- சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள் எது ?
பூமி
- புவியானது எந்த பகுதிகளில் தட்டையாக காணப்படுகிறது?
துருவப் பகுதி
- புவியானது எந்தப் பகுதியில் சற்று பருத்தும் ,கோள வடிவமாகும் காணப்படுகிறது ?
நிலநடுக்கோட்டுப் பகுதி
- புவி எவ்வளவு பரப்பளவைக் கொண்டுள்ளது?
510.1 மில்லியன் சதுர கிலோமீட்டர்
- புவியின் வடிவம் என்ன?
புவி வடிவம் (ஜியாய்ட்) (Geoid)
- புவி தனது அச்சில் எவ்வளவு சாய்ந்த நிலையில் மேற்கிலிருந்து கிழக்காக தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றது?
23½°
- உலகில் முதன்முதலாக புவி மாதிரியை உருவாக்கியவர்கள் யார் ?
கிபி 150 கிரேக்கர்கள்
- ‘விண்மீன்கள் வானில் மேற்குப்புறமாக நகர்வது போன்ற தோற்றம் புவி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் விளைகிறது” எனக் கூறியவர் யார்?
ஆரியபட்டா சித்தாந்தம் என்ற நூலில் ஆரியபட்டர் ,இந்திய வானியல் அறிஞர்
- புவியில் கற்பனையாக செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் வரையப்பட்டுள்ள கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அட்சக்கோடுகள் மற்றும் தீர்க்க கோடுகள்
- முதன்முதலில் நிலவரைபடத்தில் அட்ச தீர்க்க கோடுகளை வரைந்தவர் யார்?
கிரேக்க ரோமானிய கணித வல்லுநர் ,வான் ஆய்வாளர் மற்றும் புவியியல் ஆய்வாளராகிய தாலமி
- தாலமியின் எந்த நூலில் புவியின் அளவும் அதன் மேற்பரப்பு குறித்த விவரங்களும் இடம் பெற்றுள்ளது?
Geographia
- புவியின் மீது கிழக்கிலிருந்து மேற்காக கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அட்சக்கோடுகள் (latitudes)
- புவியின் மையத்தில் காணப்படும் 0° அட்சக்கோடு எவ்வாறு அழைக்கப்படும்?
நிலநடுக்கோடு
- ஒவ்வொரு அட்சக்கோட்டிற்க்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு தூரம் எவ்வளவு?
111 கிலோ மீட்டர்
- நிலக்கோட்டில் இருந்து வட துருவம் வரை வட அரைக்கோளத்தில் கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வட அட்சக்கோடுள் (northern latitudes)
- நிலக்கோட்டில் இருந்து தென் துருவம் வரை தன் அரைக்கோளத்தில் கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தென் அட்சக்கோடுள் (suthern latitudes)
- புவியில் மொத்தம் எத்தனை அட்சக்கோடுகள் வரையப்பட்டுள்ளன?
181
- வட அரைக்கோளத்தில் மற்றும் தென் அரைக்கோளத்தில் தலா எத்தனை அட்சக்கோடுகள் காணப்படுகிறது?
தலா 89 அட்சக்கோடுகள்
- எந்த அட்சக்கோடு மற்ற அட்சக்கோடுகளைவிட நீளமாக காணப்படுகிறது?
நிலநடுக்கோடு (Equator)
- நிலநடுக்கோட்டு அட்சக்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பெரு வட்டம் (great circe)
- 0° அட்சக்கோட்டிலிருந்து 23½° வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
தாழ் அட்சக்கோடுகள் (low latitudes)
- 23½° வடக்கு முதல் 66½° வடக்கு வரையிலான 23½° தெற்கு முதல் 66½° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மத்திய அட்சக்கோடுகள் (middle latitudes)
- 66½° வடக்கு முதல் 90° வடக்கு வரையிலும் ,66½° தெற்கு முதல் 90° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உயர் அட்சக்கோடுகள் (high latitude)
- நிலநடுக்கோட்டில் (0)இருந்து வடக்கில் கடக ரேகை (23½°) வரை மற்றும் தெற்கில் மகரரேகை(23½°) ஆகியவை சூரிய கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வெப்பமண்டலம் (Torrid zone)
- வட அரைக்கோளம் கடகரேகை (23½°வ) முதல் ஆர்டிக் வட்டம் (66½°வ) வரையிலும், தென் அரைக்கோளம் (23½°) மகரரேகை முதல் (66½°) அண்டார்டிக் வட்டம் வரையிலும் உள்ள பகுதிகளில் சூரியக்கதிர்கள் படும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மித வெப்ப மண்டலம் (temperate zone)
- வட அரைக்கோளம் ஆர்க்டிக் வட்டம் (66½°வ) முதல் வடதுருவம் (90°வ)வரையிலும் தென் அரைக்கோளம் அண்டார்டிக் வட்டம்(66½°) முதல் தென்துருவம் (90°)வரையுள்ள பகுதிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குளிர்மண்டலம்(frigid zone)
- Latitude தமிழில் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அகலாங்கு
- Longitude தமிழில் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நெடடாங்கு
- equator தமிழில் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிலநடுவரை
- tropic of Cancer தமிழில் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கடகவரை
- tropic of Capricorn தமிழில் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மகரவரை
- புவியின் மீது வடக்கு தெற்காக செங்குத்தாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
தீர்க்க கோடுகள் அல்லது மெரிடியன்கள்
- தீர்க்கக்கோடுகளில் 0° தீர்க்கக்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முதன்மை தீர்க்கக்கோடு (prime meridian)
- 0° யலிருந்து 180° கிழக்கு வரை வரையப்பட்டுள்ள தீர்க்க கோடுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
கிழக்கு தீர்க்க கோடுகள் (Eastern longitudes)
- தீர்க்க கோடுகள் புவியின் எந்தப்பகுதியில் 111 கிலோ மீட்டர் இடைவெளியில் காணப்படுகின்றது?
நிலநடுக்கோட்டுப் பகுதி
- தீர்க்கக் கோடுகள் புவியின் எந்தப்பகுதியில் 79 கிலோ மீட்டர் இடைவெளியில் காணப்படுகின்றது?
45° அட்சப்பகுதிகளில்
- 0° தீர்க்க கோட்டிலிருந்து 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கிழக்கு அரைக்கோளம்
- 0° தீர்க்க கோட்டிலிருந்து 180° மேற்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மேற்கு அரைக்கோளம்
- ராயல் வானியல் ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது?
இங்கிலாந்து நாட்டின் லண்டனுக்கு அருகே கிரீன்விச்
- கிரீன்விச் என்னுமிடத்தில் செல்லும் தீர்க்கக் கோட்டினை தொடக்க கோடாக வைத்துக்கொள்வதன் எந்த ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் முடிவெடுக்கப்பட்டது?
1884
- 0° தொடக்க தீர்க்கக்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முதன்மை தீர்க்கக்கோடு (prime meridian) எனவும் ,கிரீன்விச் வழியே செல்வதால் கிரீன்விச் தீர்க்க கோடு (Greenwich meridian) எனவும் அழைக்கப்படுகிறது
- தீர்க்க கோடுகளில் எந்த தீர்க்கக்கோடு பன்னாட்டு தேதி கோடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
180°
- பன்னாட்டு தேதிக்கோடு எங்கு உள்ளது?
பசிபிக் பெருங்கடலில் அலாஸ்காவிற்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பேரிங் நீர்ச்சந்தி வழியாக செல்கின்றது
- பன்னாட்டு தேதிக்கோட்டை எந்த திசையில் இருந்து எந்த திசையில் கடந்தால் ஒரு நாள் குறையும்?
மேற்கிலிருந்து கிழக்காக
- புவியின் மீது கற்பனையாக வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் மற்றும் தீர்க்க கோடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புவி வலைப்பின்னல் (earth grid or geographic grid)
- புவியில் ஓர் இடத்தின் அமைவை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்ள எது தேவைப்படுகிறது ?
அட்சக்கோட்டுப் பரவல், தீர்க்கக்கோட்டுப் பரவல்
- 1° யின் நேரம் என்ன?
நான்கு நிமிடங்கள்
- 1° யை கடக்க புவி எடுத்துக்கொள்ளும் கால அளவு எவ்வளவு?
நான்கு நிமிடங்கள்
- ஒரு மணி நேரத்தில் எத்தனை தீர்க்கக் கோடுகளை புவி கடக்கிறது?
15°
- ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும் பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இடங்களிலும் நேரம் 12 மணி இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தல நேரம்(Local time)
- ஒரு தீர்க்க கோட்டில் இருந்து கிழக்கே செல்ல செல்ல நேரம் என்னவாகும்?
கூடும்
- ஒரு தீர்க்க கோட்டில் இருந்து மேற்கு செல்ல செல்ல நேரம் என்னவாகும்?
குறையும்
- மெரிடியன் (meridian) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
இலத்தீன் மொழி மெரிடியானஸ்(Meridanus) (பொருள் நண்பகல்)
- m என்பதன் பொருள் என்ன ?
நண்பகலுக்கு முன்னதாக (Anti meridiem)
- m என்பதன் பொருள் என்ன ?
நண்பகலுக்கு பிறகு (post meridiem)
- குறிப்பிட்ட ஒரு தீர்க்க கோட்டினை ஆதாரமாகக் கொண்டு பொதுவான நேரத்தை அமைத்துக் கொள்வது எவ்வாறு அழைக்கப்படும்?
திட்ட நேரம்
- ஒரு நாட்டின் திட்ட நேரத்தினை கணக்கிட அந்நாட்டின் வழியாக செல்லும் ஒரு குறிப்பிட்ட தீர்க்கக்கோடு பயன்படுத்தப்படுகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
திட்ட தீர்க்ககோடு
- திட்ட தீர்க்க கோடுகள் எத்தனையின் மடங்குகளாக இருக்குமாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?
15° அல்லது 7½°
- இந்தியாவின் தீர்க்க கோடுகளின் பரவல் எது வரை உள்ளது?
68° 7′ கிழக்கு முதல் 97°25′ வரை
- இந்தியாவின் வழியே எத்தனை தீர்க்க கோடுகள் செல்கின்றன?
29
- இந்தியாவின் மையத்தில் செல்லும் எந்த தீர்க்க கோட்டினை ஆதாரமாகக்கொண்டு இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது ?
82½° கிழக்கு தீர்க்கக்கோடு
- ISTன் விரிவாக்கம் என்ன?
Indian standard time
- இந்தியாவின் கிடைமட்ட பரவலில் மேற்கில் குஜராத்தில் உள்ள கௌர்மோட்டா என்ற இடத்திற்கும் கிழக்கில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கிபித்து என்ற இடத்திற்கும் சமதூர இடைவெளியில் உள்ள எந்த இடத்தின் வழியே 82½° கிழக்கு தீர்க்கக்கோடு செல்கிறது ?
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள மிர்சாபூர்
- உலக அளவில் எத்தனை நேர மண்டலங்கள் உள்ளன?
24
- ரஷ்ய நாட்டிற்கு எத்தனை நேர மண்டலங்கள் உள்ளன?
7
6TH GEOGRAPHY STUDY NOTES |புவி மாதிரி| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services