7TH TAMIL GRAMMAR STUDY NOTES | TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

குற்றியலுகரம் குற்றியலிகரம்

  1. தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

இரண்டு: முதல் எழுத்துக்கள், சார்பெழுத்துக்கள்

  1. முதல் எழுத்துக்கள் என அழைக்கப்படுபவை எவை?

உயிர் எழுத்து 12 ,மெய்யெழுத்து 18 ஆகிய முப்பது எழுத்துக்கள்

  1. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?

பத்து

  1. சார்பெழுத்துகளின் வகைகள் என்னென்ன?

உயிர்மெய், ஆய்தம் ,உயிரளபெடை ,ஒற்றளபெடை, குற்றியலுகரம் ,குற்றியலிகரம் ,ஐகாரக்குறுக்கம் ,ஒளகாரக்குறுக்கம் ,மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்

  1. தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

குற்றியலுகரம்

  1. குற்றியலுகரத்தில் என்ன எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் வரும் போது ஒரு மாத்திரைக்கு பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும்?

 வல்லின உகரம் கு,சு,டு,து,பு,று

  1. எந்த எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரம் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்?

தனி குறில் எழுத்து

  1. வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

முற்றியலுகரம்

  1. தமிழில் எழுத்துக்களை குறிப்பிடுவதற்கு என்ன அசைச்சொற்கள் பயன்படுத்தப்படுகிறது?

கரம்,கான், காரம்,கேனம்

  1. குறில் எழுத்துகளை குறிக்க என்ன அசைச் சொல் பயன்படுத்தப்படுகிறது?

கரம்

  1. நெடில் எழுத்துகளை குறிக்க என்ன அசைச் சொல் பயன்படுத்தப்படுகிறது?

கான்

  1. குறில்,நெடில் எழுத்துகளை குறிக்க என்ன அசைச் சொல் பயன்படுத்தப்படுகிறது?

காரம்

  1. ஆய்த எழுத்தைக் குறிக்க என்ன அசைச் சொல் பயன்படுத்தப்படுகிறது?

 கேனம்

  1. குற்றியலுகரத்தின் வகைகள் எத்தனை?

ஆறு

  1. குற்றியலுகரத்தின் வகைகள் என்னென்ன?

 நெடில் தொடர் குற்றியலுகரம், ஆய்த தொடர் குற்றியலுகரம், உயிர் தொடர் குற்றியலுகரம், வன்தொடர் குற்றியலுகரம், மென்தொடர்க் குற்றியலுகரம், இடைத்தொடர் குற்றியலுகரம்

  1. தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

நெடில் தொடர் குற்றியலுகரம்

  1. நெடில் தொடர் குற்றியலுகரம் எத்தனை சொற்களாக மட்டுமே அமையும்?

ஈரெழுத்து சொற்கள்

  1. ஆய்த எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படும்?

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

  1. தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 உயிர்த்தொடர் குற்றியலுகரம்

  1. வல்லின மெய் எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வன் தொடர்க் குற்றியலுகரம்

  1. மெல்லின மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

மென்தொடர்க் குற்றியலுகரம்

  1. இடையின மெய் எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

இடைத்தொடர் குற்றியலுகரம்

  1. எந்த எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் சொற்கள் இல்லை?

 வ்

  1. எந்த எழுத்துக்களை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை?

 சு,டு,று

  1. தன் ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

குற்றியலிகரம்

  1. குற்றியலுகரம் எத்தனை இடங்களில் மட்டும் வரும் ?

இரண்டு : யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது மற்றும் மியா என்ற அசைச் சொல்


 

நால்வகை குறுக்கங்கள்

  1. சில எழுத்துக்கள் சில இடங்களில் தமக்குரிய கால அளவை விட குறைந்து ஒலிக்கும் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

குறுக்கங்கள்

  1. ஐகார எழுத்து தனித்து வரும் இடங்களில் எந்த மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும்?

இரண்டு மாத்திரை

  1. ஐகார எழுத்து சொல்லின் எந்த இடங்களில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கிறது?

 சொல்லின் முதல் இடை இறுதி ஆகிய இடங்களில்

  1. ஐகாரம் சொல்லின் முதலில் வரும் பொழுது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும் ?

 ஒன்றரை மாத்திரை

  1. ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?

ஒரு மாத்திரை

  1. ஔகார எழுத்து எப்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது?

தனித்து வரும் இடங்களில்

  1. ஔகாரம் சொற்களின் முதலில் வரும்பொழுது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து எவ்வளவாக குறைந்து ஒலிக்கிறது ?

ஒன்றரை மாத்திரை

  1. ஔகாரம் சொல்லின் எங்கு இடம்பெறாது?

சொல்லின் இடையிலும் இறுதியிலும்

  1. மகர மெய் எழுத்தை அடுத்து எந்த எழுத்து வரும் போது மகரமானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கும்?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | பிரதேச முடி அரசுகளின் தோற்றமும் புதிய மதப் பிரிவுகள் உருவாக்கமும்| TNPSC GROUP EXAMS

வ,ன்,ண்

  1. ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து எந்த மாத்திரை அளவில் ஒலிப்பது ஆய்தக்குறுக்கம் என அழைக்கப்படுகிறது?

கால் மாத்திரை


இலக்கிய வகை சொற்கள்

  1. ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?

சொல்

  1. சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் என்னென்ன?

மொழி, பதம், கிழவி

  1. இலக்கண முறைப்படி சொல் எத்தனை வகைப்படும்?

நான்கு :பெயர்ச்சொல் ,வினைச்சொல் ,இடைச்சொல் ,உரிச்சொல்

  1. இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?

நான்கு: இயற்சொல் ,திரிசொல் ,திசைச்சொல் ,வடசொல்

  1. எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

இயற்சொற்கள்

  1. இயர் சொற்கள் எந்தெந்த இடங்களில் வரும்?

பெயர்இயற்சொற்கள், வினை இயற்சொற்கள், இடைஇயற்சொற்கள், உரி இயற்சொற்கள் என நான்கிலும்

  1. கற்றோருக்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருவதாகவும் அமையும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

திரி சொற்கள்

  1. திரிசொல் எந்தெந்த இடங்களில் வரும்?

நான்கு: பெயர் திரிசொல், வினைத் திரிசொல் ,இடைதிரிசொல், உரி திரிசொல்

  1. திரி சொற்கள் எத்தனை வகைப் படுத்தப்படுகிறது?

இரண்டு: ஒரு பொருள் குறித்த பல சொற்கள் ,பல பொருள் குறித்த ஒரு திரிசொல்

  1. வட மொழியை தவிர பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

திசைச்சொற்கள்

  1. வடமொழியிலிருந்து பந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

வடசொற்கள்

  1. வட சொற்களை எத்தனை வகையாகப் பிரிப்பர் ?

இரண்டு: தற்சமம், தற்பவம்

  1. வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதற்கு என்ன பெயர்?

தற்சமம்

  1. தமிழ் எழுத்துக்களால் மாற்றி வடமொழி சொற்களை எழுதுவதற்கு என்ன பெயர் ?

தற்பவம்


ஓரெழுத்து ஒருமொழி

  1. ஓர் எழுத்து பொருள் தரும் சொல்லாக அமைவதற்கு என்ன பெயர்?

ஓரெழுத்து ஒரு மொழி

  1. பவணந்தி முனிவர் தமிழில் எத்தனை ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிடுகிறார்?

 42

  1. பவணந்தி முனிவர் குறிப்பிடும் 42 சொற்களில் எந்த இரண்டு சொற்களை தவிர ஏனைய 40 சொற்களும் நெடில் எழுத்துக்களாக அமைந்தவை?

நொ,து

  1. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக:

ஆ-பசு

  1. ஈ -கொடு
  2. ஊ -இறைச்சி
  3. ஏ-அம்பு
  4. ஐ-தலைவன்
  5. ஓ-மதகு நீர் தாங்கும் பலகை
  6. கா- சோலை
  7. கூ -பூமி
  8. கை -ஒழுக்கம்
  9. கோ- அரசன்
  10. சா-இறந்து போ
  11. சீ- இகழ்ச்சி
  12. சே-உயர்வு
  13. சோ-மதில்
  14. தா-கொடு
  15. தீ-நெருப்பு
  16. தூ-தூய்மை
  17. தே-கடவுள்
  18. தை-தைத்தல்
  19. நா-நாவு
  20. நீ-முன்னிலை ஒருமை
  21. நே-அன்பு
  22. நை-இழிவு
  23. நோ-வறுமை
  24. பா-பாடல்
  25. பூ-மலர்
  26. பே-மேகம்
  27. பை-இளமை
  28. போ-செல்
  29. மா-மாமரம்
  30. மீ-வான்
  31. மூ-மூப்பு
  32. மே-அன்பு
  33. மை-அஞ்சனம்
  34. மோ-முகத்தல்
  35. யா-அகலம்
  36. வா-அழைத்தல்
  37. வீ-மலர்
  38. வை-புல்
  39. வௌ-கவர்
  40. நொ-நோய்
  41. து- உண்

பகுபதம் பகாப்பதம்

  1. சிறு சிறு உறுப்புகளாக பிரிக்கும் வகையில் அமையும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

 பகுபதம்

  1. பிரிக்கப்படும் உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?

பகுபத உறுப்புகள்

  1. பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பெயர்ப்பகுபதம்

  1. பெயர்ப் பகுபதம் எத்தனை வகைப்படும் ?

ஆறு:பொருள் ,இடம் ,காலம் ,சினை ,பண்பு ,தொழில்

  1. பகுபதமாக அமையும் வினைச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 வினைப்பகுபதம்

  1. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

ஆறு: பகுதி ,விகுதி ,இடைநிலை ,சந்தி ,சாரியை ,விகாரம்

  1. பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது எது?

 பகுதி

  1. பகுதி எப்போதும் என்னவாகவே அமையும் ?

கட்டளை

  1. பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை பால் ஆகியவற்றையோ முற்று எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது எது?

விகுதி

  1. பகுபதத்தின் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

இடைநிலை

  1. பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய் எழுத்து எவ்வாறு அழைக்கப்படும்?

 சந்தி

  1. பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
SEE ALSO  7TH TAMIL IYAL 09 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

சாரியை

  1. பகுதி விகுதி சந்தி இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விகாரம்

  1. பகுபத உறுப்புகளாக பிரிக்க முடியாத சொல் எவ்வாறு அழைக்கப்படும் ?

பகாப்பதம்

 பகாப்பதங்கள் எத்தனை வகை சொற்களில் இடம்பெறும்?

4: பெயர் வினை இடை உரி


தொழிற்பெயர்

  1. ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

தொழிற்பெயர்

  1. தொழிற்பெயர் எவற்றை காட்டாது?

பால், எண் ,இடம் ,காலம்

  1. தொழிற்பெயரை எவ்வாறு வகைப்படுத்துவர் ?

 விகுதி பெற்ற தொழிற்பெயர் ,முதனிலைத் தொழிற்பெயர் ,முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

  1. வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

விகுதி பெற்ற தொழிற்பெயர்

  1. தொழிற்பெயரின் விகுதிகள் என்னென்ன?

தல்,அல்,அம்,ஐ,கை,வை,கு,பு,வு,தி,சி,வி,மை

  1. ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை எவ்வாறு அழைப்பர் ?

முதனிலை

  1. எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற் பெயராக அமைவது எவ்வாறு அழைக்கப்படும்?

முதனிலைத் தொழிற்பெயர்

  1. முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

முதனிலை திரிந்த தொழிற்பெயர்


அணி இலக்கணம்

  1. ஒரு செயலை சொல்லாலும் பொருளாலும் அழகு பெறச் செய்தல் எவ்வாறு அழைக்கப்படும்?

அணி

  1. ஒப்பிட்டு கூறப்படும் பொருள் எவ்வாறு அழைக்கப்படும்?

உவமை அல்லது உவமானம்

  1. உவமையால் விளக்கப்படும் பொருள் எவ்வாறு அழைக்கப்படும் ?

உவமேயம்

  1. உவம உருபுகள் என்ன?

போல,போன்ற,புரைய,அன்ன,இன்ன,அற்று,இற்று,மான,கடுப்ப,ஒப்ப,உறழ,

  1. ஒரு பாடலில் உவமையும் உவமேயம் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

உவமையணி

  1. உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

 எடுத்துக்காட்டு உவமையணி

  1. உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதற்கு என்ன பெயர்?

இல்பொருள் உவமை அணி

  1. உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது என்ன அணி?

உருவக அணி

  1. கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்று உருவகப்படுத்தாமல் விடுவதற்கு என்ன பெயர்?

 ஏகதேச உருவக அணி


வழக்கு

 

  1. எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வழக்கு

  1. நம் முன்னோர் எந்தெந்த சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதற்கு பெயர் என்ன?

வழக்கு

  1. வழக்கு எத்தனை வகைப்படும்?

இரண்டு வகை: இயல்பு வழக்கு ,தகுதி வழக்கு

  1. ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது என்ன வழக்கு ?

 இயல்பு வழக்கு

  1. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?

 மூன்று :இலக்கணமுடையது ,இலக்கணப்போலி ,மரூஉ

  1. இலக்கணம் நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

இலக்கணமுடையது

  1. இலக்கண முறைப்படி அமையாவிடினும் இலக்கணம் உடையவை போலவே ஏற்றுக்கொள்ளப்படும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

 இலக்கணப்போலி

  1. பெரும்பாலும் சொற்களின் முன் பின் பகுதிகள் இடம் மாறி வருவது எதைக் குறிக்கும் ?

இலக்கணப்போலி

    1. இலக்கணப்போலி வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

முன்பின்னாக தொக்க போலி

  • இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து சிதைந்து வழங்கும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

 

 மரூஉ

  1. ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்ல தகுதியற்ற சொற்களை தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது எவ்வாறு அழைக்கப்படும்?

தகுதி வழக்கு

  1. தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?

 மூன்று :இடக்கரடக்கல், மங்கலம் ,குழூஉக்குறி

  1. பிறரிடம் வெளிப்படையாக சொல்லத் தகாத சொற்களை தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது என்ன பெயர்?

இடக்கரடக்கல்

  1. மங்கலம் இல்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதற்கு என்ன பெயர்?

மங்கலம்

  1. ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலை குறிக்க தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

குழூஉக்குறி

  1. ஒரு சொல்லின் முதலிலோ இடையிலோ இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்கு பதிலாக வேறு ஒரு எழுத்து இடம்பெற்று அதே பொருளைத் தருவது எவ்வாறு அழைக்கப்படும் ?

 போலி

  1. போலி எத்தனை வகைப்படும் ?

மூன்று :முதற்போலி ,இடைப்போலி, கடைப்போலி

  1. சொற்களில் முதலெழுத்து மாறினாலும் பொருள் மாறாத சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
SEE ALSO  7TH TAMIL IYAL 07 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

 முதற்போலி

  1. சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து அமைந்து அதே பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 இடைப்போலி

  1. சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்க்கு பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது அழைக்கப்படுகிறது ?

கடைப்போலி

  1. அஃறிணை பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்துக்கு பதிலாக என்ன எழுத்து கடை போலியாக வரும்? 

னகரம்

  1. லகர  எழுத்திற்கு பதிலாக எந்த எழுத்து கடை போலியாக வரும்?

ரகரம்

  1. ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துக்களுக்குப் பதிலாக எழுத்துக்கள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பதற்கு என்ன பெயர்?

முற்றுப்போலி


ஆகுபெயர்

 

  1. ஒன்றன் பெயர் அதனை குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றுக்கு ஆக்கி வருவதற்கு என்ன பெயர்?

ஆகுபெயர்

  1. பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகி வருவதற்கு என்ன பெயர்?

பொருளாகு பெயர்

  1. பொருளாகு பெயர் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

முதலாகுபெயர்

  1. ஒரு இடத்திற்கு ஆகி வரும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

இடவாகுபெயர்

  1. ஒரு காலத்திற்கு ஆகி வரும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

காலவாகு பெயர்

  1. சினையின் பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகி வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

சினையாகு பெயர்

  1. ஒரு பண்புக்கு ஆகி வரும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

பண்பாகு பெயர்

  1. ஒரு தொழிலுக்கு ஆகி வரும் பெயர் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

தொழிலாகு பெயர்

  1. இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

 இரட்டைக்கிளவி

  1. அவலம்,உவகை,வெகுளி,அச்சம்,விரைவுச்,சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதற்கு என்ன பெயர் ?

அடுக்குத்தொடர்


7TH TAMIL GRAMMAR STUDY NOTES | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

Leave a Comment

error: