- புவியில் உள்ள உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களை பாதிக்கக் கூடிய நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இடர் (Hazard)
- ஒரு பொருளோ, நபரோ, நிகழ்வோ அல்லது காரணியோ மக்கள் அல்லது கட்டமைப்புகள் மக்கள் அல்லது கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார வளங்களுக்கு அச்சுறுத்தலாகவும், இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
இடர் (Hazard)
- “ஹாசார்டு” என்ற சொல் எந்த மொழியிலிருந்து தோன்றியது?
பிரெஞ்சு சொல் (ஹாசர்ட்-Hasart) (பொருள்-ஒரு பகடை விளையாட்டு)
- ஹாசார்டு அரபு மற்றும் பாரசீக மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(அல்-சஹர் -அரபு, அசார்-ஸ்பானியமொழி)
- மனித உயிர்கள் மற்றும் உடமைகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் இயற்கையான நிகழ்வுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
இயற்கை இடர்கள்
- இடர்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?
நிகழ்விற்கான காரணிகளின் அடிப்படையிலான இடர்கள் மற்றும் தோற்றத்தின் அடிப்படையிலான இடர்கள்
- நிகழ்விற்கான காரணிகளின் அடிப்படையில் இடர்கள் எத்தனை பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது?
மூன்று: இயற்கையினால் ஏற்படும் இடர்கள், மனித செயல்களால் உருவாக்கப்படும் இடர்கள், சமூக இயற்கைக் காரணிகளால் ஏற்படும் இடர்கள்
- இயற்கைக் காரணிகளால் உருவாகும் இடர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
இயற்கையால் ஏற்படும் இடர்கள்
- இயற்கையால் ஏற்படும் விளைவுகளுக்கு எடுத்துக்காட்டு எவை?
நில அதிர்வு ,வெள்ளப்பெருக்கு ,சூறாவளி ,புயல்கள் ,வறட்சி, நிலச்சரிவு ,சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு போன்றவை
- மனிதர்களின் விரும்பத்தகாத நடவடிக்கைகளின் மூலம் ஏற்படும் இடர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
மனிதனால் உருவாக்கப்படும் இடர்கள்
- இயற்கை சக்திகள் மற்றும் மனிதனின் தவறான செயல்பாடுகள் இணைவதன் மூலம் ஏற்படும் இடர்கள் எது?
சமூக இயற்கை இடர்கள்
- தோற்றத்தின் அடிப்படையில் உருவாகும் இடர்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?
எட்டு : வளி மண்டலத்தில் ஏற்படும் இடர்கள், நிலவியல் சார்ந்த இடர்கள் ,நீரியில் தொடர்பான இடர்கள், எரிமலை சார்ந்த இடர்கள், சுற்றுச்சூழல் சார்ந்த இடர்கள், உயிரியல் சார்ந்த இடர்கள் ,தொழில்நுட்பம் சார்ந்த இடர்கள் ,மனித தூண்டுதலால் ஏற்படும் இடர்கள்
- வெப்பமண்டல சூறாவளி ,இடியுடன் கூடிய புயல், மின்னல் ,சுழல் காற்று, பனிச்சரிவு, வெப்ப அலைகள், மூடு பனி மற்றும் காட்டுத்தீ ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள் எந்த பிரிவைச் சார்ந்தவை?
வளிமண்டலத்தில் ஏற்படும் இடர்கள்
- நில அதிர்வு, சுனாமி, நிலச்சரிவு ,நிலம் அமிழ்தல் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள் எந்த பிரிவைச் சார்ந்தவை?
நிலவியல் சார்ந்த இடர்கள்
- வெள்ளப்பெருக்கு வறட்சி கடற்கரை அறிவிப்பு சூறாவளி அலைகள் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள் எந்த பிரிவைச் சேர்ந்தவை?
நீரியல் தொடர்பான இடர்கள்
- எரிமலை வெடிப்பு மற்றும் லாவா வழிதல் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவை?
எரிமலை சார்ந்த இடர்கள்
- மண், காற்று, நீர் மாசடைதல் ,பாலைவனமாதல், புவி வெப்பமடைதல் மற்றும் காடழிப்பு ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவை?
சுற்றுச்சூழல் சார்ந்த இடர்கள்
- சின்னம்மை ,பெரியம்மை ,தட்டம்மை தொற்றுநோய்கள் விஷ தேனீக்கள் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவை?
உயிரியல் சார்ந்த இடர்கள்
- அபாயகரமான கழிவுப் பொருட்களால் ஏற்படும் இடர்கள் ,தீவிபத்து மற்றும் கட்டமைப்பு குறைபாடுகளால் ஏற்படும் இடர்கள் எந்த பிரிவைச் சார்ந்தவை?
தொழில் நுட்பம் சார்ந்த இடர்கள்
- தீவிரவாதம், துப்பாக்கி சூடு ,போக்குவரத்து விபத்துகள், போர் மற்றும் உள்நாட்டு கலவரம் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவை ?
மனித தூண்டுதல் ஏற்படும் இடர்கள்
- புவியின் மேல் ஓட்டில் திடீரென ஏற்படும் கடும் அதிர்வு எவ்வாறு அழைக்கப்படும்?
நில அதிர்வு
- இந்திய தர நிர்ணய நிறுவனம் இந்தியாவை எத்தனை நில அதிர்வு மண்டலங்களாக வகைப்படுத்தி உள்ளது?
5: மண்டலம் 2 ,மண்டலம் 3, மண்டலம் 4, மண்டலம் 5( இந்தியாவின் எப்பகுதியும் மண்டலம் ஒன்றின் கீழ் வகைப் படுத்தப் படவில்லை)
- எந்த நில அதிர்வு மண்டலம் மிக அதிக அபாயம் தன்மை உடையது?
மண்டலம் 5
- மண்டலம் 5 உள்ளடக்கிய இந்தியாவின் பகுதிகள் என்னென்ன?
வடகிழக்கு இந்தியா முழுமையும், ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள், இமாச்சல் பிரதேசம் ,உத்தரகாண்ட், குஜராத்தின் ரான் ஆப் கட்ச் , வட பீகார் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள்
- எந்த நில அதிர்வு மண்டலம் அதிக அபாயம் தன்மை உடையது?
மண்டலம் 4
- மண்டலம் 4 உள்ளடக்கிய இந்தியாவின் பகுதிகள் என்னென்ன?
ஜம்மு-காஷ்மீரின் பிற பகுதிகள், இமாச்சல் பிரதேசம் , புதுடெல்லி, வட உத்தரப்பிரதேசம், பீகார் ,மேற்குவங்கம், குஜராத்தின் சில பகுதிகள் ,மேற்குக் கடற்கரையை ஒட்டியுள்ள மகாராஷ்டிராவின் சில பகுதிகள் மற்றும் ராஜஸ்தான்
- எந்த நில அதிர்வு மண்டலம் மிதமான அபாயம் தன்மை உடையது?
மண்டலம் 3
- மண்டலம் 3 உள்ளடக்கிய இந்தியாவின் பகுதிகள் என்னென்ன?
கேரளா கோவா லட்சத்தீவுகள் ,உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகள் ,குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ,பஞ்சாபின் சில பகுதிகள், ராஜஸ்தான் ,மத்திய பிரதேசம், பீகார் ,ஜார்க்கண்ட் ,சட்டீஸ்கர், மகாராஷ்டிரா ,ஒரிசா ,ஆந்திரப்பிரதேசம் ,தமிழ்நாடு மற்றும் கர்நாடகா
- எந்த நில அதிர்வு மண்டலம் குறைவான அபாயம் தன்மை உடையது?
மண்டலம் 2
- மண்டலம் 2 உள்ளடக்கிய இந்தியாவின் பகுதிகள் என்னென்ன?
இந்தியாவின் பிற பகுதிகள்
- கன மழை மற்றும் கடல்களில் உருவாகும் பேரலைகளால் புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு பகுதி நீரினால் மூழ்கடிக்கப்படுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வெள்ளப்பெருக்கு
- வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வானிலையியல் காரணிகள் என்னென்ன?
கனமழை ,அயனமண்டல சூறாவளி, மேக வெடிப்பு
- வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான இயற்கை காரணிகள் என்னென்ன ?
பரந்த நீர்ப்பிடிப்பு பகுதிகள், போதிய வடிகால் அமைப்பு இல்லாமை
- வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான மனித காரணிகள் என்னென்ன ?
காடழிப்பு, வண்டல் படிவுகள் ,முறையற்ற வேளாண் முறைகள், முறையற்ற நீர்பாசன முறைகள், அணைகள் உடைதல் மற்றும் நகரமயமாக்கல்
- இந்தியாவில் வெள்ளப்பெருக்கு பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் என்னென்ன?
வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பஞ்சாப் ,ஹரியானா ,உத்தரபிரதேசம் ,பீகார், மேற்கு வங்காளத்தை உள்ளடக்கிய கங்கைச் சமவெளி மற்றும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதியில் கடலோர ஆந்திரம் ,ஒடிசா, குஜராத் போன்றவை
- வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த பகுதிகளில் சூழலும் வலிமையான காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சூறாவளி புயல் காற்று
- புயல் காற்று வட அரைக்கோளத்தில் என்ன திசையில் சுற்றும்?
கடிகாரம் சுற்றும் திசைக்கு எதிர்த் திசை
- தென் அரைக்கோளத்தில் புயல் காற்று எந்த திசையில் சுழல்கிறது?
கடிகார திசை
- வெப்ப மண்டல சூறாவளிகள் காரணமாக திடீரென்று ஏற்படும் கடல்நீர் எழுச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புயல் அலை
- புயல் அலைகளால் பாதிப்பிற்கு உள்ளாகும் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் என்னென்ன?
ஒடிசாவின் வடபகுதி மற்றும் மேற்கு வங்காளம் கடற்கரை ,ஓங்கோல் & மசூலிப்பட்டினம் இடையே அமைந்துள்ள ஆந்திர கடற்கரை ,தமிழக கடற்கரை( 13 கடலோர மாவட்டங்கள் ,நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் புயல் அலைகளின் நிகழ்வுகள் மற்றும் பாதிப்புகள் அதிகம்)
- புயல் அலைகளால் பாதிப்பிற்கு உள்ளாகும் மேற்கு கடற்கரைப் பகுதிகள் என்னென்ன?
மகாராஷ்டிரா கடற்கரை, வட ஹர்னாயர், தென் குஜராத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதி மற்றும் காம்பே சுற்றியுள்ள கடற்கரைப் பகுதி, கட்ச் வளைகுடாவை சுற்றியுள்ள கடலோரப் பகுதிகள்
- வேளாண்மை, கால்நடை வளர்ப்பு தொழில் துறை மற்றும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நீர் பற்றாக்குறையை எவ்வாறு அழைக்கப்படும்?
வறட்சி
- வறட்சி எத்தனை முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகிறது ?
3: வானிலையியல் வறட்சி, நீரியியல் வறட்சி, வேளாண் வறட்சி
- ஒரு குறிப்பிட்ட காலத்தில் மழையின் அளவு ஒரு குறிப்பிட்ட அளவைவிட குறைவாக இருக்கும் சூழல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வானிலையியல் வறட்சி
- நீரோடைகள், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு குறைந்து காணப்படும் சூழல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீரியியல் வறட்சி
- நீரியியல் வறட்சி எத்தனை வகைப்படும் ?
இரண்டு :நிலத்தடி நீர் வறட்சி ,புவி மேற்பரப்பு நீர் வறட்சி
- மழை பற்றாக்குறை காரணமாக வேளாண் பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையைக் குறிப்பது எது?
வேளாண் வறட்சி
- நாட்டின் எத்தனை பங்கு பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்படுகின்றன?
மூன்றில் ஒரு பங்கு
- வறட்சி எத்தனை சதவீத நிலப்பரப்பையும் மக்கள் தொகையையும் பாதிக்கிறது ?
16 சதவீத நிலப்பரப்பு, 12 சதவீத மக்கள் தொகை
- இந்தியாவில் வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகள் எது?
60 செண்டி மீட்டருக்குக் குறைவான மழை பெறும் பகுதி
- அதிக வறட்சிக்கு உள்ளாகும் முக்கிய பகுதிகள் எது ?
அகமதாபாத் முதல் கான்பூர் வரை உள்ள வறண்ட மற்றும் அரை-வறண்ட பகுதிகள், கான்பூர் முதல் ஜலந்தர் வரை உள்ள பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையின் காற்று மறைவு பகுதிகளில் அமைந்துள்ள வறண்ட பகுதிகள்
- புவியீர்ப்பு விசையினால் பாறைகள், மண் மற்றும் தாவரங்கள் கீழ் நோக்கி வேகமாகச் செல்லும் நகர்வை குறிப்பது எது?
நிலச்சரிவு
- இந்தியாவில் எத்தனை சதவீத நிலப்பரப்பு நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ளாகும் பகுதிகள் ?
15 சதவீதம்
- எந்த பகுதியில் நிலச்சரிவு அதிகம் காணப்படும்?
இமய மலைச் சரிவுகள், மேற்கு தொடர்ச்சி மலைச் சரிவுகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகள்
- தமிழ்நாட்டில் எந்த பகுதிகள் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படுகின்றன?
கொடைக்கானல் மற்றும் உதகமண்டலம்
- கடலில் ஏற்படும் பேரலைகளுக்கு என்ன பெயர் ?
சுனாமி
- சுனாமி எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது?
ஜப்பானிய சொல்லான சுனாமி (சு-துறைமுகம் ,நாமி- அலை பொருள்- துறைமுக அலை)
- இந்திய பெருங்கடலில் எந்த ஆண்டு சுனாமி தாக்கியது?
டிசம்பர் 26 2004
- 2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்படுவதற்கான காரணம் என்ன?
காலை 7.59 மணிக்கு ரிக்டர் அளவுகோல் 9.1 ஆற்றல் கொண்ட நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் சுமத்ரா கடற்கரையைத் தாக்கியது
- சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களுக்கு பெருத்த சுகாதார தீங்குகளை ஏற்படுத்தக்கூடிய நச்சுக் கழிவுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அபாயகர கழிவுகள்
- செர்னோபில் அணு உலை விபத்து எப்போது நிகழ்ந்தது ?
ஏப்ரல் 26, 1986
- எந்த ஆண்டு உக்கிரைன் நாடு “கதிரியக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோள பெட்டகம்” என அந்நாட்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது?
2016
- அபாயகர கழிவுகள் என்னென்ன?
கதிரியக்கப் பொருள்கள் ,இரசாயனங்கள், மருத்துவ கழிவுகள், எளிதில் தீப்பற்றக் கூடிய கழிவுகள், வெடிபொருட்கள் ,குடிசார் அபாயகர கழிவுகள்
- வளி மண்டலத்தில் நைட்ரஜன் எத்தனை சதவீதம் உள்ளது?
78.09 சதவீதம்(நைட்ரஜன் தாவரங்களுக்கு உரங்கள் தயாரிப்பதற்கும் காற்றை மந்தமாக்குவதற்கும் பயன்படுகிறது)
- வளிமண்டலத்தில் ஆக்சிஜன் எவ்வளவு சதவீதம் உள்ளது?
- 95 %
- வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு எவ்வளவு உள்ளது?
0.03%
- உட்புற மற்றும் வெளிப்புற காற்றானது சில வாயுக்கள் மற்றும் பிற பொருள்களின் சேர்க்கையால் அதன் இயற்கை பண்புகள் மற்றும் காற்றின் சதவீத மாறுபடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காற்று மாசுபடுதல்
- காற்று மாசுபடுதல் எத்தனை வகைப்படுத்தப்படுகிறது?
இரண்டு: முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மாசுபடுத்திகள்
- ஒரு மூலத்தில் இருந்து நேரடியாக வெளியேற்றப்படும் மாசு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முதன்மை மாசுபடுத்திகள்
- நேரடியாக வெளிப்படுவதில்லை ஆனால் மற்ற முதன்மை மாசுக்கள் வளிமண்டலத்தில் வினை புரிவதால் உருவாக்குபவை?
இரண்டாம் நிலை மாசுக்கள்
- முதன்மை மாசுபடுத்திகள் என்னென்ன?
சல்ஃபர் டை ஆக்சைடு ,நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, துகள்ம பொருட்கள் மற்றும் முதன்மை மாசுபடுத்திகள்
- இரண்டாம் நிலை மாசுபடுத்திகள் என்னென்ன?
தரை மட்ட ஓசோன், பனிப்புகை
- நீரின் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படும்?
நீர் மாசடைதல்
- இந்தியாவில் நீர் மாசடைதல் காண முக்கிய காரணங்கள் என்னென்ன?
நகரமயமாக்கல் ,தொழிற்சாலை கழிவுகள், கழிவு நீர் ,வேளாண் நீர் வழிந்தோடல் மற்றும் முறையற்ற வேளாண் நடைமுறைகள், கடல்நீர் உட்புகுதல், திண்மக்கழிவுகள்
8TH GEOGRAPHY STUDY NOTES |இடர்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services