- ஏறத்தாழ எவ்வளவு உயிரினங்கள் இந்த உலகத்தில் உள்ளன ?
8.7 மில்லியன்
- எத்தனை உயிரினங்கள் நிலத்தில் வாழ்கின்றன?
6.5 மில்லியன்
- எத்தனை உயிரினங்கள் நீரில் வாழ்கின்றன?
2.2 மில்லியன்
- உலகில் உள்ள பூக்கும் தாவரங்கள் எவ்வளவு ?
நான்கு லட்சம்
- தாவர உலகம் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது ?
ஐந்து :தாலோஃபைட்டா ,பிரையோஃபைட்டா, டெரிடோஃபைட்டா,ஜிம்னோஸ்பெர்ம்,ஆஞ்சியோஸ்பெர்ம்
- உயிரினங்களை அடையாளம் காணுதல், வகைப்படுத்துதல் அவற்றைப் பற்றி விளக்குதல் ,பெயரிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது எது?
வகைப்பாட்டியல்
- வகைப்பாட்டியல் Taxonomy எனும் சொல் எதில் இருந்து பெறப்பட்டது ?
கிரேக்கச் சொற்கள் Taxis,Nomos
- Taxi,nomos என்பதன் பொருள் என்ன?
Taxis-வகைப்படுத்துதல்,Nomos-விதிகள்
- வகைப்பாட்டியல் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?
அகஸ்டின் பைரமிஸ் டி கேண்டோல்
- வகைப்படுத்துதலின் பிரிவுகள் என்னென்ன?
செயற்கை வகைப்பாட்டு முறை, இயற்கை வழிபாட்டு முறை ,மரபு வழி வழிபாட்டுமுறை, நவீன வழிபாட்டு முறை
- மிகவும் பழமையான முறை மற்றும் தாவரங்களின் புறத்தோற்ற பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும் முறைக்கு என்ன பெயர்?
செயற்கை வகைப்பாட்டு முறை
- செயற்கை வகைப்பாட்டு முறையை உருவாக்கியவர் யார்?
கரோலஸ் லின்னேயஸ்
- கரோலஸ் லின்னேயஸ் தனது எந்த புத்தகத்தில் செயற்கை வகைப்பாட்டு முறையை பற்றி கூறியுள்ளார்?
ஸ்பீசிஸ் பிளான்டாரம்
- தாவரங்களின் பல பண்புகளின் அடிப்படையில் எந்த வகைப்பாட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது?
இயற்கை வழிபாட்டு முறை
- பெந்தம் மற்றும் ஹூக்கரின் வகைப்பாட்டியல் முறை எதற்கு எடுத்துக்காட்டு?
இயற்கை வகைப்பாட்டு முறை
- பெந்தம் மற்றும் ஹூக்கர் தங்களது இயற்கை வகைப்பாட்டு முறையை எந்த நூலில் வெளியிட்டுள்ளனர்?
ஜெனிரா பிளான்டாரம்
- விதைத் தாவரங்களை எத்தனை வகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
மூன்று :இருவித்திலைத் தாவரங்கள்,ஒருவிதையிலைத் தாவரங்கள், திறந்தவிதையுடையத் தாவரங்கள்
- இருவித்திலைத் தாவரங்கள் இலைகளில் என்ன நரம்பமைவைப் பெற்றிருக்கும்?
வலைப்பின்னல் நரம்பமைவு
- இரு விதையிலைத் தாவரங்களில் என்ன வேரை கொண்டிருக்கும்?
ஆணிவேர்
- இரு விதையிலைத் தாவரங்களில் மலர்கள் எத்தனை அங்கங்களை கொண்டிருக்கும்?
நான்கு அல்லது ஐந்து அங்கங்கள்
- திறந்த விதையுடைய தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஜிம்னோஸ்பெர்ம்
- எந்த வகை தாவரங்களில் கனிகள் உருவாவதில்லை?
ஜிம்னோஸ்பெர்ம்
- ஜிம்னோஸ்பெர்ம் வகை தாவரங்கள் எத்தனை குடும்பங்களை உள்ளடக்கியுள்ளது?
சைக்கடேசி, கோனிஃபெரே மற்றும் நீட்டேசி
- ஒரு விதையிலைத் தாவரங்களில் இலைகளில் என்ன நரம்பமைவு கொண்டிருக்கும்?
இணைப்போக்கு நரம்பமைவு
- ஒருவிதை இலைத் தாவரங்கள் என்ன வேரினை கொண்டிருக்கும்?
சல்லிவேர்
- ஒருவிதை இலைத் தாவர மலர்கள் எத்தனை அங்கங்களை கொண்டிருக்கும்?
மூன்று
- ஓர் உயிரினத்தை இரண்டு சொற்களால் பெயரிட்டு அழைப்பதற்கு என்ன பெயர்?
இரு சொல் பெயரிடுதல்
- மாமரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
மாஞ்சிஃபெரா இண்டிகோ
- இருசொல் பயிரிடுதல் முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர்?
கரோலஸ் லின்னேயஸ்
- இந்தியாவின் மிகப்பெரிய உலர் தாவர தொகுப்பு எங்கு உள்ளது?
கொல்கத்தா
- தாவரங்களுக்கு உலகளாவிய பெயர் சூட்டும் முறைக்கு என்ன பெயர்?
தாவரவியல் பெயரிடுதல்
- தாவரவியல் பெயரிடுதல் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
காஸ்பர்டு பாகின்(1623)
- பச்சையத்தீடன் கூடிய எளிமையான தன்மையுடைய தற்சார்பு உயிரிகள் எது?
பாசி
- பாசி எந்த வகையைச் சார்ந்தது ?
தாலோஃபைட்டா
- பாசியின் தாவர உடலமானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தாலஸ்
- சில பாசிகள் மிகவும் நுண்ணியவை ஆதலால் நீர் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும். இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தாவர மிதவை நுண்ணுயிரிகள்
- நகர்ந்து செல்லாமல் ஒரே இடத்தில் இருக்கும் பாசிக்கு எடுத்துக்காட்டு எது?
குளோரெல்லா
- சில பாசிகள் பெரிய இலைகளுடன் இருப்பதற்கு எடுத்துக்காட்டு எது?
மேக்ரோ சிஸ்டிஸ்
- சில பாசிகள் குழுவாக சேர்ந்து வாழும் தன்மை கொண்டவை இதற்கு எடுத்துக்காட்டு எது ?
வாழ்வாக்ஸ்
- உயர் தாவரங்களை போன்று உடல் அமைப்பினை கொண்டுள்ளன பாசிக்கு எடுத்துக்காட்டு எது?
கேரா
- பாசிகள் எத்தனை வகையில் இனப்பெருக்கம் செய்கின்றன ?
மூன்று : உடலப் பெருக்கம் ,பாலிலா இனப்பெருக்கம் ,பாலின இனப்பெருக்கம்
- பாசிகளில் உடலப் பெருக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது?
துண்டாதல் மூலம்
- உடல பெருக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
ஸ்பைரோகைரா
- பாலிலா இனப்பெருக்கம் பாசிகளில் எவ்வாறு நடைபெறுகிறது ?
ஸ்போர்கள் உருவாதல் மூலம்
- பாசிகளில் பாலிலா இனப்பெருக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
கிளாமைடோமோனஸ்
- பாலின இனப்பெருக்கம் பாசிகளில் எவ்வாறு நடைபெறுகிறது ?
பாலின செல்கள் இணைவதன் மூலம்
- பாசிகளில் பாலின இனப்பெருக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
ஸ்பைரோகைரா,சேரா
- நீலப் பச்சைப் பாசிகள் என்ன நிறமியினைப் பெற்றுள்ளது?
ஃபைகோசயனின்
- நீலப் பச்சைப் பாசிகள் என்ன உணைவைச் சேமிக்கின்றன?
சயனோஃபைசியன்
- நீலப் பச்சைப் பாசிக்கு எடுத்துக்காட்டு?
ஆசிலட்டோரியா
- பச்சைப் பாசிகள் என்ன நிறமியினைப் பெற்றுள்ளது?
பச்சையம்
- பச்சைப் பாசிகள் என்ன உணைவைச் சேமிக்கின்றன?
ஸ்டார்ச்
- பச்சைப் பாசிக்கு எடுத்துக்காட்டு?
கிளாமைடோமோனஸ்
- பழுப்பு பாசிகள் என்ன நிறமியினைப் பெற்றுள்ளது?
ஃபியூக்கோசாந்தின்
- பழுப்பு பாசிகள் என்ன உணைவைச் சேமிக்கின்றன?
லேமினேரியன் ஸாட்ர்ச் மற்றும் மானிடால்
- பழுப்பு பாசிக்கு எடுத்துக்காட்டு?
லேமினேரியா
- சிவப்பு பாசிகள் என்ன நிறமியினைப் பெற்றுள்ளது?
ஃபைக்கோளரித்திரின்
- சிவப்பு பாசிகள் என்ன உணைவைச் சேமிக்கின்றன?
ஃபுளோரிடியன் ஸ்டார்ச்
- சிவப்பு பாசிக்கு எடுத்துக்காட்டு?
பாலிஸைஃபோனியா
- உலகத்திலேயே மிகப்பெரிய உலர்த்தாவர தொகுப்பு உள்ள இடம் எது?
பிரான்சின் பாரிசில் உள்ள தேசிய டி ஹிஸ்டாரிக் நேச்சுரலே அருங்காட்சியகம்
- ஜப்பான், இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் உணவாக உண்ணும் பாசிகளுக்கு எடுத்துக்காட்டுகள் எவை?
அல்வா ,ஸ்பைருலினா ,குளோரெல்லா
- வீட்டு விலங்குகளுக்கு உணவாக பயன்படுத்தப்படும் பாசிகள் என்னென்ன?
லேமினேரியா, அஸ்கோஃபில்லம்
- மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாசிகள் என்னென்ன?
நாஸ்டாக் ,அனபீனா
- அகார் அகார் என்பது எந்த பாசிகளில் இருந்து எடுக்கப்படுகிறது?
சிவப்பு பாசிகள்
- அகார் அகார் எடுக்க பயன்படும் பாசிகள் என்னென்ன?
ஜெலீடியம்,கிரேசிலேரியா
- என்ன வகை பாசிகளில் இருந்து அயோடின் பெறப்படுகிறது?
பழுப்புப் பாசிகள் (எ.கா.லேமினேரியா)
- விண்வெளி பயணத்தின் போது என்ன பாசி கார்பன்-டை-ஆக்சைடை அகற்றுவதற்கும் மனிதக்கழிவுகளை மட்கச் செய்வதற்கும் பயன்படுகிறது?
குளோரெல்லா ஃபைரினாய்டோசா
- தனி செல் புரதத்தை உற்பத்தி செய்யப் பயன்படும் பாசிகள் என்னென்ன ?
குளோரெல்லா ,ஸ்பைருலினா
- பூஞ்சைகள் என்ன பிரிவைச் சார்ந்தவை?
தாலோஃபைட்டா
- ஒன்றிற்கு மேற்பட்ட பூஞ்சை இழைகள் இணைந்து வலை போன்ற பூஞ்சை இழைப் பின்னலை உருவாகின்றன இதற்கு பெயர் என்ன?
மைசீலியம்
- பூஞ்சை இழைப் பின்னல் எத்தனை வகைப்படும்?
இரண்டு: குறுக்குச் சுவருடைய பூஞ்சை இழை, குறுக்கு சுவரற்ற பூஞ்சை இழை
- பூஞ்சை இலைகளில் உட்கருக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
ஸீனோசைட்டிக் மைசீலியம்
- பூஞ்சைகளின் உணவுப் பொருளானது என்னவாக சேமிக்கப்படுகிறது?
கிளைகோஜன் ,எண்ணெய்
- பூஞ்சைகளின் பச்சையம் இல்லாததால் இவை எவ்வாறு அழைக்கப்படும் ?
பிறச் சார்பு உயிரிகள்
- (பூஞ்சைகளின்)பிற சார்பு உயிரிகள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
மூன்று :ஒட்டுண்ணிகள்,மட்குண்ணிகள் ,இணைப்புயிரிகள்
- பூஞ்சைகளில் எந்த வகை உயிரிகள் உறிஞ்சு உறுப்புகள் மூலம் உயிருள்ள பொருள்களிலிருந்து உணவைப் பெறுகின்றன?
ஒட்டுண்ணிகள்
- பூஞ்சைகளின் ஒட்டுண்ணிகள் எடுத்துக்காட்டு ?
செர்க்கோஸ்போரா பெர்சனேட்டா
- வேர்க்கடலை செடியில் டிக்கா நோயை உருவாக்குவது எது?
செர்க்கோஸ்போரா பெர்சனேட்டா
- பூஞ்சைகளின் இறந்த மற்றும் அழுகிய பொருள்களிலிருந்து உணவை பெறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மட்குண்ணிகள்
- ரைசோபஸ் எதற்கு எடுத்துக்காட்டு?
மட்குண்ணிகள்
- சில வகை பூஞ்சைகளுடன் சேர்ந்து ஒன்றுக்கொன்று பயன்பெறக்கூடிய வகையில் வளர்வதற்கு என்ன பெயர் ?
இணைப்பு உயிரிகள்
- பூஞ்சைகளின் இணைப்பு உயிர்களுக்கு எடுத்துக்காட்டு ?
லைக்கென்
- சில பூஞ்சைகள் கூட்டுயிரிகளாக உயர் தாவரங்களின் வேர்களுடன் இணைந்து வளர்கின்றன.இவை எவ்வாறு அழைக்கப்படும்?
வேர்பூஞ்சைகள்
- பூஞ்சைகளில் இருந்து தயாரிக்கப்படும் நுண்ணுயிர் கொல்லிகள் எவை?
பெனிசிலின் ,நியோமைசின், ஜென்டாமைசின் ,எரித்ரோமைசின்
- அதிகளவு புரதத்தையும் தாதுப் பொருளையும் கொண்டுள்ள பொதுவாக உண்ணக்கூடிய காளான் எது ?
அகாரிகஸ் (பொத்தான் காளான்)
- வைட்டமின் B2 வை உருவாக்கும் பூஞ்சைகள் என்னென்ன?
ஆஸ்பியா கோஸ்பீ மற்றும் எரிமோதீசியம் ஆஸ்பியீ
- ஈஸ்ட்டில் உள்ள எந்த நொதிகள் சர்க்கரை கழிவிலிருந்து நொதித்தல் மூலம் ஆல்கஹாலை உருவாக்குகிறது?
இன்வர்டேஸ்,சைமேஸ்
- RH விட்டேக்கர் ஐந்துலக வகைப்பாட்டில் பூஞ்சைகள் எத்தனையாவது உலகமாக இடம்பெற்றுள்ளன?
மூன்றாவது
- பருத்தியில் வாடல் நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது?
ஃபியூசேரியம் ஆக்சிஸ்போரம்
- வேர்கடலையில் டிக்கா நோயை ஏற்படுத்தும் பூஞ்சை?
செர்க்கோஸ்போரா பெர்சொனேட்டா
- கரும்பில் சிவப்பு அழுகல் நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது?
கோலிடாட்ரைக்கம் ஃபல்கேட்டம்
- நெல்லில் பிளாஸ்ட் நோயை ஏற்படுத்தும் பூஞ்சை?
பைரிகுலேரியா ஒரைசே
- முள்ளங்கியில் வெண்புள்ளி நோயை ஏற்படுத்தும் பூஞ்சை?
அல்புகோ கேண்டிலா
- இளைஞர்களிடையே ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி மன அழுத்தத்தை ஏற்படுத்தும் பூஞ்சை /கனவுலகில் மிதப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்தும் பூஞ்சை எது?
கிளாவிசெப்ஸ் பர்பூரியா
- எந்தப் பூஜையானது குழந்தைகளிடம் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது?
ஆஸ்பர்ஜிலஸ்
- எந்த பூஞ்சையானது ஒவ்வாமையில் இருந்து பாதுகாக்கிறது?
கிளாடோஸ்போரியம்
- மனிதனில் உருளைப் புழுக்கள் வட்டவடிவமான கொப்பளங்கள் தோன்றுவதற்கு காரணமான பூஞ்சை எது?
டிரைகோஃபைட்டான் இனம்
- மனிதனில் பொடுகுக்கு காரணமான பூஞ்சை இனம் எது?
மைக்கோஸ்போரம் ஃபர்ஃபர்
- கால் பாதத்தில் ஏற்படும் நோய்க்கு காரணமான பூஞ்சை எது?
டீனியாபெடிஸ்
- கடத்தும் திசுக்கள் சைலம் மற்றும் புளோயம் அற்ற நிலத்தில் வளரக்கூடிய பூவாத தாவரங்கள் எந்த வகையைச் சார்ந்தது?
பிரையோஃபைட்டா
- தவிர உலகத்தின் இருவாழ்விகள் என அழைக்கப்படுபவை அவை ?
பிரையோஃபைட்டா
- மருந்துகளின் அரசி என அழைக்கப்படுவது எது ?
பெனிசிலின்
- பெனிசிலினை கண்டுபிடித்தவர் யார்?
சர் அலெக்சாண்டர் பிளெமிங் (1928)
- பிரையோஃபைட்டா எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
ஹிப்பாட்டிக்கே, ஆந்தோசெரட்டே,மஸ்கி
- பிரையோபைட்டாவின் கீழ்மட்ட தாவரங்கள் எது?
ஹிப்பாட்டிக்கே
- எந்த பிரையோபைட்டா தாவரம் நீரை உறிஞ்சுவதால் நாற்றங்காலில் பயன்படுத்தப்படுகிறது ?
ஸ்பேக் னம்
- பீட் என்பது நிலக்கரியை போல விலைமதிப்புடைய எரிபொருள் ஆகும். இது எந்த பிரையோபைட்டா தாவரத்திலிருந்து பெறப்படுகிறது?
ஸ்பேக்னம்
- குழந்தைகளுக்கு ஒருமுறை பயன்படுத்தும் அரை கசசையில் பயன்படுத்தப்பட்டு வந்த பிரையோபைட்டா தாவரம் எது ?
ஸ்பாக்னம் மாஸ்
- முதன் முதலில் தோன்றிய உண்மையான நில தாவரங்கள் எது?
டெரிடோபைட்டுகள்
- டெரிடோபைட்டுகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கடத்து திசு பூவாத் தாவரம்
- டெரிடோபைட்டாவின் வகைப்பாடுகள் என்னென்ன?
சைலாப்சிடா,லைக்காப்சிடா,ஸ்பீனாப்சிடா,டீராப்சிடா
- சைலாப்சிடாவிற்கு எடுத்துக்காட்டு என்ன?
சைலோட்டம்
- லைக்காப்சிடாவிற்கு எடுத்துக்காட்டு என்ன?
லைக்கோபோடியம்
- ஸ்பீனாப்சிடாவிற்கு எடுத்துக்காட்டு என்ன?
ஈகுசீட்டம்
- டீராப்சிடாவிற்கு எடுத்துக்காட்டு என்ன?
நெஃரோலெப்பிஸ்
- அழகு தாவரங்களாக வளர்க்கப்படும் டெரிடோபைட்டா எது?
பெரணிகள்
- எந்த டெரிடோபைட்டாவினுடைய மட்டநிலத் தண்டு காம்புகள் குடற்புழு கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது?
டிரையாப்டரிஸ்
- எந்த டெரிடோபைட்டாவினுடைய ஸ்போரகக் கோப்பையை மலைவாழ் மக்கள் உணவாக பயன்படுத்துகின்றனர்?
மார்சீலியா
- கிளப் பாசி என அழைக்கப்படுவது எது?
லைகோபோடியம்
- குதிரைவால் என அழைக்கப்படுவது எது?
ஈக்விசிட்டம்
- ஜிம்னோஸ்பெர்ம் உங்களின் வாழ்க்கை சுழற்சியில் எத்தனை நிலைகள் காணப்படுகிறது?
இரண்டு நிலைகள் :ஸ்போரோபைட், கேமீட்டோபைட்
- ஜிம்னோஸ்பெர்ம் தாவரமான ஊசியிலைக் கட்டையானது எந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது?
தாள் தொழிற்சாலைகளில் தாள் உற்பத்திக்கு
- தாள் தொழிற்சாலைகளில் பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரத்தின் எடுத்துக்காட்டுகள் எவை?
பைனஸ்,அகாத்திஸ்
- செட்ரஸ்,அகாத்திஸ் ஆகிய ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்கள் எதற்கு பயன்படுகிறது?
கட்டுமான தொழிலுக்கு ஒட்டுப்பலகை தயாரிப்பதற்கும்
- எந்த ஜிம்னோஸ்பெர்ம் தாவரத்தின் பசையிலிருந்து பெறப்படும் டர்பன்டைன் வண்ணப்பூச்சு தயாரிப்பதற்கு பயன்படுகிறது?
பைனஸ் தாவரம்
- எந்த ஜிம்னோஸ்பெர்ம் தாவரத்தின் பசையானது மூட்டு வலி மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது?
பைனஸ் தாவரம்
- எந்த ஜிம்னோஸ்பெர்ம் தாவரத்தின் விதைகள் உண்பதற்கு பயன்படுகிறது?
பைனஸ் ஜெரார்டியானா
- ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படும் எஃபிடிரின் என்னும் அல்கலாய்டு எந்த தாவரத்திலிருந்து பெறப்படுகிறது?
எஃபிட்ரா
- எந்த ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் அழகுத் தாவரமாக பயன்படுத்தப்படுகிறது?
அராவ்கேரியா பிட்வில்லீ
- ஜிம்னோஸ்பெர்ம்களின் வகைபாடுகள் என்னென்ன ?
சைக்கடேல்ஸ்,ஜிங்கோயேல்ஸ்,கோனிபெரேல்ஸ்,நீட்டேல்ஸ்
- சைக்கடேல்ஸ் வேரானது எத்தனை வகைப்படும்?
இரண்டு :ஆணிவேர் மற்றும் பவள வேர்
- இலைகள் இறகு வடிவ கூட்டிலைகள் ஒன்று சேர்ந்து நுனியில் கிரீடம் போலத் தோன்றும் ஜிம்னோஸ்பெர்ம் வகை எது?
சைக்கடேல்ஸ்
- பனை மரம் போன்று நேராகவும் கிளைகள் இல்லாமலும் வளரும் சிறிய தாவரங்கள் எந்த ஜிம்னோஸ்பெர்ம் வகைப்பாட்டை சார்ந்தது?
சைக்கடேல்ஸ்
- சைக்கடேல்ஸ் வகைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு எது?
சைக்கஸ்
- துர்நாற்றத்தை ஏற்படுத்தும் ஜிம்னோஸ்பெர்மின் தாவர வகைப்பாடு எது?
ஜிங்கோயேல்ஸ்
- விசிறி வடிவ இலைகளை உடைய பெரிய தாவரம் எந்த ஜிம்னோஸ்பெர்ம் வகைப்பாடு?
ஜிங்கோயேல்ஸ்
- ஜிங்கோயேல்ஸ் தொகுப்பில் உள்ள ஒரே வாழும் தாவரம் எது?
ஜிங்கோ பைலோபா
- விதைகள் இறகு வடிவ அமைப்பைக் கொண்டிருக்கும் ஜிம்னோஸ்பெர்ம் வகைப்பாடு எது?
கோனிஃபெரல்ஸ்
- கோனிஃபெரல்ஸ் இலைகள் எத்தனை வகைப்படும்?
இரண்டு :ஊசி இலைகள் மற்றும் செதில் இலைகள்
- எந்த ஜிம்னோஸ்பெர்மின் வகைப்பாடு பசுமைமாறா கூம்பு வடிவ தாவரங்கள் ஆகும்?
கோனிஃபெரல்ஸ்
- கோனிஃபெரல்ஸ் வகைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு?
கோனிஃபெரல்ஸ்
- ஆஞ்சியோஸ்பெர்ம்கள் போன்ற உயர் பண்புகளைக் கொண்டுள்ள ஜிம்னோஸ்பெர்மின் வகைப்பாடு எது?
நீட்டேல்ஸ்
- ஜிம்னோஸ்பெர்ம்களின் வகைப்பாட்டில் சிறிய வகை தொகுப்பு தாவரங்கள்?
நீட்டேல்ஸ்
- நீட்டேல்ஸ் எடுத்துக்காட்டு தாவரம் எது?
நீட்டம்
- ஆஞ்சியோஸ்பெர்ம்கள் வளர்ச்சியின் அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கப்படும் ?
மூன்று :சிறு செடிகள், புதர் செடிகள், மரங்கள்
- ஆஞ்சியோஸ்பெர்ம்கள் எத்தனை வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
இரண்டு :ஒருவித்திலைத் தாவரம் ,இருவித்திலைத் தாவரம்
- ஒரு விதையிலைத் தாவரங்களில் மலர்கள் எத்தனை அடுக்கு உடையவை?
மூன்று
- ஒரு விதையிலைத் தாவரத்தில் மகரந்தச்சேர்க்கை பெரும்பாலும் இதன் மூலம் நடைபெறுகிறது?
காற்றின் மூலம்
- இரு விதையிலைத் தாவரங்களில் மகரந்த சேர்க்கை பெரும்பாலும் இதன் மூலம் நடைபெறுகிறது?
பூச்சிகள்
- குப்பைமேனியின் தாவரவியல் பெயர் என்ன?
அகாலிஃபா இன்டிகா
- குப்பைமேனி எந்த குடும்பத்தைச் சார்ந்தது?
யூஃபோர்பியேசி
- குப்பைமேனி இலையை அரைத்து பெறப்படும் பசை எதனை குணமாக்கும் ?
தோலிலுள்ள கொப்பளங்கள்
- குப்பைமேனி இலை சாற்றை எலுமிச்சை சாறுடன் கலந்து அருந்தினால் என்ன பயன்?
வயிற்றில் உள்ள உருளைப் புழுக்கள் அழியும்
- வில்வத்தின் தாவரவியல் பெயர் என்ன?
ஏகில் மார்மிலோஸ்
- வில்வம் எந்த குடும்பத்தைச் சேர்ந்தது?
ரூட்டேசி
- வில்வத்தின் காய் எதற்கு பயன்படுகிறது?
செரிமானத்தை சரி செய்ய
- வில்வத்தின் பயனென்ன?
தீராத வயிற்றுப்போக்கு சீதபேதி ஆகியவற்றை குணப்படுத்துகிறது
- தூதுவளையின் தாவரவியல் பெயர் என்ன ?
சொலானம் டிரைலொபேட்டம்
- தூதுவளை எந்த குடும்பத்தைச் சேர்ந்தது ?
சொலனேசி
- தூதுவளை இலைகளும் கனிகளும் எதற்குப் பயன்படுகின்றன?
இருமல் மற்றும் சளிக்கு, காசநோய் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது
- கீழாநெல்லியின் தாவரவியல் பெயர் என்ன ?
ஃபில்லாந்தஸ் அமாரஸ்
- கீழாநெல்லி எந்த குடும்பத்தைச் சேர்ந்தது?
யூஃபோர்பியேசி
- கீழாநெல்லியின் பயன்கள் என்னென்ன?
மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது, மேலும் கல்லீரலுக்கு வலிமையைக் கொடுத்து கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது
- சோற்றுக் கற்றாழையின் தாவரவியல் பெயர் என்ன?
அலோ வெரா
- கற்றாழை எந்த குடும்பத்தைச் சேர்ந்தது?
லில்லியேசி
- கற்றாழையின் பயன்கள் என்னென்ன?
இதன் இலைகள் மூல நோய் மற்றும் தோலில் தோன்றும் அழற்சியைக் குணப்படுத்துகிறது வயிற்றுப்புண்ணுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது
8TH BOTANY STUDY NOTES |தாவர உலகம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services