- புவியின் நிலத்தோற்றங்கள் என்ன செயல்முறைகளால் தோற்றுவிக்கப்படுகின்றன?
அகச் செயல்முறைகள் மற்றும் புறச் செயல்முறைகள்
- புவியின் மேற்பரப்பில் பல இடங்களில் ஏற்படும் உயர்நிலை பகுதிகள் மற்றும் தாழ்வு பகுதிகள் எந்த செயல்களால் ஏற்படுகின்றன?
அகச் செயல்கள்
- புவிப்பரப்பில் தொடர்ந்து ஏற்படும் அரித்தல் மற்றும் மறு கட்டமைத்தல் ஆகியன என்ன செயல்களால் ஏற்படுகின்றன?
புறச் செயல்முறைகள்
- உயர் நிலங்களை அரித்தல் மூலம் தாழ் நிலங்களாகவும், தாழ் நிலங்களை படிதல் செய்தல் மூலம் உயர் நிலங்களாகவும் மாற்றுவதற்கு என்ன பெயர் ?
நிலங்களை சமப்படுத்துதல்
- நிலப்பரப்பானது எந்த இரு செயல்முறைகள் மூலம் தொடர்ந்து தேய்மானத்திற்கு உட்படுத்தப்படுகின்றன?
பாறைச் சிதைவு மற்றும் அரித்தல்
- புவி மேற்பரப்பில் பாறைகள் உடைந்து மற்றும் சிறு சிறு கற்களாக துண்டுகளாகவும் சிதறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாறைச் சிதைவு
- நீர்,காற்று ,பனி மற்றும் கடல் அலைகள் என பல்வகைப்பட்ட காரணிகளால் புவியின் மேற்பரப்பு அடித்து செல்லப்படுவதை எவ்வாறு அழைக்கின்றோம்?
அரித்தல்
- ஒரு குறிப்பிட்ட பாதையில் தோன்றும் இடத்தில் இருந்து முகத்துவாரம் வரை ஓடுகின்ற நீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆறு
- ஆறுகள் எங்கிருந்து உற்பத்தியாகின்றன?
மலை அல்லது குன்று
- ஆறு தோன்றும் இடம் எவ்வாறு அழைக்கப்படும்?
ஆற்றின் பிறப்பிடம்
- ஆறு ஒரு ஏரியிலோ கடலிலோ அல்லது ஒரு பேராழியிலோ கலக்கும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஆற்று முகத்துவாரம்
- ஆற்றில் வேகமாக ஓடும் நீரானது பள்ளத்தாக்கை செங்குத்தாக அரித்து எதை உருவாக்குகின்றது ?
V வடிவ பள்ளத்தாக்கு
- ஒரு முதன்மை ஆற்றுடன் இணையும் அல்லது ஆற்றினுள் பாயும் ஓர் நீரோடை அல்லது ஓர் ஆறு எவ்வாறு அழைக்கப்படும் ?
துணையாறு
- ஒரு முதன்மை ஆற்றில் இருந்து பிரிந்து மற்றும் விலகி செல்லும் ஓர் ஆறு எவ்வாறு அழைக்கப்படும்?
கிளை ஆறு
- நீரானது ஒரு செங்குத்து பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீர்வீழ்ச்சி
- ஏஞ்சல் நீர்வீழ்ச்சி எங்கு உள்ளது ?
தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாடு
- நயாகரா நீர்வீழ்ச்சி எங்கு உள்ளது ?
வட அமெரிக்காவில் ,கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் எல்லையில்
- ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளின் எல்லையில் உள்ள நீர்வீழ்ச்சி எது?
விக்டோரியா நீர்வீழ்ச்சி
- நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும்பள்ளம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வீழ்ச்சி உட்பாய்த்தேக்கம் (plunge pool)
- ஆறு ஒரு சமவெளி பகுதியையோ அல்லது மலையடிவார பகுதியையோ அடையும்போது ஏற்படுத்தும் படிவுகள் வண்டல் விசிறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உட்பாய்த் தேக்கம்
- ஆறானது சமவெளிப் பகுதியை அடையும்போது அது சுழன்று பெரிய திருப்பங்களுடன் செல்வதால் தோன்றும் பெரிய வளைவுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆற்று விளைவுகள் (Meanders)
- தமிழ்நாட்டில் எங்கு ஆற்று வளைவுகள் (Meanders)
காணப்படுகிறது?
கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்று பகுதியில்
- நாளடைவில் ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியாக உருவெடுக்கின்றது. இது எவ்வாறு அழைக்கப்படும் ?
குதிரை குளம்பு ஏரி(Oxbow lake)
- ஆற்று வளைவு (Meanders) எனும் சொல் எதனால் ஏற்பட்டது ?
ஆசியா மைனர் (துருக்கி) என்ற இடத்தில் உள்ள மியாண்டர் ஆற்றின் பெயரின் அடிப்படையில்
- ஆறு தன் கரைகளைத் தாண்டி நிரம்பி வழியும்போது ஆற்றின் அண்டை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மென்மையான மண் மற்றும் இதர பொருட்களையும் அடுக்குகளாக படிய வைக்கின்றது. இவை எவ்வாறு அழைக்கப்படும்?
வண்டல் படிவுகள்
- உயர்ந்த ஆற்றங்கரைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
லெவிஸ் அல்லது உயர் அணை
- ஆறு கடலை அடையும் போது ஆற்று நீரின் வேகம் குறைந்து , ஆறு பல பிரிவுகளாக பிரிந்து செல்கின்றது. இவை எவ்வாறு அழைக்கப்படும்?
கிளையாறுகள்
- அனைத்து முகத்துவாரங்களின் படிவுகளும் ஒருங்கிணைந்து என்ன ஏற்படுத்துகின்றன?
டெல்டா
- மலைச்சரிவில் ஈர்ப்பு விசையின் காரணமாக மெல்ல நகரும் பணி குவியல் எவ்வாறு அழைக்கப்படும்?
பனியாறு
- பனியாறு எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
இரண்டு:மலைப் பனியாறு அல்லது பள்ளத்தாக்கு பனியாறு, கண்டப் பனியாறு
- கண்டப் பகுதியில் பெரும் பரப்பில் பரவிக் காணப்படும் அடர்ந்த பனிப்படலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கண்டப் பனியாறு
- கண்டப் பனியாறுக்கு எடுத்துக்காட்டுகள்?
அண்டார்டிகா மட்டும் கிரீன்லாந்து
- மலையிலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி நகரும் பனியாறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பள்ளத்தாக்கு பனியாறு
- பனியாறுகளால் பாறைகளின் மீது ஏற்படுத்தும் கை நாற்காலி போன்ற பள்ளத்தாக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சர்க்குகள்
- கார்ரி சர்க் எங்கு உள்ளது ?
ஸ்காட்லாந்து
- கார் சர்க் எங்குள்ளது?
ஜெர்மனி
- பனி உருகும் போது சர்க்கானது நீரால் நிரப்பப்பட்டு அழகான ஏரிகளாக மலைப்பகுதிகளில் உருவாகின்றன இந்த ஏரிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
டார்ன் ஏரி
- இரண்டு சரக்குகள் ஒன்றை நோக்கி ஒன்று அழிக்கப்படும் போது இதற்கு முன்னர் அமைந்த வட்டமான நிலத்தோற்றம் குறுகிய மற்றும் மலைச் சரிவான பக்கங்களுடன் கூடிய முகடுகளாக மாற்றமடைகின்றன .இம்முகடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அரெட்டுகள்
- பனியாற்றின் பக்கவாட்டு மற்றும் செங்குத்து அரிப்பினால் ஏற்படும் ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் மூலம் உருவாகும் நிலத்தோற்றம் எது?
U வடிவ பள்ளத்தாக்கு
- பனியாற்றினால் கடத்தப்படும் பெரிய மற்றும் சிறிய மணல் மற்றும் வண்டல் ஆகியன படிய வைக்கப்படுகின்றன. இவை எவ்வாறு அழைக்கப்படும்?
பணியாற்று மொரைன்கள்
- பாலைவனத்தில் அரிப்பு மற்றும் படிதல் செயல்முறைகளை வேகமாக செயல்படுத்தும் காரணி எது?
காற்று
- பாறையின் மேல் பகுதியை விட கீழ்ப்பகுதியை வேகமாக காற்று அரிக்கின்ற காரணத்தினால் உருவாகும் தோற்றம் எது?
காளான் பாறை தோற்றம்
- ஒரு தனித்துவிடப்பட்ட எஞ்சிய குன்று வட்டமான தலை பகுதியுடன் நிற்கும் ஒரு தூண் போன்று காட்சி அளிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
காற்று அரிப்புத் தனிக்குற்றுகள்(Inselbergs)
- காற்றரிப்பு தனிக்குன்றுகள் எங்கு காணப்படுகிறது?
தென்னமெரிக்காவில் கலகாரி பாலைவனம்
- காற்று வீசும் போது மணலை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கடத்தி கொண்டு குன்று போன்று படிய வைக்கிறது இப்படிவுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மணல் குன்றுகள்
- பிறைச் சந்திர தோற்றமுடன் கூடிய மணல் மேடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பிறை வடிவ மணல் குன்றுகள்
- மணல் துகள்கள் காற்றினால் நீண்ட தொலைவுக்கு கடத்தி செல்லப்பட்டு மணல் ஒரு பெரும் பரப்பில் படிவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காற்றடி வண்டல் படிவுகள் (loess)
- காற்றடி வண்டல் படிவுகள் எங்கு அதிகமாக காணப்படுகின்றன?
சீனா
- வடக்கு சீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் எந்த பாலைவனத்தில் இருந்து கடத்தப்பட்டவை?
கோபி பாலைவனம்
- நிலப் பகுதியை அடுத்து அல்லது ஒட்டியோ காணப்படும் பெரும் நீர் பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கடற்பகுதி
- கடல் நீரும் நிலமும் சந்திக்கின்ற இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கடலோர எல்லை அல்லது கடற்கரை
- கடற்கரையை அடுத்துள்ள நிலம் செங்குத்தாக உயர்ந்து காணப்படும் பொழுது அலைகளின் மோதலினாலும் அரிப்பினாலும்,கடலை நோக்கி காணப்படும் செங்குத்துப் பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கடல் ஓங்கல் (sea cliff)
- கடல் அலைகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் பாறையில் விரிசல்கள் ஏற்பட்டு செங்குத்து பாறைகள் குகைப் போன்ற வெற்றிடங்கள் தோன்றுகின்றன. இவை எவ்வாறு அழைக்கப்படும்?
கடற்குகைள் (sea caves)
- கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும்போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று என்ன நில தோற்றத்தை தோற்றுவிக்கின்றது?
கடல் வளைவுகள்
- கடல் அலைகள் மேற்கூரையை அரிப்பதால் பக்கச் சுவர்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இந்த சுவர் போன்ற தோற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
கடல் தூண்கள் (sea stacks)
- கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப் பகுதி எவ்வாறு அழைக்கப்படும் ?
கடற்கரை(beach)
- கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மணல் திட்டுகள்
- உலகிலேயே மிக நீளமான கடற்கரை எங்கு உள்ளது?
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் தெற்கில் காணப்படும் மியாமி கடற்கரை
- இரண்டாவது நீண்ட கடற்கரை எங்கு அமைந்துள்ளது?
சென்னை மெரினா கடற்கரை
- கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர் தேக்கம் எவ்வாறு அழைக்கப்படும் ?
காயல்கள் அல்லது உப்பங்கழிகள்(lagoon)
- சிலிகா ஏரி எங்குள்ளது?
ஒடிசா
- பழவேற்காடு ஏரி எங்குள்ளது ?
தமிழ்நாடு
- வேம்பநாடு ஏரி எங்குள்ளது ?
கேரளா
7TH GEOGRAPHY STUDY NOTES |நிலத்தோற்றங்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services