- புவியின் மேற்பரப்பு ஏறத்தாழ எத்தனை சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது?
71%
- புவியில் உள்ள நீரின் அளவு என்ன?
326 மில்லியன் கன மைல்கள்
- புவியில் உள்ள பெரும்பகுதியிலான நீர் என்ன வகை நீர்?
உவர்ப்பு நீர் அல்லது கடல் நீர்
- புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரில் பேராழிகள், கடல்கள் மற்றும் குடாக்களின் சதவீதம் என்ன?
96.54 சதவீதம்
- புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரில் பனிமலைகள் ,பனியாறுகள், நிலையான உறைபனியிஅ சதவீதம் என்ன?
1.74 சதவீதம்
- புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரில் நிலத்தடி நீரின் சதவீதம் என்ன?
1.69 சதவீதம்
- புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரில் மண்ணின் ஈரப்பதம் சதவீதம் என்ன?
0.001 சதவீதம்
- புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரில் நிலப்பகுதியில் காணப்படும் நிரந்தர பனிக்கட்டியின் சதவீதம் என்ன?
0.022 சதவீதம்
- புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரில் ஏரிகளின் சதவீதம் என்ன?
0.013 சதவீதம்
- புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரில் வளிமண்டலத்திலுள்ள நீரின் சதவீதம் என்ன?
0.001 சதவீதம்
- புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரில் சதுப்பு நில நீரின் சதவீதம் என்ன?
0.0008 சதவீதம்
- புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரில் ஆறுகளின் சதவீதம் என்ன?
0.0002சதவீதம்
- புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரில் உயிரியல் நீரின் சதவீதம் என்ன?
0.0001 சதவீதம்
- புவியில் உள்ள மொத்த நீரில் எத்தனை சதவீதம் உவர்ப்பு நீராக உள்ளது?
97.2%
- புவியில் உள்ள மொத்த நீரில் எத்தனை சதவீதம் நன்னீராக உள்ளது?
2.8%
- புவியில் உள்ள நன்னீரில் எத்தனை சதவீதம் புவியின் மேற்பரப்பில் உள்ளது?
2.2%
- நன்னீரில் எத்தனை சதவீதம் நீர் நிலத்தடி நீராக கிடைக்கப் பெறுகிறது?
0.6%
- புவியின் மேற்பரப்பில் காணப்படும் 2.2% நன்னீரில் எத்தனை சதவீதம் பனியாறுகளாவும் & பனி மலைகளாகவும் உள்ளது?
2.15%
- புவியின் நன்னீரில் எத்தனை சதவீதம் ஏரிகளாக,ஆறுகளாக உள்ளது?
0.01%
- புவியில் காணப்படும் நன்னீரில் எத்தனை சதவீதம் மற்ற நீர் வடிவங்களாக காணப்படுகிறது ?
0.04%
- மொத்த நிலத்தடி நீரில் தற்பொழுது எத்தனை சதவீதம் பொருளாதாரரீதியில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் துளையிட்டு எடுக்கப்படுகிறது ?
0.6%
- இந்தியாவில் நீர் வளம் எத்தனை ஆதாரங்களிலிருந்து கிடைக்கிறது?
மூன்று: மழை பொழிவு ,புவியின் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்
- புவியின் மேற்பரப்பில் உள்ள நீரின் தன்மை, பரவல் ,இயக்கம் மற்றும் பண்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை கையாளும் அறிவியல் எது?
நீரியல்
- நீர் கடலில் இருந்து ஆவியாதல் மூலம் வளிமண்டலத்திற்கு சென்று பின் மழைப்பொழிவாக நிலத்திற்கும், நிலத்திலிருந்து நீராக கடலுக்கும் சென்றடையும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படும்?
நீரியல் சுழற்சி
- நீர் ஆவியாதல் மூலம் வளிமண்டலத்தின் உயரமான பகுதிகளுக்கு செல்லும் பொழுது திரவமாகச் சுருங்குதலின் மூலம் என்னவாக மாறுகிறது?
மேகங்கள்
- இயற்கையாக மற்றும் தொடர்ச்சியான நீர் சுழற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீரியல் சுழற்சி
- நீரியல் சுழற்சி எத்தனை முக்கிய நிலைகளில் நடைபெறுகிறது?
மூன்று :ஆவியீர்ப்பு,பொழிவு, நீர் வழிந்தோடல்
- நீரியல் சுழற்சியின் முக்கிய கூறுகள் என்னென்ன?
6 :ஆவியீர்ப்பு ,திரவமாய் சுருங்குதல், பொழிவு, நீர் ஊடுருவல், உட்கசிதல், நீர் வழிந்தோடல்
- புவியின் மேற்பரப்பு நீர் நிலைகளில் இருந்து ஆவியாதல் வழியாகவும் மற்றும் தாவரங்களில் இருந்து நீர் உட்கசிந்து வெளியிடுதல் மூலமாகவும் நிகழும் புவியின் மொத்த நீர் இழப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆவியீர்ப்பு
- நீர் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறுவதற்கு பெயரென்ன ?
ஆவியாதல்
- எந்த வெப்பநிலையில் நீர் கொதிக்கிறது?
100°C (212°F)
- உண்மையாக நீர் எந்த வெப்ப நிலையிலேயே ஆவியாக தொடங்குகிறது?
0° C (32°F)
- ஆவியாதலின் விகிதத்தை பாதிக்கும் முக்கிய காரணியாக உள்ளது எது?
வெப்பநிலை
- ஆவியாதலின் விகிதத்தை பாதிக்கும் காரணிகள் என்னென்ன?
புவியின் மேற்பரப்பில் உள்ள பரந்த நீர்ப்பரப்பு, காற்று, வளிமண்டல ஈரப்பதம்
- பேராழிகள், கடல்கள், ஏரிகள் மற்றும் ஆறுகள் போன்றவற்றிலிருந்து சுமார் எத்தனை சதவீதம் ஈரப்பதம் ஆவியாதல் மூலமாக வளிமண்டலத்திற்கு செல்கிறது?
90%
- தாவரங்களில் நீர் உட்கசிந்து வெளியிடுதல் மூலமாக ஈரப்பதம் எத்தனை சதவீதம் ஆவியாகிறது?
10%
- ஆவியாதல் விகிதம் அதிகரிப்பது எப்போது ?
காற்றின் வேகம் அதிகரிக்கும்போது, வெப்பநிலை அதிகரிக்கும் போது, ஈரப்பதம் குறையும் பொழுது, பூமியில் நீர் நிலைகள் அதிகரிக்கும் பொழுது
- தாவரங்களில் உள்ள நீர் ஆவியாகி வளிமண்டலத்திற்குச் செல்லும் செயலாக்கம் எவ்வாறு அழைக்கப்படும்?
நீர் உட்கசிந்து வெளியிடுதல்
- நீர் உட்கசிந்து வெளியிடுதல் விகிதத்தை நிர்ணயிப்பவை ?
வெப்பநிலை, காற்று, ஈரப்பதம்
- நீராவி நீராக மாறும் செயல் முறைக்கு என்ன பெயர்?
நீர் சுருங்குதல்
- நீர் சுருங்குதல் என்பது எதனுடைய எதிர் வினை செயல் ?
ஆவியாதல்
- நீர் சுருங்குதலின் வகைகள் அல்லது உருவங்கள் என்னென்ன?
பனி,உறைபனி,அடர் மூடுபனி, மூடுபனி, மற்றும் மேகங்கள்
- நீர்த்துளிகள் புவியின் மேற்பரப்பில் குளிர்ந்த பொருள்களின் மீது படும் பொழுது எது உருவாகிறது?
பனி
- குளிர்ந்த பொருட்களின் மேற்பரப்பின் மீது நீராவி படிந்து பனிப்படிகங்களாக மாறுவதற்கு பெயர் என்ன?
உறைபனி
- காற்றிலிருக்கும் நீர் சுருங்குதலால் செறிவூட்டப்பட்ட மிக நுண்ணிய நீர்த்துளிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
அடர் மூடுபனி
- அடர் மூடுபனியின் எவ்வளவு உயரம் விமானப் போக்குவரத்துக்கு உகந்தது?
பத்து கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான உயரம்
- காற்றில் தொங்கு நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர்த்துளிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மூடுபனி
- அடர் மூடுபனியை விட அடர்த்தி குறைவானது எது?
மூடுபனி
- மேகங்கள் என்பது எவற்றை கொண்டிருக்கும்?
வளிமண்டலத்தில் காணப்படும் குறைந்த எடை கொண்ட மிக நுண்ணிய நீர்த்துளிகள் மற்றும் பனிப்படிகங்கள்
- மேகங்களில் உள்ள நீர்த் துளிகளின் அளவானது எவ்வளவு ?
இரண்டு மைக்ரான் முதல் 100 மைக்ரோன்
- நீராவி காற்றில் செறிந்து பூரித நிலையை அடைவது எவ்வாறு அழைக்கப்படும்?
நீர் சுருங்குதல்
- எந்த காற்று அதிக நீராவியை தக்க வைத்துக் கொள்ளும்?
வெப்பக்காற்று
- எப்பொழுது காற்று பூரித நிலையை அடைகிறது ?
வெப்பநிலை குறையும்போது
- மேகங்களில் இருந்து பல்வேறு வடிவங்களில் நீராக புவியின் மேற்பரப்பை வந்தடையும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மழைப்பொழிவு
- பொழிவு எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
மழை, கல்மழை, உறைபனி மழை ,ஆலங்கட்டி மழை மற்றும் பனி
- பொழிவின் பொதுவான வடிவம் என்ன?
மழைப்பொழிவு
- நீர்த்துளிகள் எவ்வளவு விட்டத்திற்கும் அதிகமாக இருந்தால் மழைப்பொழிவு என அழைக்கப்படுகிறது?
0.5 மி.மீ
- நீர்த்துளிகள் எவ்வளவு விட்டத்திற்கும் குறைவாக இருந்தால் தூறல் என அழைக்கப்படுகிறது?
0.5 மி.மீ
- பொதுவாக மழை தூறல் எந்த மேகங்களில் இருந்து உருவாகிறது ?
படை மேகங்கள்
- நீர் துளிகளும், ஐந்து மில்லி மீட்டர் விட்டத்திற்கும் மேல் உள்ள பனித்துளிகளும் கலந்து காணப்படும் பொழிவிற்கு என்ன பெயர் ?
கல்மழை
- மழைத்துளிகள் குளிர்ந்த புவிப்பரப்பை தொடும் பொழுது உறைந்து விடுகின்றன. இவை எவ்வாறு அழைக்கப்படும்?
உறைபனி
- உறைப்பனி மழையிலுள்ள துளியின் விட்டத்தின் அளவு என்ன?
0.5மி.மீ
- மழைப் பொழிவானது எவ்வளவு விட்டத்தை விட பெரிய உருண்டையாக பனிக்கட்டிகளை கொண்டிருந்தால் அது ஆலங்கட்டி மழை என அழைக்கப்படுகிறது?
5 மி.மீ
- கார்திரள் மேகங்களிலிருந்து இடியுடன் கூடிய மழையாக உருவாவது எது?
ஆலங்கட்டி மழை (cumulonimbus clouds)
- மேகத்தில் உள்ள வெப்பம் குறைவதன் காரணமாக நீராவி அடிக்கடி நேரடியாக பனியின் நுண் துகள்களை திரளாகக் கொண்டு காணப்படுகிறது இந்த பனித்திரள்துகள்கள் பொழிவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பனிப்பொழிவு
- புவியின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் அடுக்கிற்குள் நீர் புகுவதற்கு பெயர் என்ன?
நீர் ஊடுருவல்
- நீரு ஊடுருவல் மூலம் குறிப்பிட்ட அளவு நீர் நிலத்தின் அடியில் தங்குவதால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிலத்தடி நீர்
- நீர் ஊடுருவும் விகிதத்தை எது தீர்மானிக்கிறது?
மண்ணின் இயற்பியல் தன்மை, மேற்பரப்பில் காணப்படும் தாவரங்கள் ,மண்ணின் ஈரத்தன்மை ,வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவின் அளவு
- மண்ணடுக்கு மற்றும் பாறை அடுக்குகளின் வாயிலாக ஊடுருவிய நீர் கீழ்நோக்கி நிலத்திற்கு அடியில் செல்வதற்கு பெயர் என்ன?
நீர்உட்கசிவு
- செறிவூட்டப்பட்ட பகுதியிலிருந்து செறிவூட்டப்படாதப் பகுதிக்கு செல்லும் நீரோட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீர்உட்கசிதல்
- ஓடும் நீர் ஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு நிலப்பகுதியின் மேற்பரப்பு முழுவதும் செல்வதற்கு பெயரென்ன?
நீர் வழிந்தோடல்
- நீர் வழிந்தோடலின் அளவானது எதனைச் சார்ந்து உள்ளது?
மழைவீழ்ச்சியின் அளவு ,மண்ணின் நீர் புகும் தன்மை ,தாவரமூட்டம் மற்றும் நிலச்சரிவு
- மழை நீரில் எத்தனை சதவீதம் மட்டுமே கடல் மட்டும் பேராழிகளில் கலக்கிறது?
35%
- மழைநீரில் எத்தனை சதவீதமானது மண்ணினால் உறிஞ்சப்படுகிறது?
65%
- மழைப் பொழிவின் கால இடைவெளி மற்றும் நீர் வழிந்தோடல் உருவாக்கத்தின் அடிப்படையில் நீர் வழிந்தோடல் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
மேல் மட்ட நீர் வழிந்தோடல்(Surface runoff),அடிப்பரப்பு நீர் வழிந்தோடல்(Sub surface runoff), அடிமட்ட நீர் ஓட்டம்(baseflow)
- நீரானது மழை பொழிந்த உடன் நிலப்பரப்பில் செரிவடைவதால் அது நிலச்சரிவின் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது எவ்வாறு அறியப்படுகிறது?
நிலநீர் ஓட்டம்
- நிலநீர் மட்டம் ஆறுகள் சிறு ஓடைகள் மற்றும் கடல்களில் இணைவதால் அதை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மேல்மட்ட நீர் வழிந்தோடல்
- நீரானது அடிமண் அடுக்கின் உள்நுழைந்து நிலத்தடி நீரில் கலக்காமல் பக்கவாட்டு திசையில் நகர்ந்து ஓடைகள் ஆறுகள் மற்றும் கடலுடன் கலப்பதால் இதற்கு என்ன பெயர் ?
அடிப்பரப்பு நீர் வழிந்தோடல்
- அடி பரப்பு நீர் வழிந்தோடல் பொதுவாக இவ்வாறு குறிப்பிடப்படும்?
இடை நீரோட்டம்
- செறிவடைந்த நிலத்தடி நீர் மண்டலத்திலிருந்து நீர் பாதை வழியாக நிலத்தடி நீராக ஓடுவது எவ்வாறு அழைக்கப்படும் ?
அடிமட்ட நீரோட்டம்
- நீரியலை அளக்க உதவும் அலகுகள் என்னென்ன?
ஆவியாதல்-அங்குலம் அல்லது செ.மீ
- மழைநீர் ஊடுருவல் – அங்குலம் அல்லது செமீ/மணி
- மழைப்பொழிவு -அங்குலம்/மிமி/செமீ
- புவி மேற்பரப்பில் நீர் ஓடலின் கன அளவு /நீர்வழிந்தோடல் – கன அடி/விநாடி
- மழைவழிவின் கன அளவு-கன அடி
- மழைநீரின் கொள்ளளவு- கன அடி/ஏக்கர் அடி
8TH GEOGRAPHY STUDY NOTES |நீரியல் சுழற்சி| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services