- மக்களின் விகிதம் ,அதன் பிறப்பு ,இறப்பு மற்றும் காரணிகளை சார்ந்த இடம் ,காலம் கொண்டு தெரிந்துகொள்ளுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மக்கள் தொகை புவியியல்
- மக்கள் தொகை அதிகரித்தல் அல்லது குறைதல் என்பது எதை குறிப்பதாகும்?
மக்கள் பரவல் மற்றும் வளர்ச்சி
- உலகின் முக்கிய மனித இனங்கள் என்னென்ன ?
காக்கசாய்டு(ஐரோப்பியர்கள்),நீக்ராய்டு(ஆப்பிரிக்கர்கள்),மங்கோலாய்டு( ஆசியர்கள்) ,ஆஸ்ட்ரலாய்டு (ஆஸ்திரேலியர்கள்)
- எந்த இன மக்கள் வெள்ளை நிறத்திலும், அடர் பழுப்பு நிறக் கண்களும், அலை போன்ற முடியும், நீளமான மூக்கும் உடையவர்களாக இருக்கின்றனர் ?
காக்கசாய்டு
- மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கை சூழலோடு படிப்பதற்கு பெயர் என்ன?
மனித புவியியல்
- எந்த இன மக்கள் கருமை நிற கண்கள், கருப்பு நிற தோல் ,கருமையான முடி ,அகலமான மூக்கு, நீளமான தலை மற்றும் தடித்த உதடுகளைக் கொண்டவர்கள் ?
நீக்ராய்டு
- எந்த இன மக்கள் வெளிர் மஞ்சள் முதல் பழுப்பு நிற தோல் ,நீளமான முடி, தட்டையான முக அமைப்பு ,பெரிய தலை மற்றும் மத்தியமான மூக்கு உடையவர்களாக இருக்கின்றனர் ?
மங்கோலாய்டு
- மங்கோலாய்டு இன மக்கள் எங்கு காணப்படுகின்றனர்?
ஆசியா மற்றும் ஆர்டிக் பிரதேசம்
- எந்த இன மக்கள் அகலமான மூக்கு, சுருள் முடி, கருப்பு நிற தோல் மற்றும் குறைவான உயரம் உடையவர்களாக குட்டையானவர்களாக காணப்படுகிறார்கள்?
ஆஸ்ட்ரலாய்டு
- ஆஸ்ட்ரலாய்டு இன மக்கள் எங்கு காணப்படுகின்றனர் ?
ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா
- குறிப்பிட்ட நம்பிக்கையும் வழிபாட்டு முறையையும் கொண்டதற்கு பெயர் என்ன?
மதம்
- மதத்தின் வகைபாடுகள் என்னென்ன?
உலகளாவிய மதங்கள், மனித இனப்பிரிவு மதங்கள், நாடோடிகள் அல்லது பாரம்பரிய மதங்கள்
- கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் புத்த மதம் ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு?
உலகளாவிய மதங்கள்
- ஜூடோயிசம், இந்துமதம் மற்றும் ஜப்பானிய ஷிண்டோயிசம் ஆகியவை எந்த மதத்திற்கு எடுத்துக்காட்டு?
மனித இனப்பிரிவு மதங்கள்
- அனிமிஸம்,ஷாமானிஸம் மற்றும் ஷாமன் ஆகியவை எந்த மத வகைப்பாடு?
நாடோடிகள் அல்லது பாரம்பரிய மதங்கள்
- விஹாரா என்பது எந்த மதத்தின் வழிபாட்டுத் தலம்?
புத்தமதம்
- தேவாலயம் என்பது எந்த மதத்தின் வழிபாட்டுத் தலம் ?
கிறிஸ்தவமதம்
- கோவில் என்பது எந்த மதத்தின் வழிபாட்டுத் தலம் ?
இந்துமதம்
- மசூதி என்பது எந்த மதத்தின் வழிபாட்டுத் தலம் ?
இஸ்லாம்
- சமணம் என்பது எந்த மதத்தின் வழிபாட்டுத் தலம் ?
பசாதி
- சினகாக் என்பது எந்த மதத்தின் வழிபாட்டுத் தலம் ?
ஜூடாய்ஸம்
- அகியாரி என்பது எந்த மதத்தின் வழிபாட்டுத் தலம் ?
ஜொராஸ்டிரியம்
- சமுதாய அமைப்பிற்கு கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவி எது?
மொழி
- இந்திய அரசால் எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?
22 மொழிகள்
- உலக மக்கள் தொகை நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?
ஜூலை 11
- பன்னாட்டு தாய்மொழி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
பிப்ரவரி 21
- உலக மத நல்லிணக்க நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை
- உலக கலாச்சார பல்வகை நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?
மே 21
- ஒரு சமுதாய மக்கள் அவர்கள் தங்களின் முதன்மை தொழிலாக ,வேளாண்மை, மீன்பிடித்தல் மற்றும் சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்திக் கொள்வது என்பது எதை குறிக்கிறது?
கிராம குடியிருப்பு
- ஒரு குடியிருப்பின் உண்மையான அமைவிடத்தை குறிப்பது எது ?
தலம் மற்றும் சூழலமைவு இடம் மற்றும் அமைவிடம்
- குடியிருப்பு எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
குழுமிய குடியிருப்பு, சிதறிய குடியிருப்பு
- குழுமிய குடியிருப்பு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மைய குடியிருப்பு
- எந்த வகையான குடியிருப்பில் வீடுகள் ஒன்றுக்கொன்று அருகருகே அமைந்திருக்கும்?
குழுமிய குடியிருப்பு
- இந்தியாவில் குழுமிய குடியிருப்புகளை எங்கு காணலாம்?
வடக்கு சமவெளி மற்றும் தீபகற்ப கடற்கரை சமவெளிகள்
- சிதறிய குடியிருப்புகளை பொதுவாக எந்தப் பகுதிகளில் காணலாம் ?
அதிக வெப்பப் பகுதிகளிலும், மலைப் பாதைகளிலும், அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், புல் வெளிகளிலும் ,தீவிர சாகுபடி பிரதேசங்களிலும் காணமுடியும்
- இந்தியாவில் சிதறிய குடியிருப்புகளை எந்த பகுதிகளில் காணமுடியும் ?
கோசிமலை பாதையின் வடக்குப் பகுதியிலும் ,கங்கை சமவெளியிலும், ராஜஸ்தானின் பாலைவனப் பகுதிகளில் ,இமயமலை மற்றும் நீலகிரியின் மலை அடிவாரத்திலும்
- கிராமப்புற குடியிருப்புகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன ?
நேர்கோட்டு, செவ்வகமாக ,வட்டமான, நட்சத்திர வடிவமான கிராமம்
- சாலைகள், இருப்புப் பாதைகள் ,ஆறு அல்லது கால்வாய் பள்ளத்தாக்கின் சரிவு ஆகியவற்றுக்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும் ?
நேர்கோட்டு குடியிருப்பு
- இமயமலை ஆப்ஸ் மற்றும் ராக்கி மலைத் தொடர்களில் காணப்படும் குடியிருப்பு வகை எது ?
நேர்கோட்டு குடியிருப்பு
- பெரும்பாலும் செவ்வக வடிவில் நீளமானதாகவும் ஒன்றையொன்று நேர் கோணத்தில் சந்தித்துக்கொள்ளும் குடியிருப்பு வகை எது?
செவ்வக வடிவ குடியிருப்புகள்
- செவ்வக வடிவ குடியிருப்புகள் எங்கு காணப்படுகின்றது ?
சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைகளுக்கு இடையில் உள்ள பள்ளத்தாக்குகள்
- ஒரு மையப் பகுதியை சுற்றி வட்ட வடிவமாக காணப்படும் குடியிருப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?
வட்ட வடிவ குடியிருப்புகள்
- சாலைகள் ஒன்றுசேரும் இடங்களிலிருந்து சாலைகளின் இரு பக்கங்களிலும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும் குடியிருப்புகள் எது?
நட்சத்திர வடிவ குடியிருப்புகள்
- வழிபாட்டு தலங்களை சுற்றியும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அமையும் குடியிருப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?
யாத்திரை குடியிருப்பு
- நீர் நிலையை ஒட்டிய இடங்களான கிணறுகள், ஏரி குளம் ,குட்டைகள் உள்ள இடங்களில் அமைந்திருக்கும் குடியிருப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?
நீர்நிலை குடியிருப்புகள்
- நகர்ப்புற குடியிருப்பின் மக்கள் தொகையில் குறைந்தபட்ச மக்கள் தொகையான 5 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் இருக்கும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நகரம்
- நன்கு வளர்ச்சியடைந்த மத்திய தொழில் மாவட்டத்தை கொண்ட பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய ஒரு தனித்த குடியிருப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
மாநகரம்
- இந்தியாவில் எவ்வளவு மக்கள் தொகைக்கு மேல் அதிகமானோர் உள்ள இடங்கள் மாநகரம் என அழைக்கப்படுகிறது?
ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல்
- மிகப் பெரிய நகரங்கள்(megacity) எவ்வளவு மக்கள் தொகையை கொண்டிருக்கும்?
பத்து மில்லியனுக்கும் மேல்
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மிகப் பெரிய நகரங்களின் மக்கள் தொகை பத்து லட்சத்திற்கும் மேலாகவும், பெரிய நகராக்கப் பரப்பையும் கொண்ட இடத்தை குறிப்பது எது?
மீப்பெருநகரம் (megalopolis)
- இந்தியாவில் உள்ள மீப்பெரும் நகரங்கள் என்னென்ன ?
கல்கத்தாவின் மிகப்பெரிய நகர்ப்புறப்குதி ,குஜராத்தின் காந்திநகர், சூரத், வதோதரா ,ராஜபுதனம் போன்றவைகள்
- சில மாநகரங்களையும், பெரிய நகரங்களையும் மற்றும் சில நகர்புறங்களையும் கொண்டு , மக்கள் வளர்ச்சியுடன் நிலப்பரப்பு விரிவாக்கம் அடைந்து இரண்டும் இணைந்து அமையக்கூடிய தொடர் நகர்ப்புறம் (அல்லது) தொழில் வளர்ச்சி அடைந்த இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இணைந்த நகரம்(Conurbation)
- அதிக அளவு மக்கள் தொகையை கொண்ட முக்கியமான பெருநகரங்களில் நகர்ப்புறங்களுக்கு வெளியே வடிவமைக்கப்படும் வீடுகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
செயற்கைக்கோள் நகரம்
- நகர்ப்புற பகுதியில் உள்கட்டமைப்பு வசதி ,வீட்டுமனை விற்பனை ,தொலைத்தொடர்பு ,எளிதாக கிடைக்கக்கூடிய சந்தை உள்ள இடங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
சிறப்பு பொருளாதார நகரம்
- இந்தியாவில் உள்ள முதல் 10 சிறப்பு பொருளாதார நகரங்கள் என்னென்ன?
புவனேஸ்வர் ,புனே ,ஜெய்ப்பூர், சூரத், லூதியானா ,கொச்சி, அகமதாபாத், சோலாப்பூர்,புதுடெல்லி மற்றும் உதய்பூர்
- தமிழ்நாட்டில் எத்தனை முக்கிய நகரங்கள் சிறப்பு பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன ?
12 :சென்னை ,மதுரை ,திருநெல்வேலி,திருச்சிராப்பள்ளி ,தஞ்சாவூர் ,திருப்பூர், சேலம் ,வேலூர் ,கோயம்புத்தூர் ,தூத்துக்குடி ,திண்டுக்கல் மற்றும் ஈரோடு
7TH GEOGRAPHY STUDY NOTES |மக்கள் தொகையும் குடியிருப்புகளும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services