- சில்வர் நைட்ரேட் கரைசலை சோடியம் குளோரைடு கரைசலுடன் சேர்க்கும்போது என்ன கிடைக்கிறது?
வெண்மையான சில்வர் குளோரைடு ,சோடியம் நைட்ரேட் கரைசல்
- சல்பியூரிக் அமிலம் சேர்த்து நீரில் மின்சாரத்தைப் பாய்ச்சும்பொழுது என்ன வாயுக்கள்?
வெளிவருகின்றன ஹைட்ரஜன் ,ஆக்சிஜன்
- பிரைன் எனப்படும் அடர் சோடியம் குளோரைடு கரைசல் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது என்ன வாயுக்கள் வெளிவருகிறது?
குளோரின் ஹைட்ரஜன் . கூடுதலாக சோடியம் ஹைட்ராக்சைடு உருவாகிறது
- மின்சாரத்தைக் கொண்டு நிகழும் வேதி வினைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
மின் வேதிவினைகள் அல்லது மின்னாற்பகுத்தல் வினைகள்
- மின்னாற்பகுத்தல் என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?
மைக்கேல் ஃபாரடே
- லெட் நைட்ரேட் உப்பினை வெப்பப்படுத்தும் பொழுது வெளிவரும் செம்பழுப்பு நிற வாயு எது?
நைட்ரஜன் டை ஆக்சைடு
- வெப்பத்தின் மூலம் நிகழ்த்தப்படும் வேதிவினைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்ப வேதிவினைகள் அல்லது வெப்பச்சிதைவு வினைகள்
- சுட்ட சுண்ணாம்பு ,நீற்றுச் சுண்ணாம்பு, சிமெண்ட் ஆகியவற்றுக்கு மூலப்பொருளாக உள்ளது எது?
சுண்ணாம்புக்கல்
- வேதி வினையின் போது வெப்பம் வெளியிட்டால் அவ்வினைகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
வெப்ப உமிழ் வினைகள்
- வேதி வினைகளின் போது வெப்பம் எடுத்துக் கொள்ளப்பட்டால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்பக் கொள்வினைகள்
- சூரிய ஒளியின் முன்னிலையில் கார்பன்-டை-ஆக்சைடு ,நீர் ஆகியவற்றை கொண்டு ஸ்டார்ச் எனும் உணவுப் பொருளைத் தயாரிக்கும் நிகழ்வுக்கு பெயர் என்ன?
ஒளிச்சேர்க்கை
- ஒளியைக் கொண்டு தூண்டப்படும் வேதிவினைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
ஒளி வேதிவினைகள்
- சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் வளிமண்டலத்தில் இரண்டாம் அடுக்கில் உள்ள ஓசோன் மூலக்கூறுகளை சிதைத்து எவற்றை தருகிறது ?
ஆக்சிஜன், அணு ஆக்சின்
- ஈஸ்ட், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் ஸ்டார்ச் போன்ற பெரிய மூலக்கூறுகளை சிறிய மூலக்கூறுகளாக மாற்றுவதற்கு பெயர் என்ன?
நொதித்தல்
- வேதிவினைக்கு உட்படாமல் வினையின் வேகத்தை மாற்ற உதவும் வேதிப்பொருட்களுக்கு என்ன பெயர்?
வினைவேக மாற்றிகள்
- ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்க எது வினைவேக மாற்றியாக பயன்படுத்தப்படுகிறது?
உலோக இரும்பு
- யூரியா தயாரிப்பதற்கான அடிப்படை பொருளாக விளங்குவது எது?
அமோனியா
- வனஸ்பதி நெய் தயாரித்தலில் எது வினைவேக மாற்றியாக செயல்படுகிறது?
நன்கு தூளாக்கப்பட்ட நிக்கல்
- சில வேதி வினைகளில் வினைவேகமாற்றியினால் வினையின் வேகம் மாறுபடும் இவ்வகை வினைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
வினைவேக மாற்ற வினைகள்
- என்சைம்கள் மற்றும் ஈஸ்ட்டுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
உயிரி வினைவேக மாற்றிகள்
- பீர் உற்பத்தி தொழிற்சாலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புருவரீஸ்
- ஒரு உணவில் துர்நாற்றம் ,நிறமாற்றம், ஊட்டச்சத்து இழப்பு போன்ற நிகழ்வுகளால் உணவின் தரம் குறைய என்ன உயிரி வினைவேக மாற்றி காரணமாக அமைகிறது?
என்சைம்
- முட்டைகள் அழுகும் போது என்ன வாயு வெளியேறுகிறது?
ஹைட்ரஜன் சல்பைடு வாயு
- மீன்கள் இறைச்சி ஆகியவற்றில் உள்ள எது காற்று அல்லது ஒளியுடன் ஆக்சிஜனேற்ற வினைக்குட்பட்டு துர்நாற்றத்தை வெளிவிடுகின்றன?
அதிகளவில் உள்ள பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள்
- ஆப்பிள்களும் வேறு சில பழங்களும் நறுக்கி வைத்த பிறகு காற்றிலுள்ள எதனுடன் வேதிவினை புரிந்து பழுப்பு நிறத்தை அடைகின்றன?
ஆக்சிஜன்
- பழத்திலுள்ள எது ஆக்சிஜனுடன் தொடர்பு கொள்ளும்பொழுது பழங்களில் பீனாலிக் சேர்மங்களை பழுப்பு நிறமாக மாறுகின்றன?
பழங்களின் செல்களில் உள்ள பாலிஃபீனால் ஆக்சிடேஸ் அல்லது டைரோசினேஸ்
- பழங்களில் உள்ள பழுப்பு நிறமிகள் எது?
மெலனின்
- சுற்றுச்சூழலின் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் விரும்பத்தகாத மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மாசுபடுதல்
- மாசுபடுதலை நிகழ்த்தும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மாசுபடுத்திகள்
- பொதுவாக மாசுபடுதல் எத்தனை வகைப்படும் ?
மூன்று :காற்று நீர் மற்றும் நில மாசுபாடு
- காற்று மாசுபடுதலை ஏற்படுத்தும் வேதிப் பொருட்கள் என்னென்ன ?
கார்பன் டை ஆக்சைடு ,கார்பன் மோனாக்ஸைடு ,நைட்ரஜன் ஆக்சைடுகள், குளோரோ புளோரோ கார்பன்கள் ,மீத்தேன் போன்றவை
- காற்று மாசுபடுவதால் ஏற்படும் விளைவுகள்?
அமில மழை, புவி வெப்பமயமாதல் சுவாசக்கோளாறுகள்
- நீர் மாசுபடுதலை ஏற்படுத்தும் வேதிப் பொருட்கள் என்னென்ன ?
வேதிப்பொருள்கள் கொண்ட கழிவுநீர் ,டிடர்ஜெண்டுகள், கச்சா எண்ணெய் போன்றவை
- நீர் மாசுபடுதலை ஏற்படுத்தும் விளைவுகள் என்னென்ன?
நீரின் தரம் குறைதல் ,தோல்நோய்கள்
- நிலமாசுபடுதலை ஏற்படுத்தும் வேதிப் பொருட்கள் என்னென்ன?
யூரியா போன்ற உரங்கள் ,பூச்சிக்கொல்லிகள்
- நிலம் மாசுபடுதலின் விளைவுகள் என்னென்ன?
பயிரிடும் நிலம் கெட்டுப்போதல் ,புற்று நோய் ,சுவாச நோய்கள் போன்றவை
- இரும்பாலான பொருள்கள் நீர் மற்றும் ஆக்சிஜனுடன் தொடர்புக்கு வரும்பொழுது வினைக்கு உட்படும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படும்?
துருப்பிடித்தல்
- வெள்ளிப் பொருள்கள் வளிமண்டல காற்றுடன் தொடர்பு கொள்ளும்பொழுது என்ன நிறமுடையதாக மாறுகின்றன ?
கருமை நிறம்
- பித்தளைப் பாத்திரங்களில் தாமிரம் உள்ளதால் நெடுநேரம் வளிமண்டல காற்றுடன் தொடர்பு கொள்ளும்பொழுது என்னப் படலத்தை உருவாக்குகிறது?
பச்சை நிற படலம்
- தாமிரமும் ஈரக்காற்றும் வேதிவினைக்குட்பட்டு எவற்றை உருவாக்குகின்றன ?
காரத்தன்மை வாய்ந்த தாமிர கார்பனேட்டும் தாமிர ஹைட்ராக்சைடும்
- வெப்ப ஆற்றலை உருவாக்கும் வேதிவினைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வெப்ப உமிழ் வினைகள்
- ஜிங்க் மெக்னீசியம் போன்ற சில உலோகங்கள் நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து என்ன வாயுவை வெளியிடுகின்றன?
ஹைட்ரஜன்
- நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சோடியம் கார்பனேட் அல்லது சோடியம் பை கார்பனேட் கரைசலில் சேர்க்கும் பொழுது என்ன வாயு வெளியேறுகிறது?
கார்பன்-டை-ஆக்சைடு
- இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும் பொழுது காப்பர் சல்பேட் கரைசலின் நீல நிறம் என்ன நிறத்திற்கு மாறும்?
பச்சை நிறம்
- திண்ம நிலையில் இருந்து வாயு நிலைக்கு நிலைமாற்றம் நிகழ்வதற்கு பெயர் என்ன?
பதங்கமாதல்
8TH BOTANY STUDY NOTES |நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services