- உயிரினத்தின் அடிப்படைச் செயல் அலகு என்ன ?
செல்
- ஒரு செல்லில் உள்ள பல நுண் உறுப்புகள் அல்லது செல்லின் பாகங்களை குறிக்க பயன்படும் சொல்?
செல் அமைப்பு
- பருப்பொருள்களின் அடிப்படை கட்டுமான பொருள் எது?
அணுக்கள்
- மனித உடல் என்ன செல்லால் ஆனது ?
விலங்கு செல்
- ஒரே ஒரு செல்லால் மட்டுமேயான உயிரினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஒரு செல் உயிரினங்கள்
- ஒரு செல் உயிரிகள் எடுத்துக்காட்டு எது?
கிளாமிடோமோனஸ், பாக்டீரியா மற்றும் அமீபா போன்ற உயிரினங்கள்
- வெவ்வேறு திசுக்களின் தொகுப்பானது ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல்களை செய்யக் கூடிய அமைப்பாகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உறுப்பு
- குறிப்பிட்ட செயல்களை செய்வதற்காக உருவான செல்களின் குழு எவ்வாறு அழைக்கப்படும்?
திசு
- மனிதர்கள் மற்றும் பிற விலங்குகள் என்ன திசுக்களால் உருவாக்கப்படுகின்றன?
நரம்பு திசு ,எபிதீலியல் திசு, இணைப்பு திசு மற்றும் தசை திசு
- கடத்தும் திசு ,புறத்தோல் திசு ஆகியவை எதில் காணப்படுகிறது?
தாவரங்கள்
- உயிரினங்களின் கட்டமைப்பின் அலகு என்ன?
செல்
- ஒரு செல்லின் உள்ளே பல மிகச் சிறிய அமைப்புகள் உள்ளன அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செல் நுண்ணுறுப்புகள்
- செல்லை பாதுகாக்கவும் அதன் வடிவத்தை நிலைப்படுத்தவும் பயன்படுவது எது?
செல்சுவர்
- ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுவது எது ?
பசுங்கணிகம்
- கரிம ,கனிம வேதி மூலக்கூறுகள் மற்றும் நீர் செல் உறுப்புகளுக்கு ஆதரவு வழங்குவது?
பெரிய குமிழ்கள்(தாவரங்களில்),சிறிய குமிழ்கள்(விலங்குகளில்)
- சென்ட்ரியோல் என்ன வடிவத்தை உடையது?
கோள வடிவம்
- செல் பகுப்பின் போது ஸ்பிண்டில் நார்களை பெருக்கம் அடைய செய்வது எது?
சென்ட்ரியோல்
- பெரிய செல் உறுப்பு எது?
உட்கரு
- செல்லின் கட்டுப்பாட்டு மையம் என அழைக்கப்படுவது ?
உட்கரு
- ஆர் என் ஏ வை பெற்றுள்ள செல் நுண்ணுறுப்புகள்?
ரிபோசோம்
- புரோட்டின் மற்றும் பாலிபெப்டைடுகளை ஒன்றிணைப்பது எது?
ரிபோசோம்
- செல்லின் உட்கருவை தவிர செல்லின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுவது ?
சைட்டோபிளாசம்
- தட்டையான அல்லது குழாய் போன்றவைகளால் உருவாக்கப்பட்ட உட்புற சவ்வாகிய எந்த நுண்ணுறுப்பு ரைபோசோம் உடன் இணைந்து புரத சேர்க்கைக்கு உதவுகிறது ?
எண்டோபிளாச வலை பின்னல்
- செல் சுவாச உறுப்பு எது ?
மைட்டோகாண்ட்ரியா
- மைட்டோகாண்ட்ரியா செல்லுக்கு என்ன மூலக்கூறுகளை வழங்கி சக்தியை தருகிறது?
அடினோசின் ட்ரை பாஸ்பேட்
- எந்த செல் உறுப்பு நொதிகளை சுரந்து செல் இடைவெளிக்கு கடத்துகிறது?
கோல்கி உடலம்
- தட்டையான மற்றும் தூண் வடிவ செல்கள் எவை?
எபிதீலியல் செல்கள்
- உடலின் மேற்பரப்பை மூடிப் பாதுகாக்கும் பணியை செய்யும் செல் எது?
எபிதீலியல் செல்கள்
- நீண்ட மற்றும் கதிர் கோல் வடிவம் உடைய செல் எது?
தசை செல்கள்
- சுருங்கி விரிவடையும் தன்மையால் தசைகளின் இயக்கத்திற்கு உதவும் செல் எது ?
தசை செல்கள்
- செல்லின் உடலம் கிளைத்த நீண்ட நரம்பு நார்களை கொண்ட செல் எது?
நரம்பு செல்கள்
- உடலின் செயல்களை ஒருங்கிணைத்தல் மற்றும் செய்திப் பரிமாற்றம் போன்ற செயல்களை செய்யும் செல் எது ?
நரம்பு செல்கள்
- வட்ட வடிவம் ,இருபுறகுழி மற்றும் தட்டு வடிவமுடைய செல் எது?
ரத்த சிவப்பு செல்கள்
- உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்சிஜனை எடுத்துச் சென்று கார்பன்-டை-ஆக்சைடை சேகரிக்கும் செல்கள் எது?
இரத்த சிவப்பு செல்கள்
- அனைத்து செல்களும் பெற்றுள்ள பொதுவான அமைப்பு என்னென்ன?
செல் சவ்வு ,சைட்டோபிளாசம், உட்கரு
- விலங்கு செல்லின் சுற்றி எல்லையாக இருப்பது எது?
பிளாஸ்மா சவ்வு
- பிளாஸ்மா சவ்வு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செல் சவ்வு
- தாவர செல்லிற்க்கு பாதுகாப்பு மற்றும் உறுதி பாட்டிற்கான சட்டகமாக செயல்படுவது ?
செல்சுவர்
- தாவர செல்லிற்கான வடிவத்தை தருவது எது ?
செல்லுலோஸ்
- எந்தவொரு வகை செல்லுக்குள் செல் பிரிதல் அடைந்து பெருக்கம் அடைந்து வளர்ச்சி அடையும் திறன் உடையது எது?
மூலச் செல்கள்
- உடலில் உள்ள எந்த ஒரு செல்லாகவும் மாறக்கூடிய செல் எது?
மூலசெல்
- சைட்டோசால் மற்றும் செல் நுண்ணுறுப்புகளால் ஆனது எது ?
சைட்டோபிளாசம்
- சைட்டோசால் எத்தனை சதவீதம் நீரால் ஆனது?
70 முதல் 90 சதவீதம்
- சைட்டோசால் என்ன நிறம் உடையது?
நிறமற்றது
- உட்கருவின் உள்ளேயும் வெளியேயும் உள்ள பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
புரோட்டோபிளாசம்
- உட்கருவின் உள்ளே உள்ள திரவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அணுக்கரு திரவம் அல்லது நியூக்ளியோஃப்ளாசம்
- கோள அல்லது குச்சி வடிவிலான இரட்டை சவாலான நுண்ணுறுப்பு எது?
மைட்டோகாண்ட்ரியா
- செல்லின் ஆற்றல் மையம் என அழைக்கப்படுவது எது?
மைட்டோகாண்டிரியா
- தாவர செல்களில் மட்டும் பசுமை நிற நுண்ணுறுப்பாக இருப்பவை எவை?
பசுங்கணிகம்
- கணிகம் எத்தனை வகைப்படும் ?
இரண்டு வகை :வண்ணக்கணிகம் மற்றும் வெளிர் கணிகம்
- சூரிய ஆற்றலில் இருந்து உணவு தயாரிக்கக் கூடிய ஒரே நுண்ணுறுப்பு எது ?
பசுங்கணிகம்
- பசுங்கணிகத்தில் உள்ள நிறமி?
பச்சையம்
- நொதிகளை சுரப்பது, உணவு செரிமானம் அடையச் செய்வது ,உணவிலிருந்து புரதத்தை பிரித்து செல்லுக்கும் உடலுக்கும் வலு சேர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவது எந்த உறுப்பு ?
கோல்கை உறுப்பு
- செல்லின் முதன்மையான செரிமானப் பகுதி எது ?
லைசோசோம்
- லைசோசோம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தற்கொலைப்பைகள்
- சென்ட்ரியோல்கள் பொதுவாக எங்கு காணப்படுகின்றன?
உட்கருவுக்கு அருகில்
- விலங்கு செல்களில் மட்டும் காணப்படும் உறுப்பு எது ?
சென்ட்ரியோல்
- செல் பகுப்பின் போது குரோமோசோம்களை பிரிக்க உதவுவது எது?
சென்ட்ரியோல்
- எண்டோபிளாச வலை பின்னல் எத்தனை வகைப்படுகிறது?
இரண்டு: சொரசொரப்பான எண்டோபிளாச வலை பின்னல் மற்றும் மென்மையான எண்டோபிளாச வலை பின்னல்
- ரைபோசோம்களுடன் இணைந்து இருப்பதால் புரதச் சேர்க்கைக்கு உதவும் வலைப்பின்னல் எது?
சொரசொரப்பான எண்டோபிளாச வலை பின்னல்
- கொழுப்புகள் ஸ்டீராய்டுகள் ஆகியவற்றை தயாரிப்பிலும் கடத்துதலிலும் பங்குகொள்வது எதனுடைய பணி ?
எண்டோபிளாச வலை பின்னல்
- உட்கருவின் உள்ளே உள்ளவை எவை?
ஒன்று அல்லது இரண்டு நியூக்ளியோலஸ் மற்றும் குரோமேட்டின் உடல்
- சொல்லில் நடைபெறும் அனைத்து உயிர் செயல்களையும் வேதிவினைகளையும் கட்டுப்படுத்துவது எது ?
உட்கரு
- உட்கரு இல்லாத ரத்த செல்கள் எது?
சிவப்பு இரத்த செல்
- ஒவ்வொரு நொடியும் எவ்வளவு சிவப்பு செல்கள் இறக்கின்றன?
2 மில்லியன் சிவப்பு செல்கள்
7TH BOTANY STUDY NOTES |செல் உயிரியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services