TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- அனுவை அதனை விட சிறிய கூறுகளாகப் பிரிக்க இயலாது என்று கூறிய அறிவியல் அறிஞர்?
ஜான் டால்டன்
- பொருள்களில் உள்ள எலக்ட்ரான்களின் ஓட்டம் எதற்கு காரணமாகிறது?
மின்னோட்டம்
- பொருள்கள் ஒன்றை ஒன்று விலக்குவதற்கு அல்லது ஈர்ப்பதற்கு காரணமான அடிப்படை பண்பைப் பெற்றிருக்கும் துகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
மின்துகள்
- புரோட்டான்களின் மின்னூட்டம் எது ?
நேர் மின்னூட்டம்
- எலக்ட்ரான்களின் மின்னூட்டம் எது?
எதிர் மின்னோட்டம்
- மின்னூட்டம் எந்த அலகினால் அளவிடப்படுகிறது?
கூலும்
- தனித்து காணப்படும் துகளின் மின்னூட்டமானது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
சிறும மின்னூட்டம்
- சிறும மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?
1.602×10-19 கூலும்
- ஒரு எலக்ட்ரான் மற்றும் ஒரு புரோட்டானில் இருக்கும் மின்னோட்டத்தின் அளவு என்ன?
1.602×10-19 கூலும்
- எலக்ட்ரான்களை பெற்றுக்கொண்ட பொருள் என்ன மின்னூட்டத்தை பெறும்?
எதிர் மின்னோட்டம்
- எலக்ட்ரான்களை இழந்த பொருள் என்ன மின்னூட்டத்தை பெறும்?
நேர் மின்னோட்டம்
- எத்தனை முறைகளில் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மின்துகள் இட மாற்றம் அடைகின்றன?
மூன்று: உராய்வு மூலம் இடமாற்றம் ,கடத்துதல் மூலம் இடமாற்றம், மின்தூண்டல் மூலம் இடமாற்றம்
- மின் துகள்களை தங்களுக்குள் பாய அனுமதிக்கும் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
மின்கடத்திகள்
- மின் துகள்களை தங்களுக்குள் பாய அனுமதிக்காத பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
மின்காப்பு பொருள்கள்
- தொடுதல் மூலம் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மின் துகள்களை இடமாற்றம் செய்யும் முறைக்கு என்ன பெயர் ?
கடத்துதல் மூலம் இடமாற்றம் செய்தல்
- மின்னூட்டம் பெற்ற ஒரு பொருளை மின்னூட்டம் பெறாத பொருளின் அருகே கொண்டு சென்று தொடுதல் இன்றி அதனை மின்னூட்டம் அடைய செய்யும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மின்தூண்டல் மூலம் இடமாற்றம் செய்தல்
- எலக்ட்ரான்கள் குறைந்த மின் அழுத்தம் உள்ள பகுதியில் இருந்து அதிக மின்னழுத்தம் உள்ள பகுதியை நோக்கி பாய தொடங்கும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
மின்னோட்டம்
- இரண்டு மின்னூட்டங்களுக்கு இடையேயான வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மின்னழுத்தம் அல்லது மின்னழுத்த வேறுபாடு
- பொருள் ஒன்றில் மின் துகள்கள் இருப்பதை கண்டறிய பயன்படும் அறிவியல் கருவி எது?
நிலை மின்காட்டி
- எந்த ஆண்டு நிலை மின்காட்டி முதன்முதலாக வடிவமைக்கப்பட்டது?
1600
- நிலைமின் காட்டியை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?
வில்லியம் கில்பர்ட்
- எத்தனை வகை நிலைமின் காட்டிகள் உள்ளன ?
இரண்டு வகை :தக்கைகைப்பந்து நிலை மின்காட்டி, தங்க இலை நிலை மின்காட்டி
- எந்த தத்துவத்தின் அடிப்படையில் நிலைமின் காட்டி செயல்படுகிறது?
ஓரின மின் துகள்கள் ஒன்றையொன்று விலக்கி கொள்கின்றன
- வில்லியம் கில்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட நிலைமின் காட்டி எவ்வாறு அழைக்கப்பட்டது?
வெர்சோரியம்
- உலோக ஊசி ஒன்றினை மேடை ஒன்றில் தொங்கவிடப்பட்டிருந்த அமைப்பிற்கு பெயர் என்ன?
வெர்சோரியம்
- தங்க இலை நிலை மின்காட்டி எந்த ஆண்டு வடிவமைக்கப்பட்டது ?
1787
- தங்க இலை நிலை மின்காட்டியை வடிவமைத்தவர் யார ?
ஆபிரகாம் பெனட்
- ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மின் துகள்களை இடமாற்றம் செய்வதற்கு பெயர் என்ன?
மின்னேற்றம்
- மேகங்களுக்கு இடையிலோ அல்லது மேகங்களுக்கும் புவிக்கும் இடையிலோ மின்னிறக்கம் நடைபெறுவதால் உருவாவது எது?
மின்னல்
- மேகங்களில் நடைபெறும் மின் இறக்கத்திற்கு எடுத்துக்காட்டு எது?
மின்னல்
- மின்னலின் மூலம் மிகப்பெரிய அளவிலான மின்சாரம் மின்னிறக்கம் அடைந்து எவ்வளவு வெப்ப நிலைக்கும் அதிகமான வெப்பம் உருவாகிறது?
30,000°C
- மின் சாதனங்களில் இருக்கும் மின்காப்புறைகள் பழுதாகும்போது நமக்கு மின்னதிர்ச்சி ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எது?
புவித்தொடுப்பு
- மின்னிறக்கம் அடையும் மின்னாற்றலை குறைந்த மின்தடை கொண்ட கம்பியின் மூலம் பூமிக்கு இடமாற்றம் செய்யும் முறைக்கு என்ன பெயர் ?
புவித்தொடுப்பு
- உயரமான கட்டிடங்களை மின்னல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவும் ஒரு கருவி எது ?
மின்னல் கடத்தி
- மின் மூலம் ஒன்றின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் எலக்ட்ரான்கள் பாயும் பாதை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மின்சுற்று
- ஒரு எளிய மின்சுற்றில் எத்தனை கூறுகள் காணப்படுகிறது?
நான்கு: மின்கலம் ,உலோகக் கம்பி, சாவி மற்றும் மின் தடை
- ஒரு மின்சுற்றை எத்தனை வழிகளில் இணைக்கலாம் ?
இரண்டு: தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்பு
- எல் என்ற விலாங்குமீன் எவ்வளவு மின்சாரத்தை உருவாக்கி மின் அதிர்ச்சியை ஏற்படுத்தவல்லது?
650 வாட்ஸ்
- ஒன்றுக்கும் மேற்பட்ட மின் தடைகளையும் மின்னோட்டம் பாய்வதற்கு ஒரே ஒரு பாதையையும் கொண்டுள்ள மின்சுற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தொடர் மின்சுற்று
- எந்த இணைப்பு சுற்றில் அனைத்து கூறுகளிலும் சம அளவிலான மின்னோட்டம் பாயும் ?
தொடர் இணைப்பு சுற்று
- எந்த இணைப்பில் மின்சுற்றிலுள்ள அனைத்து கூறுகளுக்கிடையே உள்ள மின்னழுத்தம் சமமாக இருக்கும் ?
பக்க இணைப்பு சுற்று
- கரைசல் ஒன்றின் வழியே மின்சாரத்தை செலுத்தும் பொழுது கரைசலில் வேதிவினைகள் மின்சாரத்தை கடத்தும் எலக்ட்ரான்களை உண்டுபண்ணுகின்றன. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மின்னோட்டத்தின் வேதிவிளைவு
- மின்னோட்டத்தைச் செலுத்தும்போது கரைசலில் இருக்கும் மூலக்கூறுகள் நேர் மற்றும் எதிர்மின் அயனிகளாக வேதிச் சிதைவடைவது எவ்வாறு அழைக்கப்படும்?
மின்னாற்பகுத்தல்
- உலோகங்களை அவற்றின் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்தெடுத்தல் மற்றும் தூய்மைப்படுத்துதலில் என்ன முறை பயன்படுத்தப்படுகிறது?
மின்னாற்பகுத்தல்
- மின்னாற்பகுத்தலின் மிக முக்கியமான பயன் என்ன ?
மின்முலாம் பூசுதல்
- மின்னோட்டத்தை பாய செய்வதன் மூலம் ஒரு உலோகத்தின் படலத்தை மற்றொரு உலோகத்தின் மேற்பரப்பில் படிய வைக்கும் நிகழ்வுக்கு என்ன பெயர் ?
மின்முலாம் பூசுதல்
- கடத்தியின் வழியே மின்னோட்டம் பாயும்போது அதில் நகரும் எலக்ட்ரான்களும் அதிலுள்ள மூலக்கூறுகளுக்கு மிடையே குறிப்பிடத்தகுந்த அளவில் உராய்வு நடைபெறும் .இந்த நிகழ்வின்போது மின்னாற்றல் என்ன ஆற்றலாக மாற்றப்படுகிறது?
வெப்ப ஆற்றல்
- மின்னோட்டத்தின் போது உராய்வின் மூலம் மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுவதற்கு என்ன பெயர் ?
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு
- அதிக மின்தடையை உடைய டங்ஸ்டன் கம்பி எங்கு பயன்படுத்தப்படுகிறது ?
மின்விளக்குகள்
- அதிக மின்தடையை உடைய நிக்ரோம் கம்பி எங்கு பயன்படுத்தப்படுகிறது ?
பொருள்களை வெப்பப்படுத்த பயன்படும் வீட்டு உபயோகப் பொருட்களில்
- குறைவான உருகுநிலை கொண்ட எந்த உலோக கலவையால் மின் உருகி தயாரிக்கப்படுகிறது?
வெள்ளீயம் மற்றும் காரீயம்
8TH CHEMISTRY STUDY NOTES |மின்னியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services