6TH STD HISTORY STUDY NOTES | பண்டைக் காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் :சங்க காலம்


  1. சங்கம் எனும் சொல் எதனைக் குறிக்கிறது?

மதுரை பாண்டிய அரசர்களின் காலத்தில் தமிழ் புலவர்களின் குழுமம்

  1. பனை ஓலைகளில் எழுதப்பட்டிருந்த தமிழ் செவ்வியல் இலக்கியங்களை பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டு பதிப்பித்து வெளியிட்டவர்கள் யார்?

 ஆறுமுக நாவலர்(யாழ்ப்பாணம்), தாமோதரம் பிள்ளை(யாழ்ப்பாணம்), உ வே சாமிநாத ஐயர் போன்றவர்கள்

  • ஹத்திக்கும்பா கல்வெட்டு யாருடையது ?

 கலிங்க நாட்டு அரசன் காரவேலன்

  1. சங்க காலம் என அழைக்கப்படும் கால அளவு என்ன?

 கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரை

  1. சங்ககாலம் எந்த காலகட்டத்தை சார்ந்தது?

இரும்புக் காலம்

  1. சங்க காலம் என்பது எந்த பண்பாட்டு காலத்தைச் சார்ந்தது?

பெருங்கற்காலப் பண்பாடு

  1. தமிழ் மொழியானது இலத்தீன் மொழியின் அளவிற்கு பழமையானது எனும் கருத்தை கொண்டுள்ளவர் யார்?

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தமிழ் மொழி பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்

  1. எந்த சேர அரசன் கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார்?

 சேரன் செங்குட்டுவன்

  1. எந்த அரசர் பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தார்?

சேரன் செங்குட்டுவன்

  1. சேர பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த 11 வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையை தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்கடித்த சோழ மன்னர் யார் ?

கரிகால சோழன்

  1. கரிகால சோழனால் காவிரியின் குறுக்கே கற்களால் கட்டப்பட்ட அணை எது?

கல்லணை

  1. எந்த பாண்டிய அரசர் தலையாலங்கானம் எனுமிடத்தில் சேரர், சோழர் 5 வேளிர் குலத் தலைவர்கள் ஆகியோரின் கூட்டுப் படையை தோற்கடித்தார் ?

நெடுஞ்செழியன்

  1. எந்த நூல் சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்றது?

 பதிற்றுப்பத்து

  1. எந்தப் பதினெண்கீழ்க்கணக்கு நூல் கரிகாலனின் ஆட்சியின் போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றி விரிவான செய்திகளை வழங்குகின்றது ?

 பட்டினப்பாலை

  1. கொற்கையின் தலைவன் என போற்றப்படுபவர் யார் ?

நெடுஞ்செழியன்

  1. பாண்டிய அரசர்களின் நாணயங்களில் என்ன உருவம் பொறிக்கப்பட்டிருந்தது?

ஒருபுறம் யானையின் வடிவம் மற்றொருபுறம் மீனின் உருவம்

  1. எந்த பாண்டிய அரசர் பல வேத வேள்விகளை நடத்தியதை கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்டார் ?

முதுகுடுமிப் பெருவழுதி

  1. சேர அரசர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள் என்னென்ன?

ஆதவன் ,குட்டுவன் ,வானவன் இரும்பொறை

  1. சோழ அரசர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள் என்னென்ன?

சென்னி ,செம்பியன் ,கிள்ளி, வளவன்

  1. பாண்டிய அரசர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள் என்னென்ன?

மாறன்,வழுதி ,செழியன், தென்னர்

  1. அரசு அதிகாரத்தின் சின்னங்களாக கருதப்பட்டவை எவை?

செங்கோல் ,முரசு ,வெண்கொற்றக்குடை ஆகியவை

  1. சேரர்கள் என்ன மாலையை அணிந்தனர்?

 பனம்பூமாலை

  1. சேரர்களின் துறைமுகம் எது ?
SEE ALSO  TNPSC APTITUDE PYQ TEST 04

முசிறி அல்லது தொண்டி

  1. சேரர்களின் தலைநகரம் எது ?

கரூர்/வஞ்சி

  1. சேரர்களின் சின்னம்?

 வில் அம்பு

  1. சோழர்கள் என்ன மாலையை அணிந்தனர் ?

அத்திப் பூ மாலை

  1. சோழர்களின் துறைமுக நகரம் ?

புகார்

  1. சோழர்களின் தலைநகர் ?

உறையூர் அல்லது புகார்

  1. சோழர்களின் சின்னம்?

புலி

  1. பாண்டியர்கள் என்ன மாலையை அணிந்தனர் ?

 வேப்பம்பூ மாலை

  1. பாண்டியர்களின் துறைமுக நகரம்?

 கொற்கை

  1. பாண்டியர்களின் தலைநகரம் ?

மதுரை

  1. பாண்டியர்களின் சின்னம் ?

இரண்டு மீன்கள்

  1. ஆய் என்னும் பெயர் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது?

பழந்தமிழ் சொல்லான ஆயர் (பொருள்- ஆநிரை மேய்ப்போர்)

  1. சங்க காலத்து ஆய் மன்னர்களில் முக்கியமானவர்களின் பெயர்கள் என்னென்ன?

 அந்திரன், திதியன் ,நன்னன்

  1. கடை ஏழு வள்ளல்கள் என அழைக்கப்படுபவர்கள் யார் ?

பாரி, காரி, ஓரி, பேகன், ஆய் ,அதியமான், நள்ளி

  1. கிழார் என்பவர் யார்?

கிராமத்தலைவர்

  1. அரசர் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டார்?

‘கோன்’ எனும் சொல்லின் சுருக்கமான கோ,வேந்தன்,மன்னன், கொற்றவன், இறைவன்

  1. அரசருக்கு பட்டம் சூட்டப்படும் விழா எவ்வாறு அழைக்கப்பட்டது ?

முடிசூட்டுவிழா அல்லது அரசு கட்டிலேறுதல்

  1. இளவரசர் எவ்வாறு அழைக்கப்படுவார் ?

கோமகன்

  1. இளவரசருக்கு இளையோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

இளங்கோ ,இளஞ்செழியன் ,இளஞ்சேரல்

  1. நிலவரி மூலம் பெறப்பட்ட வரிகள் /வருமானம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

 இறை

  1. அரசருடைய சபை எவ்வாறு அழைக்கப்பட்டது?

 அரசவை

  1. அரசர்களின் ஐந்து வித கடமைகளை  என்னென்ன?

கல்வி கற்பதை ஊக்குவிப்பது ,சடங்குகளை நடத்துவது, பரிசுகள் வழங்குவது, மக்களை பாதுகாப்பது, குற்றவாளிகளைத் தண்டிப்பது

  1. அரசர்களுக்கு உதவிசெய்யும் குழுக்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன?

ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம்

  1. அரசருடைய படை எத்தனை பிரிவுகளைக் கொண்டிருந்தது ?

காலாட்படை ,குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை

  1. படைத் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

 தானைத் தலைவன்

  1. சற்று தொலைவிலிருந்து எதிரியின் மீது ஏவுகணையை போன்று வீசப்படுவதற்கு பெயரென்ன?

தோமாரம்(எறியீட்டி)

  1. ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது ?

படைக் கொட்டில்

  1. தலைநகரில் நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

அவை

  1. கிராமங்களில் தீர்ப்பு வழங்கப்படும் இடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

 மன்றங்கள்

  1. ஒட்டுமொத்த ஆட்சிப் பகுதியும் எவ்வாறு அழைக்கப்பட்டது ?

மண்டலம்

  1. நாடு எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது?

 மண்டலம் ,நாடு, கூற்றம், ஊர்,பேரூர்,சிற்றூர்,மூதூர்

  1. கடற்கரையோர நகரங்களுக்கு என்ன பெயர்?

 பட்டினம்

  1. துறைமுகங்களை குறிக்கும் பொதுவான சொல் எது?

 புகார்

  1. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டு இருந்தது?

ஐந்து திணைகள்

  1. மருத நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

மென்புலம் (நன்செய்)

  1. நெய்தல்திணை தவிர மற்றவை எவ்வாறு அழைக்கப்பட்டன ?

 வன்புலம் (புன்செய்)

  1. மலையும் மலை சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும் ?

குறிஞ்சித்திணை

  1. குறிஞ்சி திணையின் தொழிலென்ன?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | நவீனத்தை நோக்கி | TNPSC GROUP EXAMS

வேட்டையாடுதல் /சேகரித்தல்

  1. குறிஞ்சித் திணையின் மக்கள் யார் ?

குறவர் குறத்தியர்

  1. குறிஞ்சித் திணையின் கடவுள் யார்?

 முருகன்

  1. காடும் காடு சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும் ?

முல்லை திணை

  1. முல்லைத் திணையின் தொழில் என்ன?

ஆநிரை மேய்த்தல்

  1. முல்லைத் திணையின் மக்கள் யார்?

ஆயர் ஆய்ச்சியர்

  1. முல்லைத்திணையின் கடவுள் யார் ?

மாயோன்

  1. வயலும் வயல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும் ?

மருதத்திணை

  1. மருதத் திணையின் தொழில் என்ன ?

வேளாண்மை

  1. மருதத் திணையின் மக்கள் யார் ?

உழவன் உழத்தியர்

  1. மருதத் திணையின் கடவுள் யார் ?

 இந்திரன்

  1. கடலும் கடல் சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படும் ?

நெய்தல் திணை

  1. நெய்தல் திணையின் தொழில் என்ன?

 மீன்பிடித்தல் /உப்பு உற்பத்தி

  1. நெய்தல் திணையின் மக்கள் யார் ?

 பரதவர்

  1. நெய்தல் திணையின் கடவுள் யார்?

 வருணன்

  1. வறண்ட நிலம் எவ்வாறு அழைக்கப்படும்?

பாலை திணை

  1. பாலைத் திணையின் தொழில் என்ன?

வீரச்செயல்கள்

  1. பாலைத் திணையின் மக்கள் யார்?

 மறவர் மறத்தியர்

  1. பாலைத் திணையின் கடவுள் யார் ?

கொற்றவை

  1. சங்க காலத்தில் எத்தனை பெண் புலவர்கள் வாழ்ந்து அரிய நூல்களைக் கொடுத்து சென்றுள்ளனர்?

 40 பெண்புலவர்கள்

  1. சங்ககால பெண்பாற் புலவர்கள் யார்?

அவ்வையார் ,வெள்ளிவீதியார் ,காக்கைபாடினியார் ,ஆதிமந்தியார் ,பொன்முடியார்

  1. சங்ககால மக்களின் முதன்மை கடவுள் யார்?

 சேயோன் அல்லது முருகன்

  1. சங்ககாலத்தில் வழிபடப்பட்ட ஏனைய கடவுளர்கள் யார்?

சிவன் ,மாயோன்(விஷ்ணு), இந்திரன், வருணன் ,கொற்றவை

  1. போரில் மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றுவதற்காக நடப்படும் கல் எவ்வாறு அழைக்கப்பட்டது?

வீரக்கல் அல்லது நடுகல்

  1. சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பாம்பின் தோலை காட்டிலும் மென்மையான துணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 கலிங்கம்

  1. எந்த அரசன் இசையின் ஏழு சுரங்கள் குறித்து பெரும் புலமை பெற்றிருந்தான் (ஏழிசை வல்லான்) என அறியப்படுகிறார்?

 கரிகாலன்

  1. பாடல்கள் பாடும் புலவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?

பாணர் ,விறலியர்

  1. சங்ககாலத்தில் முக்கியமான நகரங்களில் எத்தனை வகையான சந்தைகள் இருந்தன?

இரண்டு: காலை நேர சந்தையான நாளங்காடி, மாலை நேர சந்தையான அல்லங்காடி

  1. எகிப்து அரசன் இரண்டாம் ராம்செஸின் பதப்படுத்தப்பட்ட உடல் திறக்கப்பட்டபோது தொல்லியல் அறிஞர்கள் அவருடைய நாசியின் உள்ளும் அடிவயிற்றிலும் எது அடைக்கப்பட்டிருந்தை கண்டனர்?

கருமிளகுக்கதிர்

  1. எந்த ரோமப் பேரரசர் இந்திய வணிகர்களால் ஏற்றுமதி செய்யப்பட்ட பட்டு எடைக்கு எடை தங்கம் கொடுத்து பெற தகுதியானது என அறிவித்தார்?

ஆரிலியன்

  1. மூத்த பிளினி எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?

 ரோம்நாடு

  1. முசிறியை ” இந்தியாவின் முதல் பேரங்காடி” என குறிப்பிட்டுள்ளவர் யார்?
SEE ALSO  6TH GEOGRAPHY STUDY NOTES |வளங்கள்| TNPSC GROUP EXAMS

இயற்கை வரலாறு எனும் நூலில் மூத்த பிளினி

  1. ரோமானியரின் குடியிருப்பு இருந்த முசிறியில் எந்த கடவுளுக்காக கோவில் கட்டப்பட்டுள்ளது?

அகஸ்டஸ்

  1. பாப்பிரஸ் இலையில் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தமானது அலெக்சாண்ட்ரியாவினைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கு முசிறியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது இது எந்த காலத்தைச் சார்ந்தது ?

கிமு இரண்டாம் நூற்றாண்டு


6TH STD HISTORY STUDY NOTES | பண்டைக் காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் :சங்க காலம்

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

Leave a Comment

error: