- மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வளங்கள்
- மனித குலத்தின் தலையீடு இன்றி தனது சூழலில் இயற்கையாக கிடைக்கும் வளங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
இயற்கை வளங்கள்
- இயற்கை வளங்கள் உருவாகும் விதத்தின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
உயிருள்ள வளங்கள், உயிரற்ற வளங்கள்
- இயற்கை வளங்கள் புதுப்பிக்கும் தன்மையின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
புதுப்பிக்க இயலும் வளங்கள் ,புதுப்பிக்க இயலாத வளங்கள்
- காடுகள், பயிர்கள் ,பறவைகள் ,விலங்குகள் ,மனிதன் அடங்கிய உயிர்க்கோளத்திலிருந்து பெறப்பட்ட வளங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
உயிரியல் வளங்கள்(biotic)
- புதைபடிவ எரிபொருள்கள் எந்த வளத்தை சார்ந்தவை?
உயிரியல் வளங்கள்
- உயிரற்ற பொருட்களில் இருந்து பெறப்பட்ட ஒருவகை வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
உயிரற்ற வளங்கள்
- இயற்கையான செயல்பாடுகளாலும் கால ஓட்டத்தில் மீண்டும் நிறைவு செய்யப்படக்கூடியனவாக அமையும் வளங்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
புதுப்பிக்கத்தக்க வளங்கள்
- நேரடியாக சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றக் கூடியது எது ?
ஒளிமின்னழுத்த கலம் அல்லது சூரிய கலம்
- தமிழ்நாட்டில் எங்கு உள்ள சூரிய ஒளி மின்சக்தி திட்டமானது உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சக்தி திட்டங்களில் ஒன்று ?
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில், கமுதி
- கமுதி சூரிய ஒளி மின்சக்தி திட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
செப்டம்பர் 2016
- கமுதி சூரிய ஒளி மின்சக்தி திட்டம் எவ்வளவு திறனுடையது?
648 மெகாவாட்
- காற்றாலை உற்பத்தி செய்யும் உலகின் முக்கிய நாடுகள் என்னென்ன?
அமெரிக்க ஐக்கிய நாடுகள் ,சீனா, ஜெர்மனி ,ஸ்பெயின் ,இந்தியா ,இங்கிலாந்து, கனடா மற்றும் பிரேசில்
- இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள முப்பந்தல் காற்றாலை பண்ணை எங்கு நிறுவப்பட்டுள்ளது மற்றும் அதன் நிறுவப்பட்ட திறன் என்ன?
கன்னியாகுமரி, தமிழ்நாடு. 1500 மெகாவாட்
- இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள ஜெய்சால்மர் காற்றாலை பண்ணை எங்கு நிறுவப்பட்டுள்ளது மற்றும் அதன் நிறுவப்பட்ட திறன் என்ன?
ஜெய்சால்மர் ,ராஜஸ்தான். 1064 மெகாவாட்
- இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள பிரமன்வேல் காற்றாலை பண்ணை எங்கு நிறுவப்பட்டுள்ளது மற்றும் அதன் நிறுவப்பட்ட திறன் என்ன?
துலே, மஹாராஷ்டிரா.528 மெகாவாட்
- இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள தால்கான் காற்றாலை பண்ணை எங்கு நிறுவப்பட்டுள்ளது மற்றும் அதன் நிறுவப்பட்ட திறன் என்ன?
சங்லி, மஹாராஷ்டிரா. 278 மெகாவாட்
- இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள தாமன்ஜோதி காற்றாலை பண்ணை எங்கு நிறுவப்பட்டுள்ளது மற்றும் அதன் நிறுவப்பட்ட திறன் என்ன?
தாமன்ஜோதி,ஒடிசா 99 மெகாவாட்
- நீர் மின்சக்தி உற்பத்தி செய்யும் நாடுகள் என்னென்ன?
சீனா ,கனடா, பிரேசில் ,அமெரிக்கா ஐக்கிய நாடுகள் ,ரஷ்யா ,இந்தியா, நார்வே மற்றும் ஜப்பான்
- அதிகளவில் நீர் மின்சக்தி உற்பத்தி செய்யும் நாடு எது?
சீனா
- இந்தியாவில் தெகிரி அணை நீர்மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
உத்தரகாண்ட்,2400 மெகாவாட்
- இந்தியாவில் ஶ்ரீ சைலம் அணை நீர்மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
ஆந்திர பிரதேசம்,1670 மெகாவாட்
- இந்தியாவில் நாகார்ஜுன சாகர் அணை நீர்மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
ஆந்திர பிரதேசம்,960 மெகாவாட்
- இந்தியாவில் சர்தார் சரோவர் அணை நீர்மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
குஜராத் , 1450 மெகாவாட்
- இந்தியாவில் பக்ராநங்கல் அணை நீர்மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
பஞ்சாப்,1325 மெகாவாட்
- இந்தியாவில் கொய்னா அணை நீர்மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
மகாராஷ்டிரா,1960 மெகாவாட்
- இந்தியாவில் மேட்டூர் அணை நீர்மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
தமிழ்நாடு,120 மெகாவாட்
- இந்தியாவில் இடுக்கி அணை நீர்மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
கேரளா,780 மெகாவாட்
- உலகின் மிகப்பெரிய நீர் மின்சக்தி திட்டம் எது ?
சீனாவிலுள்ள த்ரீகார்ஸ் நீர்மின்சக்தி திட்டம்(1994 இல் ஆரம்பிக்கப்பட்டு 2012 இல் முடிவுற்றது)
- சீனாவிலுள்ள த்ரீகார்ஸ்/ த்ரீகார்ஜஸ் நீர்மின்சக்தி திட்டத்தின் நிறுவப்பட்ட திறன் எவ்வளவு?
22500 மெகாவாட்
- சீனாவிலுள்ள த்ரீகார்ஸ்/ த்ரீகார்ஜஸ் நீர்மின்சக்தி திட்டம் நிறுவப்பட்ட நதி ?
யாங்க்ட்ஸி
- பிரேசில் மற்றும் பராகுவேவிலுள்ள இட்டைப்பு அணை நீர்மின்சக்தி திட்டத்தின் நிறுவப்பட்ட திறன் எவ்வளவு?
14,000 மெகாவாட்
- பிரேசில் மற்றும் பராகுவேவிலுள்ள இட்டைப்பு அணை நீர்மின்சக்தி திட்டம் நிறுவப்பட்ட நதி ?
பராணா
- சீனாவிலுள்ள ஜிலுடு அணை நீர்மின்சக்தி திட்டத்தின் நிறுவப்பட்ட திறன் எவ்வளவு?
13,860 மெகாவாட்
- சீனாவிலுள்ள ஜிலுடு அணை நீர்மின்சக்தி திட்டம் நிறுவப்பட்ட நதி ?
ஜின்ஷா
- வெனிசுலாவிலுள்ள குரி அணை நீர்மின்சக்தி திட்டத்தின் நிறுவப்பட்ட திறன் எவ்வளவு?
10,236 மெகாவாட்
- வெனிசுலாவிலுள்ள குரி அணை நீர்மின்சக்தி திட்டம் நிறுவப்பட்ட நதி ?
காரோணி
- பிரேசிலுள்ள துக்குறுயி அணை நீர்மின்சக்தி திட்டத்தின் நிறுவப்பட்ட திறன் எவ்வளவு?
8370 மெகாவாட்
- பிரேசிலுள்ள துக்குறுயி அணை நீர்மின்சக்தி திட்டம் நிறுவப்பட்ட நதி ?
டெகான்டின்ஸ்
- இயற்கையாக மீண்டும் புதுப்பிக்க முடியாத அல்லது கால ஓட்டத்தில் மீண்டும் நிறைவு செய்ய இயலாத இயற்கை வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
புதுப்பிக்க இயலாத வளங்கள்
- புதுப்பிக்க இயலாத வளங்கள் எத்தனை வகைப்படும்?
மூன்று :உலோகங்கள்,அலோக வளங்கள் அல்லது உலோகம் அல்லாத வளங்கள், புதைபடிவ எரிபொருள்
- புவியின் மேலோட்டில் பரந்த அளவில் காணப்படும் உலோகங்களுள் இரும்பானது எத்தனையாவது உலோகமாக உள்ளது?
நான்காவது
- புவி மேலோட்டின் பாறைகளில் காணப்படும் எந்த இரும்பு தாதுக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன?
மேக்னடைட் மட்டும் ஹேமடைட்
- தூய்மையான இரும்புத்தாது மிகவும் மென்மையானது அதில் எது சேர்க்கப்படும்போது வலிமை பெறுகிறது?
சிறிய அளவிலான கார்பன் மற்றும் மாங்கனீசு
- இரும்புத்தாது எத்தனை நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகிறது?
50
- சீனா ,ஆஸ்திரேலியா, பிரேசில் ,இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து உலகின் மொத்த இரும்பு உற்பத்தியில் எவ்வளவு சதவீதம் பெறப்படுகிறது ?
85%
- சீனா ,ஆஸ்திரேலியா, பிரேசில் ,இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் உலகின் மொத்த இருப்பில் எவ்வளவு சதவீதம் இரும்பு தாதுக்கள் உள்ளன?
70%
- இந்திய நாட்டின் மொத்த இருப்பில் எவ்வளவு சதவீதம் இரும்பு தாதுக்கள் ஜார்கண்ட் ,ஒடிசா, மத்திய பிரதேசம் ,சட்டீஸ்கர், கர்நாடகா மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் கிடைக்கின்றன?
95%
- தமிழகத்தில் எங்கு இரும்புத்தாது கிடைக்கிறது?
கஞ்சமலை
- மனிதனால் முதலில் அறிந்து கொள்ளப்பட்டுப், பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஒன்று எது ?
தாமிரம்
- தாமிரம் மனிதன் நுகர்வில் எத்தனையாவது இடத்தைப் பெறுகின்றது?
இரும்பு மற்றும் அலுமினியம் அதற்கடுத்து 3வது இடம்
- தாமிர உற்பத்தியில் முக்கால் பங்கு (¾) எது தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது?
மின்சாரக் கம்பி வடங்கள் , தொலைதொடர்பு கேபிள்கள் மற்றும் மின்னணு சாதனங்கள்
- தாமிர உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
சிலி நாடு
- தாமிரம் உற்பத்தி செய்யும் பிற நாடுகள் என்னென்ன?
பெரு, சீனா ,அமெரிக்க ஐக்கிய நாடுகள் ,காங்கோ மற்றும் ஆஸ்திரேலியா
- தங்கம் எங்கு பயன்படுத்தப்படுகிறது?
ஆபரணங்கள் தயாரிப்பு மற்றும் பல் மருத்துவம்
- உலக அளவில் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடு எது ?
சீனா
- தங்கம் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள் என்னென்ன?
ஆஸ்திரேலியா, ரஷ்யா ,அமெரிக்க ஐக்கிய நாடுகள் ,தென்னாபிரிக்கா மற்றும் கனடா
- 2500 டன் தங்கத்தாது இருப்புடன் உலகளவில் முதல் நாடாக உள்ளது எது?
ஆஸ்திரேலியா
- இந்தியாவில் எந்த மாநிலம் தங்கத்தை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது?
கர்நாடகா
- இந்தியாவில் உள்ள உலகின் ஆழமான தங்க சுரங்கங்களில் ஒன்று எது?
கோலார் தங்க வயல்
- அலுமினியம் எந்த தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?
பாக்ஸைட்
- பெரும்பாலான தாதுக்களில் அலுமினியம் அடங்கி இருந்தாலும் எந்த தாதுவில் அதிகளவு அலுமினியம் உள்ளது ?
பாக்சைட்
- அலுமினியம் எதற்கு பயன்படுகிறது?
விமானங்கள் ,கப்பல்கள், ஆட்டோமொபைல் தொடர்வண்டி பெட்டிகள் தயாரிக்க பயன்படுகிறது
- உலகின் முன்னணி பாக்சைட் உற்பத்தி நாடு எது ?
ஆஸ்திரேலியா
- பாக்சைட் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் என்னென்ன?
சீனா, பிரேசில் ,இந்தியா, கினியா, ஜமைக்கா மற்றும் ரஷ்யா
- பாக்சைட் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு பாக்சைட் தாது பதிவுகள் எந்த நாட்டில் உள்ளது?
கினியா
- இந்தியாவின் முக்கியமான பாக்சைட் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
ஒடிசா ,குஜராத் ,ஜார்கண்ட் ,மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் ,தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம்
- தமிழகத்தில் எங்கு பாக்சைட் படிவுகள் அதிக அளவில் உள்ளன ?
சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலை
- வெள்ளி எங்கு பயன்படுத்தப்படுகிறது?
நகை தயாரிப்பு, பல்மருத்துவம், புகைப்பட பொருள், மின்முலாம் பூசுதல் மற்றும் ஆடம்பரப் பொருள்கள் தயாரிப்பு
- எத்தனை பங்கு வெள்ளி பணம் ஈட்டும் நோக்கத்திலும் பயன்படுத்தப்படுகிறது?
மூன்றில் இரண்டு பங்கு வெள்ளி
- உலகின் முன்னணி வெள்ளி உற்பத்தி செய்யும் நாடு எது?
மெக்ஸிகோ
- வெள்ளியை உற்பத்தி செய்யும் நாடுகள் என்னென்ன ?
பெரு ,சீனா, ரஷ்யா ,ஆஸ்திரேலியா மற்றும் சிலி
- எத்தனை சதவீதத்திற்கும் மேற்பட்ட வெளியானது தென்னமெரிக்க நாடுகளில் காணப்படுகிறது?
50%
- மாங்கனீசு எந்த நிறத்தை உடைய உலோகம்?
வெண்சாம்பல் நிறத்தில், கடினமான ,பளபளப்புடைய மற்றும் உடையக்கூடிய உலோகம்
- மாங்கனீஸின் பொதுவான தாதுக்கள் என்னென்ன?
பைரோலுசைட் மாங்கனீசு ,சைலேமெலேன் மற்றும் ரோடோக்ரோசைட்
- மாங்கனீசு எந்த உற்பத்திக்கு முக்கியமானது?
நல்ல தரமான எஃகு
- மாங்கனீசு எங்கு பயன்படுத்தப்படுகிறது ?
பேட்டரிகள் தயாரிப்பு ,செங்கல் ,பானை மற்றும் தரைதள தயாரிப்பில் வண்ண பொருளாகவும், மாங்கனீசு மூலக்கூறுகள் அழுக்கு நீக்கும் திரவம் மற்றும் சலவைத்தூள் தயாரிப்பிலும் பயன்படுகிறது
- உலகின் முன்னணி மாங்கனீசு உற்பத்தி நாடு எது ?
தென்னாப்பிரிக்கா
- மாங்கனீசு உற்பத்தியில் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் என்னென்ன ?
சீனா ,ஆஸ்திரேலியா ,பிரேசில் காபன் மற்றும் இந்தியா
- மைக்காவின் தாதுக்கள் என்னென்ன?
மஸ்கோவைட் மற்றும் பயோடைட்
- மைக்கா எங்கு பயன்படுத்தப்படுகிறது ?
மின் மற்றும் மின்னணு தொழிற்சாலைகளில் , மின்தொழில்களில் காப்பு பொருளாகவும் ,மசகு எண்ணெய் மற்றும் அலங்கார சுவரொட்டிகள் தயாரிப்பில் பொடி வடிவில் சேர்க்கப்படுகிறது
- உலக அளவில் முன்னிலை வகிக்கும் மைக்கா உற்பத்தி நாடு எது ?
சீனா
- மைக்கா உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் என்னென்ன?
ரஷ்யா, பின்லாந்து ,அமெரிக்க ஐக்கிய நாடுகள் ,துருக்கி மற்றும் கொரிய குடியரசு
- இந்தியாவின் 95% மைக்காவானது எங்கு கிடைக்கிறது?
ஆந்திர பிரதேசம் ,ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட்
- சுண்ணாம்புக்கல் என்பது என்ன?
படிவுப் பாறைகள்: இறந்த கடல் உயிரினங்களின் எலும்புத்துண்டுகள் சிதைவுற்று ஏற்பட்ட படிவினால் ஏற்படுபவை
- பவளப்பாறை ,ஃபோராமினிப்பெரா மற்றும் மெல்லுடலிகள் போன்றவற்றின் மறைவிற்குப் பின்னர் உருவாகும் எத்தனை சதவீத படிவுப்பாறைகள் சுண்ணாம்புக் கற்கள் ஆகும்?
10%
- போர்ட்லேண்ட் சிமென்ட் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
சுண்ணாம்புக்கல்
- உலகின் பாதிக்கும் மேற்பட்ட சுண்ணாம்புக்கல் உற்பத்தி எங்கு நடைபெறுகிறது?
சீனா
- சுண்ணாம்புக்கல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் ?
அமெரிக்க ஐக்கிய நாடுகள் ,இந்தியா, ரஷ்யா, பிரேசில் மற்றும் ஜப்பான்
- சுண்ணாம்புக்கல் உற்பத்தியில் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் நான்கில் மூன்று பங்கு உற்பத்தி எங்கு செய்யப்படுகிறது?
மத்திய பிரதேசம் ,ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் ,குஜராத், சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு
- தமிழகத்தின் பெரிய அளவிலான சுண்ணாம்புக்கல் இருப்பானது எந்த மாவட்டங்களில் உள்ளது?
இராமநாதபுரம், திருநெல்வேலி, அரியலூர், சேலம் ,கோயம்புத்தூர் மற்றும் மதுரை
- இறந்துபோன தாவர மற்றும் விலங்குகளின் எச்சங்களிலிருந்து உருவானவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
புதைபடிவ எரிபொருள் வளங்கள்
- புதைபடிவ எரிபொருள் வளங்கள் என்னென்ன?
நிலக்கரி ,பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு
- தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம எரிபொருள் எது?
நிலக்கரி
- எந்த வகை நிலக்கரி முதலில் உருவாவதாகும்?
முற்றா நிலக்கரி அல்லது பீட் (Peat)
- நிலக்கரி எங்கு பயன்படுத்தப்படுகிறது?
வீட்டு எரிபொருளாக, இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை மற்றும் மின்சாரத்தை உற்பத்தி செய்யப் பயன்படும் உருளைகளிலும், நீராவி எஞ்சின்களிலும் பயன்படுத்தப்படுகிறது
- கார்பன் அளவினை கொண்டு நிலக்கரியை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
நான்கு: ஆந்த்ரசைட்(Anthracite),பிட்டுமினஸ்(Bituminous), லிக்னைட்(lignite) ,பீட்(peat)
- தற்போது நாம் பயன்படுத்தும் நிலக்கரியானது எத்தனை ஆண்டுகளுக்கு முன் தோன்றிய படிவாகும்?
300 ஆண்டுகள்
- உலகின் முன்னணி நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடு எது?
சீனா
- நிலக்கரியை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள் என்னென்ன ?
இந்தியா, அமெரிக்கா ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா ,இந்தோனேசியா மற்றும் ரஷ்யா
- இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் இடங்கள் எங்கு உள்ளது ?
மேற்கு வங்கத்தில் உள்ள ராணிகஞ்ச், தமிழகத்தில் உள்ள நெய்வேலி, ஜார்க்கண்டில் உள்ள ஜாரியா,தன்பாத் மற்றும் பொக்காரோ
- பெட்ரோலியம் மற்றும் அதன் உப பொருட்கள் மதிப்புமிக்கதாக உள்ளதால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கருப்பு தங்கம்
- பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் முதன்மை நாடுகள் என்னென்ன?
சவுதி அரேபியா ,ஈரான், ஈராக் மற்றும் கத்தார்
- உலகில் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் பிற நாடுகள் என்னென்ன?
அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா ,வெனிசுலா ,குவைத் ,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அல்ஜீரியா
- இயற்கை வாயுவானது எந்தப் படிவுகளுடன் காணப்படுகிறது?
பெட்ரோலியப் படிவுகள்
- உலக அளவில் 50%ற்கும் அதிகமான இயற்கை வாயு இருப்புகள் எந்த நாடுகளில் காணப்படுகிறது?
அமெரிக்க ஐக்கிய நாடுகள்,ரஷ்யா,ஈரான் மற்றும் கத்தார்
- இந்தியாவில் இயற்கை வாயு வளம் காணப்படும் இடங்கள்?
கிருஷ்ணா மற்றும் கோதாவரி டெல்டா, அஸ்ஸாம்,குஜராத் மற்றும் மும்பையின் சில கடலோரப் பகுதிகள்
- இந்தியாவில் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் முன்னணி பகுதிகள் எது?
அசாமில் உள்ள திக்பாய் ,மும்பையில் டெல்டா பகுதிகள்
7TH GEOGRAPHY STUDY NOTES |வளங்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services