6TH POLITY STUDY NOTES |தேசிய சின்னங்கள்| TNPSC GROUP EXAMS


  1. மயில் குளிருக்கு நடுங்குகிறது எனக்கருதி தன் போர்வையை கொடையாக அளித்த வள்ளல் யார்?

 பேகன்

  1. தமிழ்நாட்டில் எங்கு மயில்களுக்கான சரணாலயம் உள்ளது?

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை

  1. “கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்” என பாடியவர் யார்?

பாரதியார்

  1. இந்தியாவின் மிக நீளமான நதி எது?

 கங்கை

  1. கங்கை நதியின் நீளம் என்ன?

2525 கிலோமீட்டர்

  1. பிரம்மபுத்திரா நதி எவ்வளவு கிலோமீட்டர் நீளமுடையது?

3848 கிலோமீட்டர்

  1. முகலாயர் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழம் எது ?

இமாம்பசந்த்

  1. உலக சாதனை படைத்த ஆலமரம் இந்தியாவில் எங்கு உள்ளது?

 இந்திய தாவரவியல் பூங்கா ,கொல்கத்தாவின் ,அவுரா பகுதி

  1. உலகிலேயே கூடு கட்டி அதில் முட்டையை வைத்து இனப்பெருக்கம் செய்யும் பாம்பு வகை எது?

 கருநாகம் (King cobra)

  1. கருநாகம் எத்தனை அடி நீளம் வளரும்?

18 அடி

  1. நஞ்சு கொண்ட பாம்புகளில் உலகிலேயே மிக நீளமானது எது?

கருநாகம்

  1. தாமரை எந்த ஆண்டு இந்தியாவின் தேசிய மலராக ஏற்றுக் கொள்ளப்பட்டது?

 1950

  1. ஆலமரம் எந்த ஆண்டு இந்தியாவின்  தேசிய மரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது?

1950

  1. புலி எந்த ஆண்டு இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது?

 1973

  1. உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கையில் இந்தியா எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?

 70%

  1. மயில் எந்த ஆண்டு தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது ?

 1963

  1. மயில் எந்த நாட்டை தாயகமாக கொண்டது?

 இந்தியா

  1. யானை எந்த ஆண்டு இயற்கை சின்னமாக இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது?

2010

  1. யானை எந்த நாட்டை தாயகமாக கொண்டது?

ஆசியா

  1. கங்கை எந்த ஆண்டு இயற்கை சின்னமாக இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது ?

2008

  1. லாக்டோ பேசில்லஸ் என்றால் தோழமை பாக்டீரியா இந்த ஆண்டு இயற்கை சின்னமாக இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது?

2012

  1. ஓங்கில்கள் எந்த ஆண்டு இயற்கை சின்னமாக இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது ?

 2010

  1. மாம்பழம் எந்த ஆண்டு தேசிய கனியாக அறிவிக்கப்பட்டது?

1950

  1. மாம்பழம் எந்த வைட்டமின்களை அதிகளவில் கொண்டுள்ளது ?

வைட்டமின் ஏ, சி ,டி

  1. ராஜநாகத்தின் அறிவியல் பெயர் என்ன?

ஹோஃபிபாகஸ் ஹானா

  1. தமிழகத்தின் மாநில விலங்கு எது?

 வரையாடு

  1. தமிழகத்தின் மாநிலப் பறவை எது?

மரகதப்புறா

  1. தமிழகத்தின் மாநில மலர் எது?

 செங்காந்தள் மலர்

  1. தமிழகத்தின் மாநில மரம் எது?

 பனை மரம்

  1. தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள வண்ணங்கள் என்ன?

காவி நிறம், பச்சை நிறம் &வெண்மை நிறம்

  1. தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள காவி நிறம் எதனை குறிக்கிறது?
SEE ALSO  6TH POLITY STUDY NOTES |மக்களாட்சி| TNPSC GROUP EXAMS

தைரியம் மற்றும் தியாகம்

  1. தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள பச்சை நிறம் எதனை குறிக்கிறது?

செழுமை வளம்

  1. தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள வெண்மை நிறம் எதனை குறிக்கிறது?

நேர்மை, அமைதி மற்றும் தூய்மை

  1. தேசிய கொடியின் நடுவில் அமைந்துள்ள கருநீல் அசோக சக்கரம் எதனை வலியுறுத்துகிறது ?

அறவழி,அமைதி

  1. தேசியக் கொடியின் நீள அகலம் என்ன விதத்தில் அமைந்துள்ளது ?

 3:2

  1. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தது யார்?

 ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கையா

  1. விடுதலை இந்தியாவின் முதல் தேசியக்கொடி எங்கு நெய்யப்பட்டது?

தமிழ்நாட்டில் உள்ள குடியாத்தம் (வேலூர் மாவட்டம்)

  1. தமிழ்நாட்டில் நெய்யப்பட்ட கொடியை 15.8.1947 அன்று செங்கோட்டையில் கொடியேற்றியவர் யார்?

 பண்டித ஜவகர்லால் நேரு

  1. சுதந்திரத்தின் போது ஏற்றப்பட்ட முதல் தேசியக்கொடி தற்போது எங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது ?

சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம்

  1. தேசியக் கொடியின் நடுவில் உள்ள சக்கரம் எத்தனை ஆரங்களை கொண்டுள்ளது?

24

  1. திருப்பூர் குமரன் எங்கு பிறந்தார் ?

ஈரோடு மாவட்டம் ,சென்னிமலை

  1. திருப்பூர் குமரன் எந்த போராட்டத்தின்போது இறந்தார் ?

1932, காந்தியடிகளைக் கைது செய்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில்

  1. கொடிகாத்த குமரன் என அழைக்கப்படுபவர் யார் ?

திருப்பூர் குமரன்

  1. சாரநாத் அசோக தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முக சிங்கம் இந்தியாவின் தேசிய இலச்சினையாக எந்த ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது ?

 ஜனவரி 26 ,1950

  1. தேசிய இலச்சினையின் அடிப்பகுதியில் என்ன பொறிக்கப்பட்டுள்ளது?

சத்யமேவ ஜயதே

  1. சத்யமேவ ஜெயதே என்பதன் பொருள் என்ன?

வாய்மையே வெல்லும்

  1. தேசிய இலச்சினையின் அடிப்பகுதியில் என்ன விலங்கின் உருவங்கள் அமைந்துள்ளன ?

யானை, குதிரை ,காளை ,சிங்கம்

  1. அசோகர் காலத்தில் சாரநாத் தூணின் உச்சியில் அமைந்திருந்த நான்முக சிங்கம் தற்போது எந்த அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்படுகிறது?

 சாரநாத் அருங்காட்சியகம்

  1. இந்தியாவின் தேசியகீதம் எதற்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது?

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு

  1. இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியவர் யார் ?

ரவீந்திரநாத் தாகூர்

  1. இந்தியாவின் தேசிய கீதம் எந்த மொழியில் எழுதப்பட்டது?

வங்காளம்

  1. இந்தியாவின் தேசிய கீதத்தின் இந்தி மொழியாக்கம் எந்த ஆண்டு இந்திய அரசால் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ?

 ஜனவரி 24,1950

  1. இந்திய தேசிய கீதம் எந்த காங்கிரஸ் மாநாட்டின் போது முதன் முதலாக பாடப்பட்டது ?

டிசம்பர் 27 ,1911 கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு

  1. இந்திய தேசிய கீதத்தை எத்தனை வினாடிகளில் பாடவேண்டும்?

 52 வினாடிகள்

  1. இந்தியாவின் தேசிய பாடல் எது ?

வந்தேமாதரம்

  1. இந்தியாவின் தேசிய பாடலை எழுதியவர் யார்?
SEE ALSO  10TH ECONOMICS STUDY NOTES |உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்| TNPSC GROUP EXAMS

வங்க எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜி

  1. இந்தியாவின் தேசிய பாடல் எந்த நாவலிலிருந்து எடுக்கப்பட்டது ?

ஆனந்தமடம்

  1. இந்தியாவின் தேசிய உறுதிமொழியை எழுதியவர் யார் ?

பிதிமாரி வெங்கடசுப்பாராவ்

  1. இந்தியாவின் தேசிய உறுதிமொழி எந்த மொழியில் எழுதப்பட்டது ?

தெலுங்கு

  1. இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக 2012 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது எது?

லாக்டோபேசில்லஸ் டெல்புரூக்கி

  1. இந்தியாவின் அதிகாரப்பூர்வ பணத்தின் பெயர் என்ன?

ரூபாய் (₹)

  1. 16ஆம் நூற்றாண்டில் எந்த மன்னர் வெளியிட்ட வெள்ளி நாணயத்துக்கு ரூபியா என்று பெயர்?

ஷெர்ஷா சூரி

  1. இந்திய ரூபாய்க்கான சின்னத்தை ₹ வடிவமைத்தவர் யார்?

தமிழகத்தைச் சேர்ந்த டி உதயகுமார் 2010ஆம் ஆண்டு

  1. சக ஆண்டு முறை எப்போது யாருடைய காலத்தில் தொடங்கியது?

கிபி 78 ,பேரரசர் கனிஷ்கர் காலம்

  1. சக ஆண்டு எதனை முதல் நாளாகக் கொ ண்டு தொடங்குகிறது?

இளவேனிற்கால சம பகலிரவு நாளான மார்ச் 22

  1. யாருடைய தலைமையிலான நாட்காட்டி சீரமைப்பு குழுவின் பரிந்துரையின் பேரில் தேசிய நாட்காட்டியாக சக ஆண்டு முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது?

வானியலாளர் மேக்நாத் சாகா

  1. எப்போது சக ஆண்டு முறையை தேசிய நாட்காட்டியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது?

மார்ச் 22 1957

  1. இந்தியாவின் சுதந்திர தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?

 ஆகஸ்ட் 15

  1. நாடு விடுதலை பெற்ற நாளன்று மகாகவி பாரதியாரின் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே” என்ற பாடலை அகில இந்திய வானொலியில் பாடிய பெருமையை பெற்றவர் யார்?

கர்நாடக இசை பாடகி பி கே பட்டம்மாள் 

  1. இந்தியா எப்போது தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது ?

ஜனவரி 26, 1950

  1. இந்திய நாட்டின் முதல் குடிமகன் யார்?

குடியரசுத் தலைவர்

  1. சுதந்திர தினத்தின்போது டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுபவர் யார்?

பிரதமர்

  1. குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் கொடி ஏற்றுபவர் யார்?

குடியரசுத் தலைவர்

  1. எப்போது பாசறைக்கு திரும்புதல் என்ற விழா நடைபெறும்?

இந்திய குடியரசு நாளின் மூன்றாவது நாளான ஜனவரி 29

  1. பாசறைக்கு திரும்புதல் நிகழ்வின் முதன்மை விருந்தினர் யார்?

 குடியரசுத் தலைவர்

  1. காந்தி ஜெயந்தி எப்போது கொண்டாடப்படுகிறது?

அக்டோபர் 2

  1. காந்தி பிறந்த நாளை சர்வதேச அகிம்சை நாளாக எந்த ஆண்டு ஐநா சபை அங்கீகரித்து கொண்டாடி வருகிறது?

2007


6TH POLITY STUDY NOTES |தேசிய சின்னங்கள்| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

SEE ALSO  6TH POLITY STUDY NOTES |இந்திய அரசமைப்பு சட்டம்| TNPSC GROUP EXAMS

 

Leave a Comment

error: