- “கற்றல் படைப்பாற்றலை ஏற்படுத்தும் ,படைப்பாற்றல் சிந்தனையைத் தூண்டும், சிந்தனை அறிவாற்றலை அளிக்கும்,அறிவாற்றல் உங்களை சிறந்தவராக்கும்” எனக் கூறியவர் யார்?
ஏ.பி.ஜே அப்துல் கலாம்
- “பொது ஏற்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பண்டங்கள் வாங்கும்போது அதற்கான செலுத்துத் தொகையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எதனையும் பணம் என்று கூறலாம் ” என கூறியவர் யார்?
இராபர்ட்சன்
- பணம் (Money) என்ற வார்த்தை எதிலிருந்து பெறப்பட்டது ?
ரோம் வார்த்தை ”மொனேட்டா ஜுனோ”
- ”மொனேட்டா ஜுனோ” என்பது என்ன?
ரோமின் பெண் கடவுள் மற்றும் ரோம் பேரரசின் குடியரசு பணம்
- இந்தியாவின் ரூபாய் என்ற சொல் எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது?
சமஸ்கிருத வார்த்தை ‘ரூபியா’
- ‘ரூபியா’ என்பதன் பொருள் என்ன?
வெள்ளி நாணயம்
- சமீபகால பணத்தின் வடிவங்கள் என்னென்ன?
பண்டப்பணம், உலோக பணம், காகிதப் பணம் ,கடன் பணம் , நிகர் பணம்
- கிமு எட்டாம் நூற்றாண்டில் லிடியாவின் எந்தப் பேரரசர் உலோக நாணயத்தை கண்டுபிடித்தார்?
பேரரசர் மிடாஸ்
- இந்தியாவில் கிமு ஆறாம் நூற்றாண்டில் முதன் முறையாக மகாஜனபதங்கள் ஆட்சியில் என்ன நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன?
பூரணாஸ், கர்ஷபணம்,பனாஸ்
- தங்கம், வெள்ளி ,தாமிரம் ,அல்லது ஈயம் போன்ற நாணயங்களை எந்த ஆட்சியாளர்கள் துளையிட்டு வெளியிட்டனர்?
மௌரியர்கள்
- இந்திய கிரேக்க குஷான அரசர்கள் எந்த மரபின்படி சித்திரங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களை அறிமுகப்படுத்தினர்?
கிரேக்க மரபு
- 12வது நூற்றாண்டில் டெல்லி ,துருக்கி சுல்தான்கள் தங்கள் நாணயங்களில் இந்திய அரசர்களின் உருவத்தை நீக்கி எதனை பொறித்து வெளியிட்டனர்?
இஸ்லாமிய எழுத்துக்கள்
- டெல்லி சுல்தான்கள் தங்கம் வெள்ளி மற்றும் தாமிரத்தால் ஆன நாணயங்களை எவ்வாறு அழைத்தனர்?
டாங்கா
- டெல்லி சுல்தான்கள் மதிப்பு குறைந்த நாணயங்களை எவ்வாறு அழைத்தனர்?
ஜிட்டால்
- 1526ல் செர்ஷா சூரி ஹுமாயூனை தோற்கடித்து ஆட்சியில் இருந்தபோது எத்தனை கிராம் எடையுள்ள வெள்ளி நாணயத்தை வெளியிட்டார் ?
178 கிராம்
- செர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ரூபியா
- எந்த ஆண்டு முகலாயப் பேரரசர் பாருக்ஷாயர் ஆங்கிலேயர்களுக்கு முகலாய பண நாணயத்தைப் பம்பாய் அச்சகத்தில் அச்சடிக்க அனுமதி அளித்தார் ?
1717
- ஆங்கில தங்க நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கரோலினா
- ஆங்கில வெள்ளி நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஏஞ்ஜேலினா
- ஆங்கில செம்பு நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கப்ரூன்
- ஆங்கில வெண்கல நாணயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
டின்னி
- பண்டங்கள் கொடுத்து பண்டங்களை வாங்குதல் முறைக்கு என்ன பெயர்?
பண்டமாற்று முறை
- ஒரு நாட்டினுடைய காகித பணத்தை கட்டுப்படுத்துவதும் ஒழுங்குபடுத்துவதும் எது?
அந்த நாட்டின் மைய வங்கி
- மக்கள் தங்கள் பணத்தின் ஒரு பகுதியை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்து அந்த தொகையை வசதியாக காசோலை மூலம் திரும்பப் பெறலாம் அது எவ்வாறு அழைக்கப்பட்டது?
காசோலை (கடன் பணம் அல்லது வங்கி பணம்)
- பண பரிணாம வளர்ச்சியின் இறுதிநிலை (நிகர்பணம்) எது?
உண்டியல், கருவூல பட்டியல், பத்திரம் ,கடன் பத்திரங்கள் ,சேமிப்பு பத்திரங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள்
- சமீபத்திய நெகிழிப் பணம் எது?
கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள்
- வங்கியில் கணினி அமைப்புகளில் உள்ள மின்னணு முறையின் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவது எவ்வாறு அழைக்கப்படும்?
மின்னணு பணம்
- வாடிக்கையாளர் அல்லது பிற நிதி நிறுவனங்கள் வலைத்தளத்தின் மூலம் ஒரு பரந்த நிதிப் பரிவர்த்தனைகளை நடத்தும் ஒரு மின்னணு முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நிகழ்நிலை வங்கி அல்லது இணைய வங்கி
- மின்னணு வங்கி வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT)
- பணத்தால் ஒரு நாட்டிலுள்ள பண்ட மற்றும் பணிகளை வாங்கும் சக்தியை குறிப்பது எது ?
பணத்தின் மதிப்பு
- பணத்தின் மதிப்பு எத்தனை வகைப்படும் ?
இரண்டு : பணத்தின் அக மதிப்பு பணத்தின் புற மதிப்பு
- உள்நாட்டில் உள்ள பண்ட மற்றும் பணிகளின் வாங்கும் சக்தியை குறிப்பது எது?
பணத்தின் அக மதிப்பு
- வெளிநாட்டிலுள்ள பண்ட மற்றும் பணிகளை வாங்கும் சக்தியை குறிப்பது எது?
பணத்தின் மதிப்பு
- பணத்தின் (ரூபாய்) குறியீடு யாரால் வடிவமைக்கப்பட்டது ?
தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திரு .உதயகுமார்
- இந்திய பணத்திற்கான குறியீடு இந்திய அரசால் எந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது?
ஜூலை 15 2010
- யாருடைய கருத்துப்படி பணம் என்பது ஒரு கடினமான கருத்தாகும்?
ஸ்டோவ்ஸ்கி
- “பணம் அதன் பணிகளால் வரையறுக்கப்படுகிறது. எதுவெல்லாம் பணமாக கருதப்படுகிறதோ அவை பணமாக பயன்படுத்தப்படுகிறது “எனக் கூறியவர் யார்?
சர்ஜான் ஹிக்ஸ்
- “எதையெல்லாம் செய்யவல்லதோ, அதுவே பணம் “என கூறியவர் யார்?
பேராசிரியர் வாக்கர்
- பணத்தின் பணிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?
முதன்மை அல்லது முக்கிய பணிகள், இரண்டாம்நிலை பணிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பணிகள்
- பணத்தின் முதன்மை அல்லது முக்கிய பணி எது?
பரிமாற்றக் கருவி அல்லது பண செலுத்துகை மற்றும் பண மதிப்பின் அளவுகோல்
- பணத்தின் இரண்டாம் நிலை பணிகள் என்னென்ன?
எதிர்கால செலுத்துகைக்கான நிலை மதிப்பு, மதிப்பின் நிலை கலன் அல்லது வாங்கும் சக்தி நிலைக்கலன்,மாற்று மதிப்பு அல்லது மாற்று வாங்கும் சக்தி
- பணத்தின் வரையறுக்கப்பட்ட பணிகள் என்னென்ன?
கடன் அடிப்படையில் இயக்கப்படுகிறது ,மூலதனத்தின் உற்பத்தி திறன் அதிகரிப்பு, நாட்டு வருவாயின் அளவீடு மற்றும் விநியோகம்
- விலைகள் உயர்ந்து பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதை குறிப்பது எது?
பணவீக்கம்
- விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வதை குறிப்பது எது ?
பணவாட்டம்
- வருவாயில் நடப்பு நுகர்வுக்கு பயன்படாத ஒரு பகுதி எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
சேமிப்பு
- வாடிக்கையாளர்கள் தன்னுடைய நடப்பு வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்க ஆரம்பிக்கும் கணக்கிற்கு என்ன பெயர் ?
சேமிப்பு கணக்கு
- வர்த்தக நிறுவனங்கள் வர்த்தகர்கள் மற்றும் பொது அதிகாரிகளால் ஆரம்பிக்கப்படும் கணக்கு?
நடப்பு கணக்கு வைப்பு
- நிரந்தர வைப்பு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கால வைப்பு
- எப்போது இந்தியாவில் இந்திய அரசாங்கம் கருப்பு பணத்திற்கு எதிராக அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்வதாக அறிவித்தது?
நவம்பர் 8 ,2016
- அரசாங்கத்திற்கு செலுத்தாத எந்த ஒரு பணமும் எவ்வாறு அழைக்கப்படும்?
கருப்புபணம்
- பண மோசடி நடவடிக்கை தடுப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
2002
- ஊழல் தடுப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1988
- வெளிக் கொணரப்பட்ட வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து மசோதா (வரி விதித்தல் )எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
2015
- பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 1988 எந்த ஆண்டு திருத்தப்பட்டது?
2016
- ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
2016
8TH ECONOMICS STUDY NOTES |பணம் சேமிப்பு மற்றும் முதலீடுகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services