- பலபடி என்ற சொல் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாலிமர்
- பாலிமர் என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
கிரேக்க மொழி
- கிரேக்க மொழிச் சொல்லான பாலிமர் என்பதன் பொருள் என்ன?
பாலி என்பது பல என்றும்,மெர் என்பதை சிறிய அடிப்படை அலகு என்று பொருள்படும்
- ஒற்றைப்படிகள் சகப்பிணைப்புகளால் இணைந்து உருவாக்கப்படும் நீண்ட சங்கிலி தொடர் அமைப்புக்குப் பெயர் என்ன?
பலபடி
- பலபடி உருவாக்கும் முறைக்கு என்ன பெயர்?
பலபடியாக்கல்
- பலபடி எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
இரண்டு வகை: இயற்கை பலபடி மற்றும் செயற்கை பலபடி
- உயிரினங்களின் உடலில் காணப்படும் புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மரம் மற்றும் காகிதத்திலும் உள்ள செல்லுலோஸ் முதலியவை எதற்கு எடுத்துக்காட்டு ?
இயற்கை பலபடிகள்
- புரதங்கள் என்பது எத்தனை வகையான ஒற்றைப்படிகளால் ஆனது?
அமினோ அமிலங்கள் என்ற இருபது வகையான ஒற்றைப் படிகள்
- புரத பலபடிகளுக்கு எடுத்துக்காட்டுகள் எவை?
டிஎன்ஏ ,நொதிகள், பட்டு, தோல், முடி ,விரல், நகங்கள், இறகுகள் மற்றும் விலங்குகளின் உரோமங்கள்
- தாவரங்களில் காணப்படும் செல்லுலோஸ், லிக்னின் ,கைட்டின் போன்றவை எதற்கு எடுத்துக்காட்டு?
கார்போஹைட்ரேட் பலபடிகள்
- பருத்தியின் முக்கிய அங்கமான செல்லுலோஸ் எந்த மூலக்கூறுகளால் ஆனது ?
சர்க்கரை மூலக்கூறுகள்
- நண்டுகள் மற்றும் சிலந்திகள் போன்ற பூச்சிகளின் புற எலும்புக்கூடுகளிலும் ,காளான்கள் போன்ற பூஞ்சைகளின் செல் சுவர் களிலும் காணப்படுவது எது?
கைட்டின்
- தாவரங்களுக்கு கட்டமைப்பு கொடுப்பதில் முக்கியமானது எது?
லிக்னின்
- பெட்ரோலிய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வாயுக்களிலிருந்து மனிதனால் உருவாக்கப்பட்ட நெகிழிகள் எந்த வகை?
செயற்கை பலபடிகள்
- எண்ணெய்கள் மற்றும் வாயுக்களை பகுதிபிரிப்பு செய்து பெட்ரோல் பெரும்பொழுது என்ன ஒற்றைப்படிகள் துணைவினை பொருட்களாக கிடைக்கின்றன?
எத்திலீன்,புரோபைலீன் போன்றவை
- பலவகை நெகிழிகளை உருவாக்கும் அடிப்படை கட்டமைப்பு பொருளாக எது விளங்குகிறது?
எத்திலீன்,புரோபைலீன்
- நீண்ட மூலக்கூறுகள் பின்னிப்பிணைந்து நீளமான சரம் போன்ற அமைப்பு உருவாக்கப்படும் இழைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
இயற்கை இழைகள்
- இயற்கை இழைகளின் எடுத்துக்காட்டுகள் என்னென்ன ?
பருத்தி, தேங்காய் நார், முடி ,கம்பளி போன்றவை
- பெட்ரோலியத்தில் இருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் இழைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செயற்கை இழைகள்
- செயற்கை இழைகளுக்கு எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
பாலியஸ்டர் ,அக்ரிலிக் மற்றும் நைலான் போன்றவை
- இயற்கை பட்டு எத்தனை வகைகளாகப் கிடைக்கிறது ?
நான்கு :மல்பெரி பட்டு,டஸ்ஸர் பட்டு, முகா பட்டு மற்றும் எரி பட்டு
- மல்பெரி வகை பட்டு பெருமளவு எங்கு தயாரிக்கப்படுகிறது ?
இந்தியா
- பட்டுகளின் பயன்பாடுகள் என்னென்ன?
உடைகளாகவும் ,தரைவிரிப்புகளாகவும், பாராசூட்டுகளாகவும் பயன்படுகிறது
- எந்த நூற்றாண்டில் அறிவியலாளர்கள் ரேயான் என்ற பெயரில் முதல் செயற்கை பட்டினை உருவாக்குவதில் வெற்றி கண்டனர் ?
19ஆம் நூற்றாண்டு
- இந்தியாவில் எங்கு முதல் ரேயான் தொழிற்சாலை நிறுவப்பட்டது?
கேரளா 1946
- ரேயான் எதனால் தயாரிக்கப்படுகிறது?
மரக்கூழிலிருந்து பெறப்பட்ட செல்லுலோஸ் மூலம்
- ரேயான் உற்பத்தி செயல்முறையில் செல்லுலோஸ் உடன் எந்த வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டு விஸ்கோஸ் என்ற திரவத்தை உருவாக்குகிறது?
சோடியம் ஹைட்ராக்சைடு பின்னர் கார்பன் டை சல்பைடு
- விஸ்கோஸ் திரவத்தின் எதனுள் செலுத்தும் பொழுது பட்டு போன்ற இழைகள் கிடைக்கிறது ?
நீர்த்த கந்தக அமிலம்
- முதன்முதலில் முழுமையாக பதப்படுத்தப்பட்ட செயற்கை இழை எது?
நைலான்
- இரண்டாம் உலகப் போரின் பொழுது பாராசூட்டுகள் மற்றும் கயிறு போன்ற பொருள்களை தயாரிக்க எது பயன்படுத்தப்பட்டது?
நைலான்
- தற்போது நாம் பயன்படுத்தும் செயற்கை இழைகளில் அதிகம் பயன்படும் இழையாக விளங்குவது எது?
நைலான்
- நைலான் என்ற பலபடி இழையானது எந்த வேதிப்பொருளால் ஆனது ?
பாலிஅமைடுகள்
- ஹெக்ஸாமெத்திலீன்-டை-அமின் மற்றும் அடிபிக் அமிலங்கள் இணைந்து உருவாகும் பொருள் எது ?
பாலிஅமைடுகள்
- பாலிஸ்டர் வேறு என்ன பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது ?
பாலிகாட், பாலிவுல், டெரிகாட்
- பாலியஸ்டர் மற்றும் பருத்தியின் கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாலிகாட்
- பாலியஸ்டர் மற்றும் கம்பியின் கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாலிவுல்
- PET என்பதன் விரிவாக்கம் என்ன?
Polyethylene terephthalate
- ஸ்வெட்டர்கள் தயாரிக்க பயன்படும் செயற்கை இழை எது?
அக்ரிலிக்
- எந்த செயற்கை இழை அதிக வலிமையும் நீட்சி தன்மையும் உடையது?
டிராம்போலைன்
- பாலியஸ்டர் போன்ற செயற்கை இழைகளின் முக்கிய குறைபாடு என்ன?
வெப்பத்தைத் தாங்கும் திறன் அற்றவை மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடியவை
- தமிழகத்தில் எப்போது முதல் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகள் தடைசெய்யும் புது சட்டம் அமலுக்கு வந்தது?
ஜனவரி 1, 2019
- பார்க்கிசீன் என்ற முதல் நிகழ்வினை உருவாக்கியவர் யார் ?
எட்மண்ட் அலெக்சாண்டர் பார்க்ஸ்
- ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் எவ்வளவு நெகிழிப்பைககள் பயன்படுத்தப்படுகிறது?
ஒரு ட்ரில்லியன் (ஒரு நிமிடத்திற்கு இரு மில்லியன்)
- உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் நெகிழியில் எத்தனை சதவீதம் மட்டும் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது?
1 முதல் 3 சதவீதம்
- நெகிழியில் உள்ள ஒற்றை படிகளின் அமைப்பினை பொறுத்து பல படிகள் எத்தனைப் பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன?
இரண்டு :இளகுபவை மற்றும் இறுகுபவை
- பாலிஎத்திலீன் அல்லது பாலித்தீன் என்பது எந்தவகை நெகிழிக்கு எடுத்துக்காட்டு?
இளகு நெகிழி
- வெப்பப்படுத்தும் பொழுது எளிதில் மென்மையாகி வளையும் தன்மை கொண்ட நெகிழிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இளகும் நெகிழிகள்
- எந்த வகை நெகிழிகளை மீண்டும் உருக்கி வேறு பொருளாக மாற்ற முடியாது?
இறுகும் நெகிழிகள்
- இறுகும் நெகிழிகளுக்கு எடுத்துக்காட்டுகள் எவை?
பேக்லைட் மற்றும் மெலமைன்
- வெப்பம் மற்றும் மின்சாரத்தை கடத்தாத பொருளாக பேக்லைட் இருப்பதால் அது எங்கு பயன்படுத்தப்படுகிறது?
மின் சுவிட்சுகள் மற்றும் பலவகை பாத்திரங்களின் கைப்பிடிகள் தயாரிக்க
- மெலம் எங்கு பயன்படுத்தப்படுகிறது?
ஓடுகள் மற்றும் தீயணைக்கும் துணிகள் போன்றவற்றின் தயாரிப்பில்
- ரெசின் குறியீட்டில் ஒன்று என்ற எண் எதைக் குறிக்கிறது?
பாலி எத்திலீன் டெரிப்தாலேட்
- ரெசின் குறியீட்டில் 3 என்ற எண் எதைக் குறிக்கிறது?
பாலிவினைல் குளோரைடு
- பாலிவினைல் குளோரைடு நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய என்ன கன உலோகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது?
காட்மியம், ஈயம் போன்றவைகள்
- ரெசின் குறியீட்டில் 6 என்ற எண் எதைக் குறிக்கிறது?
பாலிஸ்டைரீன்
- பாலிஸ்டைரீன் எந்த புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருளைக் கொண்டுள்ளது?
ஸ்டைரீன்
- PLA என்பதன் விரிவாக்கம் என்ன?
Poly lactic acid
- உரமாக்கும் தன்மை கொண்ட உயிர்ப்பு திறன்கொண்ட வெப்பத்தால் இளகும் நெகிழி வகை எது?
பாலிலாக்டிக் அமிலம் அல்லது பாலிலாக்டைடு
- பாலிலாக்டைடு பாலிமர் பொருள்களை எதிலிருந்து பெற முடியும்?
சோளம், கரும்பு மற்றும் இனிப்பு சுவை கொண்ட கிழங்குகளின் கூழ்களில் இருந்து
- இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட நெகிழி கழிவுகளிலிருந்து எத்தனை சதவீதம் குழிகளில் இட்டு மூடப்படுகிறது அல்லது திறந்த வெளியில் கொட்டப்பட்டு குப்பை மேடாகிறது?
79%
- எத்தனை சதவீதம் நெகிழிகள் எரிக்கப்படுகிறது?
12%
- எத்தனை சதவீதம் நெகிழிகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது?
9%
- உலக அளவில் எத்தனை சதவீதம் நெகிழிக் கழிவுகள் குழிகளில் இட்டு புதைக்கப்படுகிறது?
7-13%
- மட்கும் தன்மையின் அடிப்படையில் நெகிழிகள் எத்தனை வகைப்படும்?
இரண்டு :வீரியம் குறைந்த நெகிழிகள் மற்றும் மட்கும் தன்மை கொண்ட நிலையில்
- பாலி எத்திலின் டெரிப்தாலேட் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் ஆலையில் எந்த பாக்டீரியா நெகிழியை செரிப்பதை சோதித்து அறிந்தனர்?
ஐடெனல்லாசகீயன்சிஸ் 201-F6
- எந்த ஆண்டு ஐடெனல்லாசகீயன்சிஸ் 201-F6 என்ற பாக்டீரியா நெகிழியினை அழிப்பதை ஜப்பான் நாட்டு அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்?
2016
- ஐடெனல்லாசகீயன்சிஸ் 201-F6 பாக்டீரியாவானது என்ன நொதியினை சுரந்து PET பிளாஸ்டிக்கினை சிறிய மூலக்கூறுகளாக சிதைக்கின்றது?
PETase
- ஐடெனல்லாசகீயன்சிஸ் 201-F6 பாக்டீரியாவானது என்ன ரெசின் குறியீடுகளை கொண்ட நெகிழியினை மட்டுமே சிதைக்கும்?
எண் #1
- சிலிகான் டை ஆக்ஸைடு உருக எவ்வளவு வெப்பநிலை தேவைப்படுகிறது?
1700°C
- கண்ணாடி தயாரித்தலின் போது மணலின் வெப்பநிலையை குறைக்க எது பயன்படுகிறது ?
சோடா சாம்பல்
- கண்ணாடி நீரில் கரைவதை தடுக்க எது சேர்க்கப்படுகிறது ?
சுண்ணாம்புக்கல்
- சுண்ணாம்புக்கல் சேர்த்து தயாரிக்கப்பட்ட கண்ணாடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சோடா லைம்-சிலிக்கா கண்ணாடி
- நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் சாதாரண கண்ணாடி வகை எது?
சோடா லைம்-சிலிக்கா கண்ணாடி
- எந்த வேதிப்பொருளை சேர்ப்பதால் பச்சை நிற கண்ணாடி உருவாகிறது?
இரும்பு மற்றும் குரோமியம் சார்ந்த வேதிப்பொருள்கள்
- உருகிய நிலையில் உள்ள கண்ணாடி உடன் போரான ஆக்சைடினை சேர்ப்பதன் மூலம் பெறப்படும் கண்ணாடி எது?
போரா சிலிக்கேட் கண்ணாடி
- உருகுநிலை கண்ணாடியுடன் எதனை சேர்க்கும் பொழுது நல்ல படிக நிலையில் எளிதில் வெட்டக் கூடிய கண்ணாடி கிடைக்கிறது?
ஈய ஆக்சைடு
- உருகு நிலையிலுள்ள கண்ணாடியுடன் எதனை சேர்த்து பெறப்படும் கண்ணாடிகள் சூரிய ஒளி மற்றும் பிற ஒளிகள் அதன் மீதுப்படும் பொழுது கருமை நிற கண்ணாடியாக மாறுகிறது ?
வெள்ளி அயோடைடு
7TH PHYSICS STUDY NOTES |பலபடி வேதியியல் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services