- ஒளியை உமிழும் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஒளி மூலங்கள்
- ஒளியின் மூலம் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது ?
இரண்டு: இயற்கை ஒளி மூலம் ,செயற்கை ஒளி மூலம்
- இயற்கையாகவே ஒளியை உமிழும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இயற்கை ஒளி மூலங்கள்
- உயிரினங்கள் ஒளியை உமிழும் தன்மை பெற்றிருக்கும் பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உயிரி ஒளிர்தல்
- ஒளியை செயற்கையாக உமிழும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செயற்கை ஒளி மூலங்கள்
- செயற்கையாக ஒளியை உமிழும் ஒளி மூலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
மூன்று :வெப்ப ஒளி மூலங்கள் ,வாயவிறக்க ஒளி மூலங்கள்
- சில பொருட்களை அதிக வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது அவை ஒளியை உமிழத் தொடங்குகின்றன இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்ப ஒளி மூலங்கள்
- மின்சாரத்தை குறைந்த அழுத்தம் கொண்ட சில வாயுக்களின் வழியே செலுத்தும்போது வாயுக்களின் வழியே மின்னிறக்கம் ஏற்பட்டு ஒளியை உருவாக்குகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வாயுவிறக்க ஒளி மூலங்கள்
- வீட்டில் பயன்படுத்தப்படும் மின் குழல் விளக்குகளில் உட்புறம் எது பூசப்படுகிறது?
பாஸ்பரஸ்
- ஒளியானது எவ்வாறு பயணிக்கும்?
நேர்கோட்டு பயணம்
- கண்ணுக்குப் புலனாகும் காட்சி என்பது வெளிப்புற ஒளி மூலங்களில் இருந்து வரும் கதிர்கள் கண்ணுக்குள் நுழைகிறது என்பதை கண்டறிந்தவர் யார்?
அல் ஹசன் ஹயத்தம்
- ஒளியின் நேர்கோட்டுப் அன்பினை கண்டறிந்த முதல் அறிஞர் யார்?
அல் ஹசன் ஹயத்தம்
- ஊசித்துளை கேமரா சூரியனின் இயக்கத்தை பதிவு செய்ய பயன்பட்டது. இவ்வகையான புகைப்படம் எடுக்கும் முறைக்கு என்ன பெயர்?
சோலோகிராபி
- எதிரொளிக்கும் பரப்பில் படும் ஒளிக்கதிர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
படுகதிர்
- எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியில் இருந்து மீண்டு வரும் கதிர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எதிரொளிப்பு கதிர்
- எதிரொளிக்கும் பரப்பில் எப்புள்ளியில் படுகதிர் விழுகிறதோ அப்புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
படுபுள்ளி
- படு புள்ளியின் வழியாக எதிரொளிக்கும் பரப்பிற்குச் செங்குத்தாக வரையப்படும் கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குத்துக்கோடு
- படுகதிருக்கும் குத்துக்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
படுகோணம்
- படுகோணம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
i
- எதிரொளிப்பு கதிருக்கும் குத்துக்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எதிரொளிப்பு கோணம்
- எதிரொளிப்பு கோணம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
r
- எதிரொளிப்பு விதிகள் என்னென்ன?
படுகோணமும் (i), எதிரொளிப்பு கோணமும் சமம் ,படுகதிர் குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்பு கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்
- எதிரொளிக்கும் பரப்பு வழவழப்பானதும் சம தளமாகவும் இருப்பின்,பரப்பின் எல்லாப் புள்ளிகளிலும் குத்துக்கோடுகள் என்ன திசையில் அமையும்?
ஒரே திசை
- ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் எல்லா திசைகளிலும் செல்லும் கதிர்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
விரிகதிர்கள்
- வெற்றிடத்தில் ஒளியானது நொடிக்கு எவ்வளவு கிலோ மீட்டர் தொலைவு செல்லும்?
மூன்று லட்சம் கிலோமீட்டர்
- ஒளியை முழுவதும் தன் வழியே அனுமதிக்கும் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒளி ஊடுருவும் பொருட்கள்
- ஒளியை பகுதியாக தன் வழியே செல்ல அனுமதிக்கும் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பகுதி ஊடுருவும் பொருள்கள்
- ஒளியை தன் வழியை முழுவதுமாக அனுமதிக்காத பொருள்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஒளி ஊடுருவாப் பொருள்கள்
- ஒரு புள்ளி மூலத்தில் இருந்து வரும் ஒளியின் பாதையில் ஓர் ஒளிபுகா பொருளை வைக்கும் போது ஒரே சீரான கருமையான நிழல் மட்டும் திரையில் தோன்றும் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கருநிழல்
- கரு நிழலை சுற்றிலும் ஓரளவு ஒளியூட்டப்பட்ட நிழல்ப்பகுதி தோன்றுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புறநிழல்
- ஒளியின் முன்னிலையில் ஏதேனும் ஒரு வானியல் பொருள் பகுதியாகவோ முழுவதுமாகவோ மற்றொரு வானவியல் பொருளால் மறைக்கப்படும் நிகழ்வுக்கு பெயர் என்ன?
கிரகணம்
- சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு சுற்றி வரும் போது ஏற்படும் கிரகணம் எது?
சூரிய கிரகணம்
- சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமியானது இருக்கும் போது ஏற்படும் கிரகணம் எது ?
சந்திர கிரகணம்
- ஒளி இழை எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?
எதிரொலிப்பு தத்துவம்
- திரையில் வீழ்த்தப்படும் பிம்பங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
மெய்பிம்பம்
- திரையில் வீழ்த்த முடியாத பிம்பங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மாயபிம்பம்
- சமதள ஆடியில் தோன்றும் பிம்பம்பத்தின் பண்பு என்ன?
நேரானது,மெய்பிம்பம்
- எந்த ஆடியில் தோன்றும் பிம்பமும் பொருளும் ஒரே அளவில் இருக்கும்?
சமதள ஆடி
- சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் என்ன மாற்றம் பெறுகிறது?
இடவல மாற்றம்
- கண்ணுறு ஒளியின் அலை நெடுக்கம் எவ்வளவு?
400 நானோமீட்டர் முதல் 700 நானோ மீட்டர் வரை
- கண்ணுறு ஒளியின் பட்டை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
VIBGYOR
- மிகக் குறைந்த அலைநீளம் கொண்ட நிறம் எது?
ஊதா
- மிக அதிக அலை நீளம் கொண்ட நிறம் எது?
சிவப்பு நிறம்
- இரண்டு சமதளப் பரப்பு களுக்கிடையே குறுங்கோணம் கொண்ட முழுவதும் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
முப்பட்டகம்
- ஒரு சமதள பரப்பின் வழியே செல்லும் போது மற்றொரு சமதளப் பரப்பின் வழியே ஏழு வண்ணங்களாக பிரிகை அடையும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
நிறப்பிரிகை
- நிறப்பிரிகையின் மூலம் பெறப்படும் நிறங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிறத்தொகுப்பு
- பல வண்ணங்களை கலப்பதன் மூலம் வெள்ளை நிறத்தை உருவாக்கும் அமைப்பு ஒன்றை உருவாக்கியவர் யார்?
நியூட்டன்
- இரண்டு அல்லது மூன்று தனித்துவமான நிறங்களை குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் கலந்து புதிய நிறங்களை உருவாக்குவதற்கு பெயரென்ன?
நிறங்களின் தொகுப்பு
- தனித்துவமான நிறங்கள் என அழைக்கப்படுபவை?
சிவப்பு பச்சை மற்றும் நீலம்
- முதன்மை நிறங்கள் என அழைக்கப்படும் நிறங்கள்?
சிவப்பு பச்சை மற்றும் நீலம்
- இரண்டாம் நிலை நிறங்கள் என்னென்ன?
மெஜந்தா சையான் மற்றும் மஞ்சள்
7TH PHYSICS STUDY NOTES |ஒளியியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services