- மூலப்பொருட்களை மாற்றி அமைத்து நம் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு முழுமையாக்கும் ஒரு செயல் எவ்வாறு அழைக்கப்படும் ?
உற்பத்தி
- நுகர்வோரின் பயன்பாட்டுக்காக மூலப் பொருளையும் மூலப்பொருள் அல்லாதனவற்றையும் ஒன்றிணைத்து ஒரு பொருளை உருவாக்கும் செயல் எவ்வாறு அழைக்கப்படும்?
உற்பத்தி
- பயன்பாட்டின் வகைகள் என்னென்ன?
வடிவ பயன்பாடு ,இட பயன்பாடு ,கால பயன்பாடு
- ஒருவிளைப் பொருளின் வடிவம் மாற்றப்படும்போது அதன் பயன்பாடு மிகுதியாகிறது. இது என்ன வகை பயன்பாடு?
வடிவ பயன்பாடு
- ஒரு விளைப்பொருள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லப்படும் போது அதன் பயன்பாடு மிகுதியாகிறது இது எந்த வகை பயன்பாடு?
இட பயன்பாடு
- ஒரு விளை பொருளை எதிர்காலத் தேவைக்காக சேமித்து வைக்கும் போது அதன் பயன்பாடு மிகுகிறது .இது எந்த வகை பயன்பாடு?
கால பயன்பாடு
- பொருளாதாரத்தில் உற்பத்தி எனும் சொல் எதனைக் குறிக்கும்?
மாற்றத்தக்க மதிப்புடைய பொருள்களையும் சேவைகளையும் உருவாக்குவதை குறிக்கும்
- பயன்பாட்டை உருவாக்குவதற்கு பெயர் என்ன?
உற்பத்தி
- நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வது எது?
பயன்பாடு
- பயன்பாட்டை அதன் இயல்பை பொறுத்து எவ்வாறு வகைப்படுத்தலாம்?
மூன்று: வடிவ பயன்பாடு, இட பயன்பாடு, கால பயன்பாடு
- இந்தியாவில் என்ன பொருளாதார நிலை காணப்படுகிறது?
கலப்பு பொருளாதாரம்
- உற்பத்தியின் வகைகள் என்னென்ன?
மூன்று :முதன்மை நிலை உற்பத்தி ,இரண்டாம் நிலை உற்பத்தி, மூன்றாம் நிலை உற்பத்தி
- இயற்கையாக கிடைக்கும் பொருட்களை நேரடியாக பயன்படுத்தி செய்கின்ற செயல்பாடுகளுக்குட்பட்ட நிலை எவ்வாறு அழைக்கப்படும் ?
முதன்மை நிலை உற்பத்தி
- முதன்மை நிலை உற்பத்தியில் வேளாண்மைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வேளாண்மைத்துறை உற்பத்தி
- முதன்மை நிலை உற்பத்தி தொழில்கள் என்னென்ன?
வேளாண்மையும் அதனுடன் தொடர்புடைய செயல்கள் ,வனங்களை பாதுகாத்தல் ,மீன் பிடித்தல், சுரங்கத்தொழில் ,எண்ணெய் வளங்களை பிரித்தெடுத்தல் போன்ற செயல்பாடுகள்
- முதன்மை நிலையில் உற்பத்திப் பொருள்களை மூலப்பொருளாக பயன்படுத்தி புதிய உற்பத்திப் பொருளாக உருவாக்கும் செயல்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இரண்டாம் நிலை உற்பத்தி
- இரண்டாம் நிலை உற்பத்தியில் தொழிலுக்கு முதலிடம் அளிக்கப்படுவதால் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தொழில்துறை உற்பத்தி
- இரண்டாம் நிலை உற்பத்தியுள் அடங்கும் துறைகள் என்னென்ன ?
மாவிலிருந்து ரொட்டி தயாரித்தல், இரும்பு தாதுவிலிருந்து பயன்படக்கூடிய பொருள்களை தயாரித்தல் ,நான்கு சக்கர வண்டிகள் ,ஆடைகள், ரசாயனப் பொருள்கள் போன்றவற்றை தயாரித்தல் ,பொறியியல் துறை சார்ந்த பணிகள் கட்டடப் பணிகள் போன்றவைகள்
- முதன்மை நிலை ,இரண்டாம் நிலைகளின் உற்பத்தி பொருள்களை சேகரிப்பதும் பரிமாற்றம் செய்வதும் எந்த நிலை உற்பத்தி ?
மூன்றாம் நிலை உற்பத்தி
- மூன்றாம் நிலையில் சேவைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சேவைத்துறை உற்பத்தி
- மூன்றாம் நிலை உற்பத்திக்கு எடுத்துக்காட்டு ?
வாணிகம், வங்கி, காப்பீடு, போக்குவரத்து, செய்தித் தொடர்பு, சட்டம் நிர்வாகம், கல்வி, உடல்நலப் பாதுகாப்பு போன்ற அரசு துறை நிறுவனங்கள் அனைத்தும்
- நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பவை எது?
மூன்றாம் நிலை அல்லது சேவைத்துறை உற்பத்திகள்
- ஒரு பொருளின் உற்பத்திக்கு உதவுகின்ற காரணிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
நிலம் ,உழைப்பு, முதலீடு
- ஒரு பொருளை உற்பத்தி செய்வதில் எந்த மூன்று காரணிகள் இணைந்து செயல்படுகின்றன?
நிலம் ,உழைப்பு ,முதலீடு
- உற்பத்தி செய்யப்பட்ட பொருளை விற்பனை செய்வதற்கு நான்காவதாக தேவைப்படும் காரணி எது?
அமைப்பு
- உற்பத்தி காரணிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
இரண்டு: முதல்நிலை உற்பத்தி காரணிகள் ,மூலப்பொருள்களில் இருந்து பெறப்பட்ட உற்பத்தி காரணிகள்
- நிலமும், உழைப்பும் எந்த உற்பத்தி காரணிகளில் அடங்கும்?
முதல் நிலை உற்பத்தி காரணிகள்
- முதலீடும் அமைப்பும் எந்த காரணிகளில் அடங்கும் ?
மூலப்பொருள்களில் இருந்து பெறப்பட்ட உற்பத்தி காரணிகள்
- எந்த உற்பத்தி காரணி இயற்கை வளங்கள் அனைத்தையும் அல்லது இயற்கை மனிதனுக்கு இலவசமாக கொடுத்திருக்கும் கொடை அனைத்தையும் குறிப்பதாகும் ?
நிலம்
- நிலத்தின் சிறப்பியல்புகள் என்னென்ன?
நிலம் இயற்கையின் கொடை ,நிலத்தின் அளிப்பு நிலையானது ,நிலம் அழிவில்லாதது, நிலம் ஓர் முதன்மை உற்பத்தி காரணி ,நிலம் இடம்பெயர கூடியதன்று ,நிலம் ஆற்றல் வாய்ந்தது ,நிலம் செழிப்பு தன்மையில் மாறுபடும்
- வேலையினால் ஏற்படும் துன்பத்தை கருதாமல் ,கைமாறு எதிர்பார்த்து முழுமையாகவோ பகுதியாகவோ அல்லது மனதால் பயன் கருதி மேற்கொள்ளும் முயற்சியே உழைப்பு என உழைப்பிற்கு விளக்கம் அளித்தவர் யார்?
ஆல்பிரட் மார்ஷல்
- பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
ஆடம்ஸ்மித்
- ஆடம் ஸ்மித்தின் கோட்பாடு எது?
செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட செல்வ இலக்கணம்
- ஆடம் ஸ்மித்தின் சிறந்த இரண்டு படைப்பு நூல்கள் என்னென்ன ?
நன்னெறி கருத்து உணர்வு கொள்கை, நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு(1776)
- வேலை பகுப்பு முறையை ஆடம் ஸ்மித் தனது எந்த நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார் ?
நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும்
- ஒரு உற்பத்தியை நன்கு வரையறுக்கப்பட்ட வெவ்வேறு பிரிவுகளாக பிரித்து அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவினரிடம் ஒப்படைத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வேலை பகுப்பு முறை
- பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்வதற்காக மனித முயற்சியால் உருவாக்கப்பட்டவை எது?
மூலதனம்
- மூலதனம் வேறு எவ்வாறு கூறப்படுகிறது?
செல்வத்தை உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட செல்வம்
- “இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக்கூடிய பிற வகை செல்வங்களே மூலதனம் ஆகும்” எனக் கூறியவர் யார்?
ஆல்பிரட் மார்ஷல்
- மூலதனத்தின் வடிவங்கள் என்னென்ன?
பருமப்பொருள் மூலதனம் அல்லது பொருள்சார் மூலதனம், பண மூலதனம் அல்லது பணவியல் வளங்கள், மனித மூலதனம் அல்லது மனிதன் வளங்கள்
- நிலம், உழைப்பு, மூலதனம் போன்ற உற்பத்தி காரணிகளை ஒருங்கிணைத்து செயல்படுபவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
தொழில்முனைவோர்
- தொழில் முனைவோர் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
தொழில் அமைப்பாளர்
- தற்காலத்தில் தொழில்முனைவோர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
சமுதாய மாற்றம் காண முகவர்
7TH ECONOMICS STUDY NOTES |உற்பத்தி| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services