TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- 16ஆம் நூற்றாண்டில் எந்த சுல்தான்கள், மராத்தியர்களை தங்கள் குதிரைப் படையில் பணியமர்த்தினர்?
பீஜப்பூர் ,அகமதுநகர்
- மகாராஷ்டிராவின் பக்தி இயக்கத்தை சேர்ந்த எந்த பெரியோர் சிவாஜியின் வாழ்வின் மீது கணிசமான செல்வாக்கு செலுத்தினர் ?
துக்காராம்,ராம்தாஸ்
- சிவாஜி எப்போது பிறந்தார் 1627 சிவாஜியின் பெற்றோர் யார் ?
ஷாஜி போன்ஸ்லே-ஜீஜாபாய்
- ஷாஜி போன்ஸ்லே யாரிடம் பணியாற்றினார் ?
அகமதுநகர் ,பீஜப்பூர் ஆகிய அரசுகளில்
- சிவாஜியின் ஆசிரியரும் குருவுமாக இருந்தவர் யார் ?
தாதாஜி கொண்டதேவ்
- தனது எந்த வயதில் பூனேவுக்கருகே இருந்த கோண்டுவானா கோட்டையை கைப்பற்றுவதில் சிவாஜி வெற்றி பெற்றார்?
பதினெட்டாவது வயது (1645)
- எந்த ஆண்டில் சிவாஜி தோர்னா கோட்டையைக் கைப்பற்றினார்?
1646
- சிவாஜியின் பாதுகாவலரான தாதாஜி கொண்டதேவ் எப்போது இயற்கை எய்தினார்?
1649
- சிவாஜியின் படையில் வலிமையாக திகழ்ந்த வீரர்கள் யார்?
மாவலி காலாட்படை வீரர்கள்
- சிவாஜி எந்த கோட்டையை கைப்பற்றியதால் பீஜப்பூர் சுல்தான் சிவாஜியின் தந்தையை சிறை வைத்தார்?
புரந்தர் கோட்டை
- தந்தையாரின் மறைவுக்குப் பின்னர் சிவாஜி மராத்திய தலைவர் சந்திர ராவ் மோர் என்பவரிடமிருந்து ஜாவலியை எந்த ஆண்டு கைப்பற்றினார்?
1656
- எந்த ஆண்டு சிவாஜி பீஜப்பூரின் குறிப்பிடத்தகுந்த தளபதியான அப்சல்கானை கொன்றார்?
1659
- எந்த ஆண்டு ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாய தளபதியுமான செயிஷ்டக்கானை சிவாஜி காயப்படுத்தி துரத்தி அடித்தார்?
1663
- எந்த ஆண்டு சிவாஜி அரபிக் கடற்கரையில் அமைந்திருந்த முகலாயரின் முக்கிய துறைமுகமான சூரத் நகரை சூறையாட தமது படைகளை அனுப்பினார் ?
1664
- சிவாஜியை அழித்தொழிக்கவும் ,பீஜப்பூரை இணைக்கவும் எந்த ராஜபுத்திர தளபதியின் தலைமையில் முகலாயப் படை அனுப்பி வைக்கப்பட்டது?
ராஜா ஜெய்சிங்
- சத்ரபதி என்பது எந்த மொழிச் சொல் அதன் பொருள் என்ன ?
சமஸ்கிருத சொல் (சத்ர-குடை, பதி- தலைவன் அல்லது பிரபு)
- சிவாஜி இரண்டாவது முறையாக எப்போது சூரத் நகரை கொள்ளையடித்தார்?
1670
- எந்த ஆண்டு சிவாஜி சத்ரபதி எனும் பட்டத்துடன் மணி முடி சூட்டிக்கொண்டார்?
1674
- சிவாஜியின் முடிசூட்டும் விழா எந்தக் கோட்டையில் நடைபெற்றது ?
ரெய்கார் கோட்டை
- சிவாஜி எப்போது இயற்கை எய்தினார்?
1680
- சவுத் எனும் வரி மொத்த வருமானத்தில் எத்தனை பங்கு பாதுகாப்பு கட்டணமாக வசூலிக்கப்பட்டது?
நான்கில் ஒரு பங்கு
- சர்தேஷ்முகி (அரசருக்கான கட்டணமாக) எத்தனை பங்கு வரியாக பெற்றது?
பத்தில் ஒரு பங்கு
- சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் கிராமங்கள் யாரால் நிர்வகிக்கப்பட்டது?
தேஷ்முக்
- தேஷ்முக் என்பவரிடம் எத்தனை வரையிலான கிராமங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது?
20 முதல் 100
- ஒவ்வொரு கிராமத்திலும் அதிகாரமிக்க ஒரு கிராம தலைவர் இருந்தார் அவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
பட்டீல்
- கிராம தலைவருக்கு உதவியாக ஒருகணக்கரும் மற்றும் என்ன பெயரில் ஆவண காப்பாளர் ஒருவரும் பணியாற்றினார் ?
குல்கர்னி
- சிவாஜி எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவிற்கு என்ன பெயரிட்டார் ?
அஷ்டபிரதான்
- மராத்திய பேரரசில் நவீனகால பிரதமருக்கு இணையானவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
பேஷ்வா
- உண்மையில் பேஷ்வாக்கள் யாருக்கு துணை அதிகாரிகளாக இருந்தார்கள்?
சத்ரபதிகளுக்கு
- யாருடைய காலத்தில் இருந்து பேஷ்வாக்கள் உண்மையான மராட்டிய அரசர்களாயினர்?
சாகு மகாராஜா
- விளைச்சலில் எத்தனை பங்கு அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது ?
ஐந்தில் இரண்டு பங்கு
- அஷ்டபிரதானில் பிரதம அமைச்சர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
பந்த்பீரதான்/பேஷ்வ்
- அஷ்டபிரதானில் நிதியமைச்சர் எவ்வாறு அழைக்கப்படுவார் ?
அமத்தியா/மஜீம்தார்
- அஷ்டபிரதானில் செயலர் எவ்வாறு அழைக்கப்படுவார் ?
சுர்ந்வாஸ்/சச்சீவ்
- அஷ்டப்ரதானில் உள்துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
வாக்கிய -நாவிஸ்
- அஷ்டபிரதானில் தலைமை தளபதி எவ்வாறு அழைக்கப்படுவார்?
சர்-இ-நௌபத்/சேனாதிபதி
- அஷ்டபிரதானில் வெளியுறவுத்துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
சுமந்த்/துபிர்
- அஷ்டபிரதானில் தலைமை நீதிபதி எவ்வாறு அழைக்கப்படுவார் ?
நியாயதிஸ்
- அஷ்டபிரதானில் தலைமை அர்ச்சகர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
பண்டிட்ராவ்
- சிவாஜியை தொடர்ந்து யார் ஆட்சி பொறுப்பேற்றார்?
சாம்பாஜி
- மார்வார் ரத்தோர் குடும்பத்தைச் சேர்ந்த யார் சாம்ப்ஜியின் அரசவையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்?
துர்காதாஸ்
- அவுரங்கசீப்பிற்கு எதிராக கலகம் செய்த அவரது எந்த மகன் சாம்பாஜியின் அரசவையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்?
அக்பர்
- எந்த ஆண்டு ஔரங்கசீப் தக்காணத்தை வந்தடைந்தார்?
1861
- எந்த ஆண்டு பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தான்கள் ஔரங்கசீப்பிடம் வீழ்ந்தது?
1687
- சாம்பாஜி தம்முடைய குடும்ப அர்ச்சகரான யாரின் செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தார் ?
கவிகலாஷ்
- சிவாஜி ஆக்ராவில் இருந்து தப்பிய போது வாரணாசியில் சாம்பாஜியின் பாதுகாவலராக இருந்து பின்னர் ரெய்காருக்கு அழைத்து வந்தவர் யார்?
கவிகலாஷ்
- சிவாஜிக்கு பின்னர் அவருடைய பேரன் ஷாகு எந்த ஆண்டு முதல் ஆட்சி புரிந்தார்?
1708 முதல்1749 வரை
- ஷாகு என்றால் பொருள் என்ன?
நேர்மையானவர்
- ஷாகு என்ற பெயர் யாரால் வைக்கப்பட்டது?
ஔரங்கசீப்
- ஷாகு மஹராஜா எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
40 ஆண்டுகள்
- பாலாஜி விஸ்வநாத்தின் காலம் என்ன?
1713 -1720
- பாலாஜி விஸ்வநாத் என்ன அலுவலராக தமது பணியை தொடங்கினார்?
சாதாரண வருவாய்த்துறை அலுவலர்
- பாலாஜி விஸ்வநாத் எந்த ஆண்டு பேஷ்வா ஆனார்?
1713
- ஷாகு பாலாஜி விஸ்வநாத்தின் மூத்த மகனான யாரை அடுத்த பேஷ்வாவாக பணியமர்த்தினார் ?
பாஜிராவ்
- பாஜிராவின் ஆட்சி காலம் என்ன?
1720-1740
- முக்கிய மராத்திய குடும்பங்கள் இருந்த இடங்களை குறிப்பிடுக ?
கெய்க்வாட்- பரோடா
பான்ஸ்லே– நாக்பூர்
ஹோல்கார்–இந்தூர்
சிந்தி அல்லது சிந்தியா –குவாலியர்
பேஷ்வா–புனே
- மராத்தியர்களின் படை எவ்வளவு க்கும் குறைவான குதிரை வீரர்களை கொண்டிருந்தது ?
5000
- பாலாஜி பாஜிராவின் ஆட்சி காலம் என்ன?
1740 -1761
- எந்த ஆண்டு ஷாகு இயற்கை எய்தினார்?
1749
- ஷாகு இயற்கை எய்தியபோது பேஷ்வா பொறுப்பில் இருந்தவர் யார்?
பாலாஜி பாஜிராவ்
- மராத்தியர்களின் தலைநகரம் பூனே என மாற்றியவர் யார் ?
பாலாஜி பாஜிராவ்
- பேஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் எந்த முக்கிய அதிகாரியை கொண்டு இருந்தது?
காமவிஸ்த்தார்
- காமவிஸ்த்தார் என்ற அதிகாரி யாரால் பணியமர்த்தப்பட்டார் ?
பேஷ்வா
- மராத்தியர்களின் பேரரசு எந்த ஆண்டுடன் முடிவுக்கு வந்தது?
1761
- மூன்றாம் பானிபட் போர் எப்போது நடந்தது?
1761
- மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்களை வென்றவர் யார்?
அகமதுஷா அப்தாலி
- இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்?
ஜாகிருதீன் முகமது பாபர்
- பாபர் தன் தந்தையார் வழியில் யாருடைய வம்சத்தைச் சார்ந்தவர்?
தைமூர்
- பாபர் தன் தாய் வழியில் யாருடைய வம்சத்தைச் சார்ந்தவர்?
தாஷ்கண்ட் சேர்ந்த யூனுஸ் கான்
- பாபர் செங்கிஸ்கானின் எத்தனையாவது தலைமுறை வாரிசு ஆவார் ?
13-வது
- பாபர் எப்போது பிறந்தார்?
பிப்ரவரி 14 ,1483
- ஜாகிருதீன் முகமது பாபர் என்றால் பொருள் என்ன?
நம்பிக்கையை காப்பவர்
- பாபர் தன்னுடைய எத்தனையாவது வயதில் பர்கானாவை பரம்பரை சொத்தாக பெற்றார்?
12 வயது
- பாபர் பர்கானாவிலிருந்து யாரால் துரத்தி அடிக்கப்பட்டார்?
உஸ்பெக்குகள்
- பாபர் காபூலை எப்போது கைப்பற்றினார்
1505
- பாபரை இந்தியா மீது படை எடுத்து வரும்படி காபூலில் பாபரை சந்தித்தவர்கள் யார் ?
தௌலத்கான் லோடியின் மகன் தில்வர்கான்,டெல்லி சுல்தானின் மாமனார் ஆலம் கான்
- முகலாய வம்சத்தின் ஆட்சி எந்த நகரைத் தலைநகராகக் கொண்டு துவங்கியது ?
ஆக்ரா
- 1527 இல் பாபர் யாரை தோற்கடித்தார்?
ராணா சங்கா
- பாபர் எந்த மொழிகளில் புலமை பெற்றவராவார்?
துருக்கி பாரசீகம்
- பாபரின் எந்த சுயசரிதையில் இந்துஸ்தான் பற்றிய தமது கருத்துக்களையும் விலங்குகள் செடிகள் மரங்கள் மலர்கள் கனிகள் குறித்தும் பதிவு செய்துள்ளார்?
துசுக்-இ- பாபரி
- உமாயூனின் சகோதரர்கள் யார்?
கம்ரான்,ஹின்டால், அஸ்காரி
- சௌசாமற்றும் கன்னோசி போர் நடைபெற்ற ஆண்டு எது?
1539 ,1540
- சௌசா மற்றும் கன்னோசி போரில் ஹுமாயூனைத் தோற்கடித்த அரசர் யார்?
ஷேர்ஷா சூர்
- 1555ல் ஹுமாயூனுக்கு டெல்லியை மீண்டும் கைப்பற்றுவதில் உதவியாக இருந்த அரசர் யார்?
ஷா-தாமஸ்ப்
- ஷா தாமஸ்ப் எந்த நாட்டு அரசர்?
பாரசீகம், சபாவிட் வம்சம்
- ஹூமாயூன் எப்போது இறந்தார்?
1556
- அக்பர் அரசராக முடி சூட்ட பெற்ற பொழுது அவரின் வயது என்ன?
14
- சூர் வம்சத்தைச் சேர்ந்த எந்த தளபதி 1556 டெல்லியையும் கைப்பற்றிக் கொண்டார்?
ஹெமு
- பைராம் கான் எங்கு கொல்லப்பட்டார்?
குஜராத்
- மத்திய இந்திய பகுதியைச் சேர்ந்த எந்த ராணியை பாபர் தோற்கடித்தார்?
ராணி துர்காவதி
- அகமதுநகர் அரசின் பகர ஆட்சியாளராக இருந்த புகழ்பெற்ற ராணி சாந்த் பீபியின் மீது படையெடுத்தவர் யார்?
அக்பர்
- 1568ல்சித்தூரையும் 1569 ராந்தம்பூரையும் அக்பர் யாரை தோற்கடித்து கைப்பற்றினார்?
மேவார் அரசன் ராணா உதயசிங்
- 1576 உதய சிங்கின் மகனான யாரை ஹால்டிகாட் போரில் அக்பர் வெற்றி கொண்டார்?
ராணா பிரதாப்சிங்
- ராணா பிரதாப் சிங்கின் குதிரை பெயர் என்ன?
சேத்தக்
- அக்பர் எப்போது இயற்கை எய்தினார்?
1605
- அக்பரின் உடல் எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது?
ஆக்ராவுக்கு அருகே சிக்கந்தரா
- அக்பர் நீக்கிய இரண்டு வரிகள் என்ன?
முஸ்லிம்கள் அல்லாதோர் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிசியா வரி மற்றும் இந்து பயணிகளின் மீது விதிக்கப்பட்டிருந்த வரி
- சுஃபி துறவியான சலீம் சிஷ்டியும் சீக்கிய குருவான ராம்தாசும் எந்த முகலாய அரசரிடம் அளவில்லா மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்தனர்?
அக்பர்
- அமிர்தசரஸில் உள்ள ஹர்மிந்தேர் சாகிப் கருவறை அக்பரால் யாருக்கு வழங்கப்பட்டது?
ராம்தாஸ்
- அக்பரின் புதிய தலைநகரம் எது
பதேபூர் சிக்ரி
- அனைத்து மத அறிஞர்களும் விவாதிக்கும் இடமான இபாதத் கானா எங்கு கட்டப்பட்டது?
பதேபூர் சிக்ரி
- அக்பரின் சொந்த நூலகத்தில் எத்தனைக்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன ?
4000 மேற்பட்ட
- அக்பர் ஆதரித்த அறிஞர்கள் யார்?
அபுல் பாசல் ,அப்துல் பெய்சி, அப்துர் ரஹீம் கான் இ கான்
- அக்பர் ஆதரித்த இசை மேதை யார்?
குவாலியர் சேர்ந்த தான்சென்
- அக்பர் ஆதரித்த ஓவியர் யார்?
தஷ்வந்த்
- ஜஹாங்கிரின் இயற்பெயர் என்ன?
சலீம் நூருதீன் முகமது ஜஹாங்கீர்
- ஜஹாங்கீர் என்பதன் பொருள் என்ன?
உலகத்தை கைப்பற்றியவர்
- இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸின் பிரதிநிதியாக யார் ஜஹாங்கீரின் அரசவைக்கு வருகை தந்தார்?
தாமஸ் ரோ
- ஆங்கிலேயர்கள் தனது முதல் வணிக மையத்தை எங்கு நிறுவினர்?
சூரத்
- ஷாஜகான் என்பதன் பொருள் என்ன?
உலகத்தின் அரசர்
- ஷாஜி பான்ஸ்லே யாரிடம் தளபதியாகப் பணியாற்றினார்?
சாஜஹான்
- அவுரங்கசீப்பின் சகோதரர்கள் யார்?
தாரா ,சுஜா ,முராத்
- ஷாஜஹான் தனது வாழ்நாளின் இறுதி எட்டு ஆண்டுகளை எங்கு கைதியாக கழித்தார்?
ஆக்ரா கோட்டையில் உள்ள ஷாபர்ஜ் அரண்மனை
- ஆலம்கீர் என்பதன் பொருள் என்ன?
உலகை கைப்பற்றியவர்
- இந்துக்களின் மீது மீண்டும் ஜிஸியா வரியை விதித்த முகலாய அரசர் யார் ?
ஔரங்கசீப்
- ஔரங்கசீப்பின் எந்த மகன் ஔரங்கசீப்பிற்கு எதிராக கலகம் செய்ததோடு ராஜபுத்திரர்கள் உடன் சேர்ந்து கொண்டு அவருக்கு இடையூறு விளைவித்தார்?
இளவரசர் அக்பர்
- இளவரசர் அக்பர் சிவாஜியின் எந்த மகனுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார்?
சாம்பாஜி
- சிவாஜி தன்னை மராத்திய நாட்டின் பேரரசராக எப்போது அறிவித்தார்?
1674
- சாம்பாஜியை கைது செய்து சித்திரவதை செய்து கொன்றவர் யார்?
ஔரங்கசீப்
- ஔரங்கசீப் தன்னுடைய எத்தனையாவது வயதில் இறந்தார்?
90ஆவது
- அவுரங்கசீப் எப்போது இறந்தார்
1707
- முகலாயப் படைகளின் தலைமை தளபதி மற்றும் நீதி வழங்குபவர் யார்
அரசர்
- முகலாய அரசின் வருவாய்த்துறை மற்றும் செலவுகள் ஆகியவற்றை கவனித்த அதிகாரியின் பெயர் என்ன?
வஜீர அல்லது திவான்
- முகலாய அரசின் ராணுவ துறை அமைச்சர் யார்?
மீர்பாக்ஷி
- முகலாய அரசின் மீர்சமான் என்ற அதிகாரியின் பணி என்ன?
அரண்மனை நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளுதல்
- முகலாய அரசின் தலைமை நீதிபதி அதிகாரியின் பெயர் என்ன?
குவாஜி
- இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரியின் பெயர் என்ன?
சதா-உஸ்-சுதூர்
- பேரரசுகள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன ?
சுபா-சர்க்கார்-பர்கானா
- நகரங்கள் மற்றும் பெரு நகரங்கள் ஆகியவற்றை நிர்வாகித்த அதிகாரியின் பெயர் என்ன?
கொத்தவால்
- சட்டம்-ஒழுங்கை பராமரிக்க அதிகாரியின் பெயர் என்ன ?
கொத்தவால்
- மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்த முகலாய அரசர் யார்?
அக்பர்
- ஒரு மன்சப்தாரி பராமரிக்க வேண்டிய குதிரைகள் குதிரை வீரர்களின் எண்ணிக்கையை குறிக்கும் சொல்?
சவார்
- யாருடைய ஆட்சிக் காலத்திற்கு பின் மன்சப்தாரி பதவி பரம்பரை உரிமை சார்ந்ததாக மாறியது?
அக்பர்
- அக்பரின் வருவாய் துறை அமைச்சர் யார்?
ராஜா தோடர்மால்
- ஜப்தி முறை யாரால் உருவாக்கப்பட்டது?
தோடர்மால்
- ஜப்தி முறைப்படி பத்தாண்டு காலத்திற்கு சராசரி விளைச்சலில் எத்தனை பங்கு அரசுக்கு வரியாக செலுத்தப்பட வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது?
மூன்றில் ஒரு பங்கு
- யாருடைய காலத்தில் ஜப்த் அல்லது ஜப்தி எனும் இம்முறை தக்காண மாகாணங்களுக்கும் நீடிக்கப்பட்டது?
ஷாஜகான்
- முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறையை என்ன பெயரிட்டு செயல்படுத்தினார்?
ஜாகீர்
- மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரியின் பெயர் என்ன?
அமில் குஜார்
- மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரிக்கு உதவிய துணைநிலை அதிகாரிகள் யார்?
பொட்டாதார்,கணுங்கோ,பட்வாரி,முக்காதம்
- இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஜமீன்தார் அவர்களுக்கு தங்களது ஜமீன் பகுதிகளின் மீது பரம்பரை உரிமை வழங்கப்பட்டது?
பதினாறாம் நூற்றாண்டு
- வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
சுயயூர்கள்
- அக்பர் அனைத்து மதங்களிலும் உள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்து எந்த மதத்தை உருவாக்கினார் ?
தீன் இலாகி
- பாரசீகக் கட்டிடக் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்?
பாபர்
- திவான்-இ-காஸ்,திவான்-இ-ஆம்,பஞ்ச் மகால்,ரங் மகால்,சலீம் சிஸ்டியின் கல்லறை, புலந்தர்வாசா ஆகியவை யாரால் கட்டப்பட்டது
அக்பர்
- சிக்கந்தாராவில் உள்ள அக்பரின் கல்லறை கட்டட பணிகளை நிறைவு செய்தவர் யார்
ஜஹாங்கீர்
- நூர்ஜஹானின் தந்தையான இம்மத்-உத்-தௌலாவின் கல்லறையை கட்டியவர் யார்
ஜகாங்கீர்
- யாருடைய காலத்தில் மயிலாசனம் தயாரிக்கப்பட்டது
சாஜஹான்
- டெல்லியில் உள்ள மிகப்பெரிய ஜும்மா மசூதி யாரால் கட்டப்பட்டது?
ஷாஜஹான்
- தன் தாயின் அன்பை போற்றும் வகையில் ஔரங்காபாத்தில் கட்டப்பட்ட பீபிகா மக்பாரா என்னும் கல்லறையை கட்டியவர் யார்?
ஔரங்கசீப் பின் மகன் ஆஜம் ஷா
- செங்கோட்டை எவ்வாறு அழைக்கப்படும்?
லால் குய்லா
- செங்கோட்டை எந்த அரசரால் எப்போது கட்டப்பட்டது?
ஷாஜஹான்
7TH STD HISTORY STUDY NOTES | மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services