- ரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தூரத்திற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவது எவ்வாறு அழைக்கப்படும்?
இடம் பெயர்தல்
- இடப்பெயர்வுக்கான காரணிகள் என்ன தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது?
சாதகமான காரணிகள் & பாதகமான காரணிகள்
- ஓர் இடத்தை நோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
சாதக காரணிகள் அல்லது இழு காரணிகள்
- மக்களைத் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற செய்யும் காரணிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
உந்து காரணிகள் அல்லது பாதகக் காரணிகள்
- இடப்பெயர்வுக்கான காரணிகள் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
ஐந்து : சூழியல் அல்லது இயற்கை காரணிகள், பொருளாதார காரணிகள், சமூக மற்றும் பண்பாட்டு காரணிகள், மக்கள் தொகை காரணிகள், அரசியல் காரணிகள்
- இயற்கை காரணிகளில் இழு காரணிகள் என்னென்ன?
இடர் குறைவாக உள்ள மண்டலங்கள், உகந்த காலநிலை, இயற்கை வளங்கள் மற்றும் கனிமங்கள் மிகுந்த பகுதிகள்
- இயற்கை காரணிகளில் உந்து காரணிகள் என்னென்ன?
இடர் பாதிக்கும் மண்டலங்கள் ,கடுமையான காலநிலை நிகழ்வுகள், விளைச்சல் பொய்த்தல் மற்றும் உணவு பற்றாக்குறை
- பொருளாதார காரணிகளில் இழு காரணிகள் என்னென்ன?
வேலை வாய்ப்பிற்கு ஏற்ற சூழல்கள்
- பொருளாதார காரணிகளில் உந்து காரணிகள் என்னென்ன?
வேலையின்மை
- சமூக மற்றும் பண்பாட்டோடு காரணிகளில் இழு காரணிகள் என்னென்ன?
ஒருங்கிணைப்பு
- சமூக மற்றும் பண்பாட்டோடு காரணிகளில் உந்து காரணிகள் என்னென்ன?
குடும்ப முரண்பாடு (பூசல்கள்)
- மக்கள் தொகை காரணிகளில் இழு காரணிகள் என்னென்ன?
குறைவான மக்கள்தொகை
- மக்கள் தொகை காரணிகளில் உந்து காரணிகள் என்னென்ன?
மிகை மக்கள் தொகை பெருக்கம்
- அரசயல் காரணிகளில் இழு காரணிகள் என்னென்ன?
அரசியல் பாதுகாப்பு ,தனித்துவம் மற்றும் சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு, குறைந்த செலவு எளிதில் கிடைக்கும் நகர்புற சேவைகள் சுகாதாரம்
- அரசியல் காரணிகளில் உந்து காரணிகள் என்னென்ன?
போர் ,சமூக உரிமைகள் ,அமைதியின்மை ,பாதுகாப்பு சார்ந்தவை இனம் மதம் மற்றும் கலாச்சார துன்புறுத்தல் ,குறைவான அல்லது பற்றாக்குறையான நகர்ப்புற சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதி
- எந்த நாடுகளில் புலம்பெயர்ந்தோரில் ஆண்களை விட பெண்களே அதிகம்?
ஐரோப்பா, வட அமெரிக்கா ,ஆஸ்திரேலியா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன்
- எந்த நாடுகளில் பெண்களை விட ஆண்களே அதிகம் புலம் பெயர்கிறார்கள்?
ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா
- 2017 ஆம் ஆண்டில சர்வதேச புலம்பெயர்வில் உலகின் மிகப்பெரிய நாடாக உள்ளது எது ?
இந்தியா( 17 மில்லியன்)
- இந்தியாவைத் தொடர்ந்து சர்வதேச புலம்பெயர்வில் மிகப்பெரிய நாடாக உள்ளது எது ?
மெக்சிகோ (13 பில்லியன்)
- நிர்வாக எல்லை அடிப்படையில் இடப்பெயர்வின் வகைகள் என்னென்ன?
உள்நாட்டு இடம் பெயர்வு (1. ஊரகத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி இடம் பெயர்தல்,2. நகரத்திலிருந்து நகர் புறத்திற்கு இடம்பெயர்தல் ,3.ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு இடம்பெயர்தல்,4. நகர்ப்புறத்தில் இருந்து ஊரகப்பகுதி இடம் பெயர்தல்) சர்வதேச இடம்பெயர்வு
- இடம்பெயர்பவரின் விருப்பத்தின் அடிப்படையில் இடம்பெயர்தல் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
தன்னார்வ இடம்பெயர்வு ,தன்னார்வமில்லா அல்லது கட்டாய இடம்பெயர்வு
- இடம்பெயர்ந்த இடத்தில் தங்கும் கால அளவின் அடிப்படையில் இடம்பெயர்தல் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?
குறுகிய கால இடப் பெயர்வு ,நீண்ட கால இடப் பெயர்வு, பருவகால இடப்பெயர்வு
- 2017ல் சர்வதேச அளவில் புலம் பெயர்வோர் எண்ணிக்கை எவ்வளவு ?
258 மில்லியன்கள்
- இடம் பெயர்தலின் விளைவுகள் என்னென்ன?
மக்கள் தொகை விளைவுகள், சமூக விளைவுகள் ,பொருளாதார விளைவுகள்,சுற்றுச்சூழல் விளைவுகள்
- பின்தங்கிய நாடுகளை சார்ந்த தொழில் திறன் கொண்ட மக்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை தேடி வளர்ந்த நாடுகளுக்கு செல்கின்றனர் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல் (Brain drain)
- அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல் விளைவாக பூர்வீக பகுதிகள் பின்தங்கிய நிலையை அடைகின்றன இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அறிவுசார் வெளியேற்ற விளைவு(Back wash effect)
- நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் அதிகரிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நகரமயமாதல்
- நகரமயமாக்கம் எத்தனை காரணிகளால் நிர்ணயக்கப்படுகிறது?
மூன்று: இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி, ஊடகத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்தல், ஊரகப் பகுதிகளை நகர்புறங்களாக மறுசீரமைப்பு செய்தல்
- எந்த ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகை ஊரக மக்கள் தொகையை விட அதிகமானது?
2007
- உலகின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அமைந்த குறிப்பிடத்தக்க நகரங்கள் என்னென்ன?
மெசபடோமியாவில் உர் மற்றும் பாபிலோன், எகிப்திலுள்ள தீப்ஸ் மற்றும் அலெக்சாந்திரியா ,கிரேக்கத்தின் ஏதன்ஸ் ,இந்தியாவின் ஐரோப்பா மற்றும் மொகஞ்சதாரோ
- இந்தியா சீனா மற்றும் நைஜீரியா நாடுகளில் 2018 -2050ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் உலக நகர்ப்புற மக்கள்தொகை வளர்ச்சியில் எத்தனை சதவீதத்தை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது?
35%
- 2018 -2050ஆம் ஆண்டு காலத்தில் இந்தியா எவ்வளவு நகர்ப்புற மக்கள் தொகையை கொண்டிருக்கும் என கணக்கிடப்படுகிறது?
416 மில்லியன்
- பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
இடைக்காலம்
- 1950 இல் உலகின் மக்கள் தொகையில் 30 சதவிகிதம் நகர மக்கள் தொகையாகும். இது 2050ல் எவ்வளவாக உயரும் என கணக்கிடப்படுகிறது?
68 சதவீதம்
- 2018ன படி அதிக மக்கள்தொகை கொண்ட உலகின் முதல் ஐந்து மாநகரங்கள் எது?
டோக்கியோ (ஜப்பான்), புதுடில்லி (இந்தியா ) ,சாங்காய் (சீனா) ,மெக்ஸிகோ நகரம் (மெக்சிக்கோ), சா பாலோ (பிரசில்)
- நகரமயமாதலின் விளைவுகள் என்னென்ன?
குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதிகள் அதிகளவில் உருவாக்கம், மக்கள் நெரிசல் ,தண்ணீர் விநியோகம், வடிகால் மற்றும் சுகாதாரம் அமைப்புகளில் கடினம் ,போக்குவரத்து மற்றும் நெரிசல் & மாசடைதல்
8TH GEOGRAPHY STUDY NOTES |இடம்பெயர்தல் மற்றும் நகரமயமாதல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services