன்று: வெப்பமண்டலம், மித வெப்ப மண்டலம் ,குளிர் மண்டலம்

  1. கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட மண்டலப் பகுதி எது?

வெப்பமண்டலம்

  1. சூரியனிடமிருந்து செங்குத்தான கதிர்களை பெறுவதால் எந்த பகுதி அதிகபட்சமான வெப்பத்தை பெறுகிறது?

வெப்பமண்டலம்

  1. வெப்பமண்டலம் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

 அயன மண்டலம்

  1. வட அரைக்கோளத்தில் கடக ரேகைக்கும் ஆர்க்டிக் வட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியாகும் ,தென் அரைக்கோளத்தில் மகர ரேகைக்கும் அண்டார்டிகா வட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியாக அமைந்துள்ள மண்டலம் எது?

மித வெப்ப மண்டலம்

  • ஆர்டிக் வட்டத்திற்கும் வடதுருவ பகுதிக்கு இடையேயும் ,அண்டார்டிக் வட்டத்திற்கும் தென் துருவப் பகுதிக்கு இடையே அமைந்துள்ள மண்டலம் எது?

 குளிர் மண்டலம்

  1. குளிர் மண்டலம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

 துருவ மண்டலம்

  1. புவியில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலை என்ன?

56.7°C ( 134°F)

  1. புவியின் மிக அதிகபட்ச வெப்பநிலை எப்போது எங்கு பதிவானது ?

 1913 ஜூலை 10ஆம் நாள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள கிரீன்லாந்து மலைத்தொடர் (மரணப் பள்ளத்தாக்கு)

  1. இதுவரை பதிவான புவியின் குறைந்தபட்ச வெப்ப நிலை என்ன?

 -89°C (-128.6°F) (184.0K)

  1. புவியின் குறைந்தபட்ச வெப்பநிலை எப்போது எங்கு பதிவானது?

1983 ஜூலை 21 அண்டார்டிகாவில் உள்ள சோவியத் வோஸ்டக் நிலையம்

  1. வளிமண்டல நீராவி நீர் சுருங்குதல் மூலம் பூரித நிலையை அடைந்து புவியீர்ப்பு விசையின் காரணமாக கீழ்நோக்கி விழும் திரவ நீர் எவ்வாறு அழைக்கப்படும்?

 மழைப்பொழிவு

  1. பொதுவாக மழைப்பொழிவு எந்த பகுதிகளில் அதிகமாக காணப்படும்?

நிலநடுக்கோட்டுப் பகுதி

  1. மழைப்பொழிவு எந்த கருவி அளவிடப்படுகிறது?

மழைமானி

  1. புவியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள காற்றின் எடை எவ்வாறு அழைக்கப்படும் ?

வளிமண்டல அழுத்தம்/காற்றழுத்தம்

  1. காற்றின் அழுத்தம் எந்த கருவியால் அளவிடப்படுகிறது ?

காற்றழுத்தமானி

  1. கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்று அழுத்தத்தின் அளவு என்ன?

 1013.25 மில்லி பார்

  1. பூமியில் உள்ள எல்லா பகுதிகளிலும் காற்று அழுத்தத்தின் அளவு என்ன?

1.03 கிலோ/ச.செ.மீ

  1. காற்றழுத்தம் கிடைமட்டமாகவும் ,செங்குத்தாகவும் காணப்படுவதை அடிப்படையாகக் கொண்டு காற்றின் அழுத்தம் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

 குறைந்த காற்றழுத்த மண்டலம் ,அதிக காற்றழுத்த மண்டலம்

  1. வளி மண்டல பகுதிகளில் சுற்றியுள்ள பகுதிகளை விட அழுத்தம் குறைவாக இருக்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?

 குறைந்த காற்றழுத்த பகுதி

  1. உலகில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச அழுத்தம் எது?

1083mb

  1. உலகின் மிக அதிகபட்ச அழுத்தம் எப்போது எங்கு பதிவானது?

டிசம்பர் 31, 1968 ரஷ்யாவில் உள்ள அகாட் என்ற இடத்தில் கடல் மட்டத்தில் பதிவானது

  1. உலகில் இதுவரை பதிவான மிகக் குறைந்த அழுத்தம் எது?

870mb

  1. உலகில் இதுவரை பதிவான மிகக் குறைந்த காற்றழுத்தம் எப்போது எங்கு பதிவானது?

 டிசம்பர் 12 ,1929, பசுபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவிற்கு அருகில் உள்ள ‘குவாம்’ என்ற கடல் பகுதியில் உருவான டைபூனின் கண் பகுதியில் பதிவானது

  1. குறைவான காற்றழுத்த மண்டலம் என்ன எழுத்தால் வானிலை வரைபடத்தில் குறிக்கப்படுகிறது?
SEE ALSO  TNPSC APTITUDE PYQ TEST 25

 L

  1. அதிக காற்றழுத்த மண்டலம் என்ன எழுத்தால் வானிலை வரைபடத்தில் குறிக்கப்படுகிறது?

H

  1. குறைந்த அழுத்த மண்டலம் எவ்வாறு அழைக்கப்படும்?

 காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது சூறாவளி

  1. அதிக அழுத்த மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

 எதிர் சூறாவளி காற்றுகள்

  1. சம அளவுள்ள காற்று அழுத்தத்தின் பரவலை காண பயன்படுத்தப்படும் கோடு எது?

சம அழுத்தக்கோடு (ஐசோபார்)

  1. வளிமண்டல அழுத்தத்தை கட்டுப்படுத்தும் காரணிகள் என்னென்ன?

உயரம், வளிமண்டல வெப்பநிலை, காற்று சுழற்சி, பூமியின் தன்சுழற்சி ,நீராவி மற்றும் வளிமண்டல புயல்கள்

  1. வானிலை ஆய்வாளர்கள் காற்றழுத்தத்தை எதன்மூலம் அளக்கின்றனர்?

 காற்றழுத்தமானி அல்லது அனிராய்டு காற்றழுத்தமானி

  1. வளிமண்டல அழுத்த வேறுபாட்டை தொடர்ச்சியாக பதிவு செய்ய எது பயன்படுத்தப்படுகிறது ?

 காற்றழுத்த பதிவுத்தாள்(Barograms)

  1. நாம் விமானத்தில் மேலே செல்லும்பொழுது அல்லது உயரே செல்லும் பொழுது ஏன் காதுகள் அடைத்துக் கொள்கின்றன?

 உயரே செல்லும் போது வளிமண்டல அழுத்தமானது நம்முடைய காதுகளில் உள்ள காற்றின் அழுத்தத்தை விட குறைவாக உள்ளது அதனால் காதுகள் இவ்விரண்டையும் சமப்படுத்தும் பொழுது அடைத்துக் கொள்கின்றன

  1. ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் காற்றில் உள்ள நீராவியின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஈரப்பதம்

  1. ஈரப்பதம் வளிமண்டலத்தின் பகுதிகளில் எத்தனை சதவீதம் வரை இருக்கும்?

 0 முதல் 5 சதவீதம் வரை

  • வளிமண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு எத்தனை பொருத்து அமைகிறது ?

 வெப்பநிலையின் அளவு

  1. ஈரப்பதத்தின் அளவு எதனை நோக்கி செல்லும் பொழுது குறைகிறது?

நிலநடுக்கோட்டில் இருந்து துருவத்தை நோக்கி

  1. காற்றில் உள்ள ஈரப்பதத்தை அளவிட என்ன அளவீட்டு முறைகள் உள்ளன ?

 சுய ஈரப்பதம்(specific humidity), உண்மையான ஈரப்பதம்(absolute humidity), ஒப்பு ஈரப்பதம்(relative humidity)

  1. ஒரு குறிப்பிட்ட எடை கொண்ட காற்றில் உள்ள நீராவியின் எடை எவ்வாறு அழைக்கப்படும் ?

 ஈரப்பதம்

  1. சுய ஈரப்பதம் எவ்வாறு குறித்து காட்டப்படுகிறது?

கிராம் நீராவி/ கிலோகிராம் காற்று

  1. ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள காற்றிலுள்ள நீராவி நிலைக்கு என்ன பெயர்?

உண்மையான ஈரப்பதம்

  1. உண்மையான ஈரப்பதம் எவ்வாறு குறித்து காட்டப்படுகிறது?

 ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு கிராம் நீராவி உள்ளது

  1. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள காற்றில் எவ்வளவு நீராவி இருக்க முடியுமோ அந்த அளவிற்கு அதேசமயம் அக்காற்றில் தற்போது எவ்வளவு நீராவி உள்ளதோ அந்த அளவிற்கு உள்ள விகிதம் எவ்வாறு அழைக்கப்படும்?

 ஒப்பு ஈரப்பதம்

  1. ஒப்பு ஈரப்பதம் என்ன முறையில் காணப்படுகிறது ?

சராசரி சதவிகிதம்

  1. காற்றின் ஈரப்பதத்தை எவ்வாறு அளக்கலாம்?

 ஈர நிலைமானி(ஹைக்ரோமீட்டர்)

  1. பொதுவாக என்ன காற்று அதிக நீராவியை தக்கவைத்துக்கொள்ளும்?

 வெப்பக்காற்று

  1. காற்றின் ஒப்பு ஈரப்பதம் எத்தனை சதவீதத்தை அடையும் பொழுது காற்று பூரித நிலையை அடையும்?

 100%

  1. எந்த ஈரப்பதம் மனிதனின் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது?

 ஒப்பு ஈரப்பதம்

  1. எப்போது காற்றில் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனின் அளவு குறைகிறது ?

காற்றின் அழுத்தம் குறையும் பொழுது

  1. கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு என்ன பெயர்?

காற்று

  1. செங்குத்தாக நகரும் வாயுவிற்கு என்ன பெயர் ?

காற்றோட்டம்

  1. தென்மேற்குப் பகுதியில் இருந்து வீசும் காற்றுக்கு என்ன பெயர் ?

 தென்மேற்கு பருவக்காற்று

  1. காற்றின் அமைப்புகள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

 மூன்று: கோள் காற்றுகள் அல்லது நிரந்தர காற்றுகள்(planetary winds), பருவகால காற்றுகள்(seasonal winds) மற்றும் தலக்காற்றுகள் அல்லது பிரதேச காற்றுகள்(local winds)

  1. உலகிலேயே முதன் முதலாக வானிலை வரைபடங்கள் தொகுப்பை வெளியிட்டவர் யார் ?

அல்-பலாஹி என்ற அரேபிய நாட்டு புவியியல் வல்லுநர்

  1. ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

கோள் காற்றுகள் அல்லது நிலையான காற்று

  1. கோள் காற்றுகளுக்கு எடுத்துக்காட்டு எது?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி| TNPSC GROUP EXAMS

வியாபார காற்று ,மேலைக் காற்று ,பருவ காற்று

  1. பருவத்திற்கேற்ற அதன் திசையை மாற்றி வீசும் காற்று எது?

பருவகால காற்று

  1. பருவக் காற்றுகள் கோடை காலத்தில் எவ்வாறு வீசுகிறது?

கடலிலிருந்து நிலத்தை நோக்கி (குளிர்காலத்தில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும்)

  1. ஒரு நாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படும்?

தலக்காற்றுகள் அல்லது பிரதேச காற்றுகள்

  1. தலக்காற்றுகள் அல்லது பிரதேச காற்றுகளுக்கு எடுத்துக்காட்டு எது?

நிலக்காற்று ,கடல்காற்று

  1. பூமியில் குறைந்த காற்று வீசும் பகுதிகள் என்னென்ன?

ஆப்ரிக்காவின் காபான்,காங்கோ மற்றும் DR காங்கோ, சுமத்ரா ,இந்தோனேசியா, மலேசியா (பிரேசிலின் பெரும் பகுதியில் காற்றின் வேகம் குறைவாக இருக்கும்)

  1. காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி எது?

 பியாபோர்டு அளவை

  1. பியாபோர்டு அளவை கருவி யாரால் எப்போது உருவாக்கப்பட்டது?

 1805 ராயல் கடற்படை அதிகாரியான பிரான்சிஸ் பியோபோர்டு

  1. பியாபோர்டு அளவை கருவி முதன் முதலில் யாரால் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டது?

 எச்.எம்.எஸ் பீகாலால்

  1. வானிலை வல்லுனர்கள் காற்றின் திசையை அளவிட என்ன கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்?

 காற்றுமான அல்லது காற்று திசைகாட்டி

  1. காற்றின் வேகத்தை அளக்க பயன்படுத்தப்படும் கருவி எது?

அனிமாமீட்டர்

  1. காற்றின் திசையையும் வீசும் காலத்தையும் நிலவரைபடத்தில் குறிக்கும் ஒரு வரைபடம் எது?

விண்ட்ரோஸ்

  1. எந்தக் கருவி காற்றின் திசைவேகம், சூரிய வெளிச்சம் ,மழை ஆகிய வானிலை கூறுகளை வரைபடத்தின் மூலம் பதிவு செய்யும்?

மீட்டிரோகிராப் அல்லது டிரிபில் ரிஜிஸ்டர்


8TH GEOGRAPHY STUDY NOTES |வானிலையும் காலநிலையும்| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: