7TH ZOOLOGY STUDY NOTES |வகைப்பாட்டியலின் அடிப்படைகள்| TNPSC GROUP EXAMS

 


  1. இதுவரை எத்தனை உயிரினங்கள் கண்டறியப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன?

 சுமார் 8.7 மில்லியன்

  1. உயிரினங்களை அவற்றின் பொது பண்புகளின் அடிப்படையில் தொகுத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

உயிரியல் வகைப்பாட்டியல்

  1. விலங்குகளை எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?

இரண்டு: முதுகெலும்பு உள்ளவை முதுகெலும்பு அற்றவை

  1. முதுகெலும்பு உள்ள விலங்குகளை எதன் அடிப்படையில் மேலும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்?

உடல் வெப்பநிலை

  1. அரிஸ்டாட்டில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் ?

 2400

  1. அரிஸ்டாட்டில் விலங்குகளை எவ்வாறு பிரித்தார் ?

இரத்தம் உடைய விலங்குகள் மற்றும் இரத்தம் அற்ற விலங்குகள்

  1. விலங்குகளை இடப்பெயர்ச்சி யின் அடிப்படையில் நடப்பவை, பறப்பவை, நீந்துபவை என மூன்று தொகுதிகளாக பிரித்தவர் யார் ?

அரிஸ்டாட்டில்

  1. வகைப்பாட்டியல் பிரிவுகளை மற்ற உயிரினங்களொடு அவற்றிற்குள்ள தொடர்பினை இறங்கு வரிசையில் அமைக்கும் முறைக்கு என்ன பெயர்?

பிரிவுகளின் படி நிலை

  1. பிரிவுகளின்படி நிலை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

லின்னேயஸ்

  1. பிரிவுகளில் படிநிலை முறை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 லின்னேயஸ் படிநிலை முறை

  1. வகைப்பாட்டில் எத்தனை படிநிலைகள் உள்ளன ?

 ஏழு: உலகம் ,தொகுதி, வகுப்பு, வரிசை ,குடும்பம் ,பேரினம் ,சிற்றினம்

  1. வகைப்பாட்டின் அடிப்படை அலகு என்ன?

சிற்றினம்

  1. ஒரு செல் உயிரி அல்லது புரோட்டோசோவாவின் பொதுப்பண்புகள் என்னென்ன?

நுண்ணோக்கி மூலம் பார்க்கக்கூடிய ஒரு செல் உயிரி ,போலிக்கால்கள் கசையிழை, குறுஇழை, மூலம் இடப்பெயர்ச்சி செய்யும்

  1. ஒரு செல் உயிரி அல்லது புரோட்டோசோவாவின் இனப்பெருக்க முறை என்ன?

பிளவு முறையிலோ அல்லது இணைவு முறையிலோ நடைபெறுகிறது

  1. அமீபா, யூக்ளினா, பாரமீசியம் போன்றவை எதற்கு எடுத்துக்காட்டு?

ஒரு செல் உயிரி அல்லது புரோட்டோசோவா

  1. துளையுடலிகள் அல்லது பொரிபெரா என்பதின் பொதுபண்புகள் என்னென்ன?

பல செல்களால் ஆனவை உடல் முழுவதும் துளைகள் நிறைந்து காணப்படும் முட்களால் ஆன அகச்சட்டகத்தை கொண்டுள்ளது

  1. துளையுடலிகள் அல்லது பொரிபெரா என்பதின் இனப்பெருக்க முறை என்ன?

 பால் மற்றும் பாலில்லா முறை

  1. லியூகோசொலினியா,ஸ்பான்ஜில்லா,சைகான் ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு?

துளையுடலிகள் அல்லது பொரிபெரா

  1. குழியுடலிகள் அல்லது சீலன்டிரேட்டாவின் பொதுப்பண்புகள் என்னென்ன ?

பல செல் உயிரினங்கள், ஈரடுக்கு உயிரிகள், ஒட்டியோ, நீரில் நீந்தியோ மற்றும் தனித்து அல்லது கூட்டமாக காணப்படுகிறது

  1. குழியுடலிகள் அல்லது சீலன்டிரேட்டாவின் இனப்பெருக்க முறை என்ன?

பால் மற்றும் பாலில்லா முறை

  1. ஹைட்ரா கடல் சாமந்தி ஜெல்லி மீன்கள் ,பவளங்கள் முதலியவை எதற்கு எடுத்துக்காட்டு?

 குழியுடலிகள் அல்லது சீலன்டிரேட்டா

  1. தட்டைப்புழுக்கள் அல்லது பிளாட்டிஹெல்மின்தஸ் பொதுப்பண்புகள் என்னென்ன ?

உடற்குழி அற்றவை ஒட்டுண்ணிகளாக விலங்குகள் மற்றும் மனிதர்களின் உடலின் உட்பகுதியில் காணப்படுகிறது பெரும்பாலும் இது பால் உயிரிகளாக காணப்படுகின்றது

  1. பிளனேரியா, கல்லீரல் புழு, இரத்தப் புழு, நாடாப் புழு ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு?

 தட்டைப்புழுக்கள் அல்லது பிளாட்டிஹெல்மின்தஸ்

  1. உருளைப் புழுக்கள் அல்லது நெமடோடாவின் பொதுப் பண்புகள் என்னென்ன?

உடற் கண்டங்கள் அற்றவை பெரும்பாலும் மனிதன் மற்றும் விலங்குகளின் நோய்களை உருவாக்கும் ஒட்டுண்ணியாகும்

  1. அஸ்கரிஸ் லும்பிரிகாய்டஸ் எதற்கு எடுத்துக்காட்டு?

உருளைப் புழுக்கள் அல்லது நெமடோடா

  1. வளைதசை புழுக்கள் அல்லது அனலிடாவின் பொதுபண்புகள் என்னென்ன?
SEE ALSO  6TH STD HISTORY STUDY NOTES |குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

 மூவடுக்கு உயிரிகள் ,உடல் கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, பெரும்பாலும் இருபால் உயிரிகள்

  1. மண்புழு, நீரிஸ், அட்டை முதலியவை எதற்கு எடுத்துக்காட்டு?

 வளைதசை புழுக்கள் அல்லது அனலிடா

  1. கணுக்காலிகள் அல்லது ஆர்த்ரோபோடாவின் பொதுப்பண்புகள் என்னென்ன?

 உடல் காண்டங்களை உடையது ,உடற் பரப்பு தடித்த கைட்டினால் ஆன புரதத்தை கொண்டுள்ளது இணை கால்கள் மற்றும்  இணை உறுப்புகளால் ஆனது .இவை  ஒருபால் உயிரிகள். ஆண் பெண் வேறுபாடு உண்டு

  1. நண்டு, இறால் ,மரவட்டை ,பூச்சிகள் ,தேள், சிலந்தி முதலியவை எதற்கு எடுத்துக்காட்டு?

கணுக்காலிகள் அல்லது ஆர்த்ரோபோடா

  1. மெல்லுடலிகள் அல்லது மொலஸ்காவின் பொதுப்பண்புகள் என்னென்ன?

 மென்மையான கண்டங்கள் அற்ற உடல் அமைப்பு உடையது மேலும் தசையால் ஆன தலைப்பகுதி பாதப்பகுதி மற்றும் உள்ளுறுப்பு தொகுப்பு. மான்டில் ,கால்சியத்தினால்‌ ஆன ஓடு காணப்படுகிறது.

  1. மெல்லுடலிகள் அல்லது மொலஸ்காவில் எந்த இனப்பெருக்கம் நடைபெறுகிறது ?

 பால் இனப்பெருக்கம்

  1. கனவாய் மீன்கள், நத்தை ஆக்டோபஸ் ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு?

 மெல்லுடலிகள் அல்லது மொலஸ்கா

 

  1. முட்தோலிகள் அல்லது எக்கைனோடெர்மேட்டாவின் பொதுப் பண்புகள் என்னென்ன?

 கடலில் மட்டுமே வாழ்பவை. உடல் சுவர் முட்களை கொண்டுள்ளது. நீர்க் குழல் மண்டலமும் ,குழாய்க் கால்களும் உணவூட்டத்திற்கும் சுவாசத்திற்கும் மற்றும் இடப்பெயர்ச்சிக்கும் உதவுகிறது.

  1. முட்தோலிகள் அல்லது எக்கைனோடெர்மேட்டாவின் இனப்பெருக்க முறை என்ன?

 பால்வழி இனப்பெருக்கம்

  1. நட்சத்திர மீன், கடல் சாமந்தி ,நொறுங்குறு நட்சத்திர மீன், கடல் வெள்ளரி மற்றும் கடல் அல்லி ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு?

 முட்தோலிகள் அல்லது எக்கைனோடெர்மேட்டா

  1. மீன்கள் அல்லது பிஸ்ஸஸ் வகுப்பின் பொதுப்பண்புகள் என்னென்ன?

நீரில் வாழ்பவை ,குளிர் இரத்த பிராணிகள் ,முதுகெலும்பு தொடர் உடையவை, படகு போன்ற உடலமைப்பு கொண்டவை , இடப்பெயர்ச்சிக்கு இணையான பக்க துடிப்புகள் மற்றும் இணையற்ற மத்திய துடுப்புகள் உதவுகின்றன

  1. மீன்கள் அல்லது பிஸ்ஸஸ் வகுப்பின் இனப்பெருக்கம் முறை என்ன?

 பால்வழி இனப்பெருக்கம்

  1. இருவாழ்விகள் அல்லது ஆம்பீபியாவின் பொதுப்பண்புகள் என்னென்ன?

 நீர் மற்றும் நிலத்தில் வாழ்பவை .குளிர் ரத்த பிராணிகள் இரண்டு ஜோடி கால்களை பெற்றுள்ளது

  1. இருவாழ்விகள் அல்லது ஆம்பீபியாவின் இனப்பெருக்க முறை என்ன?

பால்வழி இனப்பெருக்கம்

  1. தவளை ,தேரை, சாலமாண்டர், சிசிலியன் முதலியவை எதற்கு எடுத்துக்காட்டுகள்?

இருவாழ்விகள் அல்லது ஆம்பீபியா

  1. ஊர்வன அல்லது ரெப்டைல்ஸ் வகுப்பின் பொதுப்பண்புகள் என்னென்ன?

குளிர் இரத்த பிராணிகள், நுரையீரல் மூலம் சுவாசிக்கும் .உடல் செதில்களால் பொர்த்தப்பட்டுள்ளது. ஐந்து விரல்களுடைய கால்கள் ஏறுவதற்கும் ஓடுவதற்கும் நீந்துவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது

  1. பள்ளி ஆமை பாம்புகள் முதலை முதலியவை எதற்கு எடுத்துக்காட்டுகள்?

ஊர்வன அல்லது ரெப்டைல்ஸ்

  1. பறவைகள் அல்லது ஏவ்ஸ் வகுப்பின் பொதுப்பண்புகள் என்னென்ன?

 வெப்ப இரத்தப் பிராணிகள் , புறச்சட்டகமான இறக்கை பறப்பதற்கு ஏற்ற தகவமைப்பு ,எலும்புகள் மிருதுவானதாகவும் காற்றறைகள் நிரம்பியதாகவும் காணப்படும் சிறப்பான பார்வைத் திறன் உடையவை

  1. பாலூட்டிகள் அல்லது மாமெலியா வகுப்பின் பொதுபண்புகள் என்னென்ன?

நிலத்தில் வாழும் வெப்ப ரத்தப் பிராணிகள் ,வெளிப்புற காது அல்லது காது மடல், தசையால் ஆன உதரவிதானம், உட்கரு அற்ற ரத்த சிவப்பணுக்கள் ,பல்வேறுபட்ட பல் அமைவு மற்றும் இரு பல் அமைப்பு ஆகியவற்றை பெற்றுள்ளது. குட்டி போடுபவை இளம் குட்டிகள் பாலூட்டி வளர்க்கப்படுகிறது

  1. மனிதன், பிளாட்டிபஸ், கங்காரு முதலியவை எதற்கு எடுத்துக்காட்டுகள்?
SEE ALSO  7TH ZOOLOGY STUDY NOTES |உடல் நலமும் சுகாதாரமும்| TNPSC GROUP EXAMS

பாலூட்டிகள் அல்லது மாமெலியா

  1. தாவரங்கள் எத்தனை பெரும் கூறுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது ?

 இரண்டு: பூக்கும் தாவரங்கள் மற்றும்  பூவாத் தாவரங்கள்

  1. பூவாத தாவரங்கள் அவற்றின் உடல் அமைப்பினைப் பொறுத்து மேலும் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?

 மூன்று : ஆல்காக்கள் ,மாஸ்கள் மற்றும் பெரணிகள்

  1. பூக்கும் தாவரங்கள் அவை உண்டாக்கும் கனியுறுப்பைப் பொருத்து எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

ஜிம்னோஸ்பெர்ம்கள் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

  1. ஆல்காக்களில் தாவர உடலானது வேர் தண்டு மற்றும் இலை என வேறுபாடற்று காணப்படுகிறது. இது எவ்வாறு அழைக்கப்படும்?

தாலஸ்

  1. ஆல்காக்கள் பெரும்பாலும் எதில் வாழ்பவை?

நீரில்

 

  1. காரா இதற்கு எடுத்துக்காட்டு?

ஆல்கா

  1. இருவாழ்வி தாவரங்கள் என அழைக்கப்படுபவை எவை?

மாஸ்கள்

  1. ஃபியூனேரியா எதற்கு எடுத்துக்காட்டு?

 மாஸ்கள்

  1. பெரணிகளில் நீர் மற்றும் உணவு பொருட்களை கடத்தும் என்ன திசுக்களை பெற்றுள்ளது?

வாஸ்குலார் திசுக்கள் 

  1. அடிப்படையில் நிலத்தில் முதலில் தோன்றிய நில வாழ் தாவரங்கள் என்ன ?

 பெரணிகள்

  1. அடியாண்டம் எதற்கு எடுத்துக்காட்டு?

 பெரணிகள்

  1. கனிகளை உண்டாக்காத திறந்த விதைகளை உடைய தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஜிம்னோஸ்பெர்ம்கள்

  1. பைனஸ்,சைகஸ் முதலியவை இதற்கு எடுத்துக்காட்டு?

ஜிம்னோஸ்பெர்ம்கள்

  1. பூக்கும் தாவரங்கள் எத்தனை வட்ட அடுக்குகளை கொண்ட மலர்களை உருவாக்குகிறது?

 நான்கு: புல்லி வட்டம் ,அல்லி வட்டம் ,மகரந்தத்தாள் வட்டம் மற்றும் சூலக வட்டம்

  1. தற்காலத்தில் வாழும் தாவரங்களில் மிகவும் மேம்பாடு அடைந்தவை எது?

 ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

  1. வித்திலைகளின் எண்ணிக்கையை பொறுத்து ஆஞ்சியோஸ்பெர்ம்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?

 இரண்டு: ஒரு வித்திலை தாவரம் இருவித்திலை தாவரம்

  1. ஐந்துலக வகைப்பாடு முறை யாரால் எந்த ஆண்டு  முன்மொழியப்பட்டது? 

R H. விட்டேக்கர் 1969

  1. அனைத்து புரோகேரியோட்டு உயிரினங்களும் என்ன உலகத்தில் வைக்கப்பட்டுள்ளது?

மொனிரா

  1. மொனீரா வகைக்கு எடுத்துக்காட்டு எவை ?

 பாக்டீரியங்கள் மற்றும் நீலப் பசும் பாசிகள்

  1. ஒரு செல் உயிரிகளும் சில எளிய பல செல் யூகேரியோட்டுகளும் உள்ள உலகம் எது ?

புரோட்டிஸ்டா

  1. புரோட்டிஸ்டா வகை உயிரினங்கள் எதன் மூலம் உணவு  தயாரிக்கும்?

 ஒளிச்சேர்க்கை

  1. விலங்கு வகை புரோட்டிஸ்டுகள் பெரும்பாலும் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

 புரோட்டோசோவான்கள்

  1. அமீபா, பாரமீசியம் போன்ற விலங்குகள் எதற்கு எடுத்துக்காட்டு?

 புரோடிஸ்டா

  1. பூஞ்சைகள் என்னவாக காணப்படுகின்றன?

சாறுண்ணிகள், சிதைப்பான்கள் அல்லது ஒட்டுண்ணிகள்

  1. தாவர உலகத்தில் உள்ள உயிரினங்களில் உணவுகள் என்ன வடிவத்தில் சேமிக்கப்படுகிறது?

 லிப்பிடுகள் எண்ணெய் அல்லது கொழுப்பின் வடிவம்

  1. இருசொல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்

 1623 ,காஸ்பார்டு பாஹின்

  1. இரு சொல் பெயரிடும் முறையை எந்த ஆண்டு யார் செயல்படுத்தினார்?

1753 ,கரோலஸ் லின்னேயஸ்

  1. நவீன வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

கரோலஸ் லின்னேயஸ்

  1. மனிதன்- அறிவியல் பெயர் என்ன?

ஹோமோ சேப்பியன்ஸ்

  1. வெங்காயம் – அறிவியல் பெயர் என்ன?

 அல்லியம் சட்டைவம்

  1. எலி – அறிவியல் பெயர் என்ன?
SEE ALSO  12TH ETHICS STUDY NOTES | பக்தி இயக்கம் | TNPSC GROUP EXAMS

 ரேட்டஸ் ரேட்டஸ்

  1. புறா- அறிவியல் பெயர் என்ன?

 கொலம்பியா லிவியா

  1. புளியமரம் – அறிவியல் பெயர் என்ன?

டேமமரின்டஸ் இண்டிகா

  1. எலுமிச்சை- அறிவியல் பெயர் என்ன?

சிட்ரஸ் அருண்டிஃபோலியா

  1. வேப்பமரம்- அறிவியல் பெயர் என்ன?

அசாடிரேக்டா இண்டிகா

  1. தவளை- அறிவியல் பெயர் என்ன?

ரானா ஹெக்சா டாக்டைலா

  1. தேங்காய் – அறிவியல் பெயர் என்ன?

காக்கஸ் நியூசிபெரா

  1. நெல் – அறிவியல் பெயர் என்ன?

ஒரைசா சட்டைவா

  1. மீன் – அறிவியல் பெயர் என்ன?

கட்லா கட்லா

 

  1. ஆரஞ்சு – அறிவியல் பெயர் என்ன?

சிட்ரஸ் சைனன்ஸிஸ்

  1. இஞ்சி – அறிவியல் பெயர் என்ன?

ஜிஞ்சிபர் அஃபிஸினேல்

  1. பப்பாளி – அறிவியல் பெயர் என்ன?

 காரிகா பப்பாயா

  1. பேரிட்சை- அறிவியல் பெயர் என்ன?

ஃபோனிக்ஸ் டாக்டைலிஃபெரா


7TH ZOOLOGY STUDY NOTES |வகைப்பாட்டியலின் அடிப்படைகள்| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: