- “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என கூறியவர் யார்?
பாரதிதாசன்
- பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
சுப்புரத்தினம்
- யாரின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார் ?
பாரதியார்
- பாரதிதாசன் எவ்வாறு போற்றப்படுகிறார்?
புரட்சிக்கவி ,பாவேந்தர்
- “தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்”என பாடியவர்?
கவிஞர் காசி ஆனந்தன்
- “எட்டு திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி” என பாடியவர் யார்?
பெருஞ்சித்திரனார்
- பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
மாணிக்கம்
- பெருஞ்சித்திரனார் என்ன சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்?
பாவலரேறு
- பெருஞ்சித்திரனார் என்ன நூல்களை இயற்றியுள்ளார்?
கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவிய கொத்து, நூறாசிரியம்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் என்னென்ன?
தென்மொழி ,தமிழ்ச்சிட்டு ,தமிழ்நிலம்
- தனித்தமிழையும் தமிழ் உணர்வையும் பரப்பிய பாவலர் யார் ?
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- தமிழ் கும்மி எனும் கவிதை பெருஞ்சித்திரனாரின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?
கனிச்சாறு
- கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது ?
எட்டு தொகுதிகள்
- ” வான் தோன்றி வளி தோன்றி ….தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே நீ தோன்றி வளர்ந்தாய் வாழி” என பாடியவர் யார் ?
வாணிதாசன்
- உலகில் எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன?
6,000
- “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என பாடியவர் ?
பாரதியார்
- “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என பாரதியார் எதனை வியந்து பாடுகிறார்?
தமிழ் மொழியின் இனிமை
- “என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”என பாடியவர் யார் ?
பாரதியார்
- என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”என பாரதியார் எதை வியந்து பாடியுள்ளார்?
பாரதத்தாயின் தொன்மை
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல் எது?
தொல்காப்பியம்
- தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் எந்த சுழி எழுத்துக்களாக உள்ளன?
வலஞ்சுழி
- தமிழ் என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?
தொல்காப்பியம்
- “தமிழன் கிளவியும் அதனோரற்றே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியம்
- தமிழ்நாடு என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?
வஞ்சிக்காண்டம் ,சிலப்பதிகாரம்
- “இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
சிலப்பதிகாரம்
- தமிழன் எனும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?
அப்பர் தேவாரம்
- ஒழுங்கு முறையை குறிக்கும் சொல் எது?
சீர்மை
- திணைகள் எத்தனை வகை?
இரண்டு: உயர்திணை அஃறிணை
- மா என்ற சொல்லின் பொருள் என்ன?
மரம், விலங்கு, பெரிய ,திருமகள், அழகு, அறிவு, அளவு ,அழைத்தல் ,துகள், மேன்மை, வயல், வண்டு
- எண்ணத்தை வெளிப்படுத்தும் தமிழ் எது?
இயல் தமிழ்
- உள்ளத்தை மகிழ்விக்கும் தமிழ் எது?
இசைத்தமிழ்
- உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும் தமிழ் எது?
நாடகத்தமிழ்
- ஆல், அரசு ,மா ,பலா, வாழை ஆகியவற்றின் இலைப் பெயர் என்ன?
இலை
- அகத்தி, பசலை, முருங்கை முதலியவற்றின் தாவர இலை பெயரென்ன?
கீரை
- அருகு ,கோரை முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
புல்
- நெல், வரகு முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
தாள்
- மல்லி முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
தழை
- சப்பாத்தி கள்ளி,தாழை முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
மடல்
- கரும்பு, நாணல் முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
தோகை
- பனை,தென்னை முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
ஓலை
- கமுகு முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
கூந்தல்
- 1 தமிழ் எண்?
௧
- 2 தமிழ் எண்?
௨
- 3 தமிழ் எண்?
௩
- 4 தமிழ் எண்?
௪
- 5 தமிழ் எண்?
௫
- 6 தமிழ் எண்?
௬
- 7 தமிழ் எண்?
௭
- 8 தமிழ் எண்?
௮
- 9 தமிழ் எண்
௯
- வேளாண்மை என்னும் சொல் இடம் பெற்ற நூல் எது?
கலித்தொகை 101 ,திருக்குறள் 81
- உழவர் எனும் சொல் இடம் பெற்ற நூல்?
நற்றிணை 4
- பாம்பு என்னும் சொல் இடம் பெற்ற நூல்?
குறுந்தொகை 239
- வெள்ளம் எனும் சொல் இடம் பெற்ற நூல் ?
பதிற்றுப்பத்து 15
- முதலை எனும் சொல் இடம்பெற்ற நூல்?
குறுந்தொகை 324
- கோடை எனும் சொல் இடம் பெற்ற நூல்?
அகநானூறு 42
- உலகம் எனும் சொல் இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியம் கிளவியாக்கம் 56 ,திருமுருகாற்றுப்படை 1
- மருந்து எனும் சொல் இடம் பெற்ற நூல்?
அகநானூறு 147 திருக்குறள் 952
- ஊர் எனும் சொல் இடம் பெற்ற நூல் ?
தொல்காப்பியம் ,அகத்திணையியல் 41
- அன்பு எனும் சொல் இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியம் களவியல் 110 திருக்குறள் 4
- உயிர் எனும் சொல் இடம் பெற்ற நூல் ?
தொல்காப்பியம் ,கிளவியாக்கம் 56 திருக்குறள் 955
- மகிழ்ச்சி எனும் சொல் இடம்பெற்ற நூல்?
தொல்காப்பியம் கற்பியல் 142 திருக்குறள் 531
- மீன் எனும் சொல் இடம் பெற்ற நூல்?
குறுந்தொகை 54
- புகழ் எனும் சொல் இடம்பெற்ற நூல்?
தொல்காப்பியம் வேற்றுமையியல் 71
- அரசு எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
திருக்குறள் 554
- செய் எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
குறுந்தொகை 72
- செல் எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
தொல்காப்பியம் 75 புறத்திணையியல்
- பார் எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
பெரும்பாணாற்றுப்படை 435
- ஒழி எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
தொல்காப்பியம் கிளவியாக்கம் 48
- முடி எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
தொல்காப்பியம் வினையியல் 206
- ” அன்பு வேண்டும், அறிவு வேண்டும், பண்பு வேண்டும் ,அறிவு வேண்டும்” என பிறந்தநாள் வாழ்த்து பாடியவர் யார்?
கவிஞர் அறிவுமதி
- உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்திக் கூறியுள்ளவர்?
தொல்காப்பியர்
- கடல் நீர் ஆவியாகி மேகமாகி மழையாகப் பொழியும் என்ற செய்தியை எந்த பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன ?
முல்லைப்பாட்டு, பரிபாடல் ,திருக்குறள் ,கார்நாற்பது, திருப்பாவை
- “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி” இப்பாடல் யாரால் இயற்றப்பட்டது?
அவ்வையார்
- வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
பதிற்றுப்பத்து
- சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி எந்த நூலில் காணப்படுகிறது?
நற்றிணை
- “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” இவ்வரிகளை இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியர்
- “கடல் நீர் முகந்த கமஞ்சூல் எழிலி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
கார் நாற்பது
- “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
பதிற்றுப்பத்து
- “கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
நற்றிணை
- தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என எந்த அறிவியல் அறிஞர் கூறினார்?
கலிலியோ
- “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
திருவள்ளுவமாலை
- “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” இவ்வரிகளை இயற்றியவர்?
கபிலர்
- நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும் மழையின் பயனையும் கூறும் நூல் எது?
சிலப்பதிகாரம்
- “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ?
சிலப்பதிகாரம் ஆசிரியர்- இளங்கோவடிகள்
- “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ?
சிலப்பதிகாரம் ஆசிரியர்- இளங்கோவடிகள்
- “மாமழைப் போற்றுதும் மாமழைப் போற்றுதும்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ?
சிலப்பதிகாரம் ஆசிரியர்- இளங்கோவடிகள்
- சிலப்பதிகாரம் காப்பியத்தை இயற்றியவர் யார் ?
இளங்கோவடிகள்
- இளங்கோவடிகள் எந்த மன்னர் மரபைச் சார்ந்தவர்?
சேரமன்னர்
- இளங்கோவடிகளின் காலம் என்ன?
கிபி 2 ஆம் நூற்றாண்டு
- தமிழின் முதல் காப்பியம் எது?
சிலப்பதிகாரம்
- சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
முத்தமிழ் காப்பியம் ,குடிமக்கள் காப்பியம்
- எந்த இரு நூல்கள் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன?
சிலப்பதிகாரம், மணிமேகலை
- “முத்துச்சுடர் போலே நிலாவொளி முன்பு வரவேணும் அங்கு கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும் “இவ்வரிகளை எழுதியவர்?
பாரதியார்
- பாரதியாரின் இயற்பெயர் என்ன ?
சுப்பிரமணியன்
- பாரதியார் யாரால் பாரதி எனும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்?
எட்டயபுர மன்னர்
- பாரதியார் இயற்றிய நூல்கள் என்னென்ன ?
பாஞ்சாலி சபதம் ,கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
- காணி நிலம் எனும் பாரதியாரின் கவிதை எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது ?
பாரதியார் கவிதைகள்
- பறவைகள் இடம்பெயர்தலுக்கு என்ன பெயர் ?
வலசை போதல்
- எந்த காரணத்திற்காக பறவைகள் இடம் பெயர்கின்றன?
உணவு, இருப்பிடம் ,தட்பவெட்பநிலை மாற்றம், இனப்பெருக்கம்
- எதை அடிப்படையாகக் கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன?
நிலவு, விண்மீன் ,புவியீர்ப்பு பலம்
- பொதுவாக பறவைகள் எந்த திசையிலிருந்து வலசை போகின்றன?
வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் ,மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும்
- வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
தலையில் சிறகு வளர்தல், சிறகுகளின் நிறம் மாறுதல், உடலில் கற்றையாக முடி வளர்தல்
- சிறகடிக்காமல் கடலையும் தாண்டி பறக்கும் பறவை எது?
கப்பல் பறவை
- கப்பல் பறவைக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்னென்ன?
கப்பல் கூழைக்கடா ,கடற்கொள்ளை பறவை
- கப்பல் பறவை தரை இறங்காமல் எத்தனை கிலோமீட்டர் வரை பறக்கும்?
400 கிலோமீட்டர்
- “நாராய் நாராய் செங்கால் நாராய்” எனும் பாடலை எழுதியவர் யார்?
சத்திமுத்தப் புலவர்
- “தென்திசைக் குமரியாடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” இவ்வரிகள் என்ன செய்தியை குறிப்பிடுகின்றன?
பறவைகள் வலசை வந்த செய்தி
- செங்கால் நாரைகள் எந்த நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருகின்றன ?
ஐரோப்பா
- ஆண் சிட்டுக்குருவியின் தொண்டை பகுதி என்ன நிறத்தில் இருக்கும்?
கறுப்பு
- சிட்டுக்குருவியின் உடல் என்ன நிறத்தில் இருக்கும்?
பழுப்பு நிறம்
- சிட்டுக்குருவியின் அடைகாக்கும் காலம் எவ்வளவு ?
14 நாட்கள்
- சிட்டுக்குருவியின் வாழ்நாள் எத்தனை ஆண்டுகள்?
10 முதல் 13 ஆண்டுகள்
- காக்கை குருவி எங்கள் ஜாதி என பாடியவர் யார்?
பாரதியார்
- இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
டாக்டர் சலீம் அலி
- டாக்டர் சலீம் அலி எழுதிய தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு என்ன பெயரிட்டுள்ளார்?
சிட்டுக்குருவியின் வீழ்ச்சி
- “மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும் பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது” எனக் கூறியவர்?
பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி
- உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை இனம் எது?
ஆர்டிக் ஆலா (22,000)
- பறவை பற்றிய படிப்புக்கு என்ன பெயர்?
ஆர்னித்தாலஜி
- உலக சிட்டுக்குருவிகள் நாள் எப்போது?
மார்ச் 20
- “The old man and the sea” கிழவனும் கடலும் எனும் ஆங்கில புதினம் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது?
1954
122.”The old man and the sea” கிழவனும் கடலும் எனும் ஆங்கில புதினத்தை எழுதியவர் யார்?
எர்னெஸ்ட் ஹெமிங்வே
- “The old man and the sea” கிழவனும் கடலும் எனும் ஆங்கில புதினத்தின் கதைநாயகன் யார்?
சாண்டியாகோ
- தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?
நெல்லை சு முத்து
- நெல்லை சு.முத்து எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்?
80
- “வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் ” என கூறியவர் யார் ?
மகாகவி பாரதியார்
127.ரோபோ என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் யார்?
காரெல் கபெக்(1920)
- காரெல் கபெக் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
செக் நாடு
- “இவை தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம் ஆனால் மனிதர்களைப் போல செயல்களை நிறைவேற்றும்” என தானியியங்கிகளுக்கு விளக்கம் தந்தது எது?
கலைக்களஞ்சியம்
- எந்த ஆண்டு உலக சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் மீத்திறன் கணினியுடன் சதுரங்கப் போட்டியில் போட்டியிட்டார்?
1997
- ஐபிஎம் எனும் நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் கணினி என்ன?
டீப் புளூ
132.உலகிலேயே முதன் முதலாக ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ள நாடு எது?
சவுதி அரேபியா
- சோபியா ரோபோவுக்கு புதுமைகளின் வெற்றியாளர் எனும் பட்டத்தை எது வழங்கியது?
ஐக்கிய நாடுகள் சபை
- விளக்குகள் பல தந்த ஒளி (lights from many lamps) என்னும் நூலை எழுதியவர் யார்?
லிலியன் வாட்சன்
- போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக செயற்கை கால்களை அப்துல்கலாம் கார்பன் இழையை கொண்டு எவ்வளவு கிராம் எடையில் உருவாக்கினார்?
300 கிராம்
- எப்போது ராமன் விளைவு என்னும் தனது கண்டுபிடிப்பை சர்.சி.வி ராமன் வெளியிட்டார் ?
பிப்ரவரி 28 1928
- இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசு யாரால் பெற்றுத்தரப்பட்டது?
சர்.சி.வி ராமன்
- தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28
6TH TAMIL TERM 01 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services