- புவிக்கோளம் எத்தனை அடுக்குகளாக காணப்படுகிறது?
மூன்று: புவி மேலோடு, கவசம் புவிக்கரு
- புவியின் வெளிப்புற அடுக்கு எவ்வாறு அழைக்கப்படும்?
மேலோடு
- புவி மேலோட்டின் சராசரி அடர்த்தி என்ன?
5 முதல் 30 கிலோ மீட்டர்
- புவி மேலோட்டின் கண்டப் பகுதி அடர்த்தி எவ்வளவு?
35 கிலோமீட்டர்
- புவி மேலோட்டின் கடற்தளங்களின் பகுதி அடர்த்தி எவ்வளவு?
5 கிலோமீட்டர்
- பெரும்பாலான கடற்பரப்பு என்ன பாறைகளால் ஆனது?
பசால்ட்
- பூமி என்ன நிறக் கோள்?
நீலநிறம்
- பூமியின் எத்தனை சதவீத நிலப்பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது?
71%
- புவியின் மேலோடு எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
இரண்டு: சியால் மற்றும் சிமா
- சியால் பிரிவு என்ன தாதுக்களால் ஆனது?
சிலிக்கா மற்றும் அலுமினியம்
- சியால் பிரிவின் சராசரி அடர்த்தி எவ்வளவு?
2.7 கி/செ.மீ³
- சிமா பிரிவு என்ன தாதுக்களால் ஆனது?
சிலிக்கா மற்றும் மெக்னீசியம்
- சிமா பிரிவின் சராசரி அடர்த்தி எவ்வளவு?
3.0 கி/செ.மீ³
- புவி மேலோட்டின் அடுத்த அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கவசம்
- புவி மேலோட்டையும் கவசத்தையும் எந்த எல்லை மூலம் பிரிக்கப்படுகிறது ?
மோஹோரோவிசிக்
- கவசமானது எவ்வளவு தடிமனாக காணப்படுகிறது?
2900 கிலோ மீட்டர்
- கவசம் எத்தனை பிரிவாக பிரிக்கப்படுகிறது?
இரண்டு: மேல் கவசம் & கீழ் கவசம்
- மேல் கவசத்தின் 4 முதல் 4.4 கி/செ.மீ³ அடர்த்தியில் எவ்வளவு கிலோமீட்டர் பரப்பில் உள்ளது?
700 கிலோமீட்டர்
- கீழ் கவசம் 4.4 முதல் 5.5 கி/செ.மீ³ அடர்த்தியில் எவ்வளவு கிலோமீட்டர் பரப்பில் உள்ளது?
700 முதல் 2900 கிலோ மீட்டர்
- புவியின் மையப் பகுதி எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
புவிக்கரு
- புவிக்கரு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பேரிஸ்பியர் (Barysphere)
- புவிகருவிற்க்கும் கவசத்திற்கும் இடையே எல்லையாக அமைந்துள்ள இடைவெளி எது ?
வெய்சார்ட் குட்டன்பெர்க்
- புவி கரு எத்தனை அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது ?
இரண்டு அடுக்குகள்: திரவ நிலை அடுக்கு மற்றும் திட நிலை அடுக்கு
- புவி கருவின் திரவநிலை அடுக்கு இரும்பாலான வெளிப்புற புவிக்கரு எவ்வளவு அளவில் பரந்துள்ளது?
2900 முதல் 5150 கிலோமீட்டர்
- திட நிலையில் உள்ள புவி கருவில் உள்ள தனிமம் என்ன?
நிக்கல் மற்றும் இரும்பு (நைஃப்)
- நைஃப் உட்புற புவிக்கரு எவ்வளவு கிலோ மீட்டர் அளவில் பரந்துள்ளது?
5150 முதல் 6370 கிலோமீட்டர் வரை
- புவி கருவின் அடர்த்தி எவ்வளவு ?
13.0 கிராம்/செ.மீ³
- புவியின் கொள்ளளவில் புவி மேலோடு எத்தனை சதவீதம்?
1 %
- புவியின் கொள்ளளவில் கவசம் எத்தனை சதவீதம்?
84%
- புவியின் கொள்ளளவில் புவிக்கரு எத்தனை சதவீதம்?
15%
- புவியின் சுற்றளவு எத்தனை கிலோமீட்டர் ?
6371 கி.மீ
- கற்கோள் உடைப்பால் ஏற்படும் தட்டுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கற்கோள தட்டுகள்
- கற்கோள தட்டுகளின் நகர்வுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கண்டத்தட்டு நகர்வுகள்
- கண்டத் தட்டுகளின் இயக்க சக்தியாக செயல்படுவது எது ?
புவியின் உட்புறத்தில் இருந்து வெளிப்படும் வெப்பம்
- ஒவ்வொரு தட்டுகளும் கண்டத் தட்டுகளாகவோ அல்லது கடற்தட்டுகளாகவோ தன்னிச்சையாக புவிமேலோட்டின் கீழ் உள்ள எந்த பகுதியின் மேல் மிதக்கின்றன?
மென் அடுக்கு (Asthenosphere)
- அடர்த்தி வேறுபடுவதால் இரண்டு தட்டுகள் மோதிக்கொள்ளும் போது எது உருவாகின்றது?
கடல் அகழிகள்
- கண்டதட்டுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று விலகி செல்லும் பொழுது புவியின் மேற்பரப்பில் எதை உருவாக்குகின்றது?
அகன்ற பிளவுகள்
- ஓர் கடற்தட்டு கண்ட தட்டின் மேல் மோதும்போது தடிமனான கடற் தட்டு கண்ட தட்டின் கீழ் செல்லும்போது ஏற்படும் அழுத்தத்தினால் மேற்பரப்பு வெப்பமடைந்து உருகத் தொடங்கி கண்டத் தட்டுகளின் விளிம்புகள் என்னவாக உருவெடுக்கின்றது ?
எரிமலைகள்
- சில சமயங்களில் தட்டுகள் ஒன்றின்மேல் மற்றொன்று மோதும்போது வளைந்து மடிப்புகளை உருவாக்குகின்றன .இவ்வகையில் உருவான மலைச்சிகரம் எது?
இமயமலை சிகரங்கள்
- புவியின் நகர்வுகளை அதன் ஆக்க சக்திகளின் அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
இரண்டு: அக உந்து சக்திகள், புற உந்து சக்திகள்
- புவியின் உள்ளிருந்து வெளிப்படும் ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும் ?
அகஉந்து சக்திகள்
- புவியின் வெளிப்புறத்திலிருந்து இயங்கும் சக்திகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
புற உந்து சக்திகள்
- எதிர்பாராத நகர்வுகளை எந்த சக்திகள் ஏற்படுத்துகின்றன?
அக உந்து சக்திகள்
- புற உந்து சக்திகள் என்ன நகர்வுகளை ஏற்படுத்துகின்றன ?
மெதுவான வேகம் குறைந்த நகர்வுகள்
- அக உந்து சக்திகள் புவியின் மேற்பரப்பில் ஏற்படுத்தும் நிகழ்வுகள் என்னென்ன?
நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு
- புவி மேலோட்டிற்க்கும் கவச மேலடுக்கிற்கும் இடையே உள்ள பகுதி எது?
மென்பாறைக்கோளம்
- புவியின் மேலோட்டின், ஒரு பகுதியில் ஏற்படும் எதிர்பாராத நகர்வானது ,நிலத்தை அதிரவைக்கும் அசைவையும் ,நடுக்கத்தையும் ஏற்படுத்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிலநடுக்கம்
- எந்த ஒரு இடத்தில் நிலநடுக்கத்தை ஏற்படுத்துகின்றனவோ அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிலநடுக்க மையம் (focus)
- நிலநடுக்க மையத்திற்கு மேலுள்ள புவியோட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிலநடுக்க மேல் மையப்புள்ளி(Epicentre)
- புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவி எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
நில அதிர்வு மானி(seismograph)
- நிலநடுக்கத்தின் ஆற்றல் செறிவு எந்த அளவினை கொண்டு கணக்கிடப்படுகிறது?
ரிக்டர் அளவை
- ரிக்டர் அளவையில் அளவுகோல் என்ன?
0 முதல் 9 வரை
- எந்த ரிக்டர் அளவைக்கும் குறைவான ஆற்றல் செறிவினை உணர்வது அரிது?
2.0
- எந்த ரிக்டர் அளவைக்குமேல் அதிர்வலைகள் ஏற்படும் போது நிலம் பிளந்து வீழ்வது ஏற்படுகின்றது?
5.0
- எந்த ரிக்டர் அளவைக்கும் மேற்பட்ட அளவு அதிக வலிமையானது என கருதப்படுகிறது?
6.0
- எந்த ரிக்டர் அளவைக்கும் மேல் அதிர்வலைகள் ஏற்படும் போது பெரும் சேதம் விளைவிக்கும் நிலநடுக்கம் ஏற்படுகின்றது?
7.0
- புவி அதிர்வின் மற்றொரு தாக்கம் எது ?
எரிமலை வெடிப்பு
- பெரும்பாலும் நிலநடுக்கங்கள் எந்த பகுதிகளிலேயே ஏற்படுகின்றன?
எரிமலை வெடிப்பு பகுதிகள்
- எத்தனை வகையான நில அலைகள் உள்ளன?
3:P அலைகள் அல்லது அழுத்த அலைகள், S அலைகள் அல்லது முறிவு அலைகள் ,L அலைகள் அல்லது மேற்பரப்பு அலைகள்
- சுனாமி என்பது எந்த மொழி சொற்றொடர் ?
ஜப்பானிய சொற்றொடர்
- இந்திய பெருங்கடலில் எந்த ஆண்டு சுனாமி ஏற்பட்டது ?
26 டிசம்பர் ,2004
- உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் எத்தனை சதவீத நிலநடுக்கங்கள் பசுபிக் வளையப் பகுதியில் ஏற்படுகின்றன?
68%
- 31% நிலநடுக்கம் எந்த பகுதிகளில் ஏற்படுகின்றன ?
ஆசியா கண்டத்தில் உள்ள இமயமலைப் பகுதியிலும் வடமேற்கு சீனாவில் இருந்து மத்தியதரைக்கடல் பகுதி வரையிலும்
- மீதமுள்ள 1% நிலநடுக்கங்கள் எந்தப் பகுதியில் ஏற்படுகின்றன ?
வட ஆப்பிரிக்கா ,செங்கடல் மற்றும் சாக்கடல் பகுதிகளின் பிளவுப் பள்ளத்தாக்கு பகுதிகளில்
- இந்தியாவின் எந்தப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன ?
இமயமலைப் பகுதி, கங்கை பிரம்மபுத்திரா சமவெளி
- மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்திய உத்தரகாசி ,சாமோலி நிலநடுக்கங்கள் எந்த ஆண்டு ஏற்பட்டது?
1991 – உத்தரகாசி, 1999 -சாமோலி
- நிலநடுக்க பாதிப்புகள் அற்ற பகுதிகளாக சொல்லப்பட்ட தக்காண பீடபூமியில் ஏற்பட்ட இரண்டு மோசமான நிலநடுக்கங்கள் என்னென்ன ?
1967 கெய்னா ,1993 லாத்தூர்
- புவியின் மேற்பரப்பில் உள்ள பிளவு அல்லது துளை வழியே வெப்பம் மிகுந்த மாக்மா என்ற பாறைக் குழம்பு வெளியேறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எரிமலை
- புவியின் ஆழ்பகுதியிலுள்ள வாயுக்கள் கலந்த திரவ நிலையிலான பாறைக்குழம்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மாக்மா
- பாறைக் குழம்பு மேற்பரப்புக்கு வரும் பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லாவா
- எரிமலையின் திறப்பு அல்லது வாய்ப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
துளை
- காலப்போக்கில் துளை வழியே வெளியேறும் லாவாவும் இதர பொருட்களும் துளைப்பகுதியைச் சுற்றி படிந்து எதை உருவாக்குகின்றது?
கூம்பு வடிவ குன்று அல்லது மலை
- கூம்பு வடிவ குன்றின் உச்சி பகுதியில் தோன்றும் பள்ளம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எரிமலை பள்ளம் (crater)
- எரிமலை வெடித்து கூம்பு வட்ட குன்றின் உச்சியில் பெரிய பள்ளத்தை தோற்றுவிப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
வட்ட எரிமலை வாய்(caldera)
- பூமியில் உள் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பமானது 35 மீட்டருக்கு எவ்வளவாக உயர்ந்துகொண்டே வரும்?
10 டிகிரி செல்சியஸ்
- 15 கிலோமீட்டர் ஆழத்தில் அழுத்தமானது எந்த அளவில் உயருகின்றது?
சதுர சென்டி மீட்டருக்கு 5 டன்கள்
- எரிமலைகள் பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எரிமலை ஆய்வியல் (volcanology)
- எரிமலைகள் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் வல்லுநர்கள் எவ்வாறு அழைக்கப்படுவார்கள் ?
எரிமலை ஆய்வியலாளர்கள் (volcanologist)
- எரிமலைக் குழம்பின் வெளியேற்றம் நிதானமாக பரந்து பரவினால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
எரிமலை வெளியேற்றம்
- எரிமலை வெளியேற்றம் மூலம் உருவான பகுதிகள் எது ?
இந்தியாவின் தக்காண பீடபூமி, வட அமெரிக்காவின் கொலம்பியா பீடபூமி
- புவியின் உள்ளே இருந்து மேக்மா திடீரென வேகமாக வெளியேறினால் அது வளிமண்டலத்தை நோக்கி தூக்கி எறியப்படுகிறது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எரிமலை வெடிப்பு வெளியேற்றம்
- கரக்காட்டாவோ தீவிலுள்ள எரிமலை எங்கு உள்ளது?
இந்தோனேஷியா
- லாவா திரவத்தின் ஓட்டம் எதைப் பொறுத்தது?
லாவாவில் உள்ள சிலிக்கா மற்றும் நீரின் அளவை பொறுத்தது
- எந்த லாவா மெதுவாக படிகின்றது?
சிலிக்கா அதிகமுள்ள அமில லாவா
- எந்த லாவா வேகமாக வெகு தூரத்திற்கு சென்று மென்மையாக படிகின்றது?
சிலிக்கா குறைவாக உள்ள கார லாவா
- பேரென் தீவு எங்கு உள்ளது ?
அந்தமான்
- சுமத்திராவில் இருந்து மியான்மர் வரை உள்ள நெருப்பு வளையத்தினுள் இருக்கும் ஒரு செயல்படும் எரிமலை எது?
பேரென் தீவு எரிமலை
- பேரென் தீவு எரிமலை கடைசியாக எந்த ஆண்டில் வெடித்து சிதறியது?
2017
- எரிமலைகளின் வடிவத்தைக் கொண்டு எரிமலைகள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது ?
மூன்று :கேடய எரிமலை (shield volcano) ,தழல் கூம்பு எரிமலை(cinder cone volcano), பல்சிட்ட கூம்பு எரிமலை(composite core volcano)
- சிலிக்காவின் அளவு குறைந்து மிக மெதுவாக எரிமலை குழம்பு வெளியேறும் போது என்ன எரிமலை உருவாகின்றது?
கேடய எரிமலை
- ஹவாய் தீவிலுள்ள எரிமலை குன்றுகள் எந்த வகையைச் சார்ந்தது?
கேடய எரிமலை
- மிகுந்த சிலிக்கா கொண்ட மாக்மாவை உள்ளிருக்கும் வாயுக்கள் தடுக்கும் போது அதிக சத்தத்துடன் வளிமண்டலத்தில் பல நூறு கிலோ மீட்டர் உயரத்திற்கு வெடித்து சிதறும் போது என்ன எரிமலைகள் உருவாகின்றன ?
தழல் கூம்பு எரிமலைகள்
- மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா எரிமலைகள் எந்த வகையைச் சார்ந்தது?
தழல் கூம்பு எரிமலைகள்
- லாவா ,பல்சிட்டம், எரிமலை சாம்பல் ஆகியவை மாறிமாறி அடுக்குகளாகப் படியும்போது என்ன எரிமலைகள் உருவாகின்றன?
பல்சிட்டக் கூம்பு எரிமலைகள்
- பல்சிட்டக் கூம்பு எரிமலைகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அடுக்கு எரிமலைகள்
- அமெரிக்காவில் உள்ள சியாட்டல் நகரத்தின் அருகே உள்ள செயின்ட் ஹெலன் எரிமலை எதற்கு எடுத்துக்காட்டு?
பல்சிட்டக் கூம்பு எரிமலைகள்
- எரிமலைகள் அதன் எரிமலை குழம்பு வெளியேறும் கால அளவினை கொண்டு எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
செயல்படும் எரிமலை ,செயல்படாத எரிமலை மற்றும் செயலிழந்த எரிமலை
- அடிக்கடி வெடித்து வெளியேற்றும் எரிமலைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
செயல்படும் எரிமலைகள் (Active volcano)
- பசிபிக் கடற்கரையோரமாக பெரும்பாலான எரிமலைகள் அமைந்திருப்பதால் இப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பசிபிக் நெருப்பு வளையம்
- சராசரியாக உலகெங்கிலும் எவ்வளவு செயல்படும் எரிமலைகள் உள்ளன ?
600
- உலகின் மிகப்பெரிய செயல்படும் எரிமலை எது ?
மவுனாலோ (3,255 மீட்டர்)
- ஸ்ட்ராம்போலி எரிமலை எந்தப் பகுதியில் உள்ளது?
மத்திய தரைக்கடல் பகுதி
- செயின்ட் ஹெலினா எரிமலை எந்த பகுதியில் உள்ளது ?
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- பினாடுபோ எரிமலை எங்கு உள்ளது?
பிலிப்பைன்ஸ் தீவு
- எந்த எரிமலை மத்தியதரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படுகிறது?
ஸ்ட்ராம்போலி எரிமலை
- பல வருடங்களாக எரிமலைக் குழம்பை வெளியேற்றுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் வெளிப்படுத்தாமல் எப்போது வேண்டுமானாலும் செயல்படக்கூடிய எரிமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செயல்படாத எரிமலைகள் (dormant volcano)
- செயல்படாத எரிமலைகள் வேறு எவ்வாறு அழைக்கப்படும் ?
உறங்கும் எரிமலை
- உறங்கும் எரிமலைகளுக்கு எடுத்துக்காட்டுகள் ?
இத்தாலியில் விசுவியஸ், ஜப்பானில் பியூஜியாமா, இந்தோனேஷியாவில் சிரகோட்டா
- வெடிப்பு ஆற்றல் முழுவதையும் இழந்து வெடிப்பதை நிறுத்திவிட்ட எரிமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செயலிழந்த எரிமலை(extinct volcano)
- செயலிழந்த எரிமலைகளுக்கு எடுத்துக்காட்டு?
மியான்மரின் போப்பா, ஆபிரிக்காவின் கிளிமாஞ்சாரோ மற்றும் கென்யாவின் எரிமலைகள்
- உலகில் எத்தனை முக்கிய எரிமலை நிகழ்வு பகுதிகள் உள்ளன?
மூன்று: பசுபிக் வளைய ப்பகுதி(the cirum-pacific belt), மத்திய கண்டப் பகுதி(the mid continental belt) ,மத்திய அட்லாண்டிக் பகுதி (the mid Atlantic belt)
- எந்த எரிமலை பகுதியானது குவியக் கடல் தட்டின் எல்லைப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது?
பசுபிக் வளைய பகுதி
- எத்தனை பங்கு எரிமலைகள் பசுபிக் வளையப் பகுதியில் அமைந்துள்ளன?
மூன்றில் இரண்டு பங்கு
- கண்டத் தட்டுகள் குவியும் எல்லைப்பகுதியில் உள்ள இந்த எரிமலை பகுதியில்(மத்திய கண்ட பகுதி) என்ன அமைந்துள்ளது?
அல்பைன் மலைத்தொடர், மத்தியதரைக்கடல் பகுதி மற்றும் வட ஆப்பிரிக்க பிளவு பகுதி
- மத்திய கண்ட பகுதியிலுள்ள முக்கிய எரிமலைகள் என்னென்ன?
விசுவியஸ் ,ஸ்ட்ரோம்போலி, எட்னா ,கிளிமஞ்சாரோ மற்றும் கென்யா எரிமலை
- விலகி செல்லுகின்ற தட்டுகளின் எல்லை பகுதியான மத்திய அட்லாண்டிக் பகுதியில் அமைந்துள்ள எரிமலைகள் எந்த வகையைச் சார்ந்தது?
குழாய் வடிவ எரிமலை வெளியேற்றும் வகையைச் சார்ந்தது
- மத்திய அட்லாண்டிக் குன்றுப் பகுதியில் அமைந்துள்ள எந்த இடத்தில் செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன ?
ஐஸ்லாந்து
- செயின்ட் ஹெலினா மற்றும் அசோர்ஸ் தீவுகள் எந்த பகுதிக்கான எடுத்துக்காட்டு ?
மத்திய அட்லாண்டிக் பகுதி
7TH GEOGRAPHY STUDY NOTES |புவியின் உள்ளமைப்பு| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services