- எந்த இயற்கை வளத்தில் இருந்து சிலிக்கான் என்ற தனிமம் பிரித்தெடுக்கப்படுகிறது ?
மணல்
- உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள்
- மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்த ஒரு பொருளும் எவ்வாறு அழைக்கப்படும்?
வளம்
- ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான காரணிகள் என்னென்ன?
காலமும் தொழில்நுட்பமும்
- வளங்கள் எத்தனை வகைப்படும்?
மூன்று: இயற்கை வளங்கள் ,மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் மற்றும் மனித வளங்கள்
- இயற்கையில் இருந்து நேரடியாக பெறப்படும் அனைத்து வளங்களும் எவ்வாறு அழைக்கப்படும் ?
இயற்கை வளங்கள்
- இயற்கை வளங்கள் தோற்றத்தின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?
உயிரியல் வளங்கள்(biotic resources) மற்றும் உயிரற்ற வளங்கள்(abiotic resources)
- தோற்றத்தின் அடிப்படையில் உயிருள்ள அனைத்து வளங்களும் எவ்வாறு அழைக்கப்படும்?
உயிரியல் வளங்கள்
- உயிர் இல்லாத அனைத்து வளங்களும் எவ்வாறு அழைக்கப்படும் ?
உயிரற்ற வளங்கள்
- வளர்ச்சி நிலையின் அடிப்படையில் வளங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
கண்டறியப்பட்ட வளங்கள்(actual resources) மற்றும் மறைந்திருக்கும் வளங்கள்(potential resources)
- தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கும் வளங்கள் எவ்வாறு அறியப்படுகிறது?
கண்டறியப்பட்ட வளங்கள்
- தற்பொழுது அதிக பயன்பாட்டில் இல்லாததும் அதன் அளவு மற்றும் இருப்பிடம் அறியப்படாமல் இருக்கும் வளம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மறைந்திருக்கும் வளங்கள்
- நிலப்பரப்பில் உள்ள ஈஸ்ட்டை விட மிகுந்த ஆற்றல் உடையது எது ?
கடல் ஈஸ்ட்
- ஈஸ்ட் எதில் பயன்படுகிறது?
ரொட்டி தயாரித்தல், மது வடித்தல் ,திராட்சை ரசம் தயாரித்தல் ,உயிரி எத்தனால், தயாரித்தல் மற்றும் மருத்துவப் புரதம் தயாரித்தல்
- புதுப்பித்தலின் அடிப்படையில் வளங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?
புதுப்பிக்கக்கூடிய வளங்கள் மற்றும் புதுப்பிக்க இயலாத வளங்கள்
- ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள், பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புதுப்பிக்கக்கூடிய வளங்கள்
- குறிப்பிட்ட அளவில் உள்ள அனைத்து வளங்களும் எவ்வாறு அழைக்கப்படும்?
புதுப்பிக்க இயலாத வளங்கள்
- வளங்கள் அதன் பரவலின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
உள்ளூர் வளங்கள் மற்றும் உலகளாவிய வளங்கள்
- ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும் வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உள்ளூர் வளங்கள்
- உலகின் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உலகளாவிய வளங்கள்
- உரிமையின் அடிப்படையில் வளங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
தனிநபர் வளங்கள் ,சமூக வளங்கள், நாட்டு வளங்கள் மற்றும் பன்னாட்டு வளங்கள்
- தனிநபருக்கு மட்டும் சொந்தமான வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
தனிநபர் வளங்கள்
- ஒரு பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள வளத்தினை பயன்படுத்திக் கொள்வர் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சமூக வளங்கள்
- ஒரு நாட்டின் அரசியல் எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகள் மற்றும் பெருங்கடல் பகுதிகளுக்கு உட்பட்ட வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நாட்டு வளங்கள்
- உலகின் பெரும் மருந்தகம் என அழைக்கப்படுவது எது?
வெப்ப மண்டல மழை காடுகள்
- வெப்ப மண்டல மழை காடுகள் பகுதியில் காணப்படும் தாவரங்களில் எத்தனை சதவீதம் மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள்?
25%
- எந்த ஒரு நாட்டின் எல்லைக்கு உட்படாத மிகப்பரந்த திறந்தவெளி பெருங்கடல் பகுதியில் காணப்படும் வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பன்னாட்டு வளங்கள்
- எந்த வகை திமிங்கலத்திலிருந்து திமிங்கல புனுகு பெறப்படுகிறது?
ஸ்பெர்ம் திமிங்கிலம்
- ஒரு பவுண்டு (0.454 கி.கி)திமிங்கல புனுகின் விலை எவ்வளவு மதிப்புடையது?
63,000 அமெரிக்க டாலர்
- இயற்கை வளங்கள் தொழில்நுட்பத்தினால் மாற்று உருவாக்கம் செய்யப்பட்டு புதிய பொருள்களாக கிடக்கின்றன.இவ்வாறு பெறப்பட்ட வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள்
- மூலப் பொருட்களிலிருந்து வேறு பயன்பாட்டு பொருள்களாக மாற்றும் செயல்பாடு எவ்வாறு அழைக்கப்படும்?
இரண்டாம் நிலை செயல்பாடுகள்
- இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மனிதவளம்
- முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருள்களை பகிர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மூன்றாம் நிலை செயல்பாடுகள்
- “வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று அவனது தேவைக்காக மட்டுமே” எனக் கூறியவர் யார்?
மகாத்மா காந்தி
- “உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம்” எனக் கூறுபவர் யார் ?
மகாத்மா காந்தி
- வளங்களை சரியாக பயன்படுத்தும் திறன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வளதிட்டமிடுதல் அல்லது வள மேலாண்மை
- வளத்தினை கவனமாக கையாளுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வளங்களை பாதுகாத்தல்
- நிகழ்கால தேவைகளையும் பூர்த்தி செய்து வருங்காலத் தலைமுறையினர்க்கும் போதுமான வளங்களை விட்டு வைத்து சமநிலை தன்மையோடு ஏற்படும் வளர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நிலையான வளர்ச்சி
- வளங்களை பாதுகாக்க வேண்டும் எனில் எத்தனை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் ?
மூன்று (3RS): குறைத்தல்(Reduce), மறுபயன்பாடு(Reuse), மறுசுழற்சி செய்தல்(Recycle)
6TH GEOGRAPHY STUDY NOTES |வளங்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services