- புவியின் நான்கு பகுதிகள் என்னென்ன?
நிலக்கோளம் ,நீர்க்கோளம், வளிக்கோளம் மற்றும் உயிர்க்கோளம்
- பாறையில் ஆய்வுடன் தொடர்புடைய ‘புவி மண்ணியலின்’ ஒரு பிரிவு என்ன?
பாறையியல்
- பாறையியல்(petrology) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
கிரேக்கம் ,பெட்ரஸ்(petrus) என்பது பாறைகளையும், லோகோஸ் (logos) என்பது அதைப் பற்றிய படிப்பாகும்
- புவியின் மேலோடு எதனால் உருவானது?
பாறைகள்
- புவியின் மேற்பரப்பில் எத்தனை வகையிலான கனிம வகைகள் உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது ?
2000
- புவியின் மேற்பரப்பில் காணப்படும் கனிம வகைகளில் பொதுவாக பூமி முழுவதும் எத்தனை அடிப்படை கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன?
12
- புவிப் பரப்பில் காணப்படும் பாறைகளை அவை தோன்றும் முறைகளின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
மூன்று :தீப்பாறைகள்(igneous rocks), படிவுப் பாறைகள் (sedimentary rocks),உருமாறிய பாறைகள் அல்லது மாற்றுருப் பாறைகள்(metamorphic rocks)
- புவியின் ஆழமான பகுதியில் இருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு உறைந்து உருவாகும் பாறை எது?
தீப்பாறைகள்
- மற்ற பாறைகள் தீப்பாறைகளிலிருந்து உருவாகுவதால் தீப்பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முதன்மை பாறைகள்(primary rocks) அல்லது தாய்ப்பாறைகள்(parent rocks)
- இக்னியஸ் என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
இலத்தீன்
- இக்னியஸ் என்ற இலத்தீன் சொல்லின் பொருள் என்ன?
தீ
- தீப்பாறைகளின் பண்புகள் என்னென்ன?
கடினத் தன்மை உடையவை, நீர் புகாத தன்மை உடையவை, உயிரினப்படிமப் பொருட்கள் இருக்காது, எரிமலை செயல்பாடுகளுடன் தொடர்புடையது, கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும்.
- தீப்பாறைகள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது .அவை என்னென்ன?
வெளிப்புற தீப்பாறைகள்(Extrusive igneous rocks), ஊடுருவிய தீப்பாறைகள்(intrusive igneous rocks)
- புவியின் உட்பகுதியில் இருந்து அதன் மேல் பகுதிக்கு வரும் செந்நிற உருகிய பாறைக் குழம்பு எவ்வாறு அழைக்கப்படும்?
லாவா (Lava)
- லாவா எனப்படும் பாறை குழம்பு புவியின் மேற்பரப்புக்கு வந்தவுடன் குளிர்ந்து பாறைகளாக புவி மேலோட்டில் மேற்பரப்பில் உருவாகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெளிப்புற தீப்பாறைகள்
- வெளிப்புறத் தீப்பாறைகள் என்ன தன்மை கொண்டிருக்கும் ?
தீப்பாறைகள் விரைவாக குளிர்வதால் மெல்லிழைகள் மற்றும் கண்ணாடி தன்மை கொண்டவை
- இந்தியாவின் வடமேற்கு தீபகற்ப பகுதியில் காணப்படும் எந்த வகை பாறைகள் வெளிப்புற தீப்பாறைகளுககு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்?
கருங்கல் (Basalt)
- பாறைக் குழம்பு புவி பரப்பிற்கு கீழே பாறை விரிசல்களிலும் ,பாறைகளிலும் ஊடுருவி சென்று உறைந்து உருவாகும் பாறைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
ஊடுருவிய பாறைகள்
- ஊடுருவிய தீப்பாறைகள் எத்தனை வகைப்படும்?
இரண்டு : அடியாழப் பாறைகள் அல்லது பாதாளப் பாறைகள் (Plutonic rocks) & இடையாழப் பாறைகள்(hypabysal rocks)
- புவியின் அதிக ஆழத்தில் உறைந்து உருவாகும் பாறைகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
அடியாழப் பாறைகள்
- புவி மேற்பரப்பில் இருந்து கீழே புவியின் குறைந்த ஆழத்தில் பாறைக்குழம்பு உறைவதால் உருவாகும் பாறைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
இடையாழப் பாறைகள்
- கிரானைட், டயரைட் மற்றும் எறும்புக்கல் ஆகியன எதற்கு சிறந்த உதாரணம் ?
அடியாழப்பாறைகள்
- இடையாழப்பாறைகளுக்கு சிறந்த உதாரணம் எது?
டொலிரைட்
- ஊடுருவிய தீப்பாறைகள் பெரிய அளவிலான படிகங்களை கொண்டிருப்பதால் இவைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
படிகப்பாறைகள் (crystalline rocks)
- உலகின் முக்கியமான செயல்படும் எரிமலைகளான மவுண்ட் வெசூவியஸ், மவுண்ட் ஸ்ட்ராம்போலி மற்றும் மவுண்ட் எட்னா ஆகியவை எங்கு உள்ளது ?
இத்தாலி
- மௌனலோவா மற்றும் மௌனாக்கியா செயல்படும் எரிமலைகள் எங்கு உள்ளது?
ஹவாய் தீவுகள்
- செடிமெண்டரி (sedimentary) எனும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
‘செடிமென்டம்’ இலத்தீன் மொழி (பொருள் -படிய வைத்தல்)
- படிவுப் பாறைகளில் பல்வேறு காலகட்டத்தில் படிய வைக்கப்பட்டு பொருள்கள் பல படிநிலைகளை கொண்டிருப்பதால் இவைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அடுக்குப்பாறைகள் (stratified rocks)
- நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்ற இயற்கை வளங்கள் உருவாக முக்கிய ஆதாரமாக இருப்பது எது?
படிவுப் பாறைகள்
- படிவுப் பாறைகளின் பண்புகள் என்னென்ன?
இவை பல அடுக்குகளைக் கொண்டது ,படிகங்களற்ற பாறைகளாக உள்ளது ,இப்பாறைகளில் உயிரின படிமங்கள் உள்ளன ,மென் தன்மையுடையதால் எளிதில் அரிப்புக்கு உட்படும்
- உலகின் மிகப் பழமையான படிவுப் பாறைகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
கிரீன்லாந்து
- கிரீன்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான படிவு பாறையின் வயது என்ன?
3.9 பில்லியன் ஆண்டுகள்
- படிவுகளின் தன்மை, படிய வைக்கும் செயல்முறைகள் மற்றும் படிவுகளின் மூலாதாரம் போன்ற அம்சங்களின் அடிப்படையில் படிவுப் பாறைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
மூன்று: உயிரின படிவுப் பாறைகள்(organic sedimentary rocks),பௌதீக படிவுப் பாறைகள்(mechanical sedimentary rocks),இரசாயன படிவுப் பாறைகள்(chemical sedimentary rocks)
- எந்த வகையான பாறைகள் உயிரினங்களும் தாவரங்களும் சிதைக்கப்பட்ட பொருள்கள் படிந்து இறுகிய பின் உருவாகின்றன?
உயிரின படிவுப் பாறைகள்
- உயிரின படிவுப் பாறைகளுக்கு எடுத்துக்காட்டுகள் எவை?
சாக்(chalk),பட்டுக்கல்(talc),டோலமைட்(Dolomite) மற்றும் சுண்ணாம்பு பாறைகள்(limestones)
- தீப்பாறைகளும், உருமாறிய பாறைகளும் சிதைந்து உருவாகுவது எது?
பௌதீக படிவுப் பாறைகள்
- பௌதீக படிவுப் பாறைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் எவை ?
மணற்பாறைகள்(sandstones), மாக்கல்(shale) மற்றும் களிப்ப்றை(clay)
- பாறையில் உள்ள கனிமங்கள் நீரில் கரைந்து ரசாயன கலவையாக மாறுகிறது. பின் ஆவியாதல் மூலம் பாறையாக உருவாகின்றன. இவை எவ்வாறு அழைக்கப்படும்?
இரசாயன படிவுப் பாறைகள் (chemical sedimentary rocks)
- இரசாயன படிவுப் பாறைகள் வேறு எவ்வாறு அழைக்கப்படும் ?
உப்புபடர் பாறைகள் (evaporite rocks)
- மெட்டமார்பிக் என்ற வார்த்தை எதிலிருந்து பெறப்பட்டது ?
இரண்டு கிரேக்க சொல் மெட்டா மற்றும் மார்பா (மெட்டா-மாற்றம்,மார்பா-வடிவம்)
- அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப் பாறைகளும் மாற்றமடைந்து என்னவாக பெயர் பெறுகிறது?
உருமாறிய பாறைகள்
- உருமாறிய பாறைகள் எத்தனை வகைப்படும்?
இரண்டு: வெப்ப உருமாற்றம்(Thermal metamorphism) ,இயக்க உருமாற்றம்(Dynamic metamorphism)
- பாறைக் குழம்பு, பாறைகளில் ஊடுருவிச் செல்லும்போது அப்பாறைக்குழம்பின் வெப்பம் அங்குள்ள பாறைகளை உருமாற்றம் செய்துவிடுகிறது .இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்ப உருமாற்றம்
- பாறைக் குழம்பு, பாறைகளில் ஊடுருவிச் செல்லும்போது அப்பாறைக்குழம்பின் அழுத்தத்தால் அங்குள்ள பாறைகளை உருமாற்றம் செய்துவிடுகிறது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இயக்க உருமாற்றம்
- இந்தியாவிலுள்ள தாஜ்மஹால் எதனால் கட்டப்பட்டது?
உருமாறிய பாறைகளிலிருந்து உருவான வெள்ளைப் பளிங்குக் கற்களால்
- இயக்க உருமாற்றத்தினால் கிரானைட் பாறை என்னவாக மாறுகிறது?
நைஸ் பாறை(Gneiss)
- வெப்ப உருமாற்றத்தினால் கருங்கல் பாறை(basalte) என்னவாக உருமாறுகிறது?
பலகை பாறை(slate rock)
- வெப்ப உருமாற்றத்தினால் மணல் பாறைகள் என்னவாக மாறுகின்றன ?
வெண் கற்பாறைகள்(quartz)
- வெப்ப உருமாற்றத்தினால் மாக்கல் என்னவாக மாறுகின்றன?
பலகைப்பாறை
- உருமாறிய பாறைகளின் பண்புகள் என்னென்ன?
பெரும்பாலும் படிகத் தன்மை கொண்டவை, உருமாறிய பாறைகளின் பல்வேறு பட்டைகள் ஒரு பகுதி வெளிர் நிறங்களை கொண்டதாகவும் மற்றொரு பகுதி கருமை நிறக் கனிமங்களை கொண்டதாகவும் உள்ளன
- புவியில் தோன்றிய முதன்மையான பாறைகள் எது ?
தீப்பாறைகள்
- புவியின் மேலோடு பகுதியில் பாறைகள் பல்வேறு இயற்கை சக்திகள் மற்றும் அக மற்றும் புற காரணிகளால் பாறைகள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுகின்றன. தொடர்ச்சியான செயல்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாறை சுழற்சி
- குவார்ட்சைட் மற்றும் சலவை கற்கள் பொதுவாக எங்கு பயன்படுத்தப்படுகிறது?
கட்டுமானம் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள்
- சலவைக் கற்கள் பொதுவாக எங்கு பயன்படுத்தப்படுகிறது?
அழகான சிலைகள் ,அலங்கார பொருட்கள் சிறிய பரிசு பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
- சலவைக்கற்களின் துகள்களிலிருந்து எது தயாரிக்கப்படுகிறது?
நெகிழி ,காகிதம் போன்றவைகள்
- மண் என்பது எவற்றை உள்ளடக்கியது?
கரிமப் பொருள்கள் ,கனிமங்கள் ,வாயுக்கள், திரவப் பொருட்கள் மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவை
- புவிப்பரப்பின் மேல் மண் உருவாவதால் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புவியின் தோல்
- பாறைகள் வானிலை சிதைவு மற்றும் அரித்தல் செயல் முறைகளுக்கு உட்படுத்தப்படும்போது என்னவாக உருவாகிறது?
மண்
- உலக மண் நாளாகக் கொண்டாடப் படுவது எது?
டிசம்பர் 5
- பொதுவாக மண்ணில் எத்தனை சதவீதம் கனிமங்கள் உள்ளன?
45%
- பொதுவாக மண்ணில் எத்தனை சதவீதம் கரிமப் பொருள்கள் உள்ளன?
5%
- பொதுவாக மண்ணில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?
25%
- பொதுவாக மண்ணில் எத்தனை சதவீதம் காற்று உள்ளன?
25%
- புவி மேற்பரப்பில் இருந்து தாய் பாறை வரை உள்ள மண் அடுக்குகளின் குறுக்குவெட்டு தோற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மண்ணின் குறுக்கமைப்பு
- மண் உருவாகும் விதத்தில் அவற்றின் நிறம், பௌதீக மற்றும் இரசாயன பண்புகளின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
6
- மண்ணின் ஆறு வகைப் பிரிவுகள் என்னென்ன?
வண்டல் மண், கரிசல் மண், செம்மண் ,சரளை மண், மலை மண், பாலை மண்
- வண்டல் மண் எங்கு காணப்படுகிறது?
ஆற்று சமவெளிகள், வெள்ள சமவெளிகள் ,கடற்கரை சமவெளிகள்
- மற்ற மண் வகைகளைக் காட்டிலும் வளம் மிக்கது எது?
வண்டல்மண்
- வண்டல் மண் எந்த பயிர்கள் பயிரிட ஏற்றது?
நெல் ,கரும்பு ,கோதுமை, சணல் மற்றும் மற்ற உணவு பெயர்கள்
- மண்ணின் அடுக்குகள் என்னென்ன?
O-இலைமக்கு அடுக்கு, A-மேல்மட்ட அடுக்கு, E-உயர்மட்ட அடுக்கு, B-அடிமண் ,C-தாய்ப்பாறை அடுக்கு, R-சிதைவடையாத தாய் பாறை
- மண்ணின் எந்த அடுக்கு இலைகள், சருகுகள், கிளைகள் பாசிகள் போன்ற கரிம பொருட்களால் உருவானவை?
O-இலைமக்கு அடுக்கு
- மண்ணின் எந்த அடுக்கு கரிம மற்றும் கனிம பொருட்களால் ஆனது?
A-மேல்மட்ட அடுக்கு
- மண்ணின் எந்த அடுக்கு உயர்மட்ட அடுக்காகும்?
E-உயர்மட்ட அடுக்கு
- எந்த அடுக்கு அதிக அளவு சுவர்தலுக்கு உட்பட்ட அடுக்கு மற்றும் களிமண் இரும்பு மற்றும் அலுமினியம் ஆக்சைடு போன்ற தாதுக்கள் கணிசமாக காணப்படும்?
E-உயர்மட்ட அடுக்கு
- எந்த அடுக்கு தாய்ப்பாறையின் இரசாயன அல்லது பௌதீக மாற்றத்திற்கு உட்பட்டவை?
B-அடி மண்
- இரும்பு ,களிமண் ,அலுமினிய ஆக்சைடு மற்றும் கனிமப் பொருட்களால் தோன்றிய அடுக்கு அல்லது திரள் மண்டலம் என அழைக்கப்படுவது எது?
B-அடி மண்
- எந்த அடுக்கில் தாய்ப்பாறைகள் குறைந்த அளவே சிதைக்கப்படுகின்றன?
C- தாய்பாறை அடுக்கு
- எந்த அடுக்கு சிதைவடையாத அடிமட்ட பாறையாகும்?
R-சிதைவடையாத தாய்ப்பாறை
- கரிசல் மண் எந்த பாறைகள் சிதவடைவதால் உருவாகின்றன?
தீப்பாறைகள்
- எந்த மண் இயற்கையிலேயே களிமண் தன்மையையும் ,ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது ?
கரிசல் மண்
- கரிசல் மண்ணில் எந்த பயிர் நன்கு வளரும் ?
பருத்திப் பயிர்
- செம்மண் எந்த பாறைகள் சிதவடைவதால் உருவாகிறது ?
உருமாறிய பாறைகள் மற்றும் படிகப்பாறைகள்
- செம்மண்ணில் உள்ள எந்த அளவைப் பொறுத்து மண்ணின் நிறமானது பழுப்பு முதல் சிகப்பு நிறம் வரை வேறுபடுகிறது?
இரும்பு ஆக்சைடு
- எந்த மண் வளம் குறைந்த ஒன்றாக இருப்பதால் திணை பயிர்கள் பயிரிட ஏற்றது?
செம்மண்
- சரளை மண் எந்த காலநிலையில் உருவாகிறது?
அயனமண்டல பிரதேச காலநிலை
- எந்த மண் அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு கொண்ட பகுதிகளில் ஊடுருதலின் செயலாக்கத்தினால் உருவாவதால் வளம் குறைந்து காணப்படுகிறது?
சரளை மண்
- சரளை மண் எந்த பயிர்கள் பயிரிட ஏற்றது?
தேயிலை, காப்பி போன்ற தோட்டப்பயிர்கள்
- மலைச்சரிவுகளில் காணப்படும் மண் எது?
மலைமண்
- அயனமண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படும் மண் எது?
பாலை மண்
- எந்த மண் உவர் தன்மை மற்றும் நுண் துளைகளை கொண்டது?
பாலை மண்
- இயற்கை காரணிகள் அல்லது மனித செயல்பாடுகளினால் மண்ணின் மேல் அடுக்கு நீக்குதல் அல்லது அரிக்கப்படுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மண்ணரிப்பு
- மண்ணரிப்புக்கு முக்கிய காரணங்களாக இருப்பவை எவை?
ஓடும் நீர் மற்றும் காற்று
- மண்ணரிப்பின் முக்கிய வகைகள் என்னென்ன?
அடுக்கு அரிப்பு(Sheer erosion) ,ஓடை அரிப்பு(Rill erosion) மற்றும் நீர் பள்ள அரிப்பு (Gully erosion)
- மித வெப்ப மண்டல காலநிலை பிரதேசங்களில் ஒரு சென்டிமீட்டர் மண் உருவாக எவ்வளவு வருடங்கள் தேவைப்படும்?
200 முதல் 400 வருடங்கள்
- அயனமண்டல ஈர காலநிலை பகுதிகளில் மண் உருவாக எவ்வளவு வருடங்கள் ஆகும்?
200 வருடங்கள்
- நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ எத்தனை வருடங்கள் ஆகும்?
3000 வருடங்கள்
- மண் அரிப்பில் இருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல்முறை எவ்வாறு அழைக்கப்படும்?
மண்வளப் பாதுகாப்பு
- பாறைகள் மற்றும் மண் வகைகள் எந்த வளத்தின் வகைக்குள் அடங்கும்?
புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்கள்
8TH GEOGRAPHY STUDY NOTES |பாறை மற்றும் மண்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services