- என்ன முறையில் குடிப்பதற்கான நீரில் உள்ள மாசுக்கள் நீக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது?
எதிர் சவ்வூடு பரவல்
- பூமியானது மேற்கிலிருந்து கிழக்காக சுற்ற வேண்டும் என அனுமானித்த இந்தியாவின் பழங்கால வானியலாளர் யார்?
ஆரியபட்டா
- பொருளினை தொடுவதன் மூலம் செயல்படும் விசையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தொடுவிசை
- பொருளினை தொடாமல் செயல்படும் விசையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தொடாவிசை
- ஒரு பொருளின் இயக்க நிலையையோ அல்லது ஓய்வு நிலையையோ மாற்றவல்லதும், பொருளின் வேகத்தினை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்ய வல்லதும் இயக்கத்தினை நிறுத்தவும் திசையை மாற்றவும் மற்றும் பொருளின் வடிவத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்ய இயலும் காரணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விசை
- இயக்கம் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
நான்குவகை
- இயக்கங்களின் வகைகள் என்னென்ன ?
சுழற்சி இயக்கம் ,வட்ட பாதை இயக்கம், நேர்கோட்டு இயக்கம், அலைவு இயக்கம்
- ஒரு பொருளானது நேர்கோட்டுப் பாதையில் இயங்குவதற்கு பெயர் என்ன?
நேர்கோட்டு இயக்கம்
- பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும் இயக்கம்?
வளைவு பாதை இயக்கம்
- ஒரு பொருளானது வட்டப்பாதையில் இயங்கும் இயக்கத்தின் பெயர் என்ன?
வட்டப்பாதை இயக்கம்
- ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்கும் இயக்கம் எது?
தற்சுழற்சி இயக்கம்
- ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவும் மாறிமாறி நகர்தல் என்ன இயக்கம் ?
அலைவு இயக்கம்
- ஒரு ஈயின் இயக்கம் அல்லது மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஒழுங்கற்ற இயக்கம்
- ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கால ஒழுங்கு இயக்கம்
- அலைவு இயக்கம் அனைத்துமே என்ன இயக்கமாக அமையும்?
கால ஒழுங்கு இயக்கம்
- சராசரி வேகத்தை கணக்கிட பயன்படும் சமன்பாடு என்ன?
கடந்ததொலைவு (d)/எடுத்துக்கொண்ட காலம்(t)
- உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை எத்தனை வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார்?
9.58 வினாடிகள்
- தரையில் வாழும் விலங்குகளில் எது மிக வேகமான விலங்கு ?
சிறுத்தை
- சிறுத்தை னயானது சராசரியாக எவ்வளவு வேகத்தில் ஓடும் ?
112 கிலோமீட்டர் / மணி
- குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும் பொருளின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சீரான இயக்கம்
- ரோபோட் என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து உருவாக்கப்பட்டது?
ரோபாட்டா என்ற செக்கோஸ்லோவியா வார்த்தை
- ரோபாட்டா என்ற செக்கோஸ்லோவியா வார்த்தையின் பொருள் என்ன ?
உத்தரவுக்கு படிந்த ஊழியர்
- ரோபாட்டுகளைப் பற்றி அறியும் அறிவியல் பிரிவு என்ன?
ரோபாட்டிக்ஸ்
6TH PHYSICS STUDY NOTES |விசையும் இயக்கமும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services