8TH CHEMISTRY STUDY NOTES |அன்றாட வாழ்வில் வேதியியல்| TNPSC GROUP EXAMS

 


  1. ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்களை கொண்ட கரிம சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

ஹைட்ரோ கார்பன்கள்

  1. ஹைட்ரோகார்பன்கள் எரியும் பொழுது எவற்றை தருகின்றது?

கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராவி

  1. ஹைட்ரோ கார்பன்களின் நீரில் கரையும் திறன் என்ன ?

பெரும்பாலான ஹைட்ரோகார்பன்கள் நீரில் கரையாது

  1. ஹைட்ரோ கார்பன்கள் என்ன நிலையில் காணப்படும் ?

வாயுக்கள் ,திரவங்கள் மற்றும் மெழுகுபோன்ற திண்மங்கள்

  1. மீத்தேன் மற்றும் புரோப்பேன் போன்ற ஹைட்ரோகார்பன்கள் என்ன நிலையில் காணப்படுகிறது?

வாயு

  1. ஹெக்சேன் மட்டும் பென்சீன் போன்ற ஹைட்ரோகார்பன்கள் என்ன நிலையில் காணப்படுகிறது?

திரவங்கள்

  1. பாரபின் போன்ற ஹைட்ரோகார்பன்கள் என்ன நிலையில் காணப்படுகிறது?

திண்மங்கள்

  1. ஹைட்ரோ கார்பன்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வேதிப்பிணைப்புகளை உருவாக்கும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 சங்கிலி தொடராக்கம் (கேட்டினேஷன்)

  1. ஹைட்ரோ கார்பன்களின் பொதுவான நான்கு வகைகள் என்னென்ன?

அல்கேன்கள்,அல்கீன்கள்,அல்கைன்கள் மற்றும் அரீன்கள்

  1. ஒரு கார்பன் அணுவுடன் நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் எது ?

 மீத்தேன்

  1. மீத்தேனின் இயற்பியற் பண்புகள் என்னென்ன?

 ஒரு நிறமற்ற, மணமற்ற மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு

  1. மின்சார உற்பத்தியில் எரிபொருளாகப் பயன்படும் ஹைட்ரோகார்பன் எது?

மீத்தேன்

  1. சதுப்புநில புதர்களில் காணப்படுவதால் மீத்தேன் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

சதுப்பு நில வாயு

  1. இறந்து போன மற்றும் அழுகும் தாவரங்களும் விலங்குகளும் எந்த வாயுவை வெளியிடும் ?

 மீத்தேன்

  1. மீத்தேன் என்பது என்ன வகையான ஆற்றல் வளம் ?

புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளம்

  1. கழிவு நீரில் உள்ள அழுகும் பொருட்களை நுண்ணுயிரிகளைக் கொண்டு சிதைக்கும் பொழுது எவை வெளிவருகின்றது ?

மீத்தேன் வாயு ,கார்பன் டை ஆக்சைடு ,நைட்ரஜன் சல்ஃபைடு

  1. புரப்பேன் என்பதன் இயற்பியல் பண்புகள் என்னென்ன ?

மணமற்ற மற்றும் மிக எளிதில் தீப்பற்றும் ஒரு வாயு, காற்றை விடக் கனமானது

  1. புரப்பேன் வாயு அதிக அழுத்தத்தினால் என்னவாக மாற்றப்படுகிறது ?

 திரவம்

  1. புரப்பேனுடன் எது சேர்த்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயுவாக பயன்படுத்தப்படுகிறது?

பியூட்டேன்

  1. புரப்பேனுடன் LPG சிலிண்டர்களில் வாயுக் கசிவை கண்டறிய எது சேர்த்து பயன்படுத்தப்படுகிறது?

மெர்கேப்டன் என்ற துர்நாற்றம் தரும் வேதிப்பொருள்

  1. பியூட்டனின் இயற்பியல் பண்புகள் என்னென்ன ?

அறை வெப்ப நிலையில் வளிமண்டல அழுத்தத்திலும் வாயுவாக உள்ளது, நிறமற்ற மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடியது.

  1. துர்நாற்ற தடுப்பான்கள் போன்ற ஏரோசால் தெளிப்பான்களின் உந்தியாகவும் எரிபொருளாகவும் பயன்படுவது எது?

பியூட்டன்

  1. தூய பியூட்டேன் எங்கு பயன்படுத்தப்படுகிறது ?

குளிர்பதனப் பெட்டிகள், டார்ச் விளக்குகளில் எரிபொருளாகவும்

  1. பென்டேன்கள் என்னவாக பயன்படுத்தப்படுகிறது?

ஆய்வகங்களில் கரைப்பான்கள் மற்றும் எரிபொருளாகவும்

  1. பாலிஸ்டைரீன் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்ய பயன்படுவது எது?

பென்டேன்

  1. இயற்கை வாயு என்பது எவற்றை உள்ளடக்கிய கலவை?

மீத்தேன் உயர் அல்கேன்கள் மற்றும் சிறிதளவு கார்பன்-டை-ஆக்சைடு ,நைட்ரஜன்,ஹைட்ரஜன் சல்பைடு

  1. இயற்கை வாயுவில் மீத்தேன் மற்றும் மீத்தேன் என்ற கீழ்நிலை ஹைட்ரோகார்பன்கள் இருந்தால் அதை எவ்வாறு அழைக்கப்படும்?

  உலர்வாயு

  1. இயற்கை வாயுவில் புரப்பேன் மற்றும் பியூட்டேன் போன்ற உயர் ஹைட்ரோகார்பன்கள் இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

ஈரவாயு

  1. இயற்கை வாயு கடலின் அடியில் உள்ள பாறைகளுக்கு இடையே உள்ள எண்ணெயுடன் சேர்த்து வெளி கொண்டுவரப்படுகிறது. இது எவ்வாறு அழைக்கப்படும் ?

இணைந்த வாயு

  1. இயற்கை வாயு எந்தெந்த இடங்களில் காணப்படுகிறது?

திரிபுரா, ராஜஸ்தான் மகாராஷ்டிரா ஆந்திர பிரதேசம் (கிருஷ்ணா கோதாவரி படுகையில் )மற்றும் தமிழ்நாடு (காவிரி டெல்டா)

  1. இயற்கை வாயுவில் எது முதன்மையாக இருக்கும்?

மீத்தேன்

  1. வெப்பப்படுத்தும் பொழுது இயற்கை வாயு எவற்றை தரும்?

ஹைட்ரஜன் ,கார்பன்

  1. உர உற்பத்தியில் பயன்படும் வாயு எது?

ஹைட்ரஜன் வாயு

  1. எந்த வாயுவைக் கொண்டு அருங்காட்சியகங்களில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாக்கலாம் ?

இயற்கை வாயு

  1. அழுத்தப்பட்ட இயற்கை வாயுவில் முதன்மையாக உள்ள ஹைட்ரோகார்பன் எது?

மீத்தேன் 88.5%

  1. அழுத்தப்பட்ட இயற்கை வாயுவில் உள்ள ஈத்தேன் சதவீதம் எவ்வளவு?

5.5%

  1. அழுத்தப்பட்ட இயற்கை வாயுவில் உள்ள புரோப்பன் சதவீதம் எவ்வளவு?

 3.7%

  1. அழுத்தப்பட்ட இயற்கை வாயுவில் உள்ள பியூட்டேன் சதவீதம் எவ்வளவு?

 5.5%

  1. அழுத்தப்பட்ட இயற்கை வாயுவில் உள்ள பென்டேன் சதவீதம் எவ்வளவு?

 5.5%

  1. கார்பன் மோனாக்சைடு வாயு ,நைட்ரஜன் வாயு கலந்த கலவை பெயரென்ன?

 உற்பத்தி வாயு

  1. செஞ்சூடாக்கப்பட்ட கல் கரியின் மீது எவ்வளவு வெப்பநிலையில் காற்றுடன் கலந்துள்ள நீராவியை செலுத்துவதன் மூலம் உற்பத்தி வாயு உருவாக்கப்படுகிறது?

1100°C

  1. இரும்பு எஃகு உற்பத்தி தொழிற்சாலைகளில் எரிபொருளாக பயன்படுவது எது ?

உற்பத்தி வாயு

  1. அமெரிக்காவில் உற்பத்தி வாயு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 மரவாயு

  1. இங்கிலாந்தில் உற்பத்தி வாயு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

உறிஞ்சு வாயு

  1. ஹைட்ரஜன் ,மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு கொண்ட ஒரு கலவைக்கு பெயர் என்ன ?
SEE ALSO  8TH STD HISTORY STUDY NOTES | வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை

 நிலக்கரி வாயு

  1. எக்கு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் திறந்த வெப்ப உலையில் பயன்படுவது எது?

நிலக்கரி வாயு

  1. கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களின் கலவைக்கு பெயரென்ன?

நீர் வாயு

  1. நீர் வாயு நீராவியை கல்கரியின் மீது எவ்வளவு வெப்பநிலையில் செலுத்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது?

1000°C

  1. நீர் வாயு வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

 தொகுப்பு வாயு

  1. மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வாயுக்களின் கலவைக்கு பெயர் என்ன?

உயிரி வாயு

  1. காற்றில்லா சூழ்நிலையில் கரிமப் பொருள்கள் சிதைவடையும் பொழுது என்ன வாயு உருவாகிறது ?

உயிரி வாயு

  1. உயிரி வாயு என்ன வகையான ஆற்றல் மூலம் ?

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

  1. நிலக்கரி எவற்றைக் கொண்ட கலவை?

தனித்த கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ,ஆக்சிஜன் ,நைட்ரஜன் மற்றும் சல்பர் கொண்ட கார்பனின் சேர்மங்களை கொண்ட கலவை.

  1. நிலக்கரி எத்தனை முதன்மையாக கொண்டு உள்ளது?

கார்பன்

  1. இறந்த தாவரங்கள் நிலக்கரியாக மாறும் மெதுவான நிகழ்ச்சிக்கு பெயர் என்ன ?

கார்பனாதல்

  1. நிலக்கரி பூமியிலிருந்து எத்தனை வழிகளில் வெளியே எடுக்கப்படுகிறது?

இரண்டு வழிகள்: மேற்பகுதி சுரங்கம் தோன்றுதல் மற்றும் கீழ் பகுதி சுரங்கம் தோண்டுதல்

  1. உலக அளவில் எத்தனை நாடுகளில் நிலக்கரி இருப்பு காணப்படுகின்றது?

 70 நாடுகள்

  1. மிகப்பெரிய நிலக்கரி இருப்புகள் காணப்படும் நாடுகள் என்னென்ன?

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ,ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா

  1. உலகளவில் 30 சதவீத நிலக்கரியை வழங்கி எந்த நாடு முதலாவதாகத் திகழ்கிறது?

அமெரிக்கா

  1. இந்தியாவில் நிலக்கரி வெட்டி எடுத்தல் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1774

  1. இந்தியா உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் எத்தனையாவது பெரிய நாடாக திகழ்கிறது?

 மூன்றாவது

  1. உலகத்தின் நிலக்கரி இருப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு எங்கு உள்ளது?

அமெரிக்கா மற்றும் சீனா

  1. நிலக்கரியை அதில் உள்ள கார்பனின் அளவை பொறுத்தும் ,வெளிவிடும் வெப்ப ஆற்றலைப் எத்தனை வகையாக வகைப்படுத்தப்படுகிறது?

 நான்கு: லிக்னைட் ,துணைபிட்டுமனஸ், பிட்டுமனஸ் மட்டும் ஆந்த்ரசைட்

  1. பழுப்பு நிறமுடைய மிகவும் தரம் குறைந்த நிலக்கரி வகை எது ?

லிக்னைட்

  1. லிக்னைட் நிலக்கரியில் உள்ள கார்பனின் சதவீதம் எவ்வளவு?

 25-35% லிக்னைட்

  1. உலகின் மொத்த நிலக்கரி இருப்பில் ஏறக்குறைய பாதி அளவை கொண்டுள்ள வகை எது?

 லிக்னைட்

  1. லிக்னைட் எதற்கு பயன்படுகிறது ?

மின்சார உற்பத்தியில் மற்றும் இயற்கை வாயு ,உரபொருட்கள் உற்பத்தியில்

  1. லிக்னைட் அடர் நிறமாகவும் கடினமாகவும் ஆகும்பொழுது என்ன வகை நிலக்கரி உருவாகிறது? 

துணைப் பிட்டுமினஸ்

  1. கருமை நிறமுடைய குன்றிய நிலக்கரி வகை எது?

துணைப் பிட்டுமினஸ்

  1. துணைப் பிட்டுமினஸில் உள்ள கார்பனின் சதவீதம் எவ்வளவு?

 35-44%

  1. துணைப் பிட்டுமினஸ் முதன்மையாக எதற்கு பயன்படுகிறது?

 மின்சார உற்பத்திக்கு எரிபொருளாக

  1. எந்த வகை நிலக்கரியில் மற்ற வகைகளை விட குறைந்த அளவு சல்பர் உள்ளது?

துணைப் பிட்டுமினஸ்

  1. அடர் கருமை நிறமும் கடினத் தன்மையும் கொண்ட நிலக்கரி வகை எது?

பிட்டுமினஸ்

  1. பிட்டுமினஸ் வகை நிலக்கரியில் எவ்வளவு சதவீதம் கார்பன் உள்ளது?

 45-86%

  1. பிட்டுமினஸ் நிலக்கரியின் பயன்பாடு என்ன?

இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு கல்கரி வழங்குவது, மின்சாரம் உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது

  1. பிட்டுமினஸ் நிலக்கரியில் இருந்து கிடைக்கும் உப விளைப்பொருட்கள் என்ன?

பெயிண்டுகள், நைலான் மற்றும் பல்வேறு பொருட்கள்

  1. மிகவும் உயர்தரம் கொண்ட நிலக்கரி வகை எது?

ஆந்த்ரசைட்

  1. மிகுந்த கடினத் தன்மையும் அடர் கருமை நிறத்தையும், பளபளக்கும் தன்மையும் கொண்ட உயர் தரமான நிலக்கரி வகை எது?

ஆந்த்ரசைட்

  1. ஆந்த்ரசைட் நிலக்கரியில் உள்ள கார்பனின் சதவீதம் என்ன?

 86-97%

  1. எந்த நிலக்கரி வகை நீண்ட நேரம் எரிந்து அதிக வெப்பத்தையும் குறைவான தூசியையும் தரும்?

ஆந்த்ரசைட்

  1. நிலக்கரியின் பயன்கள் என்னென்ன?

 வெப்பத்தையும் ,மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய ,உயவுப் பொருட்கள் நீர் ஒட்டா பொருட்கள், ரெசின்கள் அழகு சாதனப் பொருட்கள் ஷாம்பூ மற்றும் பற்பசை போன்றவை தயாரிக்கப்பயன்படும் சிலிக்கன் வழி பொருட்களை உற்பத்தி செய்ய, கரிமுக பூச்சுகளில் அழகுசாதன பொருட்களிலும் ,காகிதம் தயாரிப்பில் அலுமினா தூய்மைப்படுத்தும் தொழிற்சாலைகளை உருவாக்க போன்றவைகள்

  1. நீர் மற்றும் காற்று சுத்தப்படுத்தும் வடிக்கட்டுகளிலும், சிறுநீரக சுத்திகரிப்பு கருவிகளிலும் பயன்படுவது எது?

நிலக்கரியிலிருந்து பெறப்படும் செயல்மிகு கரி

  1. நிலக்கரியை காற்றில்லா சூழலில் சிதைத்து வடிதலுக்கு உட்படுத்தி என்னென்ன பொருட்கள் பெறப்படுகிறது ?

சோப்புகள், ஆஸ்பிரின் மாத்திரைகள் ,கரைப்பான்கள் ,காயங்கள் பிளாஸ்டிக்குகள், செயற்கை இழைகள் ( ரேயான் நைலான் போன்றவை)  கல்கரி ,நிலக்கரித்தார், அமோனியா மற்றும் நிலக்கரி வாயு முதலியன

  1. கல்கரி எத்தனை சதவீதம் கார்பன் கொண்டுள்ளது?

98%

  1. பெரும்பாலும் உலோகங்களை அவற்றின் தாதுகளில் இருந்து பிரித்தெடுத்தலில் ஒடுக்கியாக பயன்படுவது எது ?
SEE ALSO  8TH ZOOLOGY STUDY NOTES |தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு| TNPSC GROUP EXAMS

கல்கரி

  1. கல்கரி எந்த எரிபொருள் வாயுக்களை உற்பத்தி செய்ய பயன்படுகிறது?

உற்பத்தி வாயு ,நீர் வாயு ஆகியவற்றை

  1. கரித்தாரின் இயற்பியல் பண்பு என்ன?

கெட்டியான விரும்பத்தகாத மணமுடைய ஒரு கருமை நிற திரவம்

  1. கரித்தாரினை பின்னக் காய்ச்சி வடிக்கும் போது என்னென்ன வேதிப்பொருட்கள் கிடைக்கின்றன ?

பென்சீன்,  டொலுவீன் பீனால் மற்றும் அணிலின்

  1. கரித்தாரிலிருந்து தரப்படும் வேதிப் பொருட்களில் என்னென்ன தயாரிக்க பயன்படுகிறது?

சாயங்கள் ,வெடிபொருட்கள், செயற்கை இழைகள், மருந்துகள் மற்றும் பூச்சிகொல்லிகள்,நாப்தலீன் உருண்டைகள் தயாரிப்புகளில்

  1. நகர வாயு என்று அழைக்கப்படுவது எது?

கரிவாயு

  1. கரி வாயு எந்த வாயுக்களின் கலவை?

ஹைட்ரஜன், மீத்தேன் மற்றும் கார்பன் மோனாக்சைடு

  1. நிலக்கரியிலிருந்து கிடைக்கும் எந்த பொருள் அமோனியம் சல்பேட் அமோனியம் காப்பர் பாஸ்பேட் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது?

அமோனியா

  1. கருப்பு வைரம் என்று அழைக்கப்படுவது எது ?

நிலக்கரி

  1. 1000கிகி நிலக்கரி எவற்றை உள்ளடக்கியது ?

 700கி.கி கல்கரி ,பல லிட்டர்கள் அமோனியம், 50 லிட்டர் கரித்தார் மற்றும் 400மீ³ கரிவாயு

  1. பெட்ரோலியம் என்ற சொல் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது?

 இலத்தீன் மொழிகள் :பெட்ரா மற்றும் ஓலியம்

  1. பெட்ரா மற்றும் ஓலியம் என்ற லத்தீன் மொழியின் பொருள் என்ன ?

 பெட்ரா- பாறை ; ஓலியம்-எண்ணெய்

  1. பழங்காலத்தில் கடலில் வாழ்ந்த உயிரினங்கள் இறந்து அழுகும் பொழுது உருவான ஒரு படிம எரிபொருள் எது ?

பெட்ரோலியம்

  1. முதன்மை படிம எரிபொருட்கள் என அழைக்கப்படுபவை?

இயற்கை வாயு மற்றும் கச்சா எண்ணெய்

  1. பழங்கால நாகரிகங்களில் கச்சா எதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது ?

ஒட்டும் பொருள்களாக

  1. உலகின் முதன்மையான பெட்ரோலியம் உற்பத்தி நாடுகள் என்னென்ன ?

அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஈரான், ரஷ்யா மற்றும் மெக்சிகோ

  1. இந்தியாவில் எங்கு பெட்ரோலியத்தின் பரவல் காணப்படுகிறது?

அசாம், குஜராத், மகாராஷ்டிரா (மும்பை),ஆந்திரப்பிரதேசம் (கோதாவரி கிருஷ்ணா நதி படுகைகள்), தமிழ்நாடு (காவிரிப்படுகை)

  1. உலகின் முதல் பெட்ரோலிய எண்ணெய் கிணறு எந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் தொடங்கப்பட்டது ?

 1839

  1. இரண்டாவது எண்ணெய்க் கிணறு இந்தியாவில் 1867 ஆம் ஆண்டு எந்த இடத்தில் தோண்டப்பட்டது ?

அசாமில் மாக்கும் என்ற இடம்

  1. உப விளைபொருட்களை பெட்ரோலியத்திலிருந்து பிரித்தெடுக்கவும் தேவையற்ற மாசுக்களை நீக்கவும் செயல்படுத்தப்படும் முறை எவ்வாறு அழைக்கப்படும்?

சுத்திகரிப்பு

  1. பெட்ரோலியம் எவற்றை உள்ளடக்கிய கலவை?

பெட்ரோலிய வாயு, பெட்ரோல் டீசல் ,மண்ணெண்ணெய், உயவு எண்ணெய் ,பாரபின் மெழுகு

  1. பெட்ரோலியத்தில் உள்ள கலவைகள் எதன் மூலம் பிரிக்கப்படுகிறது?

 பின்னக் காய்ச்சி வடித்தல்

  1. தூய்மையற்ற பெட்ரோலியம் முதலில் அந்த வெப்ப நிலையில் உலையிலா வெப்ப படுத்தப்படுகிறது?

 100°C

  1. பயன்தரும் பல பொருட்கள் பெட்ரோலியத்திலிருந்தும் இயற்கை வாயுவில் இருந்தும் கிடைக்கின்றன. இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பெட்ரோ கெமிக்கல்ஸ்

  1. பெட்ரோ கெமிக்கல்ஸ் எது தயாரிக்க பயன்படுகிறது?

டிடெர்ஜெண்டுகள், செயற்கை இழைகள், மற்றும் பாலித்தீன்

  1. கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவது எது?

பெட்ரோலியம்

  1. உலர் சலவை செய்வதற்கு ஒரு கரைப்பானாக பயன்படுவது எது?

 பெட்ரோல்

  1. மெழுகுவர்த்திகள், களிம்பு மருந்துகள் ,எழுத பயன்படும் மை,வண்ணம் தீட்டும் பென்சில்கள் தயாரிக்க பயன்படுவது எது?

 பாராபின் மெழுகு

  1. பிட்டுமன் மற்றும் அஸ்பால்ட்ஸ முதலியவை எதற்கு பயன்படுகிறது ?

 சாலைகள் அமைக்க

  1. பெட்ரோலியத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட வாயு எந்த வெப்பநிலையில் பெறப்படுகிறது ?

 40 °C குறைவாக

  1. பெட்ரோலியத்திலிருந்து பெட்ரோல் எந்த வெப்பநிலையில் பெறப்படுகிறது?

 40 °C – 205 °C

  1. பெட்ரோலியத்திலிருந்து நாப்தலின் எந்த வெப்பநிலையில் பெறப்படுகிறது?

 60°C – 100°C

  1. பெட்ரோலியத்திலிருந்து மண்ணெண்ணெய் எந்த வெப்பநிலையில் பெறப்படுகிறது ?

175 °C – 325°C

  1. பெட்ரோலியத்திலிருந்து டீசல் எந்த வெப்பநிலையில் பெறப்படுகிறது ?

250°C – 350°C

  1. பெட்ரோலியத்திலிருந்து உயவு எண்ணெய் எந்த வெப்பநிலையில் பெறப்படுகிறது ?

 300°C – 370°C

  1. பெட்ரோலியத்திலிருந்து எரிபொருள் எண்ணெய் எந்த வெப்பநிலையில் பெறப்படுகிறது ?

370°C – 600°C

  1. எரியும் பொழுது வெப்ப ஆற்றலைத் தரும் எந்தப் பொருளும் எவ்வாறு அழைக்கப்படும் ?

 எரிபொருள்

  1. இயற்பியல் நிலையை பொறுத்து எரிபொருட்கள் எத்தனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?

 3: திட, திரவ மற்றும் வாயு எரிபொருட்கள்

  1. எந்த வகை எரிபொருட்கள் முதன்முதலில் மனிதனால் பயன்படுத்தப்பட்டது ?

திட எரிபொருட்கள்

  1. எந்த எரி பொருட்கள் எரியும் பொழுது அதிக ஆற்றலைத் தரும் ?

 திரவ எரிபொருட்கள்

  1. எரிபொருள் எதனை ஒரு முக்கிய பகுதிப் பொருளாகக் கொண்டுள்ளது ?

கார்பன்

  1. ஓரலகு நிறையுடைய எரிபொருள் எரியும் பொழுது வெளிவிடப்படும் வெப்ப ஆற்றலே எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 குறிப்பிடத்தக்க ஆற்றல்/ ஓரலகு நிறைக்கான ஆற்றல்

  1. எரிபொருட்களின் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஆற்றலை அளவிட பயன்படுவது எது ?

குறிப்பிடத்தக்க ஆற்றல்/ஓரலகு நிறைக்கான ஆற்றல்

  1. குறிப்பிடத்தக்க  ஆற்றலின் அலகு என்ன?

Jkg^-1

  1. சாதாரண சூழ்நிலைகளில் நிலையான அழுத்தத்தில் ஒரு எரிபொருள் முழுமையாக எரிந்து வெளிவிடும் வெப்ப ஆற்றலின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
SEE ALSO  12TH ETHICS STUDY NOTES | இந்தியப் பண்பாடும்  சமயங்களும் | TNPSC GROUP EXAMS

கலோரி மதிப்பு

  1. கலோரி மதிப்பு எந்த அளவில் அழைக்கப்படுகிறது?

KJ/Kg

  1. மாட்டு சாண கட்டி எரிபொருளின் கலோரி மதிப்பு என்ன?

 6000-8000

  1. மர எரிபொருளின் கலோரி மதிப்பு என்ன?

 17000-22000

  1. நிலக்கரி எரிபொருளின் கலோரி மதிப்பு என்ன?

25000-33000

  1. 45000 கலோரி மதிப்பு கொண்ட எரிபொருட்கள் என்னென்ன?

பெட்ரோல் ,மண்ணெண்ணெய், டீசல்

  1. 50000 எரிபொருளின் கலோரி மதிப்பு என்ன?

மீத்தேன்,CNG

  1. உயிரி வாயு எரிபொருளின் கலோரி மதிப்பு என்ன?

35000-40000

  1. ஹைட்ரஜன் எரிபொருளின் கலோரி மதிப்பு என்ன?

150000

  1. ஆக்டேன் எண் எதில் குறிக்கப்படுகிறது?

  பெட்ரோல்

  1. சீட்டேன் எண் எதில் குறிப்பிடப்படுகிறது ?

டீசல்

  1. பெட்ரோலில் உள்ள ஹைட்ரோகார்பனின் அளவை குறிக்கும் எண் எது ?

ஆக்டேன் எண்

  1. ஒரு சிறந்த எரிபொருள் ஆக்டேன் எண்ணை எவ்வாறு பெற்றிருக்கும்?

 உயர்ந்த ஆக்டேன் எண்

  1. டீசல் என்ஜினில் உள்ள எரிபொருளின் பற்றவைப்பு கால அளவை அளக்க பயன்படுவது எது?

சீட்டேன் எண்

  1. ஒரு சிறந்த எரிபொருள் சீட்டேன் எண்ணை எவ்வாறு பெற்றிருக்கும்?

 உயர்ந்த எண்

  1. பெட்ரோலில் எதனை சேர்ப்பதன் மூலம் ஆக்டேன் எண்ணை அதிகரிக்க முடியும் ?

 பென்சீன் அல்லது டொலுவின்

  1. டீசலிலா எதனை சேர்ப்பதன் மூலம் சீட்டேன் எண்ணை அதிகரிக்க முடியும்?

ஆசிட்டோன்

  1. உயர்ந்த ஆக்டேன் எண்ணை பெற்றுள்ள எரிபொருளின் சீட்டேன் எண் எவ்வாறு இருக்கும்? 

குறைவாக

  1. உயர்ந்த சீட்டேன் எண்ணை பெற்றுள்ள எரிபொருளின் ஆக்டேன் எண் எவ்வாறு இருக்கும்? 

குறைவாக

  1. இன்றைய சூழலில் நிலக்கரி எத்தனை ஆண்டுகளுக்கு பயன்படும் என கணக்கிடப்பட்டுள்ளது?

148 ஆண்டுகள்

  1. இன்றைய சூழலில் இயற்கை வாயு எத்தனை ஆண்டுகளுக்கு பயன்படும் என கணக்கிடப்பட்டுள்ளது?

  61 ஆண்டுகள்

  1. இன்றைய சூழலில் பெட்ரோலியம் எத்தனை ஆண்டுகளுக்கு பயன்படும் என கணக்கிடப்பட்டுள்ளது?

40 ஆண்டுகள்

  1. உயிரி டீசல் எதிலிருந்து கிடைக்கிறது?

 தாவர எண்ணெய்களான சோயா பீன் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், சோள எண்ணெய் ,சூரியகாந்தி எண்ணெய் ,பருத்தி விதை எண்ணெய் ,அரிசி தவிடு எண்ணெய் மற்றும் இரப்பர் மர விதை எண்ணெய்

  1. எந்த எரிபொருளை எரிக்கும் பொழுது நீர் மட்டுமே வெளிவருகிறது?

ஹைட்ரஜன் வாயு

  1. தமிழகத்தில் காற்றாலைகள் எங்கு அமைந்துள்ளது?

கயத்தாறு ,ஆரல்வாய்மொழி ,பல்லடம் மற்றும் குடிமங்கலம்

  1. சாண எரிவாயுவிலா பெரும்பான்மையாக எது உள்ளது ?

மீத்தேன், சிறிதளவு ஈத்தேன்


8TH CHEMISTRY STUDY NOTES |அன்றாட வாழ்வில் வேதியியல்| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: