- ‘என் குறிக்கோள் எளிதானது ,அது பிரபஞ்சம் ஏன் அவ்வாறே உள்ளது ?ஏன் அது நிலையாக நிற்கிறது?
என்பதனை முழுமையாக புரிந்து கொள்ளுதல் ஆகும்” எனக் கூறியவர் யார் “?
ஸ்டீபன் ஹாக்கிங்
- பூமியை மையமாகக் கொண்டு சூரியனும் ,நிலவும் மற்றும் பிற கோள்களும் பிரபஞ்சத்தில் இயங்குகின்றன என்பது என்ன கோட்பாடு?
புவி மையக் கோட்பாடு
- புவி மையக் கோட்பாடானது யாரால் முன்மொழியப்பட்டது?
கி.மு ஆறாம் நூற்றாண்டில் பிளாட்டோ மற்றும் அவரது சீடர் அரிஸ்டாட்டில்
- ஆரியபைட்டியம் எனும் நூலை எழுதியவர் யார்?
ஆரியபட்டர்
- “முழு நிலவு தோன்றும் நாளில் சூரியன் சந்திரன் ஆகிய இரு சுடரும் ஒன்றுக்கொன்று எதிரெதிரே தோன்றுகின்றன” என கூறும் சங்க கால நூல் எது?
புறநானூறு
- தேய்பிறைக் காலத்தின் போது அரை நிலவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முதல் கால்பகுதி
- வளர்பிறை காலத்தில் நிலவானது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மூன்றாவது கால் பகுதி
- சந்திரன் அரை வட்டத்திற்கு மேல் ஒளிரும் கட்டங்களை குறிக்கும் சொல் எது?
கிப்பஸ்
- வளர்பிறை என்பதன் பொருள் என்ன?
வளர்தல் அல்லது வெளிச்சத்தில் விரிவடைதல்
- தேய்பிறை என்பதன் பொருள் என்ன ?
குறைதல் அல்லது வெளிச்சம் குறைதல்
- நிலவு பூமியை எவ்வளவு நாளில் சுற்றி வருகிறது?
27 நாள்
- நீள்வட்ட மாதிரிகளை பயன்படுத்தி விண் பொருட்களின் இயக்கத்தை விலகியவர்கள் யார்?
கிரேக்கத்தின் தாலமி,இந்தியாவின் ஆரியபட்டா முதலியோர்
- தொலைநோக்கி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
ஹான் லிப்பர்ஷே
- முதன்முதலில் தொலைநோக்கியை வானத்தை ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தியவர் யார்?
கலிலியோ
- வியாழனைச் சுற்றி துணைக்கோள்கள் இருப்பதனையும் சனி கிரகத்தை சுற்றி வளையம் இருப்பதையும் கண்டறிந்தவர் யார்?
கலிலியோ
- கலிலியோ தொலை நோக்கி உதவியுடன் கண்டறிந்த மிக முக்கியமான கணிப்பு எதைப்பற்றியது?
வெள்ளி
- சூரிய மையக் கொள்கையை உருவாக்கியவர் யார்?
போலந்து நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் கோபர்நிகஸ்
- எந்த ஆண்டு கலிலியோ தொலை நோக்கியை பயன்படுத்தி வெள்ளி கோளை ஆராய்ந்தார் ?
1610- 1611
- அண்டத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இணைந்து இருப்பதற்கு பெயர் என்ன ?
விண்மீன்திரள்
- நமது விண்மீன்திரளின் பெயர் என்ன?
பால்வெளி திரள்
- ஒரு புள்ளியில் பருப்பொருள் குவிந்து அங்கிருந்து விரிவடைய தொடங்கிய நிகழ்வுக்கு பெயர் என்ன ?
பெருவெடிப்பு
- பிக் பாங் எனப்படும் பெருவெடிப்பு நிகழ்வின் ஒரே நேரடி ஆதாரம் என கருதப்படுவது எது?
காஸ்மிக் நுண்ணலை பின்னணி
- பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வானியல் அலகு
- ஒரு வானியல் அலகு என்பது எவ்வளவு தொலைவு?
1.496x,10^8 கி.மீ
- ஒளியானது ஒரு வருடத்தில் கடந்த தூரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஒரு ஒளி ஆண்டு
- ஒரு ஒளியாண்டு என்பது எவ்வளவு தொலைவு?
9.4607x,10^12 கி.மீ
- வானியல் அலகானது ஒரு ஆர வினாடியில் ஏற்படுத்தும் கோணத்தில் தொலைவு எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
விண்ணியல் ஆரம்
- ஒரு விண்ணியல் ஆரத்தின் தொலைவு என்ன?
3.09x,10^13 கி.மீ or 3.2515 ஒளி ஆண்டுகள்
- விண்ணியல் ஆரம் எவ்வாறு குறிக்கப்படுகிறது?
pc
- விண்மீன் திரள்களின் வகைகள் என்னென்ன?
சுழல்திரள், நீள்வட்டம், தட்டைச் சூழல் மற்றும் ஒழுங்கற்ற வடிவம்
- விண்மீன் திரள்களில் நான்கில் ஒரு பங்கு எந்த வகையாக காணப்படுகிறது?
ஒழுங்கற்ற விண்மீன் திரள்கள்
- சூரிய மண்டலம் அமைந்திருக்கும் விண்வெளி பால்வெளி திரள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
கோடிட்ட சுருள் விண்மீன் திரள்
- பால்வெளி திரளின் விட்டம் எவ்வளவு?
ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள்
- நமது பால்வெளி திரளுக்கு அருகில் இருக்கும் விண்மீன் பொருள் எது?
ஆண்ட்ரோமெடா
- பால்வெளி திரள் புராணங்களில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆகாச கங்கை
- கலிலியோ தனது தொலைநோக்கியின் மூலம் எந்த ஆண்டு இந்த பால்வெளி திரளின் ஒளி பட்டையாது தனிப்பட்ட நட்சத்திரங்களின் தொகுப்பு என கண்டறிந்தார்?
1610
- சூரிய மண்டலமானது விண்மீன் திரள் மையத்திலிருந்து சுமார் எவ்வளவு தொலைவில் உள்ளது ?
27 ஆயிரம் ஒளி ஆண்டுகள்
- சூரிய மண்டலமானது சராசரியாக எவ்வளவு வேகத்தில் பயணிக்கிறது?
828000 கிலோமீட்டர் /மணி
- சூரிய குடும்பம் பால்வெளி திரளை முழுமையாக சுற்றிவர எவ்வளவு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்?
230 மில்லியன் ஆண்டுகள்
- பூமியிலிருந்து பார்க்கும் போது இரவு வானத்தில் காணப்படும் பிரித்தறிய முடிகின்ற நட்சத்திரங்களின் அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
விண்மீன் மண்டலம்
- சர்வதேச வானியல் சங்கம் எவ்வளவு விண்மீன் மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது?
88 விண்மீன் மண்டலங்கள்
- விண்மீன் மண்டலங்களில் பல எந்த புராணக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை கொண்டுள்ளது?
கிரேக்க மற்றும் லத்தீன் புராணங்கள்
- வானத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கி உள்ள விண்மீன் மண்டலம் எது?
உர்சா மேஜர் (சப்தரிஷி மண்டலம்)
- இலத்தின் மொழியில் உர்சா மைனர் என்பதன் பொருள் என்ன ?
சிறிய கரடி
- எந்த விண்மீன் மண்டலம் என்பது 81 விண்மீன்களை உள்ளடக்கியுள்ளது?
ஓரியன் விண்மீன் மண்டலம்
- ஓரியன் என்பது என்ன?
கிரேக்கப் புராணத்தில் ஒரு வேட்டைக்காரர்
- பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் எது?
சூரியன்
- நமது சூரிய மண்டலத்தின் அருகில் உள்ள நட்சத்திரம் ?
ஆல்பா சென்டாரி
- ஒரு கோளைச் சுற்றி நிலையான வட்டப்பாதையில் சுற்றும் பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒரு துணைக்கோள்
- துணைக்கோள்கள் எத்தனை வகைப்படும் ?
இரண்டு: இயற்கை மற்றும் செயற்கை துணைக்கோள்கள்
- ஒரு கோளை சுற்றி சுழலும் அனைத்து இயற்கை பொருள்களும் எவ்வாறு அழைக்கப்படும் ?
இயற்கை செயற்கை கோள்கள்
- இயற்கை செயற்கை கோள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிலவுகள்
- மனிதனால் உருவாக்கப்பட்ட கோள்களைச் சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
செயற்கைகோள்கள்
- உலகின் முதல் செயற்கைக்கோள் எது?
ரஷ்யாவின் ஸ்புட்னிக்- 1
- இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ?
ஆரியபட்டா
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இடம் எது?
பெங்களூரு
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் நோக்கம் என்ன ?
விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கிரக ஆய்வின் மூலம் தேசிய வளர்ச்சிக்காக விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்
- விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய குழு என்னும் நிறுவனம் எப்போது யாரால் உருவாக்கப்பட்டது ?
1962 விக்ரம் சாராபாய்
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ?
1969
- இந்தியாவால் உருவாக்கப்பட்ட SLV-3 எனும் ஏவுகணை வாகனம் மூலம் சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட முதல் துணைக்கோள் எது?
ரோகினி
- துணைக்கோள் வழிசெலுத்தல் அமைப்புகள் எவை ?
GAGAN & IRNSS
- இஸ்ரோ சந்திராயன் 1 என்னும் திட்டத்தை செயல்படுத்தியது எப்போது?
அக்டோபர் 22 2008
- மங்கள்யான் என்னும் திட்டம் எந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது?
நவம்பர் 5 ,2013
- செவ்வாயின் சுற்றுப்பாதையில் துணைக்கோளை முதல் முயற்சியிலேயே நுழைந்த நாடு எனும் பெருமையை உடையது எது?
இந்தியா
- செவ்வாயின் சுற்றுப்பாதையை தொடும் உலகின் நான்காவது விண்வெளி நிறுவனம் மற்றும் ஆசியாவின் முதல் விண்வெளி நிறுவனம் எனும் பெயரை பெற்றது எது ?
இஸ்ரோ
- சுப்ரமணியன் சந்திரசேகர் எந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்?
1983
- சுப்ரமணிய சந்திரசேகரனின் முக்கிய பங்களிப்பு என்ன?
விண்மீன் பரிணாம வளர்ச்சியின் கணித ரீதியான செயல்பாடுகள் நட்சத்திரங்கள் மற்றும் கருந்துளைகளின் பரிணாமவியலின் கோட்பாட்டு மாதிரிகள்
- எப்போது இந்தியா ஒரே ஏவுகணையில் 104 துணைக் கோள்களை விண்ணில் செலுத்தியது?
2017 பிப்ரவரி 15(PSLV-C37)
- எதன்மூலம் நான்கு டன் கடினமான துணைக்கோள்களை நிறுவும் நிறுவனமாக இஸ்ரோ மாறியது?
ஜியோ சின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (GSLV-MK III) மூலம் ஜிசாட் 19 எனும் செயற்கை கோளை 2017 ஜூலை 5ஆம் தேதி விண்ணில் செலுத்தியதன் மூலம்
- சந்திராயன்-2 எனும் துணைக்கோள் எந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது ?
ஜூலை 22, 2019
7TH PHYSICS STUDY NOTES |அண்டம் மற்றும் விண்வெளி| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services