TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
1. “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
மூதுரை
- மூதுரை நூலின் ஆசிரியர் யார் ?
ஔவையார்
- ஔவையார் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?
ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் ,நல்வழி
- மூதுரை என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?
மூத்தோர் கூறும் அறிவுரை
- மூதுரை எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
31 பாடல்கள்
- “வெற்றி மேல் வெற்றி வர விருது வர பெருமை வர மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேண்டும்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ன சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்?
மக்கள் கவிஞர்
- காமராஜரின் சிறப்பு பெயர்கள் என்னென்ன ?
பெருந்தலைவர் ,கருப்பு காந்தி ,படிக்காத மேதை, ஏழை பங்காளர், கர்ம வீரர், தலைவர்களை உருவாக்குபவர்
- கல்விக்கண் திறந்தவர் என யாரால் காமராசர் பாராட்டப்பட்டார்?
பெரியார்
- எந்த பல்கலைக்கழகத்திற்கு காமராஜர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது?
மதுரை
- காமராஜருக்கு நடுவண் அரசு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியது?
1976
- காமராசருக்கு எங்கு சிலை நிறுவப்பட்டது?
சென்னை மெரினா கடற்கரை
- எந்த உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது ?
சென்னை
- காமராஜருக்கு எங்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது ?
கன்னியாகுமரி(02.10.2000)
- ஆசியா கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?
சீனா
- இந்திய நூலக அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
இரா.அரங்கநாதன்
- சிறந்த நூலகர்ளுக்கு என்ன விருது வழங்கப்படுகிறது?
டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதன் விருது
- “நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
பெருவாயின் முள்ளியார்
- “ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
ஆசாரக்கோவை
- ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார்?
பெருவாயின் முள்ளியார்
- பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?
கயத்தூர்
- ஆசாரக்கோவை என்பதற்கு என்ன பொருள் ?
நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
- ஆசாரக்கோவை எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
நூறு வெண்பாக்கள்
- கதிரவனுக்கு நன்றி கூறி சிறப்பு செய்யும் விழா என்ன?
பொங்கல் விழா
- வாழ்க்கைக்கு வளம் தரும் மழை கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை என்ன விழாவாக கொண்டாடப்பட்டது?
இந்திரவிழா
- எந்த நாளில் திருவள்ளுவர் ஆண்டு தொடங்குகிறது?
தை முதல் நாள்
- எப்போது திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது?
தை இரண்டாம் நாள்
- ஏறுதழுவுதல் வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
மாடு பிடித்தல், ஜல்லிக்கட்டு ,மஞ்சுவிரட்டு
- அறுவடைத் திருநாள் எந்த மாநிலங்களில் மகர சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது?
ஆந்திரா, கர்நாடகா ,மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம்
- அறுவடைத் திருநாள் பஞ்சாப் மாநிலத்தில் என்னவாக கொண்டாடப்படுகிறது?
லோரி
- அறுவடைத் திருநாள் குஜராத் ராஜஸ்தான் மாநிலங்களில் என்னவாக கொண்டாடப்படுகிறது?
உத்தராயன்
- மாமல்லன் என அழைக்கப்பட்ட பல்லவ அரசர் யார் ?
நரசிம்மவர்மன்
- நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவன்?
ஏழாம் நூற்றாண்டு
- சிற்பக்கலை எத்தனை வகைப்படும் ?
நான்கு வகைப்படும்: குடைவரைக் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள் ,புடைப்புச் சிற்பங்கள்
- நான்கு வகையான சிற்பக்கலைகளும் காணப்படும் ஒரே இடம் எது?
மாமல்லபுரம்
- “அஞ்சாமை மிக்கவன் தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவது அஞ்சி அகற்றிடுவான் ” இவ்வரிகளை இயற்றியவர்?
முடியரசன்
- முடியரசனின் இயற்பெயர் என்ன?
துரைராசு
- முடியரசன் என்னென்ன நூல்களை எழுதியுள்ளார் ?
பூங்கொடி, வீரகாவியம் ,காவியப்பாவை, புதியதொரு விதி செய்வோம்
- திராவிட நாட்டின் வானம்பாடி எனப் பாராட்டப்பட்டவர் யார்?
முடியரசன்
- “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” எனக் கூறியவர் யார்?
பாரதியார்
- “கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்” எனக் கூறியவர் யார் ?
பாரதியார்
- நாட்டுப்புற இயல் ஆய்வு எனும் நூலைத் தொகுத்தவர் யார்?
சோ சக்திவேல்
- “தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிற நாட்டு உப்பின் கொள்ளை சுற்றி …உமணர் போகலும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
நற்றிணை
- “பாலொடு வந்து கூழொடு பெயரும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
குறுந்தொகை
- “பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
அகநானூறு
- துறைமுக நகரங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன?
பட்டினம் ,பாக்கம்
- வணிகத்தை எவ்வாறு பிரிக்கலாம் ?
தரை வழி வணிகம் ,நீர் வழி வணிகம்
- வணிகர்கள் வெளியூருக்கு செல்லும் போது குழுவாகவே செல்வார்கள் இந்த குழு எவ்வாறு அழைக்கப்படும்?
வணிகச்சாத்து
- தமிழ்நாட்டிலிருந்து பழங்காலத்தில் என்ன பொருட்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன?
தேக்கு ,மயில்தோகை ,அரிசி, சந்தனம் ,இஞ்சி ,மிளகு
- சீனத்திலிருந்து என்ன பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன?
கண்ணாடி ,கற்பூரம் ,பட்டு
- குதிரைகள் எங்கிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டன?
அரேபியா
- “நடுவு நின்று நன்னெஞ்சினோர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
பட்டினப்பாலை
- “கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
பட்டினப்பாலை
- “பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர்” என்பது யாருடைய அறிவுரை ?
ஔவையார்
6TH TAMIL TERM 02 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services