- பொருளின் வேதியியல் இயைபில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வேதியல் மாற்றம்
- இயற்பியல் நிலையின் அடிப்படையில் பருப்பொருட்கள் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது ?
மூன்று :திண்மம் ,திரவம் மற்றும் வாயு
- அழுத்தம் கொடுத்தல், வெப்ப படுத்துதல் போன்ற காரணங்களாலும் அல்லது வேறு காரணங்களினாலும் ஒரு பொருளில் அமைந்துள்ள துகள்களின் அமைப்பு மாறுபடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
இயற்பியல் மாற்றம்
- பருமன் மாறுபாடு அடைந்தும் ,நிறை மாறாமலும் பொருள்களில் ஏற்படும் மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இயற்பியல் மாற்றங்கள்
- ஒரு பொருளின் வேதியியலில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் அப்பொருளின் இயற்பியல் பண்புகள் மட்டுமே ஏற்படும் மாற்றங்களுக்கு என்ன பெயர்?
இயற்பியல் மாற்றங்கள்
- பொதுவாக தற்காலிகமானதும் மீள் தன்மை கொண்டதுமான மாற்றம் எவ்வாறு அழைக்கப்படும்?
இயற்பியல் மாற்றம்
- திணமத்திலிருந்து திரவத்திற்கு மாறுவது எவ்வாறு அழைக்கப்படும்?
உருகுதல்
- திரவத்திலிருந்து வாயுவிற்கு மாறுவது எவ்வாறு அழைக்கப்படும்?
ஆவியாதல்
- திரவத்திலிருந்து திண்மத்திற்கு மாறுவது எவ்வாறு் அழைக்கப்படும்?
உறைதல்
- வாயுவிலிருந்து திரவத்திற்கு மாறுவது எவ்வாறு அழைக்கப்படும்?
ஆவி சுருங்குதல்
- திண்மத்திலிருந்து வாயுவிற்கு மாறுவது எவ்வாறு அழைக்கப்படும்?
பதங்கமாதல்
- உருகுதல் ,ஆவியாதல் மற்றும் பதங்கமாதல் ஆகியவை எந்த நிகழ்வுகளாகும்?
வெப்ப கொள் நிகழ்வுகள்
- உறைதல் மற்றும் ஆவி சுருங்குதல் எந்த நிகழ்வுகளாகும்?
வெப்ப உமிழ் நிகழ்வுகள்
- ஆவியாதல் எத்தனை வகையில் நிகழும்?
இரண்டு: கொதித்தல் மற்றும் ஆவியாதல்
- எந்த நுட்பத்தினைப் பயன்படுத்தி கரைந்த நிலையில் உள்ள திண்மங்களை அதன் திண்மம் -திரவம் கலவையிலிருந்து பிரித்தெடுக்க முடியும் ?
ஆவியாதல்
- புறப்பரப்பு அதிகரித்தால் ஆவியாதல் வேகம் என்னவாகும்?
அதிகரிக்கும்
- காற்றின் வேகம் அதிகமாகும் பொழுது ஆவியாதலின் வேகம் என்னவாகும்?
அதிகரிக்கும்
- திரவத்தின் புறப்பரப்பில் மட்டுமே நிகழும் மற்றும் மெதுவாக நடைபெறும் நிகழ்வு எது?
ஆவியாதல்
- ஆவியாதல் ,கொதித்தல் ,ஆவி சுருங்குதல், உருகுதல்,படிகமாக்குதல் மற்றும் உறைதல் ஆகியவை எந்த நிகழ்வுகள் ?
இயற்பியல் நிகழ்வுகள்
- அமோனியம் குளோரைடு எதற்கு எடுத்துக்காட்டு?
பதங்கமடையும் பொருள்
- எதன் மூலம் கரைந்த நிலையில் உள்ள மாசுக்களை நீக்க முடியும் ?
படிகமாக்குதல்
- ஒரு சூடான செறிந்த கரைசலில் இருந்து படிவங்களை பெறும் முறைக்கு என்ன பெயர் ?
படிகமாக்குதல்
- இரும்பு துருப்பிடிக்க தேவையானவை?
ஆக்ஸிஜன் மற்றும் நீர்
- இரும்பின் மீது குரோமியம் அல்லது துத்தநாகம் போன்ற உலோகங்களை ஒரு படலமாக பூசுவதற்கு பெயர் என்ன?
நாக முலாம் பூசுதல்
- மெக்னீசியம் ஆக்சைடு என்ற சேர்மம் என்ன நிறத்தில் காணப்படுகிறது ?
வெண்ணிற சாம்பல்தூள்
- துருப்பிடித்தல் எதற்கு எடுத்துக்காட்டு?
வேதியியல் மாற்றம்
- பால் தயிராதல் என்பது எந்த வினைக்காண எடுத்துக்காட்டு?
மீளாவினை
- ஈஸ்ட் மற்றும் சிலவகை பாக்டீரியாக்களினால் சர்க்கரை கரைசலை ஆல்கஹாலாகவும், கார்பன்-டை-ஆக்சைடாகவும் மாற்றும் நிகழ்வு பெயர் என்ன?
நொதித்தல்
- நொதித்தல் எந்த மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு?
வேதியல் மாற்றம்
- நொதித்தல் எனும் நிகழ்வினை முதன்முதலில் விவரித்தவர் யார் ?
லூயிஸ் பாஸ்டர்
- லூயிஸ் பாஸ்டர் எந்த நோய்க்கு மருத்துவம் கண்டறிந்தவர்?
ரேபிஸ் என்ற வெறி நாய்கடிக்கு
- சோடியம் பைகார்பனேட் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சமையல் சோடா
- எலுமிச்சை சாறில் உள்ள அமிலம் எது?
சிட்ரிக் அமிலம்
- சமையல் சோடாவுடன் எலுமிச்சை சாற்றினை கலந்தால் என்ன வாயு உருவாகி குமிழாக வெளியேறும்?
கார்பன் டை ஆக்சைடு
- தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் சேர்க்கப்பட்டு எது உருவாகிறது?
வனஸ்பதி
- வனஸ்பதி உருவாக்கப் பயன்படும் வினையில் எது வினையூக்கியாக பயன்படுகிறது ?
நிக்கல் ,பிளாட்டினம் அல்லது பல்லேடியம்
- எந்த ஒரு பொருள் ஒரு வேதிவினையில் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் வேதி மாற்றத்தின் வேகத்தை மட்டும் துரிதப்படுத்துமோ அப்பொருளுக்கு என்ன பெயர்?
வினையூக்கி
- பொருள்கள் என்ன காரணிகளால் வேதி மாற்றங்களை உருவாக்க முடியும்?
கலத்தல் ,வெப்பம், ஒளி ,மின்சாரம், அழுத்தம் கொடுத்தல் போன்ற சில காரணிகள்
- சுட்ட சுண்ணாம்புடன் நீரினை சேர்க்கும் பொழுது அதிக அளவு வெப்பம் வெளியேறி எது உருவாகிறது?
தெளிந்த சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்சைடு)
- சூடான பாலில் எதை கலந்தால் பால் திரிந்து தயாராகும்?
எலுமிச்சைசாறு
- வெப்பத்தை வெளியிடும் மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
வெப்ப உமிழ் மாற்றங்கள்
- வெப்பத்தை உறிஞ்சும் மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
வெப்ப ஏற்பு மாற்றங்கள்
- மாற்றம் நிகழும் கால இடைவெளியின் அடிப்படையில் மாற்றங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
இரண்டு: கால ஒழுங்கு மாற்றம் அல்லது கால ஒழுங்கற்ற மாற்றம்
- குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றங்களானது மீண்டும் நிகழ்ந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
கால ஒழுங்கு மாற்றங்கள்
- ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் நிகழாத மாற்றங்களும் சீரற்ற கால இடைவெளியில் நிகழும் மாற்றங்களும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கால ஒழுங்கற்ற மாற்றங்கள்
7TH CHEMISTRY STUDY NOTES |நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services