TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- பண்டைய இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாள சின்னமாக விளங்கும் காலகட்டம் எது ?
கிமு ஆறாம் நூற்றாண்டு
- கிமு ஆறாம் நூற்றாண்டை ‘நட்சத்திரங்களின் மழை’ என வருபவர் யார் ?
வரலாற்றறிஞர் வில் டூராண்ட்
- 24 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்ட சமயம் எது ?
சமணம்
- முதல் தீர்த்தங்கரர் யார் ?
ரிஷபர்
- கடைசி தீர்த்தங்கரர் யார்?
மகாவீரர்
- மகாவீரரின் இயற்பெயர் என்ன ?
வர்த்தமானர்
- மகாவீரர் எங்கு பிறந்தார் ?
வைஷாலிக்கு அருகேயுள்ள குந்தக் கிராமம், பீகார்
- மகாவீரரின் பெற்றோர் யார் ?
சித்தார்த்தர் -திரிசலா
- மகாவீரர் எங்கு இறந்தார்?
பவபுரி-பீகார்
- சமணம் என்னும் சொல் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது?
ஜினா என்ற சமஸ்கிருதச் சொல் (அதன்பொருள் தன்னையும் ,வெளியுலகத்தையும் வெல்வது)
- வர்த்தமானர் என்பதன் பொருள் என்ன?
செழிப்பு
- மகாவீரர் தனது எத்தனையாவது வயதில் துறவறம் மேற்கொண்டார்?
முப்பதாவது வயது
- மகாவீரர் எத்தனை ஆண்டு கால தவத்திற்கு பின்னர் அவர் எல்லையற்ற அறிவை அடைந்தார் ?
பன்னிரண்டரை ஆண்டுகள்
- வர்த்தமானர் கடுமையான தவத்திற்கு பின்னர் பெற்ற எல்லையற்ற அறிவு நிலைக்கு பெயர் என்ன ?
கைவல்ய
- மகாவீரர் கைவல்ய நிலையை அடைந்த பின்னர் அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
ஜினா (jina)
- மகாவீரரை பின்பற்றியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
சமணர்கள் (Jains)
- மகாவீரர் எந்த மரபுகளை மறு ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் புதிய கோட்பாடுகளை உருவாக்கினார்?
பண்டைய சிரமானிய (sramanic) மரபுகள்
- யார் உண்மையிலேயே சமணத்தை உருவாக்கியவர்கள் என நம்பப்படுகிறது?
மகாவீரர்
- அகிம்சை அல்லது அறவழி எந்த சமயத்தின் அடிப்படை தத்துவம் ?
சமணம்
- கர்மாவில் இருந்து விடுதலை பெறுவதற்கும் மோட்ச நிலையை அடைவதற்கும் மகாவீரர் எத்தனை வழிகளை அறிவுறுத்தினார்?
மூன்று வழிகள்: நன்னம்பிக்கை ,நல்லறிவு, நற்செயல்
- பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை பெறுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மோட்சம்
- சமணத்தின் ஐந்து நடத்தை விதிகள் என்னென்ன?
அகிம்சை – எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது , சத்யா-உண்மையை மட்டும் பேசுதல் ,அஸ்தேய-திருடாமை, அபரிகிரகா– பணம் ,பொருள் சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமல் இருப்பது, ,பிரம்மச்சரியா– திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது
- மகாவீரரின் போதனைகளை தொகுத்தவர் யார்?
மகாவீரரின் தலைமை சீடரான கௌதமசுவாமி
- மகாவீரரின் போதனைகள் தொகுக்கப்பட்ட பின் அவற்றின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட்டது ?
ஆகம சித்தாந்தம்
- சமணம் எத்தனை பிரிவுகளாகப் பிரிந்தது?
திகம்பரர்கள்,சுவேதாம்பரர்கள்
- வைதீக பழமைவாத போக்குடைய சீடர்கள் சமணத்தின் எந்த பிரிவை சார்ந்தவர்கள் ?
திகம்பரர்கள்
- எந்தப் பிரிவைச் சேர்ந்த சமணத்துறவிகள் ஆடைகள் அணிவதில்லை?
திகம்பரர்கள்
- பெண்கள் நேரடியாக விடுதலை பெறவோ, நிர்வாண நிலையை அடையவோ முடியாது என எந்த சமணப் பிரிவை சார்ந்தவர்கள் நம்பினர்?
திகம்பரர்கள்
- சமணத்தின் எந்த பிரிவை சார்ந்தவர்கள் முற்போக்கானவர்களாக கருதப்படுகிறார்கள்?
ஸ்வேதாம்பரர்கள்
- சமணத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்த துறவிகள் வெள்ளை நிற ஆடைகளை அணிகின்றனர்?
சுவேதாம்பரர்கள்
- சுவேதாம்பரர்கள் என்ன உடமைகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்?
ரஜோகரனா (கம்பளி நூல்களைக் கொண்ட சிறிய துடைப்பம் ) பிச்சை பாத்திரம், புத்தகம்
- தமிழகத்தில் எங்கு சமணர்மலை என்ற பெயரில் ஒரு குன்று உள்ளது ?
மதுரை நகர் ,கீழக்குயில்குடி கிராமம்
- பாண்டவர் படுக்கை என அழைக்கப்படும் சமணர் குகைகள் எங்கு உள்ளது?
மதுரை அரிட்டாபட்டி என்ற கிராமத்தில் உள்ள கலிஞ்சமலை
- அறவோர் பள்ளி என்பது சமணத்துறவிகள் வாழ்ந்த இடங்கள் என எந்த நூலில் குறிப்பு உள்ளது?
மணிமேகலை
- கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு செல்லும் வழியில் சமணர் பெண் துறவியான கவுந்தியடிகள் அவர்களை ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றதாக எந்த தமிழ் காப்பியம் குறிப்பிடுகிறது?
சிலப்பதிகாரம்
- எந்த இடங்களில் சமண மடாலயங்கள் இருந்துள்ளன ?
புகார் ,உறையூர், மதுரை, வஞ்சி (கருவூர்), காஞ்சிபுரம்
- காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பருத்திக்குன்றம் என்ற கிராமம் முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது?
ஜைனக்காஞ்சி
- பௌத்த மதத்தை நிறுவியவர் யார்?
புத்தர்
- கௌதம புத்தரின் இயற்பெயர் என்ன?
சித்தார்த்தர்
- சித்தார்த்தர் எங்கு பிறந்தார் ?
லும்பினி தோட்டம் நேபாளம்
- சித்தார்த்தரின் பெற்றோர் யார் ?
சுத்தோதன -மாயாதேவி
- சித்தார்த்தர் எங்கு இறந்தார் ?
குசி நகரம், உத்தர பிரதேசம்
- புத்தர் என்பதன் பொருள் என்ன ?
ஞானம் பெற்ற ஒருவர்
- புத்தர் எந்த வயதில் அரண்மனையை விட்டு வெளியேறி துறவறம் பூண்டார் ?
29 வயது
- புத்தர் எத்தனை ஆண்டுகள் தவமிருந்தார் ?
ஆறு ஆண்டுகள்
- புத்தர் எங்கு ஞானம் பெற்றார்?
கயாவுக்கு அருகே ஒரு அரசமரத்தடியில்
- புத்தர் எத்தனை நாள் தியானத்தில் இருந்தபோது ஞானம் பெற்றார்?
49ம் நாள்
- புத்தர் சாக்கிய அரச குடும்பத்தைச் சேர்ந்த துறவி என்பதால் அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?
சாக்கியமுனி
- புத்தர் தனது முதல் போதனைச் சொற்பொழிவை எங்கு நிகழ்த்தினார் ?
வாரணாசி அருகே உள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள மான் பூங்கா
- புத்தரின் முதல் போதனை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தர்மசக்ர பரிவர்த்தனா அல்லது தர்ம சக்கரத்தை நகர்த்துதல்
- புத்தரின் நான்கு பேருண்மைகள் என்னென்ன ?
வாழ்க்கை துன்பங்கள் துயரங்கள் நிறைந்தது ,ஆசையே துன்பங்களுக்குக் காரணம் ,ஆசையை துறந்து விட்டால் துன்ப துயரங்களை போக்கிவிடலாம், சரியான பாதையை பின்பற்றினால் ஆசைகளை வென்றுவிடலாம்
- புத்தரின் எண்வகை வழிகள் என்னென்ன?
நல்ல நம்பிக்கை ,நல்ல எண்ணம், நல்ல பேச்சு ,நல்ல செயல், நல்ல வாழ்க்கை ,நல்ல முயற்சி, நல்ல அறிவு, நல்ல தியானம்
- புத்தரின் போதனைகள் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றது?
தம்மா
- புத்தரின் சங்கத்தில் உறுப்பினராக இருந்த துறவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
பிட்சுக்கள்
- ஒரு பௌத்த கோவில் அல்லது தியான கூடம் எவ்வாறு அழைக்கப்படும்?
சைத்தியம்
- மடாலயங்கள் /துறவிகள் வாழும் இடங்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
விகாரைகள்
- புத்தருடைய உடலுறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஸ்தூபி
- பௌத்தம் எத்தனை பிரிவுகளாக பிரிந்தது?
இரண்டு: ஹீனயானம் ,மகாயானம்
- புத்தரின் சிலைகளையோ ,உருவப் படங்களையோ வணங்காதப் பிரிவு எந்த பிரிவு ?
ஹீனயானம்
- புத்தரின் உருவங்களை வணங்கும் பிரிவு எது ?
மகாயானம்
- பௌத்தத்தில் பிராகிருத மொழியைப் பயன்படுத்திய பிரிவு எது?
ஹீனயானம்
- மகாயானம் என்ன மொழியை பயன்படுத்தியது?
சமஸ்கிருதம்
- ஹீனயானம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தேரவாதம்
- பௌத்தத்திற்கு ஆதரவு தந்த அரசர்கள் யார் ?
அசோகர் ,கனிஷ்கர் ,ஹர்ஷர்
- பௌத்த விகாரைகள் அல்லது மடாலயங்கள் என்ன மையங்களாக செயல்பட்டன?
கல்வி மையங்கள்
- யுவான்சுவாங் பல ஆண்டுகள் எந்தப் பல்கலைக்கழகத்தில் தங்கி கல்வி பயின்றார்?
நாளந்தா
- அஜந்தா குகைகள் எங்கு உள்ளது?
மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்
- முதலாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் எது ?
ராஜகிருகம்
- இரண்டாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் எது?
வைசாலி
- மூன்றாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் எது ?
பாடலிபுத்திரம்
- நான்காவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் எது?
காஷ்மீர்
- மணிமேகலை எந்த இலக்கிய நூல்?
பௌத்த இலக்கியம்
- மணிமேகலையில் எந்த இடம் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது?
காஞ்சிபுரம்
- பௌத்த தர்க்கவியல் அறிஞரான தின்னகர் மற்றும் நாளந்தா பல்கலைக்கழகத்தின் மிகப்பெரும் அறிஞரான தர்மபாலர் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்?
காஞ்சிபுரம்
- எந்த நூற்றாண்டில் யுவான்சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார் ?
கிபி ஏழாம் நூற்றாண்டில்
- காஞ்சிபுரத்தில் யாரால் கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள ஸ்தூபியை பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்?
அசோகர்
6TH STD HISTORY STUDY NOTES |மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services